Monday, 31 March 2014

எந்த நாட்டையும் அச்சுறுத்தி ஆதரவு திரட்டவில்லை! அமெரிக்கா அதிரடி

எந்த நாட்டையும் அச்சுறுத்தி ஆதரவு திரட்டவில்லை! அமெரிக்கா அதிரடி

Source: Tamil CNN
 usa
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் அண்மையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம நிறைவேற்றப்பட்ட போது, எந்தவொரு நாட்டையும் அச்சுறுத்தி ஆதரவு திரட்டவில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
சில நாடுகளின் மீது அமெரிக்கா கடுமையான அழுத்தங்களை பிரயோகித்து அச்சுறுத்தி இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வைத்ததாக வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்திருந்தார்.
எனினும்,இந்தக் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அழுத்தங்கள் எதனையும் பிரயோகிக்கவில்லை எனவும், சர்வதேச சமூகத்தின் செய்தி தெளிவானது எனவும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதரகம் அறிவித்துள்ளது.
குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் மற்றும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியன தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதனையே சர்வதேச சமூகம் வலியுறுத்தி நிற்பதாகத் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...