Wednesday, 14 July 2021

ஆண்டுதோறும் 80 இலட்சம் டன் பிளாஸ்டிக் கடலில் கலக்கிறது

 

கடல், மற்றும் அதன் சூழலமைப்பை நாம் அக்கறையுடன் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவம் - திருத்தந்தை

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

ஜூலை 11, ஞாயிறு நண்பகல் மூவேளை செபவுரைக்குப்பின், ஜெமெல்லி மருத்துமனை முன்வளாகத்தில் குழுமியிருந்த விசுவாசிகளிடம், இஞ்ஞாயிறு, உலகில் சிறப்பிக்கப்பட்ட, 'உலக கடல் ஞாயிறு' குறித்து நினைவூட்டி, கடல், மற்றும் அதன் சூழலமைப்பை நாம் அக்கறையுடன் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தங்களுடைய பணிக்கும், வாழ்வாதாரத்திற்கும் கடலையே நம்பியிருக்கும் அனைத்து மக்களுக்கும் சிறப்பான விதத்தில் அர்ப்பணிக்கப்பட்ட இந்த 'கடல் ஞாயிறு' தினத்தில், அவர்களுக்காக இறைவேண்டல் செய்வதோடு, பெருங்கடல், மற்றும் கடல் பகுதிகளை அக்கறையுடன் பேணுவோம் என்ற அழைப்பையும் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

'கடலின் நலன் குறித்து அக்கறை கொள்ளுங்கள், கடலில் பிளாஸ்டிக் பொருட்களை கொட்டவேண்டாம்' என்ற விண்ணப்பத்தையும், விசுவாசிகளிடம் முன்வைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

ஐ.நா. நிறுவனத்தின் புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வோர் ஆண்டும் 80 இலட்சம் டன் பிளாஸ்டிக் பொருட்கள் கடலைச் சென்றடைவதாகவும், கடல் வாழ் உயிரினங்களைக் கொல்வதாகவும், மனிதகுல உணவுச்சங்கிலியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...