Wednesday 30 October 2013

இலங்கைச் சிறைகளில் பெண்களுக்கான வசதிகள் குறைவு: ஐ.நா குற்றச்சாட்டு

இலங்கைச் சிறைகளில் பெண்களுக்கான வசதிகள் குறைவு: ஐ.நா குற்றச்சாட்டு

Source: Tamil CNN
இலங்கைச் சிறைச்சாலைகளிலும் பெண்களுக்கான வசதிகள் மிகவும் மோசமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை ஒன்று குற்றஞ்சாட்டியுள்ளது.
ஐநாவின் பொதுச்சபைக்கு, பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் மற்றும் அவற்றின் விளைவுகள் குறித்த ஐநாவின் சிறப்புத் தூதுவர் ரஷீதா மஞ்சு அவர்களால் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
இலங்கைச் சிறைகளில் குறிப்பாக பெண்களுக்கான பிரிவுகளில், எலிகள் கூடக் காணப்படுவதாகவும், அங்கு போதுமான அளவு விரிப்புகள் மற்றும் தலையணைகள் ஆகியன வழங்கப்படுவதில்லை என்றும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
அங்கு சூழல் வெப்பநிலை மிகவும் மோசமாக இருக்கின்ற போதிலும், மின் விசிறிகள் கூட சிலவேளை அங்கு வழங்கப்படுவதில்லை என்றும் அது கூறுகிறது.
அடிக்கடி பழுதடைந்துவிடுகின்ற இரண்டு கழிவறைகளை, 75 கைதிகள் வரை பயன்படுத்தவேண்டிய நிலை இருப்பதாகவும் அந்த அறிக்கை கூறுகின்றது.
இந்தியாவில் ஜாதி அடிப்படையில் வசதி
அதேவேளை, இந்தியச் சிறைகளில், கைதிகள் எந்த வகையைச் சேர்ந்தவர்கள் என்பதை அடிப்படையாகக் கொண்டே அவர்களுக்கான வசதிகள் கிடைப்பதாக அந்த அறிக்கை கூறுகின்றது.
வெளிநாட்டவர்களும், அரசியல்வாதிகளும், உயர் ஜாதிக்காரர்களும் நல்ல சேவையை அங்கு பெறுவதாகவும், அங்கு சிறைகள் நெரிசல் மிக்கவையாக , போதிய உணவு கிடைக்காத நிலையில் இருப்பதாகவும் அது கூறுகிறது.
குறைந்த ஜாதியினருக்கு எந்தவிதமான வசதியும் அங்கு கிடைப்பதில்லை என்றும் அது கூறுகிறது.
BBC

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...