Monday, 3 May 2021

மே 6 - 34 புதிய ‘சுவிஸ் கார்ட்ஸ்’ பணியேற்பு நிகழ்வு

 ‘சுவிஸ் கார்ட்ஸ்’ பணியேற்பு நிகழ்வில் உறுதிமொழி வழங்குதல்


1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை 7ம் கிளமெண்ட் அவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், மே 06, வருகிற வியாழனன்று, 34 பேர் புதிதாக இணையும் நிகழ்வு, கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பில், வீரர்கள் புதிதாக இணையும் நிகழ்வு, இரண்டாவது முறையாக இவ்வாண்டில், பொதுமக்களின் பங்கேற்பின்றி இடம்பெறுகிறது என்றும், ஆயினும், இவ்வாண்டின் இந்நிகழ்வு, சுவிஸ் கார்ட்ஸ் (www.guardiasvizzera.ch) இணயதளத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பினருக்கு, வருகிற வியாழனன்று, உரோம் நேரம் காலை 7.30 மணிக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில்  திருப்பலி நிறைவேற்றுவார், பின்னர் மாலை 5 மணிக்கு புதியவர்கள் பணியேற்பு நிகழ்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுவிஸ் கார்ட்ஸ்

1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை 7ம் கிளமெண்ட் அவர்கள், பாப்பிறை மாளிகையைவிட்டுத் தப்பித்துச் செல்வதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தனர். இந்தப் படைவீரர்கள் உயிரிழந்த மே 6ம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும், வத்திக்கானில், புதிய சுவிஸ் காவல் வீரர்கள் உறுதிமொழி எடுத்து, பணியில் சேருவது வழக்கம். இவ்வாண்டு இந்நிகழ்வு, மே 6, வருகிற வியாழனன்று நடைபெறும்.

No comments:

Post a Comment

திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு

  திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமைய...