இலங்கைப் பௌத்தர்கள் இனவாதத்தை நிறுத்த வேண்டும்: திபேத்திய ஆன்மீகத் தலைவர்
இலங்கையிலும் மியன்மாரிலும் உள்ள பௌத்தர்கள் இனவாத வன்முறைகளை நிறுத்த வேண்டும் என திபேத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.திபேத்திய பௌத்த ஆலயத்தில் பக்தர்களுக்கு போதனைகளை வழங்கும் முதல் நாள் நிகழ்வில் இன்று அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
ஏற்கனவே மியன்மாரில் பௌத்தர்களுக்கும் முஸ்லிம்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்பட்டன. இலங்கை மற்றும் மியன்மார் பௌத்த துறவிகள் பயங்கரவாதிகள் கருதப்படுவது மிகவும் வருத்தமானது. பௌத்த துறவிகள் புனிதத்தன்மை குறித்து கவனம் செலுத்த வேண்டும்.
உங்கள் மதம் மீது நம்பிக்கை வையுங்கள். அதேபால் ஏனைய மதங்களுக்கு மதிப்பளியுங்கள். இது பல்வேறு மதங்களுக்கு இடையில் ஐக்கியத்தை கொண்டு வரும் என்றார்.திபேத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா 1989 அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.திபேத் நாட்டை சீனா கைப்பற்றியதில் இருந்து இந்தியாவிற்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து அவர் நாடு கடந்த திபேத் அரசாங்கத்தின் தலைவராக செயற்பட்டு வந்ததுடன் சுமார் ஒரு வருடங்களுக்கு முன்னர் அரசியலில் ஓய்வுபெற்றார்.நாடு கடந்த திபேத் அரசாங்கம் மற்றும் நாடாளுமன்றம் இந்தியாவின் தர்மசாலாவில் இருந்து செயற்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment