An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Wednesday, 25 August 2021
Thursday, 19 August 2021
தென் சூடான் சகோதரிகள் கொலை – திருத்தந்தையின் அனுதாபம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
திரு இருதய அருள்சகோதரிகள் சபையைச் சேர்ந்த இரு அருள்சகோதரிகள் தென் சூடான் நாட்டில், ஆகஸ்ட் 16, இத்திங்களன்று வன்முறை குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டதையொட்டி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் ஆழ்ந்த அனுதாபத்தை வெளியிட்டு, தந்திச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார்.
உகாண்டா நாட்டையும், தென் சூடான் நாட்டின் தலைநகர் Jubaவையும் இணைக்கும் துரித வழியில் சென்ற ஒரு பேருந்தை, துப்பாக்கி ஏந்திய குழு ஒன்று மறித்து சுட்டதில், Mary Abud மற்றும் Regina Roba என்ற இரு அருள்சகோதரிகள் உட்பட, ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
பொருளற்ற முறையில் நடைபெற்றுள்ள இந்த வன்முறையை கண்டனம் செய்வதாகக் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்விரு அருள்சகோதரிகளின் தியாகம், அந்நாட்டில் அமைதியையும், ஒப்புரவையும் உருவாக்கவேண்டுமென தான் இறைவேண்டல் புரிவதாகவும் இந்தத் தந்திச் செய்தியில் கூறியுள்ளார்.
இறைவனடி சேர்ந்த இவ்விரு சகோதரிகளின் துறவு சபைக்கும், அவ்விரு அருள்சகோதரிகளின் குடும்பத்தாருக்கும் தன் ஆழந்த அனுதாபங்களையும், செபங்களையும் திருத்தந்தை தெரிவித்துள்ளார்.
Torit மறைமாவட்டத்தின் Loa என்ற பங்குத்தளத்தில் அமைந்துள்ள விண்ணேற்பு அன்னை மரியாவின் ஆலயத்தில் நடைபெற்ற நூற்றாண்டு கொண்டாட்டங்களை நிறைவு செய்து, ஒன்பது அருள் சகோதரிகளும், கத்தோலிக்க விசுவாசிகளும் Juba நோக்கி பேருந்தில் பயணம் செய்த வேளையில் நடைபெற்ற இந்த தாக்குதலில், இரு அருள்சகோதரிகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர் என்று, திரு இருதய அருள்சகோதரிகள் சபையின் செய்திக்குறிப்பு கூறுகிறது.
உலகில் புதிதாக உருவாக்கப்பட்ட நாடு என்று அறியப்படும் தென் சூடான், 2011ம் ஆண்டு ஒரு தனி நாடாக உருவானதிலிருந்து, இன்றுவரை அங்கு தொடர்ந்துவரும் மோதல்களில், கடந்த பத்தாண்டுகளில், 4 இலட்சத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று ICN கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது.
Wednesday, 18 August 2021
Pope Francis urges people to get vaccinated against Covid-19
By Devin Watkins
The Pope has joined his voice to those of Bishops across North and South America to urge people to get jabbed against Covid-19.
In a video message produced in conjunction with the Ad Council, Pope Francis praised the work of researchers and scientists in producing safe and effective Covid-19 vaccines.
“Thanks to God’s grace and to the work of many, we now have vaccines to protect us from Covid-19,” he said in the video released on Wednesday.
He added that vaccines “bring hope to end the pandemic, but only if they are available to all and if we collaborate with one another.”
Vaccination is an act of love
Pope Francis went on to say that getting a Covid jab that is “authorized by the respective authorities” is an “act of love.”
Helping other do the same, he said, is also an act of love. “Love for oneself, love for our families and friends, and love for all peoples. Love is also social and political.”
The Pope noted that social and political love is built up through “small, individual gestures capable of transforming and improving societies.”
“Getting vaccinated is a simple yet profound way to care for one another, especially the most vulnerable,” he said.
Pope Francis then prayed to God that “each one of us can make his or her own small gesture of love.”
“No matter how small, love is always grand,” he said. “Small gestures for a better future.”
‘Strength of faith’
The Pope was joined in the video by several Cardinals and Archbishops from across the Americas.
Archbishop Jose Gomez, president of the United States Conference of Catholic Bishops and the Archbishop of Los Angeles, lamented the suffering and death the pandemic has wrought across the globe.
He prayed that God might “grant us the grace to face it with the strength of faith, ensuring that vaccines are available for all, so that we can all get immunized.”
Mexican Cardinal Carlos Aguiar Retes linked Covid-19 jabs to a better future for all.
“From North to South America, we support vaccinations for all,” said the Cardinal.
Safe, effective vaccines
Honduran Cardinal Rodriguez Maradiaga said the world has much to learn from the coronavirus.
“But one thing is certain: the authorized vaccines are effective, and are here to save lives,” he said. “They are the key to a path of personal and universal healing.”
Brazilian Cardinal Claudio Hummes praised the “heroic efforts” of health professionals in developing “safe and effective” jabs.
He also repeated the Pope’s affirmation that “getting vaccinated is an act of love”.
Salvadorian Cardinal Gregorio Rosa Chavez said vaccination helps protect the most vulnerable.
“Our choice to get vaccinated affects others,” he said, adding that it is a moral responsibility.
Unity across the Americas
Peruvian Archbishop Miguel Cabrejos rounded out the testimonies contained in the video with an appeal to unity.
“We are united—North, Central, and South America and the Caribbean—to promote and support vaccination for all,” he said, encouraging everyone to “act responsibly, as members of the great human family, seeking and protecting our integral health and universal vaccination.”
Cardinal Parolin praises Chinese Catholics’ witness of faith
In an interview with an online newspaper from Trentino, where he vacationing, Cardinal Secretary of State Pietro Parolin addresses a number of current issues: from relations with China, to the Pope's recovery from surgery, to the esteem that binds him to Italian President Mattarella, who is nearing the end of his mandate.
By Vatican News
The period of Ferragosto - the Italian summer holiday season – sees Church leaders with less hectic schedules, but their work does not come to a complete stop. So it happens that, even away from his office and from the spotlight that goes with it, the Pope’s chief collaborator can find himself providing updates on topics of international importance.
This is precisely the situation of Cardinal Pietro Parolin, who was interviewed this week by La Voce del Nordest, a web magazine based in Trentino, where the Vatican’s Secretary of State has gone for a few days of rest amidst the scenery of the Conca di Primiero in northern Italy.
China: an evolving dialogue
Among the most important issues the Cardinal addressed is the relationship with China.
“We are always in dialogue,” he said, recalling the historic Agreement signed with Beijing in 2018 and renewed for two more years in 2020. The pandemic, Cardinal Parolin noted, “has also affected this sphere,” making the discussions more difficult.
“However,” he continued, “we hope to be able to resume the meetings as soon as possible, and to deal with the many other issues that are on the table and that concern the life of the Catholic Church in China.”
The Secretary of State expressed not only closeness in prayer with the Catholics of the Asian country, but also admiration: “We are proud of the witness of faith they give. We hope that they will always be good citizens and good Catholics,” and that “they will also express this twin dimension in their concrete life.”
Pope's message opens horizons to the world
Following the Agreement with China, Cardinal Parolin said in a separate interview, in response to criticism of the Pope's openness to the East, “The West will have to apologize to Francis.”
Asked about that statement, the Secretary of State noted, “The evangelical proclamation that Pope Francis continues to make resonate in his words” does not, perhaps, always make “even his proposal, his message, easy to accept.”
And yet, Cardinal Parolin repeated, “the Pope is really pointing out a path – he did so especially with [the encyclical] Fratelli tutti – that, after the pandemic, can really help us get out of the sands in which our society finds itself and set us on the path to building a new world, a better world.”
Pope Francis' health
Another question concerned Pope Francis’ health following the surgery he underwent at the Gemelli Hospital on 4 July.
“He is slowly recovering,” Cardinal Parolin said. “It takes its time even for him”. However, he added, “It seems to me that he is recovering well. He is made of strong stuff.” This can be seen in the Pope’s return to his commitments, not only the weekly General Audience, but also the trip planned for September with stops in Hungary and Slovakia.
Cardinal Parolin also offered words of “gratitude” and “affection” for Italian President Sergio Mattarella, who is nearing the end of his seven-year term.
“It is always a joy for me to meet him, precisely because of the high moral and spiritual stature he expresses and for the mission he has accomplished in these years,” especially the last, more difficult years, in which “he has truly been able to show the best of Italy and give very, very timely indications for the solution of problems.”
A final note concerned Cardinal Parolin's upcoming commitments, including an upcoming trip to Lithuania for the ordination of the new apostolic nuncio in Ukraine.
Barnabite missionary appeal: "Pray, pray, pray for Afghanistan"
Giancarlo La Vella and Fausta Speranza - Vatican City
Kabul, the capital of Afghanistan and the center of institutional power, is facing the inexorable advance of the Taliban forces that could at any moment be back in power after having already governed the country from 1996 to 2001. Since the Soviet invasion in 1979, Afghanistan has suffered from violence and war. Now the country is once again experiencing the suffering caused by armed conflict, forced exile and hunger. The situation is especially difficult for civilians where Barnabite Fr. Giovanni Scalese, head of Missio sui iuris, serves by offering a Catholic presence in the Asian country. He urges everyone to draw close spiritually to the people and pray that Lord may save Afghanistan from more suffering and bring them lasting peace.
“"We are living days of great apprehension as we await what happens. My appeal to the listeners of Vatican Radio is to pray...pray, pray, pray for Afghanistan! Thank you."”
UN fears humanitarian catastrophe
The United Nations secretary general, Antonio Guterres, has asked for a stop to the offensive in Afghanistan, which is taking a heavy humanitarian toll on the civilian population. 250,000 people - 80% women and children - have already been forced to leave their homes. He has appealed for a start to peace talks. The secretary general also expressed his shock over reports of abuse of women. In order to save Afghans fleeing the violence, many are calling for the establishment of humanitarian corridors. The humanitarian and health situation is worsening by the hour, said Guterres, stressing that "conflicts in urban areas result in continuous carnage, with civilians are paying the highest price" of the violence.
அன்பின்மையே அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம்
திருத்தந்தை : நம்மைப்பற்றி மட்டும் எண்ணிக்கொண்டிருப்பதுதான், அனைத்து தீமைகளுக்கும் அடிப்படைக் காரணமாக அமைகிறது.
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
எப்போதும் நம்முடனேயே இருக்கும் தினசரி பிரச்சனைகளில் இருந்தல்ல, மாறாக, அன்பின்மை எனும் உண்மை பிரச்சனையிலிருந்து நம்மை விடுவிக்கவே, இறைவன் வருகிறார், என்ற கருத்தை மையமாக வைத்து, இச்செவ்வாய்க்கிழமை, தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.
'நம் தினசரி பிரச்னைகளிலிருந்தல்ல, மாறாக, நம் அன்பின்மையிலிருந்து நம்மை விடுவிக்கவே இறைவன் வருகிறார். நம் தனிப்பட்ட, சமுதாய, அனைத்துலக, மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சனைகளுக்கு இந்த அன்பின்மையே காரணம். நம்மைப்பற்றி மட்டும் எண்ணிக்கொண்டிருப்பதுதான், அனைத்து தீமைகளுக்கும் தந்தை' என்று, ஆகஸ்ட் 17ம் தேதி வெளியிட்ட தன் டுவிட்டர் செய்தியில் கூறியுள்ளார், திருத்தந்தை.
ஆகஸ்ட் 17, இச்செவ்வாய்க்கிழமை வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்திகள், 3,364 என்பதும், அவரது டுவிட்டர் பதிவுகளை, ஆங்கில மொழியில் பின்பற்றுவோரின் எண்ணிக்கை மட்டும், 1 கோடியே 88 இலட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கன.
ஒவ்வொரு நாளும், @pontifex என்ற வலைத்தள முகவரியில், திருத்தந்தை வழங்கிவரும் டுவிட்டர் செய்திகள், இத்தாலியம், ஆங்கிலம், பிரெஞ்சு, இஸ்பானியம், போர்த்துகீசியம், ஜெர்மன், போலந்து, இலத்தீன் மற்றும் அரேபியம் ஆகிய ஒன்பது மொழிகளில் வெளியாகின்றன.
கிழக்குத் திமோர் நாட்டின் முதல் கத்தோலிக்க பல்கலைக்கழகம்
கிழக்குத் திமோர் நாட்டில் கல்வித்தரத்தைப் பாதுகாப்பதில், திருஅவையின் கல்விப்பணிகள் உதவுகின்றன என பாராட்டும் அந்நாட்டு பிரதமர்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் : வத்திக்கான் செய்திகள்
கிழக்குத் திமோர் நாட்டில் கத்தோலிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றை திறப்பதற்கு தலத்திருஅவை முயற்சிகளை எடுத்துவரும் வேளையில், அந்நாட்டில், உயர்கல்வியின் தரத்தை கட்டிக்காப்பதில் இது பேருதவியாக இருக்கும் என அறிவித்துள்ளார், அந்நாட்டு பிரதமர்.
கிழக்குத் திமோர் பிரதமர் Taur Matan Ruak அவர்களை நேரில் சென்று பேராயர் Dom Virgilio do Carmo da Silva அவர்கள் சந்தித்த வேளையில், கல்வியின் தரத்தை பாதுகாப்பதில், திருஅவையின் கல்விப்பணிகள் உதவுகின்றன என பிரதமர் பாராட்டினார்.
கத்தோலிக்கர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட கிழக்குத் திமோர் நாட்டில், முதல் கத்தோலிக்க பல்கலைக்கழகத்தை திறக்கும் விண்ணப்பத்தை அரசிடம் ஒரு மாதத்திற்கு முன்னர் சமர்ப்பித்த தலத்திருஅவை, இவ்வாண்டிலேயே அதனைத் திறக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார் தலைநகர் திலியின் பேராயர் da Silva.
12 இலட்சம் பேரைக் கொண்டுள்ள கிழக்குத் திமோர் நாட்டில், 10 இலட்சம் கத்தோலிக்கர்கள் வாழ்ந்துவரும் நிலையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக, அதாவது, முன்னாள் ஆயர் Carlos Filipe Ximenes Belo அவர்களின் காலத்திலிருந்தே, கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்திற்கான முயற்சிகள் இடம்பெற்றுவருகிறன.
ஏற்கனவே செயல்பட்டுவரும் கத்தோலிக்க கல்வி நிறுவனத்தை, பல்கலைக்கழக நிலைக்கு உயர்த்தும் அனுமதியை, கலாச்சார மற்றும் உயர்கல்வி அமைச்சகம் வழங்கியவுடன், இவ்வாண்டிலேயே தலத்திருஅவையின் பல்கலைக்கழகம் செயல்படத் துவங்கும் என கிழக்குத் திமோரின் கத்தோலிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உண்மையான விடுதலை வாழ்வு
“ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்” - டாக்டர் அம்பேத்கார்
மேரி தெரேசா வத்திக்கான்
இந்தியா, ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து விடுதலை அடைந்ததன் வைர விழாவில் அடியெடுத்து வைத்துள்ளது. இத்தனை ஆண்டுகளாக சுதந்திரக் காற்றை சுவாசித்து வரும் இந்தியர் ஒவ்வொருவரின் இதயங்களும் உண்மையான அக விடுதலையில் வாழ்கின்றனரா, உண்மையான விடுதலை வாழ்வு என்பது என்ன என்பது பற்றி, பல ஆன்றோரின் சிந்தனைகளோடு தன் கருத்துக்களையும் இணைத்து இன்று வழங்குகிறார், மரியின் ஊழியர் சபையின் அருள்பணி ஆ.அமல் ராஜ்
வத்திக்கான் வானொலி நேயர்கள் அனைவருக்கும் வணக்கம். இன்றைய நாளில் உண்மையான விடுதலை வாழ்வு என்றால் என்ன என்பது பற்றிய எனது சிந்தனைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். விடுதலை, சுதந்திரம் மற்றும் உரிமை எனும் வார்த்தைகளை நாம் அடிக்கடி பயன்படுத்துகின்றோம். ஆனால், அதன் உண்மையான அர்த்தம் தெரியாமலேயே பல நேரங்களில் இருந்து விடுகின்றோம். “எங்களுக்கு விடுதலை வேண்டும்” என்ற குரல் ஒவ்வொரு விநாடியும் இச்சமூகத்தின் ஏதாவது ஒரு மூலையில் இன்றும் ஒலித்துக்கொண்டேதான் இருக்கின்றது. பெண் விடுதலை, தலித் விடுதலை, சமூக விடுதலை, அரசியல் விடுதலை, சமய விடுதலை, பொருளாதார விடுதலை என்று பல தளங்களில் இந்த விடுதலைக்கான குரல் ஒலித்துக் கொண்டிருக்கின்றது. கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக நாடுகள் அனைத்திலும் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் ஒற்றை வார்த்தை “கொரோனாவிலிருந்து விடுதலை” என்பதாகும். அப்படியென்றால் இந்த "விடுதலை வாழ்வு" என்றால் என்ன என்பது பற்றி நாம் அறிந்திருக்க வேண்டியது மிக முக்கியமானதொன்றல்லவா?
ஒருமுறை ஒரு ஞானியிடம் ஒருவன் வந்தான். அவன் அம்முனிவரிடம், ஐயா, நீங்கள் எல்லாம் அறிந்தவர் அல்லவா? என்னுடைய உள்ளங்கையினுள் ஒரு வண்ணத்துப் பூச்சி உள்ளது. அவ்வண்ணத்துப் பூச்சி உயிரோடு உள்ளதா? அல்லது இறந்துவிட்டதா? என்று கேட்டான். அவனுடைய சூழ்ச்சி மிகுந்த சூட்சுமமான கேள்வியைப் புரிந்துகொண்ட அந்த ஞானி, “அந்த வண்ணத்துப்பூச்சி உயிரோடு இருப்பதோ அல்லது உயிரற்றுப் போவதோ உன் கையில்தான் உள்ளது தம்பி” என்று பதில் அளித்தார்.
ஆம் நண்பர்களே, நம்முடைய வாழ்வு என்பதும், விடுதலை வாழ்வு என்பதும் பிறர் நமக்குக் கொடுத்து நாம் பெற வேண்டிய ஒரு கடைச்சரக்கு அல்ல. அது நம்மிடம்தான் உள்ளது. நமது இந்திய நாடு தனது சுதந்திரத்தின் அல்லது விடுதலையின் 74-வது ஆண்டை நிறைவு செய்து வெகு சிறப்பாகத் தனது சுதந்திரத்தின் வைர விழாவைக் கொண்டாடத் தன்னையே தயாரித்துக் கொண்டிருக்கின்றது. இந்த நேரத்தில் நமது சுதந்திர இந்தியா கடந்து வந்த பாதையைச் சற்று திரும்பிப் பார்த்தோமே என்றால் அதனுடைய சாதனைகளாகப் பலவற்றைச் சொல்லலாம். இந்தியா வளர்ந்துள்ளதா? என்றால் நிச்சயமாக எந்தவித சந்தேகமுமின்றி இந்தியா பல துறைகளில் நம்மைப் பிரமிக்க வைக்கும் அளவுக்கு வளர்ந்துள்ளது என்று சொல்ல முடியும். அதே சுதந்திர இந்தியாவில்தான் இன்றும் உலகின் எந்த நாட்டிலும் இல்லாத அதாவது மானுடவியலுக்கும் மனிதத்திற்கும் எதிரான மற்றும் அறிவியலுக்குச் சற்றும் பொருந்தாத சாதியின் பெயரிலான படுகொலைகளும், வன்முறைகளும் நடக்கின்றன. அப்படியென்றால், நமது தேசத்தில் உள்ள அனைவருக்கும் சுதந்திரம் அல்லது விடுதலை வாழ்வு கிடைத்து விட்டதா? என்றால் அது மிகப்பெரிய கேள்விக்குறிதான். இந்தப் பிற்போக்குத்தனத்திற்கும் காட்டுமிராண்டித்தனத்திற்கும் யார் காரணம் என்ற கேள்வியை நான் எனக்கு முன்வைத்துச் சிந்திக்கின்றபொழுது, “தனி மனித விடுதலை மற்றும் உண்மையான விடுதலை வாழ்வு பற்றிய தெளிவும், ஆழ்ந்த புரிதலும் இல்லாததே இதற்குக் காரணம்" எனும் அறிவர் அமபேத்காரின் சிந்தனைதான் இதற்கு விடையாகக் கண்முன்னே தெரிகின்றது. உண்மையான விடுதலை வாழ்வு பற்றிய தெளிவு இருந்ததால்தான் அம்பேத்கர், “நீயே ஒளி நீதான் வழி” என்று சொன்ன புத்தரின் பாதையைத் தேர்ந்தெடுத்து நம் அனைவரையும் அத்தகைய விடுதலை வாழ்வை நோக்கிப் பயணிக்க அழைப்பு விடுத்தார்.
சில நாட்களுக்கு முன்பாக நான் “சார்பட்டா பரம்பரை” என்கின்ற சினிமாவைப் பார்த்தபொழுது அதில் வந்த ஒரு பாடலினுடைய வரிகள் என்னை மிகவும் சிந்திக்கத் தூண்டின: அதாவது,
- நீயே ஒளி நீதான் வழி
- ஓயாதினி உடம்பு
- நீயே தடை நீயே விடை
- சூடாக்கிடு நரம்பு
- எது உன்னைத் தடுக்கின்றது
- ஏன் தடுமாறுகின்றாய்
- உன் மனதில் நம்பிக்கை இல்லையா?
- உன்னைத் தோற்கடித்துவிடுவார்கள் என்று பயப்படுகிறாயா?
என்கின்ற கேள்விகளை எழுப்பி நம் அனைவரையும் நம்முள் இருக்கும் நமது அடிமைத்தனங்களிலிருந்து நம்மை விடுவித்து விடுதலையை நோக்கி நகர இப்பாடல் அழைக்கின்றது. இந்த இடத்தில் எனக்கு அமிஸ்டாட் (Amistad) என்ற ஆங்கில படத்தில் வரும் ஒரு காட்சியும் நினைவுக்கு வருகிறது. அப்படத்தின் கதையில், 1839ம் ஆண்டு, மேற்கு ஆப்ரிக்காவைச் சேர்ந்த அடிமைகளை, வேறு இடத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருந்த படகை, அந்த அடிமைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர், அந்தப் படகின் கேப்டனையும், வேறு சில நபர்களையும் கொன்றனர், ஆனால் உடனடியாக அவர்கள் பிடிபட்டனர், சிறையில் அடைக்கப்பட்டனர், பின்னர், விசாரணைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஒரு மறக்க முடியாத நீதிமன்றக் காட்சியில், அடிமைகளின் தலைவன், எப்படியாகிலும் தனக்கு விடுதலை தரும்படி, உணர்ச்சி வசப்பட்டுக் கெஞ்சுகின்றான். மூன்று எளிய வார்த்தைகள், சங்கிலிகளால் கட்டப்பட்ட ஒரு மனிதனின் வாயிலிருந்து, உடைபட்ட ஆங்கில வார்த்தைகளாகத் திரும்பத் திரும்ப, மேலும் மேலும் வலிமையோடு வெளியாகிக் கொண்டேயிருக்கின்றன, அந்த நீதி மன்றமே அமைதியாக இருக்கின்றது, “எங்களுக்கு விடுதலை தாருங்கள்!” என்பதே அந்த வார்த்தைகள். அவர்களுக்கு நியாயம் வழங்கப்பட்டது, அந்த மனிதர்கள் விடுதலையைப் பெற்றார்கள்.
ஆம், விடுதலை உணர்வு என்பது ஒவ்வொரு உயிரினத்திடமும் அதனதன் இயல்பிலேயே உள்ளது. எனவேதான் கட்டப்பட்ட மாடுகூடத் தனது கட்டை அவிழ்த்து தன்னை விடுவித்துக் கொள்ள விரும்புகின்றது. கூண்டிலிடப்பட்டக் கிளி தன் உரிமைக் குரலை எழுப்பிக்கொண்டே இருக்கின்றது. இந்த விடுதலை உணர்வானது, மனிதர்களுக்கு அதிலும் சிறப்பாக நம் தமிழ் இனத்திற்குச் சற்றே அதிகம் உள்ளது என்பதை, “நாம் யார்க்கும் குடி அல்லோம் .... நாமினி அஞ்சோம்" என்று தேவாரத்தைப் பாடிய திருநாவுக்கரசர் சொன்ன வார்த்தைகளிலிருந்து நாம் புரிந்துகொள்ளலாம். ஆம். நாமார்க்கும் குடியல்லோம் என்று திருநாவுக்கரசர் கூறியது நாங்கள் தமிழர்கள் யாருக்கும் அடிமைகளல்ல, எமனுக்குக்கூடப் பயப்படமாட்டோம், எமது கொள்கைக்காக, நாங்கள் தேர்ந்தெடுத்த எமது வழியில் செல்வதற்கு எவருக்கும் பயப்படத் தேவையில்லை என்பதுதான் இதன் புரிதலாகக் கொள்ளப்பட வேண்டுமென நான் நினைக்கிறேன்.
ஆம். உண்மையிலிருந்து விலகுகிறீர்கள் என்றால், உங்களுக்கு எதிராக நீங்கள் வேலை செய்கிறீர்கள் என்று அர்த்தம். உங்களை நீங்களே அடிமைத்தனத்திற்குள் தள்ளுகிறீர்கள் என்று அர்த்தம். உங்களுக்கு நீங்களே ஒரு வேலி அமைத்துக் கொள்கிறீர்கள் அல்லது விலங்கிட்டுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம்.
“ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, பிறகு, அவன் தானாகவே கிளர்ந்து எழுவான்” என்று கூறுவார் டாக்டர் அம்பேத்கார்.
மேலும், அவர், “சுதந்திரச் சிந்தனையே உண்மையான விடுதலை. தீண்டத்தகாதவர்களுக்குச் சட்டம் வழங்கும் உரிமைகளைக் காட்டிலும், சமூக விடுதலையே தேவை. அந்தச் சமூக விடுதலை உங்களுக்குக் கிடைக்காத வரைக்கும் சட்டம் வழங்கும் எந்த உரிமைகளும் எதற்கும் பயன்படாது.
சிலர் உங்களுக்கு உடல் சார்ந்த சுதந்திரம் முழுமையாக இருக்கிறது என்று அறிவுறுத்த
விழைவார்கள். உண்மைதான். நீங்கள் சட்டத்திற்கு உட்பட்டு எங்கு வேண்டுமானாலும் போகலாம், எதை வேண்டுமானாலும் பேசலாம். ஆனால் அந்தச் சுதந்திரத்தால் என்ன ஆகப்போகிறது? ஒரு மனிதன் உடம்பினால் மட்டுமல்ல, சிந்தனைகளினாலும் ஆக்கப்பட்டவன். வெறும் உடல் சார்ந்த சுதந்திரத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வது? சிந்தனைகளின் விடுதலையே அவசியமான விடுதலை.
ஒரு கைதியின் விலங்கு ஏன் கழற்றப்படுகிறது? அதன் கோட்பாடு என்ன? விலங்கு கழற்றப்பட்டதால் விடுதலை பெற்ற அவன் இனி தன் விருப்பப்படியே தன் நடத்தைகளை அமைத்துக்கொள்ளவும் தனக்கு இருக்கும் ஆற்றல்களைத் தடையின்றி முற்றும் முதலாகப் பயன்படுத்திக்கொள்ளவுமே. ஆனால் தன் சிந்தனைகளில் விடுதலையை அடையாத ஒருவனுக்கு உடல் சார்ந்த விடுதலை மட்டும் வழங்கப்பட்டால் அதனால் என்ன பயன்? சுதந்திரச் சிந்தனையே உண்மையான விடுதலை. சிந்தனைகள் சுதந்திரமானவைகளாக இல்லையென்றால், கையில் விலங்கிடாவிடினும் அவன் அடிமைதான்! உயிரோடு இருந்தாலும் அவன் பிணம்தான்.
இதை உணர்ந்தே புரட்சிக் கவிஞர் பாரதிதாசனார் நம் தமிழ் இளைஞர்களைப் பார்த்து அன்றே அதாவது 1945-களிலேயே,
- பூட்டிய இரும்புக் கூட்டின்
- கதவு
- திறக்கப்பட்டது!
- சிறுத்தையே வெளியில் வா!
- எலி என
- உன்னை இகழ்ந்தவர்
- நடுங்கப்
- புலி எனச் செயல் செய்யப் புறப்படு வெளியில்!
- நம்பினை பகலினை நள்ளிருள் என்றே
- சிம்புட் பறவையே
- சிறகைவிரி! எழு!
- சிங்க இளைஞனே திருப்பு முகம்! திறவிழி! என்று கர்ச்சித்தார்.
ஆம், உண்மையான விடுதலை உணர்வு நமை ஆட்கொள்ளும்போது நம் நாடும் வீடும் ஊரும், நகரும், பேரும், புகழும், அதன் எல்லைகளைத் தாண்டி விரியும். விடுதலை வானம் நம் வசப்படும். (அருள்பணி ஆ.அமல் ராஜ், மஊச)
Saturday, 14 August 2021
கலாச்சாரத்தில் வேரூன்றிய நம்பிக்கை – திருத்தந்தையின் செய்தி
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஒருமைப்பாடு என்பது, அனைத்தையும் ஒரே மாதிரியாக மாற்றுவது அல்ல, மாறாக, அது, பல்வேறு பரிமாணங்கள் கொண்ட நல்லிணக்கம் என்பதை நாம் கற்றுக்கொள்வது, மிகுந்த நலம் விளைவிக்கும் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் அமெரிக்க துறவியர் மாநாட்டிற்கு அனுப்பிய ஒரு காணொளியில் கூறியுள்ளார்.
இலத்தீன் அமேரிக்கா, மற்றும் கரீபியன் பகுதிகளில் பணியாற்றும் துறவியர், ஆகஸ்ட் 13, இவ்வெள்ளி முதல், 15 இஞ்ஞாயிறு முடிய மேற்கொள்ளும் ஒரு மெய்நிகர் மாநாட்டிற்கு திருத்தந்தை அனுப்பியுள்ள காணொளிச் செய்தியில், கலாச்சாரத்தில் வேரூன்றிய நம்பிக்கையைக் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
"துறவு சபைகளுக்கிடையே, கலாச்சாரங்களுக்கிடையே பயணிக்கும் துறவற வாழ்வு" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் கலந்துகொள்வோர், கலாச்சாரத்தில் ஊன்றப்பட்ட நம்பிக்கை, துறவற வாழ்வுக்கு வழங்கும் சவால்களின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வது முக்கியம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறியுள்ளார்.
இறையியலை உருவாக்கி, வளர்ப்பது, துறவியரின் பணி
மக்களின் ஆழ்மனதில் வேரூன்றியிருக்கும் கலாச்சாரத்தை சரிவரப் புரிந்துகொண்டு, அதன் அடிப்படையில், கலாச்சாரத்தில் வேரூன்றிய இறையியலை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும், துறவியரின் பணி அமைந்துள்ளது என்று, திருத்தந்தை தன் செய்தியில் கூறியுள்ளார்.
நம்பிக்கையை கலாச்சாரத்தில் வேரூன்ற வைப்பதும், கலாச்சாரத்தை நற்செய்தியாக மாற்றுவதும் இணைந்து செல்லவேண்டும் என்று கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய ஆவியார் மக்களின் உள்ளங்களில் விதைத்துள்ள நம்பிக்கையை பாராட்டி வளர்ப்பது, இறைவன் நமக்கு வழங்கியுள்ள ஒரு கோடை என்று கூறினார்.
கிறிஸ்தவ வாழ்வு – கொள்கைத் திரட்டாக மாறும் ஆபத்து
கலாச்சாரத்தில் வேரூன்றுதல் நிகழாதபோது, கிறிஸ்தவ வாழ்வும், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வும், இயல்பு வாழ்விலிருந்து பிரிந்து, வெறும் அறிவுசார்ந்த கொள்கைத்திரட்டாக மாறிவிடுகிறது.
ஒருங்கிணைப்பதிலும், உடன்பிறந்த உணர்வை வளர்க்க பயணிப்பதிலும் அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு அதிக தேர்ச்சியடைந்திருக்க வேண்டும் என்று தன் செய்தியில் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இன்றைய காலக்கட்டத்தில், துறவு வாழ்வு உயிர் வாழ்ந்தால் போதும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டினார்.
முழுமையான நற்செய்திப் பணி
அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வைத் தெரிவுசெய்தவர்கள், இறைமக்களுடன் இணைந்திருத்தல், அவர்களை உளமார மதித்தல் என்ற அம்சங்கள் வழியே, நற்செய்தியைப் பரப்பும் பணியில் முழுமையாக ஈடுபடமுடியும் என்று திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்திற்கும் மேலாக, உண்மையான மகிழ்வை வெளிப்படுத்துதல், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை மேற்கொண்டிருப்பவர்கள் ஆற்றக்கூடிய மிகப்பெரும் மறைபரப்புப்பணி என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த அருளை இறைவனிடம் அனைவரும் கேட்கும்படியாக அழைப்பு விடுத்துள்ளார்.
திருப்பீடத்திற்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் உறவு
பல்வேறு தடைகளின் நடுவே, சீனாவில் வாழும் கத்தோலிக்கர்கள் கொண்டிருக்கும் பக்தியும், ஆர்வமும், சீனாவுடன் திருப்பீடம் துவங்கிய உரையாடல்களை, தொடர்ந்து நடத்த, உந்துசக்தியாக அமைந்துள்ளன – கர்தினால் பரோலின்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
2018ம் ஆண்டு சீனாவுடன் திருப்பீடம் நிறைவேற்றிய ஒப்பந்தங்களின் தொடர்ச்சியாக, உரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன என்றும், கோவிட் பெருந்தொற்றின் தடைகளால் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்த உரையாடல் முயற்சிகள் விரைவில் தொடரும் என்று தான் நம்புவதாகவும், திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் ஊடகத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
இத்தாலியின் Trent நகரில், தன் கோடை விடுமுறையை கழித்துவரும் கர்தினால் பரோலின் அவர்கள், அங்கு வெளியாகும் La Voce del Nordest என்ற வார இதழுக்கு அளித்த பேட்டியில், திருப்பீடத்திற்கும் சீனாவுக்கும் இடையே நிலவும் உறவு, திருத்தந்தையின் உடல் நலம், மற்றும் அரசுத்தலைவர் பொறுப்பிலிருந்து ஓய்வுபெறவிருக்கும் இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்களின் பணிக்காலம் ஆகிய தலைப்புகளில் தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
உரையாடல்கள் தொடரும்
சீன அரசுக்கும், கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே துவக்கப்பட்ட உரையாடல், தொடர்ந்து நடைபெறும் என்ற உறுதியை, தன் பேட்டியில் வழங்கிய கர்தினால் பரோலின் அவர்கள், பல்வேறு தடைகளின் நடுவே, சீனாவில் வாழும் கத்தோலிக்கர்கள் கொண்டிருக்கும் பக்தியும், ஆர்வமும், இந்த உரையாடல்களை தொடர்ந்து நடத்த உந்துசக்தியாக அமைந்துள்ளன என்று கூறினார்.
திருத்தந்தையின் உடல்நலம்
இவ்வாண்டு ஜூலை 4ம் தேதி, உரோம் நகரின் ஜெமெல்லி மருத்துவமனையில் அறுவைசிகிச்சை பெற்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைப்பற்றி கேள்வி எழுந்தபோது, சிகிச்சைக்குப்பின் உடல் நலனில் இயல்பு நிலைக்குத் திரும்புவது, வயதின் காரணமாக, சற்று மெதுவாக இருந்தாலும், திருத்தந்தையின் உள்ளுணர்வு, எப்போதும்போல், இளமையுடன் இருக்கிறது என்று பதிலளித்தார் கர்தினால் பரோலின்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் புதன் மறைக்கல்வி உரைகளை மீண்டும் துவங்கியுள்ளதிலிருந்தும், செப்டம்பர் மாதம் ஹங்கேரி மற்றும் சுலோவாக்கியா நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள ஆவலாய் இருப்பதிலிருந்தும் அவரது உள்ள உறுதியைப் புரிந்துகொள்ளலாம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் சுட்டிக்காட்டினார்.
இத்தாலிய அரசுத்தலைவரின் ஏழு ஆண்டுகள்
தன் பேட்டியின் இறுதியில், இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்களைக் குறித்து பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், மத்தரெல்லா அவர்கள், ஏழு ஆண்டுகளாக அரசுத்தலைவர் பணியை ஆற்றி ஓய்வெடுக்கப்போகும் இவ்வேளையில், அவர், இத்தாலி நாட்டின் மீதும், மக்கள் மீதும் கொண்டுள்ள அன்பை, தன் அர்ப்பண உணர்வின் வழியே காட்டியதற்காக நன்றி கூறினார்.
மேலும், லித்துவானியா நாட்டிற்கு தான் மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணி பயணத்தைக் குறித்தும், உக்ரைன் நாட்டிற்கென நியமிக்கப்பட்டுள்ள புதிய தூதரை ஆயராக அருள்பொழிவு செய்யவிருப்பதைக் குறித்தும் திருப்பீடச் செயலர் கர்தினால் பரோலின் அவர்கள் குறிப்பிட்டார்.
வறியோர் வங்கியை உருவாக்கிய அருள்பணியாளர் மரணம்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
PIME என்றழைக்கப்படும் அயல்நாட்டு மறைப்பணிகளின் பாப்பிறைக் கழகம் என்ற நிறுவனத்தின் மறைப்பணியாளராக பங்களாதேஷ் நாட்டில் பணியாற்றிவந்த அருள்பணி ஜூலியோ பெருத்தி (Giulio Berutti) அவர்கள் கோவிட பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு, ஜூலை 11, இப்புதனன்று இறையடி சேர்ந்தார்.
வட இத்தாலியின் Busto Arsizio எனுமிடத்தில் பிறந்த அருள்பணி பெருத்தி அவர்கள், 1970ம் ஆண்டு தன் 26வது வயதில் அருள்பணியாளராக திருப்பொழிவு பெற்று, அடுத்த ஆண்டு, பங்களாதேஷ் நாடு, விடுதலையடைந்தபின், அந்நாட்டிற்கு மறைப்பணியாளராக சென்றார்.
பங்களாதேஷ் நாட்டின் தினாஜ்பூர் மறைமாவட்டத்தில் பணியாற்றிவந்த அருள்பணி பெருத்தி அவர்கள், அம்மறைமாவட்டத்தின் ஒவ்வொரு பங்கிலும் சிறு சேமிப்பு வங்கிகளைத் துவக்கி, வறியோருக்கு பெருமளவு உதவிகள் செய்து வந்தார்.
அருள்பணி பெருத்தி அவர்கள் ஆற்றிவந்த பணிகளை பாராட்டிப் பேசிய தினாஜ்பூர் ஆயர் செபாஸ்டின் டுடு (Sebastian Tudu) அவர்கள், அருள்பணி பெருத்தி அவர்கள் வறியோருக்காக உருவாக்கிய இந்த வங்கிகளின் வழியே சிறுதொழில்கள், குழந்தைகளின் கல்வி, வீட்டு வசதி என்ற பல்வேறு பயன்களை வறியோர் அடைந்தனர் என்று கூறினார்.
மேலும், அருள்பணி பெருத்தி அவர்கள், பங்களாதேஷ் நாட்டில். புனித வின்சென்ட் தாதியர் நிறுவனத்தின் வழியே, கத்தோலிக்க தாதியர் அமைப்பை முதன் முதலாக உருவாக்கினார் என்றும், மக்களுக்கு மருத்துவ காப்பீடு முறையையும் அறிமுகம் செய்துவைத்தார் என்றும் ஆசிய செய்தி கூறுகிறது.
கோவிட் பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்ட அருள்பணி பெருத்தி அவர்களுக்கு பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு, அவர் மருத்துவ மனையிலிருந்து வெளியேறியபின், மீண்டும் இந்த பெருந்தொற்றின் பாதிப்புக்கு உள்ளாகி, தன் 77வது வயதில், இறையடி சேர்ந்தார்.
ஆகஸ்ட் 11 இப்புதனன்று இறையடி சேர்ந்த அருள்பணி ஜூலியோ பெருத்தி அவர்களின் உடல், ஆகஸ்ட் 13, இவ்வெள்ளியன்று தினாஜ்பூர் பேராலயத்தில் அடக்கம் செய்யபட்டது என்று, ஆசிய செய்தி கூறுகிறது. (AsiaNews)
பருவநிலை மாற்றங்களுக்கு மனித நடவடிக்கைகளே காரணம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவரமுடியாத அளவில், பருவநிலை பெரிய அளவு சீர்குலைந்த மாற்றங்களைக் கண்டுள்ளதற்கு மனித நடவடிக்கைகள் முக்கியக் காரணம் என, ஐ.நா. நிறுவனம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை ஒன்று குற்றம் சாட்டுகிறது.
IPCC எனப்படும், பருவ நிலை மாற்றம் குறித்து நாடுகளுக்கிடையே கலந்துரையாடும் ஐ.நா. அமைப்பு, அண்மையில் வெளியிட்டுள்ள 3000 பக்க அறிக்கையின்படி, பருவநிலை மாற்றத்தின் முக்கியக் காரணியாக மனிதர்களின் நடவடிக்கைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.
'பருவ நிலை மாற்றம் 2021 : இயற்பியல் அறிவியல் அடிப்படை' என்ற தலைப்பில், 200 அறிவியலாளர்களால் தயாரிக்கப்பட்டுள்ள ஐ.நா. அறிக்கையின் தொகுப்பில், சுற்றுச்சூழல், கடல், மற்றும் நிலம், வெப்பமாகி வருவதற்கு மனிதர்களே காரணம் என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அண்மைய பருவநிலை மாற்றங்கள், மனிதகுலத்திற்கு எச்சரிக்கையை விடுத்துவருகின்றன எனக்கூறும் இவ்வறிக்கை, உலகின் பசுமை நிலையை பாதிக்கும் வாயுக்களின் வெளியேற்றம், காடுகள் அழிப்பு போன்றவை நம் பூமியின் மூச்சை திணறடித்து, பல கோடி மக்களின் வாழ்வுக்கு அச்சுறுத்தலாக உள்ளன என கூறியுள்ளது.
ஒரு காலத்தில் 50 ஆண்டுகளுக்கு ஒருமுறையே இடம்பெற்று வந்த அனல்காற்று வீசுதல், தற்போது, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இடம்பெறுவதாகவும் கவலையை வெளியிடும் இந்த அறிக்கை, தற்காலச் சூறாவளிகளின் பலமும் வேகமும் அதிகரித்துள்ளதையும் சுட்டிக்காட்டுகிறது.
2050ம் ஆண்டிற்குள் ஆர்டிக் பெருங்கடலின் மீதுள்ள பனிக்கட்டிகள் அனைத்தும் கரைந்து காணாமல் போய்விடும் என்ற அச்சத்தையும் வெளியிடுகிறது ஐ.நா. அறிக்கை.
உலகின் சராசரி வெப்ப விகிதத்தைவிட, வடபகுதியின் வெப்பம் இருமடங்கு அதிகரித்துள்ளதாக கவலையை வெளியிடும் இவ்வறிக்கை, உலகம் வெப்பமாகி வருவதால் பனிப்பாறைகள் உருகி, கடலின் நீர்மட்டம் 2 முதல் 3 மீட்டர் வரை உயரும் ஆபத்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.
பழங்குடியின மக்களின் ஞானம், அறிவை, கொண்டாட ஐ.நா. அழைப்பு
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உலகில் வாழ்கின்ற 47 இலட்சத்து 60 ஆயிரத்துக்கு மேற்பட்ட பழங்குடியின மக்கள் எதிர்கொள்ளும் உரிமை மீறல்களை ஏற்கும் அதேவேளை, அம்மக்களின் ஞானம் மற்றும், அறிவைக் கொண்டாடவும், அவர்களோடு உண்மையான ஒருமைப்பாட்டுணர்வு கொள்ளவும், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச்செயலர் அந்தோனியோ கூட்டேரஸ் அவர்கள் அழைப்புவிடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 09, வருகிற திங்களன்று கடைபிடிக்கப்படும், பழங்குடியினர் உலக நாளுக்கென்று செய்தி வெளியிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், பழங்குடிகளுக்கு இழைக்கப்படும் கொடுமையான சமத்துவமற்றநிலைகளை முடிவுக்குக் கொணருமாறு, இந்த உலக நாளில், அனைத்துலக சமுதாயத்திடம் தான் விண்ணப்பிப்பதாகக் கூறியுள்ளார்.
இன்றையச் சூழலில், பழங்குடியின மக்களின் நிலங்களும், குடியிருப்புப் பகுதிகளும், அவர்களின் அரசியல் மற்றும், பொருளாதாரத் தன்னாட்சியும், அவர்களின் பிள்ளைகளும்கூட சுரண்டப்பட்டு வருகின்றன என்று கூறியுள்ள கூட்டேரஸ் அவர்கள், இந்நிலை, அவர்களின் மாண்பு, மற்றும், சுதந்திரங்கள் ஆகியவற்றையும் பறித்துவிடுகின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பழங்குடிகள் உலக நாள்
“எவரும் ஒதுக்கப்பட்டுவிடக் கூடாது: பழங்குடியின மக்கள், மற்றும், புதியதொரு சமுதாய ஒப்பந்தத்திற்கு அழைப்பு” என்ற தலைப்பில், ஆகஸ்ட் 09, வருகிற திங்களன்று, பழங்குடியினர் உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது.
1982ம் ஆண்டு, ஆகஸ்ட் 9ம் தேதி, ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பழங்குடி இன மக்கள் பற்றிய பணிக்குழு, தன் முதல் கூட்டத்தை கூட்டியது. 1994ம் ஆண்டு டிசம்பர் 23ம் தேதியன்று, பழங்குடியினர் உலக நாளை உருவாக்கிய ஐ.நா. நிறுவனத்தின் பொது அவை, அதே ஆகஸ்ட் 9ம் தேதியையே, பழங்குடியினர் உலக நாளாகவும் அறிவித்தது.
பழங்குடிகள்
உலகில் 90 நாடுகளில் வாழ்கின்ற பழங்குடியின மக்கள், உலக மக்கள் தொகையில் 6.2 விழுக்காடாகும். இம்மக்கள், தனிச்சிறப்புமிக்க பன்முகக் கலாச்சாரங்கள், மரபுகள், மொழிகள், அறிவு, மற்றும், தாங்கள் வாழ்கின்ற பூமியோடு சிறந்ததோர் உறவு ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றனர்.
எண்ணற்ற பழங்குடியினத்தவர், பல்வேறு வடிவங்களில் தன்னாட்சி அமைப்புக்களை உருவாக்கி சிறப்பாக வாழ்ந்து வந்தாலும், அவர்களின் நிலப்பகுதி மற்றும் வளங்களின் மீது அதிகாரம் கொண்டிருக்கும் நடுவண் அரசுகளின் அதிகாரத்தின் கீழே அவர்கள் வாழவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. (UN)
Tuesday, 3 August 2021
அனைவருக்கும் உணவு கிடைப்பது, அடிப்படை உரிமை
மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்
உரோம் நகரில் நடைபெற்ற ஐ.நா.வின் உணவு பற்றிய தயாரிப்பு மாநாட்டை முன்னிட்டு அறிக்கை வெளியிட்ட, உலகளாவிய காரித்தாஸ் நிறுவனத்தின் பொதுச்செயலர், திருவாளர் அலாய்சியஸ் ஜான் அவர்கள், எல்லாருக்கும் உணவு கிடைப்பது, மனிதரின் அடிப்படை உரிமைகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ளார்.
உணவு அமைப்புகள் குறித்து கொள்கைகளை வரையறுப்பது, மற்றும், அவற்றை நடைமுறைப்படுத்துவது பற்றிய அனைத்து நிலைகளிலும் இடம்பெறும் கலந்துரையாடல்களில், இயற்கை முறையில் உணவு உற்பத்தி செய்யும் உள்ளூர் விவசாயிகள், அதில் அதிகம் ஈடுபட்டுள்ள பெண்கள், மற்றும், ஏழைகளின் உரிமைகள் இணைக்கப்படவேண்டும் என்று, ஜான் அவர்கள் கேட்டுக்கொண்டார்.
எல்லாருக்கும் உணவு என்ற முயற்சிக்கு, வேதிய உரங்களைப் பயன்படுத்தி பெருமளவில் உற்பத்தி செய்யும் வேளாண்மை மட்டுமே பதிலளிப்பதாய் இருக்காது, மாறாக, உணவு சார்ந்த நியாயமான ஓர் அமைப்புமுறையில், பெண்களும், குறுநில விவசாயிகளும் இணைக்கப்படுவதே, அதற்கு உதவும் என்றும், ஜான் அவர்கள் கூறியுள்ளார்.
கோவிட்-19 பெருந்தொற்று, அனைவருக்கும் உணவு கிடைக்கும் முறைகளில் சமத்துவமற்ற நிலைகளையும், அநீதிகளையும் உருவாக்கியுள்ளது எனவும், இம்மாதங்களிலும், வரவிருக்கும் ஆண்டுகளிலும் பல இலட்சக்கணக்கான மக்கள், உணவு பாதுகாப்பின்மை மற்றும், சத்துணவு பற்றாக்குறையை எதிர்கொள்வர் எனவும், காரித்தாஸ் நிறுவனத்தின், பொதுச் செயலர் குறிப்பிட்டுள்ளார்.
பல ஆண்டுகளாக, காரித்தாஸ் நிறுவனம், மிகவும் ஏழைச் சமுதாயங்களோடு கொண்டிருந்த அனுபவங்களின் அடிப்படையில் தன் கருத்துக்களை வெளியிடுவதாகத் தெரிவித்துள்ள ஜான் அவர்கள், பாரம்பரிய இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், உள்ளூர் சந்தைகளுக்குச் சாதமாக விநியோகிக்கப்படும் பொருள்கள் பற்றி பரிசீலனை செய்தல், பொறுப்புள்ள உணவுப் பயன்பாட்டை ஊக்குவித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தப்படுமாறு வலியுறுத்திக் கூறியுள்ளார்.
அனைவரையும் சகோதரர், சகோதரிகளாக நடத்தும் மனப்பான்மை தேவை
இறைவனோடும், இயேசு கிறிஸ்துவில் ஒருவர் ஒருவருடனும் இணைந்திருப்பது, நம் வேறுபாடுகளைக் களையவும், ஒரே நோக்கத்தோடு முன்னோக்கிச் செல்லவும் உதவுகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்
ஆப்ரிக்க மக்கள் அனைவரும், தங்களிடையே காணப்படும் முரண்பாடுகளைக் கைவிட்டு, இயேசுவில், தங்கள் ஆணிவேரைக் கொண்டவர்களாக ஒன்றிணைந்து செயல்படவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளனர், ஆப்ரிக்க மற்றும் மடகாஸ்கர் ஆயர்கள்.
ஆப்ரிக்க, மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு நாள், ஜூலை 29 முதல், ஆகஸ்ட் 1, இஞ்ஞாயிறு வரை சிறப்பிக்கப்பட்டதையொட்டி, செய்தியொன்றை வெளியிட்ட அப்பகுதி ஆயர்கள், இறைவனோடும், இயேசு கிறிஸ்துவில் ஒருவர் ஒருவருடனும் இணைந்திருப்பது, நம் வேறுபாடுகளைக் களையவும், ஒரே நோக்கத்தோடு முன்னோக்கிச் செல்லவும் உதவுகிறது, என அதில் கூறியுள்ளனர்.
கடவுளுக்கு நம் வாழ்வில் முதலிடம் கொடுக்கும்போது, அனைவரையும் சகோதரர், சகோதரிகளாக நடத்தும் மனப்பான்மை பிறக்கும் எனக்கூறும் ஆயர்கள், ஆப்ரிக்க, மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவையின் நல்நோக்கங்கள் வெற்றிபெற, அனைத்து மக்களின் ஒன்றிணைந்த ஆர்வமும், தியாக மனப்பான்மையும் இன்றியமையாதவை என தங்கள் அறிக்கையில் கூறியுள்ளனர்.
1969ம் ஆண்டு ஜூலை மாதம் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அவர்களால் உகாண்டாவின் கம்பாலாவில் துவக்கப்பட்ட SECAM எனப்படும், ஆப்ரிக்க, மற்றும் மடகாஸ்கர் ஆயர்களின் கூட்டமைமைப்பு, ஒவ்வோர் ஆண்டும் ஜூலை மாத இறுதியில், தன் கூட்டமைப்பு நாளை சிறப்பித்து வருகிறது.
இவ்வாண்டின் கூட்டமைப்பு நாளுக்கென அப்பகுதி ஆயர்களின் செய்தியை கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அதன் தலைவர், கர்தினால் Philippe Ouédraogo அவர்கள், ஆயர்களின் பொதுநல நோக்கங்கள் நிறைவேற, மக்களின் ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளார்.
நீதித்துறையின் மனசாட்சியை உலுக்கிய ஒரு நிகழ்வு
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம், மக்களாட்சியின் கழுத்தை நெரிக்கும் அரசின் சட்டங்களை நீக்கவும், குடியரசைக் காக்கவும் வேண்டிய முயற்சிகளில் ஈடுபட நம்மை அழைக்கிறது – 108 சமுதாய நல அமைப்புக்கள்
ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்
அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம், இந்திய நாட்டின், குறிப்பாக, நீதித்துறையின் மனசாட்சியை உலுக்கி எடுத்த ஒரு நிகழ்வு என்றும், உலகின் பார்வையில், இந்திய நீதித்துறையின் மதிப்பை, பெருமளவு தாழ்த்தியுள்ள ஒரு நிகழ்வு என்றும், இந்தியாவில் பணியாற்றும் 100க்கும் மேலான சமுதாய நல அமைப்புக்கள் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.
ஜூலை 5ம் தேதி, இந்திய அரசு, மற்றும், நீதித்துறையினரால் அதிகாரப்பூர்வமாகக் கொல்லப்பட்ட 84 வயது நிரம்பிய அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களின் மரணம், மக்களாட்சியின் கழுத்தை நெரிக்கும் அரசின் சட்டங்களை நீக்கவும், குடியரசைக் காக்கவும் வேண்டிய முயற்சிகளில் ஈடுபட நம்மை அழைக்கிறது என்று, இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
குடிமக்கள் தங்கள் உரிமைகளுக்காகப் போராடவும், அரசின் அடக்குமுறைகளை எதிர்த்து குரல் எழுப்பவும் பெற்றுள்ள அடிப்படை உரிமைகள், படிப்படியாகப் பறிக்கப்பட்டு வருவதையும், குற்றங்களைக் குறைப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள நீதித்துறை, ஆயுதம் தாங்கி அச்சுறுத்தும் ஒரு கும்பலாக மாறிவருவதையும், கடந்த பத்தாண்டுகளில், அதிகம் காணமுடிகிறது என்று இவ்வறிக்கை கூறுகிறது.
‘சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச்சட்டம்’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ள UAPA என்ற அடக்குமுறை சட்டத்தின் கீழ், 2015ம் ஆண்டுக்கும் 2019ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில், 7050 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று கூறும் இவ்வறிக்கை, இவர்களில் 2.2 விழுக்காட்டினர் மட்டுமே குற்றவாளிகள் என்பது இதுவரை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று, 2021ம் ஆண்டு மார்ச் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புள்ளிவிவரங்களை, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.
ஆதாரம் ஏதுமின்றி குற்றவாளியென பழிசுமத்தப்பட்டு, கொல்லப்பட்ட அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்கள், குற்றமற்றவர் என்பதை நிலைநாட்டவும், அரசின் சார்பாகவும், நீதித்துறையின் சார்பாகவும் நிகழும், அநீதியான அடக்குமுறைகள் நீக்கப்படவும், ஜூலை 23, இவ்வெள்ளியன்று நாடெங்கும் பல்வேறு போராட்டங்களை மேற்கொள்ள, 108 சமுதாய நீதி அமைப்புக்கள் அழைப்பு விடுத்துள்ளன.
இதைத் தொடர்ந்து, இவ்வாண்டு ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர நாள் துவங்கி, ஆகஸ்ட் 28ம் தேதி முடிய நாடெங்கும் வெவ்வேறு மாநிலங்களில், வெவ்வேறு நாள்களில், தொடர்ச்சியாக, உண்ணா நோன்பு, மற்றும் பொதுக்கூட்டங்கள் நடைபெறுவதற்கும் இவ்வமைப்பினர் அழைப்பு விடுத்துள்ளனர்.
பீமா கொரேகான் என்ற இடத்தில் வன்முறையைத் தூண்டினர் என்ற காரணத்தால் கைது செய்யப்பட்டு இன்றளவும் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர்கள், மருத்துவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், மாணவர் தலைவர்கள் ஆகியோரில், 5 பேர், மூன்று ஆண்டுகளுக்கு முன், ஆகஸ்ட் 28ம் தேதி, கைது செய்யப்பட்டனர் என்பதைச் சுட்டிக்காட்டும் இவ்வறிக்கை, அவர்கள் கைது செய்யப்பட்டதன் மூன்றாம் ஆண்டு நிறைவை நினைவுகூரும் முறையில், நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
ஜார்கண்ட் பழங்குடியினரின் தலைமைச் சங்கம், ஸ்டெர்லைட்க்கு எதிரான மக்கள் இயக்கம், பெங்களூரு இந்திய சமுதாய நிறுவனம், தமிழ்நாடு சமுதாய கண்காணிப்பு, அரசின் அடக்குமுறை மற்றும் பாலியல் வன்முறைக்கு எதிரான பெண்கள் இயக்கம், ஆகிய அமைப்புக்கள் உட்பட, 108 சமுதாய நல அமைப்புக்கள் இணைந்து இவ்வறிக்கையை வெளியிட்டுள்ளன.
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica
Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...