Monday, 31 March 2014

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை! இந்தியா அதிரடி

சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை! இந்தியா அதிரடி

Source: Tamil CNN
 india
சீனாவின் ஆதிக்கத்தை தடுக்கவே ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக வாக்களிக்கவில்லை என இந்தியா அறிவித்துள்ளது.
இந்திய மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மீது சீனாவின் தலையீடுகளை வலுவிழக்கச் செய்யும் நோக்கில் இந்தியா நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்ப்பட்ட தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்திருந்தால், அது சீனாவின் இலங்கை மீதான தலையீட்டை மேலும் அதிகரிக்கக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழர் பகுதிகளில் இந்தியா புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு பணிகளில் தற்போது ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தால் உட்கட்டுமான வசதிகளை மேற்கொண்டு வரும் சீனா, தமிழர் பிரதேசங்களில் புனர்வாழ்வு பணிகளிலும் தலையீடு செய்ய வாய்ப்பு ஏற்பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...