Sunday, 30 March 2014

பாக்: இந்து கோவிலில் சிலையை உடைத்து தீ வைப்பு

பாக்: இந்து கோவிலில் சிலையை உடைத்து தீ வைப்பு

Source: Tamil CNN
 2073723955Untitled-1
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் உள்ள இந்து கோவில் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
லத்திபாபாத் நகரில் உள்ள அனுமன் கோவிலுக்கு நேற்று 3 நபர்கள் சாமி கும்பிட வந்துள்ளனர் தரிசனம் முடிந்ததும் அவர்கள் முதலில் அனுமன் சிலையை உடைத்துள்ளனர். பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தாக்குதல் நடத்தியவர்கள முகத்தை துணியால் மறைத்திருந்ததால் அடையாளம் காண முடியவில்லை என்று கோவிலின் காவல் பொறுப்பாளர் தெரிவித்தார். இதுதொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இது வகுப்புவாத வன்முறை அல்ல என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions...

ROBERT JOHN KENNEDY: New Decree clarifies discipline on Mass Intentions... :   New Decree clarifies discipline on Mass Intentions and collec...