Monday, 31 March 2014

மன்னாரில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 116 ஆவது பிறந்த தின விழா

மன்னாரில் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 116 ஆவது பிறந்த தின விழா

Source: Tamil CNN
 god-father-selvanayagam-262x295
ஈழத்துக்காந்தி என்றழைக்கப்படும் தமிழ் தேசியத்தலைவர் அமரர் தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களின் 116 ஆவது பிறந்த தின விழா நாளை திங்கட்கிழமை (31) மன்னாரில் கொண்டாடப்படவுள்ளதாக மன்னார் மாவட்ட தந்தை செல்வா அறங்காவலர் அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனிமார்க் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலை முன்றலில் காலை 9.30 மணிக்கு குறித்த நிகழ்வு இடம் பெறவுள்ளது.
அன்னாரை கௌரவிக்கும் முகமாக அன்னாரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து சிறப்புரைகளும்,சமையத்தலைவர்களின் ஆசியுரைகளும் இடம் பெறவுள்ளது.
குறித்த நிகழவில் மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் உற்பட தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மன்னார் நகர சபை, பிரதேச சபைகளின் தலைவர்கள், உப தலைவர்கள், உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளதாக மன்னார் மாவட்ட தந்தை செல்வா அறம்காவலர் அமைப்பின் தலைவர் பீ.ஏ.அந்தோனிமார்க் மேலும் தெரிவித்தார்.
selva

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...