சீனா: பெற்றோரால் கைவிடப்படும் குழந்தைகளால் திணறும் அதிகாரிகள்
சீனாவில் பெற்றோர் தமக்கு வேண்டாத குழந்தைகளை பாதுகாப்பாக கைவிட்டுச் செல்வதற்காக இயங்கிவந்த குழந்தைகள் கூடம் ஒன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
வந்துசேரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றமையால் தம்மால் அந்த கூடத்தை நடத்த முடியவில்லை என்று பராமரிப்பாளர்கள் கூறுகின்றனர். தெற்கு சீன நகரமான குவாங்சோ- வில் கடந்த ஜனவரி மாதத்தின் இறுதிப் பகுதியில் திறக்கப்பட்ட இந்த குழந்தைகள் இல்லத்தில் 262 குழந்தைகள் பெற்றோரால் கைவிடப்பட்டுள்ளன.
மருத்துவக் கவனிப்புகள் தேவைப்படுகின்ற இந்த எல்லாக் குழந்தைகளையும் தங்களால் கவனித்துக்கொள்ள முடியாது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். பிறந்த குழந்தைகளை பராமரிக்கும் கண்ணாடிப் பெட்டி (இன்குபேட்டர்) ஒன்றும் அதில் குழந்தையைப் போட்டவுடன் அதிகாரிகளுக்கு அறிவிக்க வேண்டிய எச்சரிக்கை மணி ஒன்றும் அந்த கூடத்தில் காணப்படுகின்றன. சீனா முழுவதும் இப்படியாக 25 குழந்தைகள்- கூடங்கள் நிறுவப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment