இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் இழுத்தடிக்கும் அரசாங்கம்! புலம்பெயர் தமிழர்கள் அதிருப்தி
இலங்கையில் இரட்டைக் குடியுரிமை வழங்குவதில் அரசாங்கம் தொடர்ந்தும் தாமதம் காட்டி வருவதாக புலம்பெயர் மக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர்.
கடந்த இரண்டு ஆண்டுகளாகவே இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கையானது தற்காலிக அடிப்படையில் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சட்டத்தில் திருத்தங்க்ள கொண்டு வரப்பட இருப்பதனால் இவ்வாறு இரட்டைக் குடியுரிமை வழங்கும் நடவடிக்கைகள் கால தாமதம் அடைவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இரட்டைக் குடியுரிமை பெற்றுக்கொள்வதற்கான கட்டணங்கள் உயர்த்தப்பட உள்ளதுடன், சில நிபந்தனைகளும் விதிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது, புதிய சட்டத் திருத்தங்க்ள சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் முதலீடு செய்தல், சொத்துக்களை விற்பனை செய்தல், பெற்றோரை பராமரித்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக புலம்பெயர்ந்து வெளிநாட்டு குடியுரிமைகளைப் பெற்றுக் கொண்டுள்ள இலங்கையர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment