Monday, 3 May 2021

கர்தினால்கள், ஆயர்கள், வத்திக்கான் நீதிமன்றத்தில் விசாரணை

 நீதித்துறை அலுவலகங்கள்


புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், நாடுகள் அல்லது அரசுகளின் தலைவர்கள் விசாரிக்கப்படுவதற்குமுன், அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும் என்பதை ஒத்ததாக உள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சுயவிருப்பத்தினால் வெளியிடும் “motu proprio” என்ற, ஒரு புதிய திருத்தூது மடல் வழியாக, வத்திக்கான் நகர நாட்டில் நீதித்துறை அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

ஏப்ரல் 30, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட புதிய திருத்தூது மடலில், வத்திக்கான் நீதிபதிகளால், குற்றவாளிகள் என கூறப்பட்ட கர்தினால்களும், ஆயர்களும், ஒரு கர்தினாலின் தலைமையில் வத்திக்கானின் உச்ச நீதிமன்றத்தால், இதுவரை விசாரிக்கப்பட்டுவந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள கர்தினால்கள் மற்றும், ஆயர்கள், இனிமேல் வத்திக்கான் நாட்டின் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவர் என்றும், விசாரணைகள் தொடங்கப்படுவதற்குமுன், திருத்தந்தையிடம் முன் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்றும், இந்த புதிய திருத்தூது மடலில் கூறப்பட்டுள்ளது.

வத்திக்கான் நாட்டின் நீதித்துறை அமைப்பில் மாற்றம் கொண்டுவருவது பற்றி,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தன் சுயவிருப்பத்தினால் வெளியிட்ட “motu proprio” திருத்தூது மடலில் குறிப்பிட்டிருந்தார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், நாடுகள் அல்லது அரசுகளின் தலைவர்கள் விசாரிக்கப்படுவதற்குமுன், அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும் என்பதை ஒத்ததாக உள்ளன.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...