Friday, 7 May 2021

107வது குடிபெயர்ந்தோர்-புலம்பெயர்ந்தோர் உலக நாள் செய்தி

  Centro Astalli என்ற இயேசு சபை மையத்தில் புலம்பெயர்ந்தோரைச் சந்திக்கும் திருத்தந்தை பிரான்சிஸ்


இன்னும் விரிவடைந்த 'நாம்' என்ற உண்மையே, இவ்வுலகில் நாம் மேற்கொள்ளும் பயணத்தின் தெளிவான தொடுவானமாக இருக்கவேண்டும் - திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

இன்னும் விரிவடைந்த 'நாம்' என்ற உண்மையே, இவ்வுலகில் நாம் மேற்கொள்ளும் பயணத்தின் தெளிவான தொடுவானமாக இருக்கவேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஏப்ரல் 6 இவ்வியாழனன்று ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார்.

ஒவ்வோர் ஆண்டும், குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் உலகநாளை, செப்டம்பர் இறுதி ஞாயிறன்று கடைபிடித்துவரும் கத்தோலிக்கத் திருஅவை, இவ்வாண்டு, தன் 107வது உலக நாளை, செப்டம்பர் 26, ஞாயிறன்று கடைபிடிக்க உள்ளது.

"இன்னும் விரிவடைந்த 'நாம்'-ஐ நோக்கி"

இவ்வாண்டு கடைபிடிக்கப்படும் இவ்வுலக நாளுக்கென, திருத்தந்தை உருவாக்கியுள்ள செய்தி, "இன்னும் விரிவடைந்த 'நாம்'-ஐ நோக்கி" என்ற தலைப்பில் இவ்வியாழனன்று வெளியிடப்பட்டது.

"உலகமனைத்தும் சந்திக்கும் இந்த நலவாழ்வு நெருக்கடி கடந்துபோகும் வேளையில், நாம் இன்னும் கூடுதலான நுகர்வுக் கலாச்சாரத்திலும், தன்னை மட்டுமே காத்துக்கொள்ளும் சுயநலத்திலும் மூழ்கும் ஆபத்து உண்டு. இறைவனுக்கு விருப்பமானால், இனி, 'அவர்கள்' 'அவை' என்ற எண்ணங்களை விடுத்து, 'நாம்' என்ற எண்ணத்தில் சிந்திப்போமாக" (Fratelli Tutti - எண்.35) என்று, தன் Fratelli Tutti திருமடலில் எழுதியுள்ள சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியின் அறிமுக வரிகளாக பதிவு செய்துள்ளார்.

'நாம்' என்ற உண்மையை இன்னும் விரிவடையச் செய்யும் நோக்கத்துடன், இவ்வாண்டின் புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர் உலக நாளுக்கு, "இன்னும் விரிவடைந்த 'நாம்'-ஐ நோக்கி" என்பதை தலைப்பாக தெரிவு செய்துள்ளதாகக் கூறியுள்ள திருத்தந்தை, 'நாம்' என்ற உண்மை, இறைவன் உருவாக்கிய படைப்பின் திட்டத்தில், துவக்கத்திலிருந்தே காணப்படுகிறது என்று கூறியுள்ளார்.

வேறுபட்டாலும், ஒன்றித்திருக்கும் இறைவனைப்போல்...

வெவ்வேறு தனி ஆள்களாக இருந்தாலும், ஒரே கடவுளாக ஒன்றித்திருக்கும் இறைவன், மனிதரைப் படைத்தபோது, அவர்களை ஆணென்றும், பெண்ணென்றும் வேறுபாடுகளுடன் படைத்தாலும், அவர்கள் ஒன்றித்திருக்கவேண்டும் என்று (தொ.நூ. 1:27-28) விரும்பினார் என்பதை, இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார், திருத்தந்தை.

கிறிஸ்து என்ற மறையுண்மையை மையமாகக் கொண்டு, "எல்லாரும் ஒன்றாய் இருப்பார்களாக" (யோவான் 17:21) என்பதே, மீட்பு வரலாற்றின் ஆரம்பத்திலிருந்தே சொல்லப்பட்டு வந்துள்ள ஒரு மந்திரம் என்பதை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இந்த 'நாம்' என்ற ஒன்றிப்பை, தற்போதைய உலகம் பெருமளவு உடைத்து, பிரித்து, காயப்படுத்தியுள்ளது என்ற கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.

உடைக்கப்பட்டுள்ள மனித சமுதாயம், பெரும் நெருக்கடிகளைச் சந்திக்கும் வேளையில், தான் என்ற எண்ணத்தில் இன்னும் கூடுதலாக சுருங்கிப் போவதால், சமுதாயத்தின் விளிம்புக்குத் தள்ளப்படுவோர், இந்த சுயநலப் போக்கின் தீவிரத்தால் பாதிக்கப்படுகின்றனர் என்பதை திருத்தந்தை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

கத்தோலிக்கருக்கும், இவ்வுலக மக்களுக்கும் விண்ணப்பம்

நாம் அனைவரும் ஒரே படகில் பயணம் செய்பவர்கள் என்பதும், சுவர்களை எழுப்பி, நம்மையே பிரித்துக்கொள்வதற்குப் பதில், அனைவரும் இணைந்து இவ்வுலகப் பயணத்தை மேற்கொள்வதே சிறந்தது என்பதும் நாம் உணரவேண்டிய உண்மைகள் என்று இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, இச்செய்தியில், கத்தோலிக்கருக்கும், இவ்வுலக மக்களுக்கும் என தன் விண்ணப்பத்தை இரு வழிகளில் விடுத்துள்ளார்.

'கத்தோலிக்க' என்ற சொல்லின் முழுப்பொருளையும், கத்தோலிக்கத் திருஅவையின் அனைத்து உறுப்பினர்களும் உணர்வதற்கு உதவியாக, "நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே" (எபே. 4:4-5) என்று புனித பவுல் கூறியுள்ள சொற்களை திருத்தந்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

திருமுழுக்கு பெற்றுள்ள நாம் அனைவரும், ஒரு குறிப்பிட்ட குழுமத்தின் உறுப்பினராக மட்டுமல்லாமல், உலகளாவிய குடும்பத்தின் உறுப்பினர்களாகவும் வாழ அழைப்பு பெற்றுள்ளோம் என்பதை, கத்தோலிக்கர்களுக்கு சிறப்பான முறையில் நினைவுறுத்தியுள்ளார், திருத்தந்தை.   

இன்றைய உலகில், கத்தோலிக்கத் திருஅவை, முற்சார்பு எண்ணங்கள், அச்சம் ஆகியவற்றை நீக்கிவிட்டு, விளிம்புகளை நோக்கிச் சென்று, அங்குள்ள அனைவரையும் அரவணைப்பதற்கு அழைப்பு பெற்றுள்ளது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இச்செய்தியில் வலியுறுத்திக் கூறியுள்ளார்.

அனைவரையும் உள்ளடக்கிய உலகை அமைக்க...

ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள விண்ணப்பத்தில், நீதியும், அமைதியும் நிறைந்த எதிர்காலத்தை உருவாக்கும் முயற்சியில் யாரையும் பின்னே விட்டுச்செல்லாமல், அனைவரும் இணைந்தே செல்லவேண்டும் என்று கூறியுள்ளார்.

திருத்தூதர் பணிகள் நூலில் கூறப்பட்டுள்ள பல்வேறு இனத்தவரின் (தி.பணிகள் 2:9-11) ஒருங்கிணைப்பு, தன்னை பெரிதும் கவர்ந்த பகுதி என்பதை, இச்செய்தியில் குறிப்பிட்டுப் பேசும் திருத்தந்தை, அமைதியிலும், நல்லிணக்கத்திலும் இணைந்துள்ள இத்தகைய ஒரு சமுதாயமே, புதிய எருசலேம் (காண்க. எசா 60; திருவெளிப்பாடு 21:3) என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

நமக்கு வழங்கப்பட்டுள்ள உலகம் என்ற நாணயம்

தொலைநாட்டிற்குப் புறப்பட்ட உயர் குடிமகன், தன் பணியாளரை அழைத்து அவர்களிடம் பத்து மினாக்களை வழங்கிய உவமையை (லூக்கா 19:12-13) இச்செய்தியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் ஒவ்வொருவரிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ள இவ்வுலகம் என்ற நாணயத்தை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதற்கு நம்மிடமிருந்து இறைவன் கணக்கு எதிர்பார்ப்பார் என்பதை நினைவுறுத்தியுள்ளார்.

நாம், மற்றவர்கள், நாம், அந்நியர் என்ற பாகுபாடுகள் ஏதுமின்றி, அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ள இந்த உலகத்தை பேணிக்காப்பதும், இவ்வுலக மக்களை காப்பதும் நமது கடமை என்பதை, அனைத்து உலக மக்களுக்கும் ஓர் அழைப்பாக விடுத்துள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நான் மாந்தர் யாவர்மேலும் என் ஆவியைப் பொழிந்தருள்வேன்; உங்கள் புதல்வரும் புதல்வியரும் இறைவாக்கு உரைப்பர்; உங்கள் முதியோர் கனவுகளையும் உங்கள் இளைஞர்கள் காட்சிகளையும் காண்பார்கள். (யோவேல் 2:28) என்று இறைவாக்கினர் யோவேல் கண்ட கனவை, தன் செய்தியின் இறுதியில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரே மனித குடும்பத்தையும், ஒரே பொதுவான இல்லத்தையும் பேணிக்காக்கும் கனவைக் காண நாம் அழைக்கப்பட்டுள்ளோம் என்று கூறி, தன் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

இந்தியாவிற்கு சிங்கப்பூர் கத்தோலிக்க காரித்தாஸ் உதவி

 புதுடெல்லி குருத்வாராவில் படுக்கைகள்


இந்திய பெருந்தொற்று நோயாளர் சார்பில் விண்ணப்பம் ஒன்றை விடுத்த நான்கே நாட்களில், சிங்கப்பூர் காரித்தாஸ் அமைப்பு, 5 இலட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான் செய்திகள்

இந்தியாவில் கோவிட்-19 பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவும் நோக்கத்தில், 3 இலட்சம் சிங்கப்பூர் டாலர்களை உடனடியாக அனுப்ப உள்ளதாக, சிங்கப்பூர் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு அறிவித்துள்ளது.

சிங்கப்பூரின் காரித்தாஸ் அமைப்பும் இந்திய காரித்தாஸும் இணைந்து, தொற்று நோய் பாதிப்பாளர்களுக்காக விடுத்த விண்ணப்பத்தைத் தொடர்ந்து, ஒரு சில நாட்களிலேயே அவர்கள் எதிர்பார்த்ததைவிட மும்மடங்கு நிதியுதவிகள் கிட்டியுள்ளதாக உரைத்த சிங்கப்பூர் காரித்தாஸின் மனிதாபிமான, மற்றும் இடர்துடைப்பு அமைப்பு, நிதி திரட்டல் பிரச்சாரத்தை தற்போது நிறுத்தி, திரட்டிய நிதியை எவ்வகையில் விநியோகிப்பது என்பது குறித்து திட்டமிட்டுவருவதாக தெரிவித்தது.

இந்தியாவின் கோவிட் பெருந்தொற்று மீட்புப் பணிகளுக்கு நிதியுதவிகளை ஆற்றவேண்டும் என, சிங்கப்பூர் கத்தோலிக்க காரித்தாஸ் அமைப்பு, சிங்கப்பூரின் செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து ஏப்ரல் 28ம் தேதி விண்ணப்பம் ஒன்றை விடுத்ததைத் தொடர்ந்து, நான்கே நாட்களில் 5 இலட்சம் டாலர்களைப் பெற்றுள்ளது.

கோவிட் தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்திய மக்களுக்கு சிகிச்சை வழங்க, ஏழு சிகிச்சை மையங்களை இந்திய காரித்தாஸ் அமைப்புடன் உருவாக்க உள்ளதாக அறிவித்துள்ளது, சிங்கப்பூர் காரித்தாஸ் அமைப்பு. இது தவிர, சுவாசிப்பதற்கு உதவும் மருத்துவக் கருவிகளையும் வாங்கி அனுப்ப உள்ளது, இக்கத்தோலிக்க பிறரன்பு அமைப்பு.

130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில், தற்போது கோவிட் பெருந்தொற்று பரவலின் இரண்டாவது அலை இடம்பெற்றுவரும் நிலையில், கடந்த வாரம் ஒவ்வொரு நாளும் இந்தியாவில் மூன்று இலட்சம் புதிய தொற்றுகளும், ஒவ்வொரு நாளும் மூவாயிரம் இறப்புகளும் இடம்பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் 2 கோடிக்கும் மேற்பட்டோர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 2 இலட்சத்து 20 ஆயிரம்பேர் இந்நோயால் உயிரிழந்துள்ளதாகவும் பதிவாகியுள்ளது.

Pope’s closeness to India as it struggles against Covid-19

 Pope Francis.


Pope Francis has sent a message to Cardinal Oswald Gracias expressing his closeness with the people severely hit by record infections and deaths.

By Robin Gomes

Pope Francis has expressed his solidarity and closeness to the people of India, ravaged by the second wave of Covid-19 infections that has overwhelmed its healthcare system. “At this time when so many in India are suffering as a result of the present health emergency, I am writing to convey my heartfelt solidarity and spiritual closeness to all the Indian people, together with the assurance of my prayers that God will grant healing and consolation to everyone affected by this grave pandemic,” the Pope wrote in a message to Cardinal Oswald Gracias of Bombay, the president of the Catholic Bishops’ Conference of India (CBCI).

The Holy Father particularly expressed his closeness to “the sick and their families, to those who care for them, and in particular to those who are mourning the loss of their loved ones.”

“I think too of the many doctors, nurses, hospital workers, ambulance drivers and those working tirelessly to respond to the immediate needs of their brothers and sisters. With deep appreciation, I invoke upon all of them God’s gifts of perseverance, strength and peace.”

Pope Francis expressed his gratitude to the Catholic Church of India “for its works of charity and fraternal solidarity carried out in the service of all.”

“I think especially of the generosity shown by so many committed young people.  I join you in commending to the Lord’s infinite mercy the faithful who have lost their lives, not least the great numbers of priests and men and women religious.” 

“In these days of immense grief, may we all be consoled in the hope born of Easter and our unshakeable faith in Christ’s promise of resurrection and new life,” the Pope concluded, imparting his blessing. 

India's battle

The message of Pope Francis comes as the coronavirus continues to take record tolls in the country, including in the Catholic Church.  On Thursday, the number of new infections crossed the 400,000 mark for the second time since the devastating surge began last month. The 412,262 new cases pushed India's official tally to more than 21 million. The Health Ministry also reported 3,980 deaths in the last 24 hours, bringing the total to 230,168.   However, experts say the scale of the disaster is much higher as official government reports are undercounted.

Demand for hospital oxygen has increased sevenfold since last month, while the government denies reports that it is slow in distributing life-saving supplies from abroad.  There is also an acute shortage of hospital beds, medicines, vaccines and cremation facilities, severely straining the country’s fragile healthcare system.

The World Health Organization said in a weekly report that India accounted for nearly half the coronavirus cases reported worldwide last week and a quarter of the deaths.  The country has 3.45 million active cases. 

The Catholic Church in India that has made many of its facilities available in the fight against the pandemic, is no exception.  The virus has claimed numerous victims among its clergy, religious and lay people, who are engaged in its vast network of schools, healthcare services and social service programmes, even amid the crisis.  Before the Pope's message arrived on Thursday, Bishop Basil Bhuriya of Jhabua in the central India state of Madhya Pradesh had succumbed to the virus.  Retired Archbishop Antony Anandarayar of Pondicherry-Cuddalore in southern India passed away the previous day.  A tally last month by Matters India reported that at least 20 priests had died in a span of one month.  Many more are also infected and dying.  programmes

Council of Cardinals reflects on life of Church in pandemic

 Archive photo from 2019 of Pope Francis with the Council of Cardinals


The Council of Cardinals discuss the impact of the Covid-19 crisis around the world, and the Church's response to it, during a virtual meeting held on Thursday afternoon. The also continue talks on the upcoming Apostolic Constitution which will focus on the organisation of the Roman Curia.

By Vatican News staff reporter

In a meeting held virtually on Thursday afternoon, members of the Council of Cardinals shared their experiences of the “economic and social consequences” of the ongoing Covid-19 pandemic, and discussed “the Church’s commitment to health, economic recovery and the support offered to those most in need.”

Pope Francis took part in the meeting from his residence in the Casa Santa Marta, which the other members of the Council – Cardinals Oscar Rodriguez Maradiaga, Reinhard Marx, Sean Patrick O’Malley, Oswald Gracias, and Fridolin Ambongo Besungo – joined the conversation from their respective countries. Cardinals Pietro Parolin and Giuseppe Bertello, along with the Council’s Secretary, Bishop Marco Mellino, were connected from the Vatican.

After considering the current situation in their various regions, the members of the Council turned their attention to the forthcoming Apostolic Constitution, which will deal with the organisation of the Roman Curia. A note from the Holy See Press Office explained that the Cardinals discussed “the working methodology that will have to be implemented for the revision and correction of some normative texts” after the new document takes effect.

They also addressed several “further perspectives opened up by the text under elaboration.”

The next meeting of the Council of Cardinals is scheduled for June of this year.

155 million faced acute food insecurity in 2020

 The conflict in Yemen has been a major factor in the country's acute food crisis.


The worst-affected countries last year were Burkina Faso, South Sudan and Yemen. Outside Africa, Yemen, Afghanistan, Syria and Haiti featured were among the 10 worst food crises last year.

 

 By Robin Gomes

At least 155 million people faced crisis levels of food insecurity in 2020 because of conflict, extreme weather events and economic shocks linked in part to Covid-19.  This is an increase of 20 million over the previous year, 2019, when 135 million people in 55 countries and territories faced acute food crisis, which was an already record year for acute food insecurity. 

The grim figures in the latest Global Report on Food Crises (GRFC) 2021 released by the Global Network Against Food Crises (GNAFC) on Wednesday, are a stark warning that the factors are continuing to push millions of people into acute food insecurity this year too.  While conflict will remain the major driver of food crises in 2021, the report said, Covid-19 and related containment measures and weather extremes will continue to exacerbate acute food insecurity in fragile economies. 

Africa

According to the network of the European Union, the United Nations as well as government and non-government agencies, countries in Africa remained “disproportionately affected”.  Conflict was the main factor that pushed almost 100 million people into acute food insecurity, followed by economic shocks (40 million) and weather extremes (16 million).

The GNAFC alliance, which is committed to tackling the root causes of food crises, pointed out that the worst-affected countries were Burkina Faso, South Sudan and Yemen.  According to the Integrated Food Security Phase Classification (IPC), a common global scale for classifying the severity and magnitude of food insecurity and malnutrition, across these 3 countries, around 133,000 people were at IPC5, the highest level of need.  They required urgent action “to avert widespread death and a collapse of livelihoods”, the report said.

At least another 28 million people were “one step away from starvation”, IPC4, across 38 countries and territories, where urgent action saved lives and livelihoods, and prevented famine from spreading. Close to 98 million people facing acute food insecurity in 2020 - or two out of three - were on the African continent. 

Outside Africa

Outside Africa, Yemen, Afghanistan, Syria and Haiti featured were among the 10 worst food crises last year.   The Global Report on Food Crises also noted that 39 countries and territories had experienced food crises in the last five years. In these countries and territories, the population affected by high levels of acute food insecurity (IPC3 or worse) increased from 94 to 147 million people, between 2016 and 2020, the global network said. It added that in the 55 food-crisis countries and territories covered by the report, more than 75 million children under five were stunted and at least 15 million showed signs of wasting in 2020.

Ending the vicious cycle

In his comment in the report, UN Secretary-General António Guterres said, “Conflict and hunger are mutually reinforcing. We need to tackle hunger and conflict together to solve either…We must do everything we can to end this vicious cycle. Addressing hunger is a foundation for stability and peace.”

According to the Global Report on Food Crises, “The Covid-19 pandemic has revealed the fragility of the global food system and the need for more equitable, sustainable and resilient systems to nutritiously and consistently feed 8.5 billion people by 2030.”

கீழடி-உள்ளூர் வரலாறு பாடத்திட்டத்தில் தேவை- கிருஷி உரை KEEZHADI BALASUBR...

தமிழ் மொழியின் சிறப்புகள் I Interesting Facts about Tamil

கொரோனா நெருக்கடி சூழலில் இந்திய மக்களுடன் துணை நிற்கிறேன் - போப் ஃபிரான்...

Thursday, 6 May 2021

கீழடியில் முழுமையான மண்பானை கிடைத்துள்ளதால் ஆய்வாளர்கள் மகிழ்ச்சி | Kee...

Pope approves 7 new invocations to Litany of St. Joseph

 The feast of St. Joseph the Worker is observed on May 1.


On the feast of St. Joseph the Worker, May 1, the Vatican added 7 new invocations to the Litany of St. Joseph, with the approval of Pope Francis.

By Robin Gomes

The Vatican Congregation for Divine Worship and the Discipline of the Sacraments on Saturday introduced 7 new invocations to the litany in honour of St. Joseph. The initiative comes during the Year of St. Joseph which Pope Francis declared from 8 December 2020, to 8 December 2021.

In a letter to the presidents of bishops’ conferences around the world, the Secretary of the Congregation, Archbishop Arthur Roche and Undersecretary, Father Corrado Maggioni, SMM, explained the reason behind the move. “On the 150th anniversary of the proclamation of Saint Joseph as Patron of the Universal Church, the Holy Father, Pope Francis, published the Apostolic Letter Patris corde, with the aim ‘to increase our love for this great saint, to encourage us to implore his intercession and to imitate his virtues and his zeal’,” they wrote. “In this light, it appeared opportune to update the Litany in honour of Saint Joseph, approved by the Apostolic See in 1909, by integrating seven new invocations drawn from the interventions of the Popes who have reflected on aspects of the figure of the Patron of the Universal Church.”

The Congregation presented the new invocations to Pope Francis, who approved their integration into the Litany of Saint Joseph. 

The new invocations, originally in Latin, are as follows: Custos Redemptoris, Serve Christi, Minister salutis, Fulcimen in difficultatibus, Patrone exsulum, Patrone afflictorum, Patrone pauperum. These could be translated as: Guardian of the Redeemer, Servant of Christ, Minister of salvation, Support in difficulties, Patron of exiles, Patron of the afflicted and Patron of the poor.

With these additions, the invocations in the Litany to St. Joseph now rise to 31. 

The Congregation said, “It will be the responsibility of the Episcopal Conferences to see to the translation and publication of the Litany in the languages which are within their competency; these translations do not require the confirmation of the Apostolic See.” The Congregation has also allowed the bishops conferences to add other invocations with which St. Joseph is honoured in their countries. “Such additions,” it said, “should be made in the proper place and preserve the literary genre of the Litany.”

நேர்மையாளராக, இறைவாக்கினராக வாழ்ந்த நீதிபதி லிவாத்தினோ

 அருளாளராக உயர்த்தப்படவிருக்கும் நீதிபதி ரொசாரியோ லிவாத்தினோ


"இளையோரே, நான் உங்களுக்கு என்ன செய்துவிட்டேன்?" என்று, நீதிபதி லிவாத்தினோ அவர்கள் கூறிய இறுதிச்சொற்கள், இளையோரை, கொலைக்குற்றங்களில் ஈடுபடுத்தும் ஏரோதுக்களை நோக்கி கூறப்பட்டுள்ளன – திருத்தந்தை பிரான்சிஸ்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

நீதிபதி லிவாத்தினோ அவர்கள், தன்னைச் சுட்டுக்கொன்ற இளையோரைப் பார்த்து, "இளையோரே, நான் உங்களுக்கு என்ன செய்துவிட்டேன்?" என்று, தான் சாவதற்கு முன் சொன்ன இறுதிச்சொற்கள், அவர், நேர்மையாளராக, இறைவாக்கினராக வாழ்ந்தார் என்பதற்கு சான்றாக விளங்குகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு நூலுக்கு எழுதியுள்ள அணிந்துரையில் கூறியுள்ளார்.

இத்தாலிய குற்றவியல் நீதிபதியாகப் பணியாற்றிய ரொசாரியோ ஆஞ்சலோ லிவாத்தினோ (Rosario Angelo Livatino) அவர்கள், 1990ம் ஆண்டு செப்டம்பர் 21ம் தேதி, மாஃபியா குற்றக்கும்பலால் ஏவிவிடப்பட்ட இளையோர் குழுவால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

லிவாத்தினோ பற்றிய நூலுக்கு திருத்தந்தை அணிந்துரை

இறையடியாராக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நீதிபதி லிவாத்தினோ அவர்கள், மே 9ம் தேதி, வருகிற ஞாயிறன்று, இத்தாலியின் சிசிலி தீவின் அக்ரிஜெந்தோ (Agrigento) மறைமாவட்ட பேராலயத்தில் அருளாளராக உயர்த்தப்படுகிறார்.

இத்தருணத்தையொட்டி, லிவாத்தினோ அவர்களின் வாழ்வை மையப்படுத்தி, "ரொசாரியோ ஆஞ்சலோ லிவாத்தினோ - இரத்தம் சிந்தாத மறைசாட்சிய வாழ்விலிருந்து, இரத்தம் சிந்திய மறைசாட்சிய மரணம் வரை" என்ற தலைப்பில் வெளியாகும் ஒரு நூலுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அணிந்துரை வழங்கியுள்ளார்.

இன்றைய ஏரோதுக்களை நோக்கி...

வின்சென்சோ பெர்தொலோனே அவர்கள் எழுதியுள்ள இந்நூலின் அணிந்துரையில், லிவாத்தினோ அவர்கள், தன் மரணத்திற்கு முன் கூறிய அந்த இறுதிச் சொற்கள், இன்றைய உலகில், இளையோரை, கொலைக்குற்றங்களில் ஈடுபடுத்தும் ஏரோதுக்களை நோக்கி கூறப்பட்டுள்ளன என்று, திருத்தந்தை குறிப்பிட்டுள்ளார்.

தன் மத நம்பிக்கையின் அடிப்படையில் தன் நீதிபதி பணியை அர்ப்பண உணர்வுடன் மேற்கொண்ட லிவாத்தினோ அவர்கள், நீதிபதிகளுக்கு மட்டுமல்லாமல், நீதி சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருக்கும் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக விளங்குகிறார் என்று திருத்தந்தை தன் அணிந்துரையில் கூறியுள்ளார்.

விசுவாச வாழ்வு என்னும் போராட்டம்

விசுவாச வாழ்வு என்னும் போராட்டத்தை, பணிவோடு, கனிவோடு, மற்றும் கருணையோடு ஒவ்வொரு நாளும் வாழ்ந்துவந்த ரொசாரியோ ஆஞ்சலோ லிவாத்தினோ அவர்கள், நாம் அனைவரும் பின்பற்றவேண்டிய உன்னதமான வாழ்வுக்கு ஒரு வழிகாட்டியாக அமைந்துள்ளார் என்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் அணிந்துரையில் குறிப்பிட்டுள்ளார்.

இத்தாலியின் Canicattì எனுமிடத்தில் 1952ம் ஆண்டு பிறந்த Rosario Angelo Livatino அவர்கள், குற்றவியல் நீதிபதியாகப் பணியாற்றிய வேளையில், சிசிலியில் குற்றங்களைத் தொடர்ந்து வந்த மாஃபியா குழுவினரை கண்டித்து விடுத்துவந்த தீர்ப்புகளின் விளைவாக, 1990ம் ஆண்டு, செப்டம்பர் 21ம் தேதி, தன் பணிக்குச் சென்ற வேளையில், சாலையில், சுட்டுக்கொல்லப்பட்டார்.

தேர்தல் கூட்டங்களால் உருவான, கோவிட் பெரும் துன்பம்

 புது டில்லியில் ஆக்சிஜன் கலன்களை நிரப்புவதற்காக காத்திருப்போர்


கோவிட்-19 பெருந்தொற்று பரவாமல் இருக்க விதிக்கப்பட்ட தடைகளை மக்கள் மதிக்காமல் போனதால், அதன் விளைவை, ஆயிரமாயிரம் உயிரிழப்புகளாக கண்டுவருகிறோம் - டில்லி பேராயர், அனில் கூட்டோ

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

கோவிட்-19 பெருந்தொற்று பரவாமல் இருக்க விதிக்கப்பட்ட தடைகளை, மக்கள் மதிக்காமல் போனதால், அதன் விளைவை, ஆயிரமாயிரம் உயிரிழப்புகளாக கண்டுவருகிறோம் என்று, டில்லி உயர்மறைமாவட்ட பேராயர், அனில் கூட்டோ அவர்கள் கூறியுள்ளார்.

'தேவையில் இருக்கும் திருஅவைக்கு உதவி' என்று பொருள்படும் Aid to the Church in Need (ACN) அமைப்பிடம் பேசிய பேராயர் கூட்டோ அவர்கள், கடந்த சில மாதங்களாக நடைபெற்ற தேர்தல் கூட்டங்கள், இந்த பெரும் துன்பத்தை இந்திய சமுதாயத்தின் மீது சுமத்தியுள்ளது என்று கூறினார்.

இந்தியாவின் மிகப்பெரும் தலைவர்கள், ஊர் ஊராகச் சென்று, தேர்தல் கூட்டங்களை நடத்தியதால், மக்கள் கூட்டம் கூடுதலாக இருந்தது என்றும், அவர்கள் யாரும் எவ்வித பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றவில்லை என்றும், பேராயர் கூட்டோ அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே வண்ணம், ஏப்ரல் மாதத்தில், உத்தரகாண்ட் மாநிலத்தில், ஹரித்வார் புண்ணியத் தலத்தில் நடைபெற்ற கும்ப மேளா என்ற விழாவிலும், ஐந்து கோடிக்கும் அதிகமான பக்தர்கள், எவ்விதப் பாதுகாப்பு வழிமுறைகளையும் பின்பற்றாமல் கலந்துகொண்டது, இன்னும் பெரும் ஆபத்துக்களைக் கொணர்ந்துள்ளது என்று, பேராயர் கூட்டோ அவர்கள் கூறியுள்ளார்.

கத்தோலிக்க, மற்றும் கிறிஸ்தவ மருத்துவமனைகள், தங்களால் இயன்ற அளவு உதவிகளைச் செய்துவருகிறது என்றாலும், இவ்வள்வு பிரம்மாண்டமான நெருக்கடி நேரத்தில், மருத்துவப் பணியாளர்கள் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனர் எனபதை, பேராயர் கூட்டோ அவர்கள், வருத்தத்துடன் குறிப்பிட்டார்.

ACN அமைப்பு, இந்தியாவில், கோவிட்-19 நெருக்கடியைக் களையும் 27 திட்டங்களுக்கு, 3,20,000 பவுண்டுகள், அதாவது, 3,48,80,000 ரூபாய்கள், அவசர உதவியாக வழங்கியுள்ளது. (ICN)

பல்வேறு மதத்தவருக்கும் மகிழ்வு தரும் புனிதர் பட்ட செய்தி

 புனிதராக உயர்த்தப்படவிருக்கும் அருளாளர் தேவசகாயம்


இந்தியாவில் இதுவரை புனிதர்களாக உயர்த்தப்பட்டோரில், அருளாளர் தேவசகாயம் அவர்களே, முதல் பொதுநிலையினர். இவர் ஏற்கனவே, மக்கள் நடுவே ஒரு புனிதராகக் கொண்டாடப்பட்டு வருகிறார் - கோட்டாறு ஆயர், நசரேன் சூசை

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

மறைசாட்சியாக உயிர் நீத்த தேவசகாயம் அவர்கள் புனிதராக உயர்த்தப்படவிருக்கும் செய்தி, கத்தோலிக்கருக்கு மட்டுமல்லாமல், பல்வேறு மதத்தவருக்கும் மகிழ்வு தரும் செய்தியாக அமைந்துள்ளது என்று, கோட்டாறு மறைமாவட்ட ஆயர், நசரேன் சூசை அவர்கள் கூறியுள்ளார்.

புனிதராகும் முதல் பொதுநிலையினர்

மே 3, இத்திங்களன்று, திருப்பீடத்தில் நடைபெற்ற கர்தினால்கள் அவை கூட்டத்தில், அருளாளர் தேவசகாயம் உட்பட, ஏழு பேர் புனிதர் நிலைக்கு உயர்த்தப்படுவதற்கு வழங்கப்பட்ட ஒப்புதலைக் குறித்து தன் மகிழ்வை வெளியிட்ட, ஆயர் நசரேன் சூசை அவர்கள், அருளாளர் தேவசகாயம் அவர்கள், அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் ஒரு தூதராக விளங்குகிறார் என்று கூறினார்.

இந்தியாவில் இதுவரை புனிதர்களாக உயர்த்தப்பட்டோரில், அருளாளர் தேவசகாயம் அவர்களே, முதல் பொதுநிலையினர் என்பதைச் சுட்டிக்காட்டிய, ஆயர் நசரேன் சூசை அவர்கள், இவர் ஏற்கனவே, மக்கள் நடுவே ஒரு புனிதராகக் கொண்டாடப்பட்டாலும், இவர், திருஅவையால் அதிகாரப்பூர்வமாக புனிதர் என்று அறிவிக்கப்படும் நாளை அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலித் மற்றும் தாழ்த்தப்பட்டோர் பணிக்குழுவில் உழைத்துவந்த அருள்பணி தேவசகாய ராஜ் அவர்கள், பொதுநிலையினரான தேவசகாயம் அவர்கள் புனிதராக உயர்த்தப்படும் நிகழ்வு, ஒடிஸ்ஸா மாநிலத்தில் கிறிஸ்தவ நம்பிக்கைக்காக கொல்லப்ப்பட்டோரின் மறைசாட்சிய மரணமும் திருஅவையால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு அம்மாநில திருஅவை உழைப்பதற்கு விடுக்கப்பட்டுள்ள ஓர் அழைப்பு என்று கூறினார்.

அருளாளர் தேவசகாயம் – வாழ்க்கை குறிப்புகள்

1712ம் ஆண்டு முதல் 1752ம் ஆண்டு வரை வாழ்ந்த இறையடியார் தேவசகாயம் அவர்கள், திருவிதாங்கூர் பேரரசர் மார்த்தாண்ட வர்மாவின் நீதிமன்றத்தில் அதிகாரியாகப் பணியாற்றியவர். டச்சு கப்பற்படைத் தளபதி Eustachius De Lannoy என்பவரின் தூண்டுதலால், இந்து மதத்திலிருந்து, கத்தோலிக்க மதத்திற்கு மாறிய தேவசகாயம் அவர்கள், தன்னைப்போலவே பிறரும், கத்தோலிக்கத்தைத் தழுவி, திருமுழுக்குப் பெறுவதற்குத் தூண்டுதலாக விளங்கினார்.

இயேசு சபை அருள்பணியாளர் Bouttari Italus அவர்களால் திருமுழுக்கு பெற்ற தேவசகாயம் அவர்கள், தன் இயற்பெயரான நீலகண்ட பிள்ளை என்பதை மாற்றி, இறைவனின் உதவி என்று பொருள்படும், ‘இலாசர்’ என்ற பெயரை ஏற்றார். இறைவனின் உதவி என்பதைக் கூறும், 'தேவசகாயம்' என்ற பெயராலேயே இவர் அதிகமாக அறியப்படுகிறார். இவரது மனைவியார், பார்கவி அம்மாள் அவர்களும், திமுழுக்கு பெற்று, 'தெரேசா' என்று பொருள்படும், 'ஞானப்பூ அம்மாள்' என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

தேவசகாயம் அவர்கள், கிறிஸ்தவரான பின்னர் வேறுபாடின்றி எல்லாச் சாதியினரோடும், சமுதாயத்தின் எல்லாத் தரப்பினரோடும் சரிசமமாகப் பழகியதால், பிராமணர்கள் உட்பட உயர் சாதியினரின் வெறுப்பைப் பெற்றார். அரசருக்கும் இந்து தெய்வங்களுக்கும் இவர் அவமரியாதை செய்கிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டார்.

இதனால், 1749ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி திருவிதாங்கூர் மன்னரின் ஆணைப்படி, கைது செய்யப்பட்டு, பல கொடிய சித்ரவதைகளுக்கு உள்ளாகி, 1752ம் ஆண்டு சனவரி 14, அல்லது, 15ம் தேதியன்று, படைவீரர்களால், 5 கனத்த ஈயக் குண்டுகளால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

இவர் அடக்கம் செய்யப்பட்டுள்ள கல்லறை, கோட்டாறு மறைமாவட்டப் பேராலயமான புனித பிரான்சிஸ் சேவியர் பேராலயத்தில் உள்ளது.

இந்திய மண்ணில் பிறந்த முதல் மறைசாட்சியான இறையடியார் தேவசகாயம் அவர்கள், இறந்து அடக்கம் செய்யப்பட்ட நாள்முதல், இவரது கல்லறையை, மதம், இனம், மொழி என்ற பாகுபாடின்றி ஆயிரக்கணக்கான மக்கள் தரிசித்து வருகின்றனர். (UCAN)

இறையடி சேர்ந்த பேராயர் அந்தோணி அனந்தராயர், நல்லடக்கம்

 புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், அந்தோணி அனந்தராயர்


கோவிட்-19 பெருந்தொற்றினால் உருவான நலக்குறைவை முன்னிட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராயர் அனந்தராயர் அவர்கள், மே 4ம் தேதி, இரவு 9.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்

புதுவை-கடலூர் (புதுச்சேரி-கடலூர்) உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயர், அந்தோணி அனந்தராயர் அவர்கள், மே 4, இச்செவ்வாயனறு, தன் 76வது வயதில் இறையடி சேர்ந்தார்.

கோவிட்-19 பெருந்தொற்றினால் உருவான நலக்குறைவை முன்னிட்டு, சென்னை, புனித தோமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பேராயர் அனந்தராயர் அவர்கள், இச்செவ்வாய் இரவு, 9.30 மணியளவில் இறையடி சேர்ந்தார்.

பேராயர், அந்தோணி அனந்தராயர் – வாழ்க்கை குறிப்புகள்

1945ம் ஆண்டு, ஜூலை 18ம் தேதி, கும்பகோணத்திற்கு அருகே உள்ள வரதராஜன்பேட்டையில் பிறந்த அனந்தராயர் அவர்கள், பெங்களூரு புனித பேதுரு அருள்பணித்துவ பயிற்சி மையத்தில் மெய்யியல் மற்றும் இறையியலைக் கற்று, 1971ம் ஆண்டு அருள்பணியாளராக அருள்பொழிவு  பெற்றார்.

1997ம் ஆண்டு, தன் 52வது வயதில், உதகை மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்ற அருள்பணி அனந்தராயர் அவர்கள், அம்மறைமாவட்டத்தில் 7 ஆண்டுகள் பணியாற்றினார்.

2004ம் ஆண்டு, புதுவை-கடலூர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமிக்கப்பட்ட அனந்தராயர் அவர்கள், 17 ஆண்டுகள் பணியாற்றியபின், பணிஓய்வு பெறவிழைந்து அனுப்பிய விண்ணப்பத்தை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வாண்டு, சனவரி மாதம் 27ம் தேதி ஏற்றுக்கொண்டார்.

50 ஆண்டுகள், அருள்பணியாளராக... 24 ஆண்டுகள், ஆயராக...

50 ஆண்டுகள், அருள்பணித்துவ வாழ்வையும், 24 ஆண்டுகள் ஆயர்பணித்துவ வாழ்வையும் நிறைவு செய்துள்ள பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்கள், இலத்தீன் வழிபாட்டு முறை ஆயர்கள் அவையின் பணிக்குழுக்களில் பொறுப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

பேராயர் அந்தோணி அனந்தராயர் அவர்களின் அடக்கத் திருப்பலி, மே 5, புதனன்று மாலை 4 மணிக்கு, புதுவை அமல அன்னை பேராலயத்தில், கோவிட் பெருந்தொற்று உருவாக்கியுள்ள கட்டுப்பாடுகளுடன் நிறைவேற்றப்பட்டது.

Wednesday, 5 May 2021

‘அன்பு எரிச்சலுக்கு இடம் கொடாது’

 எரிச்சலுக்கு இடம் கொடாது, அரவணைக்கும் அன்பு


புனித பவுல் உருவாக்கியுள்ள அன்பின் பாடலில் முதலில் இடம்பெறும் சொல், பொறுமை. பொறுமையுடன் தொடர்புகொண்ட மற்றொரு பண்பு, 'எரிச்சல் அடையாதிருப்பது'.

ஜெரோம் லூயிஸ் - வத்திக்கான்

திருத்தூதர் பவுல், கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமுகத்தில் பதிவுசெய்துள்ள 'அன்பின் பாடல் என்ற பகுதி (1 கொரி. 13:1-13), விவிலியத்தின் புகழ்பெற்ற பகுதிகளில் ஒன்று. இப்பகுதியில், அன்பைப்பற்றி, திருத்தூதர் பவுல் கூறியுள்ள எண்ணங்களை, 13 பண்புகளாகப் பிரித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில் குறுகிய விளக்கங்களை வழங்கியுள்ளார்.

அன்பைக்குறித்து, புனித பவுல் அடியார், வரிசைப்படுத்தும் பண்புகளில், 'அன்பு பொறுமையுள்ளது' என்பதற்கு, முதலிடம் தந்துள்ளார். ‘பொறுமை’ என்ற பண்புடன் நெருக்கமான தொடர்புகொண்ட இரு பண்புகளைப்பற்றி, 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலின், 103, மற்றும் 104 ஆகிய இரு பத்திகளில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் எண்ணங்களைப் பதிவுசெய்துள்ளார். 'அன்பு எரிச்சலுக்கு இடம் கொடாது; தீங்கு நினையாது' என்ற இவ்விரு பண்புகளில், ‘அன்பு எரிச்சல் அடையாது’ என்ற பண்பைக்குறித்து, திருத்தந்தை பகிர்ந்துள்ள எண்ணங்கள் இதோ:

"பவுல் உருவாக்கியுள்ள அன்பின் பாடல், முதலில் கூறும் சொல், பொறுமை. மற்றவர்களின் குறைகளையும், தவறுகளையும் கண்டு, கடுமையான பதிலிறுப்பை வெளிப்படுத்தாமல் இருப்பதே, பொறுமை. அத்துடன் தொடர்புகொண்ட மற்றொரு பண்பு, 'எரிச்சல் அடையாதிருப்பது'. பிறரின் செயல்பாடுகள் நமக்குள் உருவாக்கும் பதிலிறுப்பு, வன்முறையான வடிவில் வெளிவராமல் காக்கவேண்டும். அத்தகைய வன்முறை வடிவான எண்ணங்கள், நமக்குள் காயங்களையும், அடுத்தவரிடமிருந்து அன்னியப்படும் நிலையையும் உருவாக்குகின்றன. அநீதியான ஒன்று நிகழ்கிறது என்று தெரிந்து, அதைக்குறித்து கோபமடைவது நியாயமானது. ஆனால், அந்தக் கோபம், அடுத்தவர் மீது திருப்பப்படும்போது, தீங்கு விளைவிக்கும்." (அன்பின் மகிழ்வு 103)

அன்பு தன்னலம் நாடாது, பிறர் நலம் நாடும்

 பார்செலோனாவில் இரமதான் மாதத்தில் பிறரன்பு


அன்புகூரப்படுவதை விரும்புவதைவிட அன்புகூர விரும்புவதே, மிகவும் முறையான பிறரன்பாகும் - புனித தாமஸ் அக்வினாஸ் (அன்பின் மகிழ்வு 102)

மேரி தெரேசா: வத்திக்கான் 

“நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு ஆகிய மூன்றுமே நிலையாய் உள்ளன. இவற்றுள் அன்பே தலைசிறந்தது”. இவ்வாறு, கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடல், 13ம் பிரிவை நிறைவுசெய்துள்ள பவுலடிகளார், அந்தப் பிரிவில், குறிப்பிட்டுள்ள, அன்பின் பல்வேறு அம்சங்கள் பற்றிய தன் கருத்துக்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன், 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், ‘திருமணத்தில் அன்பு’ என்ற நான்காம் பிரிவில் பதிவுசெய்துள்ளார். அன்பு தன்னலம் நாடாது என்பதற்கு, அந்தப் பிரிவின், 101,102ம் பத்திகளில், திருத்தந்தை குறிப்பிட்டுள்ள சிந்தனைகள்.....

மற்றவரை அன்புகூர்வதற்கு, முதலில் நம்மையே நாம் அன்புகூரவேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது. எனினும், பவுலடிகளாரின் அன்பு பற்றிய பாடலில், ”அன்பு, தனது சொந்த விருப்பத்தையோ, தன்னலத்தையோ நாடாது“ என்று சொல்லப்பட்டுள்ளது. இதே கருத்து, அவரது மற்றொரு திருமடலிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. “நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரைச் சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ளவேண்டும்” (பிலி.2:4). தன்னையே அன்புகூர்வதைவிட, மற்றவருக்குத் தாராளத்துடன் பணிபுரிவதே சிறந்த அன்பு என்பதை திருவிவிலியம் தெளிவுபடுத்துகின்றது. தன்னையே அன்புகூர்வது, மற்றவரை அன்புகூர இயல்வதற்குத் தேவையான உளவியல் சார்ந்த முன்நிபந்தனை மட்டுமே. “ஒரு மனிதர் தன்னையே கடுமையாக நடத்தினால், வேறு யாருக்கு அவர் நன்மை செய்பவராக இருப்பார்? தனக்குத்தானே கருமியாய் இருக்கும் மனிதரைவிடக் கொடியவர் இலர்” (சீராக் 14:5-6). (அன்பின் மகிழ்வு 101).

“அன்புகூரப்படுவதை விரும்புவதைவிட அன்புகூர விரும்புவதே, மிகவும் முறையான பிறரன்பாகும்”. உண்மையில், “மிக அதிகமாக அன்புகூர்கின்ற அன்னையர், அன்புகூரப்படுவதற்கு ஆசைப்படுவதைவிட அன்புகூர்வதையே மிக அதிகமாக விரும்புவர்” (Summa Theologiae,110,111) என்று, புனித தாமஸ் அக்வினாஸ் அவர்கள் அன்பு பற்றி விளக்குகிறார். ஆதலால், “திரும்பக் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பின்றி” (லூக்.6,35), அன்பால், நீதியை அளவுக்கதிகமாக வலியுறுத்த முடியும். மேலும், அன்புகளில் மிகச் சிறந்த அன்பு, “ஒருவர், மற்றவருக்காக, தன் உயிரைக் கொடுக்க இட்டுச்செல்லும் (காண்க.யோவா.15:13). நம்மைச் சுதந்திரமாகவும், முழுமையாகவும் தரவல்ல அத்தகைய மனத்தாராளம், உண்மையிலேயே இயலக்கூடியதா? ஆம், இயலக்கூடியதே. ஏனெனில், இவ்வாறு செயல்பட,  “கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்” (மத்.10:8) என்ற நற்செய்தி சொற்களால், நாம் வலியுறுத்தப்படுகிறோம். (அன்பின் மகிழ்வு 102)

'அன்பு இழிவானதைச் செய்யாது'

 அன்பு ஆறுதல் தரும்


அன்பின் வார்த்தைகளும், செய்கைகளும், செயல்பாடுகளும், நாம் பிறருக்கு செவிமடுப்பதற்கும், பிறருடன் கனிவாக பேசவும், தேவைப்படும்போது அமைதி காக்கவும் கற்றுத்தருகின்றன.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் -வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட 'அன்பின் மகிழ்வு' திருத்தூது அறிவுரை மடலில், 'திருமணத்தில் அன்பு' என்ற 4ம் பிரிவில், புனித பவுல் கொரிந்தியருக்கு எழுதிய முதல் திருமடலின் 13ம் பிரிவில் அன்பு குறித்து எடுத்துரைப்பவைகளை முதலில் விளக்கியுள்ளார்.  அதில், 'அன்பு இழிவானதைச் செய்யாது', என்ற பண்பு குறித்து, 99, மற்றும் 100ம் பத்திகளில் திருத்தந்தை கூறியுள்ள எண்ணங்களின் சுருக்கம் இதோ:  

அன்பு கூர்வது என்பது கனிவாக, சாந்தமாக இருப்பதையும், அது முரட்டுத்தனமானதல்ல, நயமற்றதல்ல என்பதையும் குறிக்கிறது. இதன் வார்த்தைகளும், செய்கைகளும், செயல்பாடுகளும், மரியாதையற்றவைகள் அல்ல, அதேவேளை, மற்றவர்களுக்கு துன்பம் விளைவிப்பதிலிருந்து விலகி நிற்பவையும்கூட. பணிவன்பாகிய இது, பிறருக்கு செவிமடுப்பதற்கும், பிறருடன் கனிவாக பேசவும், தேவைப்படும்போது அமைதி காக்கவும் நம் மனதையும், உணர்வுகளையும் புடமிடுவதற்குக் கற்றுத்தருகிறது. நம்மைச் சுற்றியிருக்கும் ஒவ்வொருவருடனும் இசைவுடன் வாழ, அன்பு நம்மிடம் எதிர்பார்க்கின்றது. இதற்கு, ஒவ்வொரு நாளும் மற்றவர்கள் மீதான நம்பிக்கையும், மதிப்பும் புதுப்பிக்கப்பட வேண்டிய அவசியம் உள்ளது. நம் அன்பு எவ்வளவு ஆழமானதோ, அந்த அளவுக்கு, மற்றவர்களின் சுதந்திரத்தை மதிக்கவும், அவர்கள் நமக்காக தங்கள் இதயக் கதவுகளைத் திறக்கும்வரை காத்திருக்கவும் அழைப்பு விடுக்கிறது. (அன்பின் மகிழ்வு 99)

மற்றவர்களுடன் மேற்கொள்ளப்படும் நேர்மையான சந்திப்பில், மனம்திறந்து செயல்பட, 'கனிவான பார்வை' அத்தியாவசியமானது. நம் குறைபாடுகளைக் கண்டுகொள்ளாமல், மற்றவர்களின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டும் மனநிலைக்கு இது எதிரானது. நமக்குள் இருக்கும் வேறுபாடுகளையும் தாண்டி, மற்றவர்களுடன் ஒத்துழைத்து, அவர்களுடன் பொறுமையுடன் செயல்பட, இந்த கனிவான பார்வை நமக்கு உதவுகிறது.  இரக்கமுள்ள அன்பு, பிணைப்புகளை கட்டியெழுப்புவதுடன், உறவுகளை வளர்த்து, ஒருங்கிணைப்பில் புதிய தொடர்புகளை உருவாக்கி, ஓர் உறுதியான சமுதாய கட்டுமானத்தைப் பின்னுகிறது. இதன் வழியாக, அன்பு மேலும் பலப்படுகின்றது. ஏனெனில், நாமும் சமுதாயத்தின் ஒரு பகுதி என்ற உணர்வில்லாமல், நம்மால், மற்றவர்களுக்கு நம்மை அர்ப்பணிக்கமுடியாது. மற்றவர்கள் தங்களுடைய தேவைகளை நிறைவற்றுவதற்காகவே வாழ்கிறார்கள் என, சமுதாய விரோதிகள், சுயநலமாக எண்ணுகின்றனர். அப்படிப்பட்ட எண்ணங்கள் இருக்கும் சூழல்களில், கனிவான அன்புக்கும், அதன் வெளிப்பாடுகளுக்கும், இடமில்லை. அன்புகூர்பவர்கள், ஆறுதலின், பலத்தின், ஊக்கத்தின் வார்த்தைகளை எடுத்துரைக்க வல்லவர்கள்.  “மகனே, துணிவோடிரு” (மத் 9:2); “உமது நம்பிக்கை பெரிது” (மத் 15:28); “எழுந்திடு” (மாற் 5:41); “அமைதியுடன் செல்க” (லூக் 7:50); “அஞ்சாதீர்கள்” (மத் 14:27), என்பவை, இயேசு தன் வாழ்வில் பயன்படுத்திய வார்த்தைகள். நம் குடும்பங்களிலும் ஒருவர் ஒருவரோடு உரையாடும்போது, இயேசுவின் இந்த கனிவான வார்த்தைகளை பயன்படுத்த கற்றுக்கொள்வோம். (அன்பின் மகிழ்வு 100)

Monday, 3 May 2021

தமிழர் வரலாற்றில் இன்னொரு மகுடம் | அரியலூரில் ஒரு கீழடி | Aadhan Tamil

கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வில் கண்டறியப்பட்ட முதல் தங்க ஆபரணம் | Keezha...

2800 Year Old Brick Construction Discovery Of Cone Sawing Place | Korkai...

Bangalore Church facilities help ease India’s Covid-19 burden

 A police banner on a street in Bangalore, India, to enforce a 2-week lockdown against Covid-19 in Karnataka state.


Bangalore Archdiocese offers its facilities as makeshift hospitals for Covid-19 patients who are unable to get hospital care.

By Robin Gomes

As India’s healthcare system continues to reel under a raging second wave of Covid-19 infections, a southern Indian Catholic diocese has decided to make its facilities available as temporary hospitals for patients affected by the virus. 

Archbishop Peter Machado of Bangalore has promoted the initiative after noting that public and private systems are on the verge of collapse with acute shortages in beds, ICUs, oxygen and medicines. 

India on Thursday set another dismal record, as millions in West Bengal state voted despite surging infections and the nation prepared to bring its vaccination rollout to all adults amid snags.

The Health Ministry reported a record 379,257 new infections over the past 24 hours, taking the total to more than 18.3 million, second only the United States. With 3,645 fresh deaths, the total has risen to 204,832. Experts say the actual figures are much higher as government reports are highly under-reported. 

Church’s temporary hospitals

"Our initiative to make school facilities available can help alleviate the stress on hospitals in managing the health crisis in the country," Archbishop Machado explained to the Vatican’s Fides news agency.

While expressing appreciation and support for the healthcare workers, both Catholic and non-Catholic, the archbishop said the Church wants to offer every help and support possible.

Helpline

The archdiocese, as well the network of Catholic hospitals, have also launched a telephone helpline to reach out to the victims and their relatives, providing information on the management of the disease at home and the availability of beds and oxygen.

Archbishop Machado explained that those in need of special care will be directed to any of the temporary Covid assistance centers set up by the archdiocese, thus taking pressure off the hospitals. 

The archdiocese has allotted a school for each hospital in order to set up a post-Covid care center. The Azim Premji Foundation, which has been implementing various initiatives to improve educational quality across the country, especially in rural government elementary schools, is offering advice and financial support.

Karnataka state government has imposed a state-wide lockdown from April 27 to May 12. The state on Wednesday reported another single-day record spike in fresh Covid-19 cases, with 39,047 new infections, taking the total close to 1.44 million.  With 229 new deaths, the total has crossed the 15,000 mark. Its capital, Bangalore, also notched up new highs.  

Christian hospitals reach out

Since last year, Christian hospitals in Bangalore have been at the forefront in the fight against the pandemic.

Father Paul Parathazham, director of the prestigious St John's Medical College Hospital in Bangalore, expressed deep concern over the rapidly growing number of infected people, which is causing enormous stress on medical facilities. 

"We should prepare for greater challenges if the current wave does not decrease," he told Fides. He pointed out that the "Christian Mission Hospitals" network has joined the state government in fighting the pandemic using its own resources. 

Sister Gracy Thomas, superior at St Martha's Hospital, Bangalore, explained that Christian hospitals are "serving the poorest and most marginalized people and not only in Bangalore but also throughout Karnataka State." (Source: Fides)

இறைவனைச் சார்ந்திருக்கும்போது மட்டுமே வாழமுடியும்

 திருத்தந்தையின் அல்லேலூயா வாழ்த்தொலியுரை - 020521


திராட்சைச் செடிக்கும் கிளைகளின் தேவை உள்ளது, ஏனெனில் கிளைகளின் வழியாகவே திராட்சைச் செடி, தன் கனிகளை வழங்க முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நாம் இறைவனோடு இணைந்திருந்தால் மட்டுமே பயன் தரமுடியுமென்பது குறித்து விளக்கும் 'இயேசுவே உண்மையான திராட்சைக் கொடி', என்ற நற்செய்தி பகுதியை (யோவா 15:1-8) மையப்படுத்தி, இஞ்ஞாயிறு நண்பகலில், 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 2ம் தேதி, உயிர்ப்பு காலத்தின் 5ம் ஞாயிறின், திருப்பலி நற்செய்தி வாசகம் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திராட்சைக் கொடிகள் தனியாக தங்களால் வாழமுடியாது, தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக, அவை, செடியைச் சார்ந்திருப்பதுபோல், ஒவ்வொருவரும் இறைவனைச் சார்ந்திருக்கும்போது மட்டுமே வாழமுடியும், என எடுத்துரைத்தார்.

இணைந்திருத்தல் என்ற வார்த்தையை இந்நாள் நற்செய்தியில் அதிகம் அதிகமாக பயன்படுத்தும் இயேசு, இணைந்திருத்தல் என்பதன் வழியாக, இயேசுவுடன் இணைந்து சோம்பியிருப்பதை குறிக்கவில்லை, மாறாக, உயிரோட்டமாக இருக்க வேண்டியதைக் கேட்கின்றார், எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிளைகள் கனிகளை வழங்க, திராட்சைச் செடியினைச் சார்ந்திருக்கும் நிலை தேவை என்பதுபோல், திராட்சைச் செடிக்கும் கிளைகளின் தேவை உள்ளது, ஏனெனில் கிளைகளின் வழியாகவே திராட்சைச் செடி, தன் கனிகளை வழங்க முடியும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செடியும் கிளைகளும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதுபோல், நாமும் இயேசுவும் இணைந்திருக்கிறோம் என்று கூறினார்.

அனைத்திற்கும் மேலாக நமக்கு முதலில் இறைவன் தேவை, அவர் நம்மிடம் எதிர்பார்க்கும், அவரின் கட்டளைகளையும், பெரும்பேறுகளையும், இரக்கச் செயல்பாடுகளையும், கடைப்பிடிப்பதற்கு முன்னால், அவரோடு இணைந்திருத்தல் அவசியம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு (பிலி 4:13) என்ற புனித பவுலின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.

கனிகளைத் தரும் கிளைகளைப்போல், நம் தேவை, அதாவது, நம் சான்று இயேசுவுக்கு தேவைப்படுகின்றது. ஏனெனில் இயேசு, தந்தையிடம் மேலெழும்பி சென்றபின், நற்செய்திப் பணியை தங்கள் வார்த்தை, மற்றும் வாழ்வு நடவடிக்கைகள் வழியாக தன் சீடர்கள் சான்று பகரவேண்டுமென இயேசு எதிர்பார்த்தார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியாரின் கொடைகளைப் பெற்று, நமக்கு அடுத்திருப்பவருக்கும், சமுதாயத்திற்கும், திருஅவைக்கும் நன்மைகளை ஆற்றுவது, இயேசுவின் அன்புக்கு, நம் வாழ்வு வழியாக வழங்கப்படும் சான்று என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுவதுபோல், ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது, இயேசுவுக்குச் சான்று பகிர்வதில் அடங்கியுள்ளது என மேலும் கூறினார்.

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் (v.7), என்ற இயேசுவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி,  நம் வாழ்வு நம் இறைவேண்டலைச் சார்ந்து உள்ளது என கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவைப்போல் நாமும் சிந்தித்து, நடந்து, அவர் கண்கள் வழியாக  உலகைப் பார்ப்பதன் வழியாக, ஏழைகளையும் துயருறுவோரையும் அன்புகூர்ந்து, பிறரன்பு மற்றும் அமைதியின் கனிகளைக் கொணரமுடியும் என எடுத்துரைத்து, அன்னைமரியின் பரிந்துரையில் அனைவரையும்  ஒப்படைத்து, தன் 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

திராட்சைச் செடிக்கும் கிளைகளின் தேவை உள்ளது, ஏனெனில் கிளைகளின் வழியாகவே திராட்சைச் செடி, தன் கனிகளை வழங்க முடியும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்

நாம் இறைவனோடு இணைந்திருந்தால் மட்டுமே பயன் தரமுடியுமென்பது குறித்து விளக்கும் 'இயேசுவே உண்மையான திராட்சைக் கொடி', என்ற நற்செய்தி பகுதியை (யோவா 15:1-8) மையப்படுத்தி, இஞ்ஞாயிறு நண்பகலில், 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையை வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மே 2ம் தேதி, உயிர்ப்பு காலத்தின் 5ம் ஞாயிறின், திருப்பலி நற்செய்தி வாசகம் குறித்து தன் கருத்துக்களைப் பகிர்ந்துகொண்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திராட்சைக் கொடிகள் தனியாக தங்களால் வாழமுடியாது, தங்கள் வாழ்வுக்கு ஆதாரமாக, அவை, செடியைச் சார்ந்திருப்பதுபோல், ஒவ்வொருவரும் இறைவனைச் சார்ந்திருக்கும்போது மட்டுமே வாழமுடியும், என எடுத்துரைத்தார்.

இணைந்திருத்தல் என்ற வார்த்தையை இந்நாள் நற்செய்தியில் அதிகம் அதிகமாக பயன்படுத்தும் இயேசு, இணைந்திருத்தல் என்பதன் வழியாக, இயேசுவுடன் இணைந்து சோம்பியிருப்பதை குறிக்கவில்லை, மாறாக, உயிரோட்டமாக இருக்க வேண்டியதைக் கேட்கின்றார், எனவும் எடுத்துரைத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

கிளைகள் கனிகளை வழங்க, திராட்சைச் செடியினைச் சார்ந்திருக்கும் நிலை தேவை என்பதுபோல், திராட்சைச் செடிக்கும் கிளைகளின் தேவை உள்ளது, ஏனெனில் கிளைகளின் வழியாகவே திராட்சைச் செடி, தன் கனிகளை வழங்க முடியும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செடியும் கிளைகளும் ஒன்றோடொன்று இணைந்திருப்பதுபோல், நாமும் இயேசுவும் இணைந்திருக்கிறோம் என்று கூறினார்.

அனைத்திற்கும் மேலாக நமக்கு முதலில் இறைவன் தேவை, அவர் நம்மிடம் எதிர்பார்க்கும், அவரின் கட்டளைகளையும், பெரும்பேறுகளையும், இரக்கச் செயல்பாடுகளையும், கடைப்பிடிப்பதற்கு முன்னால், அவரோடு இணைந்திருத்தல் அவசியம் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எனக்கு வலுவூட்டுகிறவரின் துணைகொண்டு எதையும் செய்ய எனக்கு ஆற்றல் உண்டு (பிலி 4:13) என்ற புனித பவுலின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார்.

கனிகளைத் தரும் கிளைகளைப்போல், நம் தேவை, அதாவது, நம் சான்று இயேசுவுக்கு தேவைப்படுகின்றது. ஏனெனில் இயேசு, தந்தையிடம் மேலெழும்பி சென்றபின், நற்செய்திப் பணியை தங்கள் வார்த்தை, மற்றும் வாழ்வு நடவடிக்கைகள் வழியாக தன் சீடர்கள் சான்று பகரவேண்டுமென இயேசு எதிர்பார்த்தார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

தூய ஆவியாரின் கொடைகளைப் பெற்று, நமக்கு அடுத்திருப்பவருக்கும், சமுதாயத்திற்கும், திருஅவைக்கும் நன்மைகளை ஆற்றுவது, இயேசுவின் அன்புக்கு, நம் வாழ்வு வழியாக வழங்கப்படும் சான்று என்று எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு மரம் அதன் கனியால் அறியப்படுவதுபோல், ஓர் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு என்பது, இயேசுவுக்குச் சான்று பகிர்வதில் அடங்கியுள்ளது என மேலும் கூறினார்.

நீங்கள் என்னுள்ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும் (v.7), என்ற இயேசுவின் வார்த்தைகளை சுட்டிக்காட்டி,  நம் வாழ்வு நம் இறைவேண்டலைச் சார்ந்து உள்ளது என கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவைப்போல் நாமும் சிந்தித்து, நடந்து, அவர் கண்கள் வழியாக  உலகைப் பார்ப்பதன் வழியாக, ஏழைகளையும் துயருறுவோரையும் அன்புகூர்ந்து, பிறரன்பு மற்றும் அமைதியின் கனிகளைக் கொணரமுடியும் என எடுத்துரைத்து, அன்னைமரியின் பரிந்துரையில் அனைவரையும்  ஒப்படைத்து, தன் 'வானக அரசியே' வாழ்த்தொலி உரையை நிறைவுச் செய்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மடகாஸ்கரில் புதிய பேராலய அர்ச்சிப்பு - திருத்தந்தை செய்தி

 2021.04.30 Concattedrale di San Giuseppe a Miandrivazo nella Diocesi di Morondava, in Madagascar


Miandrivazo மறைமாவட்டம், வேளாண்மைக்கென மேற்கொண்டுள்ள, வாய்க்கால் திட்டத்திற்கு திருத்தந்தை பாராட்டு

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 1, இச்சனிக்கிழமை, தொழிலாளர் புனித யோசேப்பின் திருவிழாவன்று, மடகாஸ்கர்  தீவு நாட்டின் Miandrivazo நகரில், புதிதாக அர்ச்சிக்கப்பட்ட, புனித யோசேப்பு இணை-பேராலய நிகழ்விற்கு, காணொளிச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்

இந்த முக்கிய நிகழ்வில் பங்குகொள்ளும் மடகாஸ்கர் நாட்டின் அனைத்து நம்பிக்கையாளர்களுக்கு தன் ஆசிரையும் தெரிவித்துள்ள திருத்தந்தை, அந்நாட்டில் கல்வி, சமுதாய, மற்றும், சமயப் பணிகளை ஆற்றிவரும் அனைவருக்கும் தன் நல்வாழ்த்துக்களையும் வழங்கியுள்ளார்.

Miandrivazo மறைமாவட்ட மக்கள், வேளாண்மை செய்வதற்கு உதவியாக, அம்மறைமாவட்டம், மேற்கொண்டுள்ள வாய்க்கால்கள் அமைக்கும் திட்டத்தை, சிறப்பாகக் குறிப்பிட்டுப் பாராட்டியுள்ள திருத்தந்தை, புனித யோசேப்பு உங்கள் அனைவரையும் பாதுகாக்கவேண்டும் என்று செபிக்கிறேன், கடவுள் உங்களை ஆசிர்வதிப்பாரக என்று, தன் காணொளிச் செய்தியை நிறைவு செய்துள்ளார்.

Miandrivazo மறைமாவட்டம் மேற்கொண்டுள்ள, ஐம்பது கிலோ மீட்டருக்கு அதிகமான நீளத்தைக் கொண்ட, வாய்க்கால் திட்டத்தால், இரண்டாயிரம் ஹெக்டேருக்கு மேற்பட்ட நெல் வயல்கள் பயன் அடையும் என்று கூறப்பட்டுள்ளது.

புனித யோசேப்பு இணை-பேராலயம்

மடகாஸ்கரில், இச்சனிக்கிழமையன்று புனித யோசேப்பு இணை-பேராலயம் அர்ச்சிப்பு நிகழ்வை தலைமையேற்று நடத்திய, ஆயர் Marie Fabien Raharilamboniaina அவர்கள், அப்பேராலய கட்டுமான பணிகள் குறித்து வத்திக்கான் செய்திகளுக்கு, பேட்டி ஒன்றை வழங்கியுள்ளார்.

Miandrivazo மறைமாவட்ட மக்கள் ஆயர்
Miandrivazo மறைமாவட்ட மக்கள் ஆயர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் தந்தைக்குரிய அன்போடு அனுப்பியுள்ள செய்திக்கு நன்றி தெரிவித்த, ஆயர் Marie Fabien அவர்கள், அந்த கட்டுமானப் பணிகளில் உள்ளூர் மக்கள் ஆற்றிய பணிகளை மிகவும் புகழ்ந்து பேசியுள்ளார்.

2019ம் ஆண்டு செப்டம்பரில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மடகாஸ்கருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டதன் பயனால், ஒரு பெண்ணும், அவரது குடும்பமும், நலவாழ்வு மையம் கட்டப்பட நிதியுதவி செய்தனர் என்றும், இந்த நன்கொடை, அந்தப் பெண்ணுக்கு, யோசேப்பு என்ற பெயர்கொண்ட அவரின் உடன்பிறப்பு விட்டுச்சென்ற சொத்து என்றும், திருத்தந்தை, இப்பேராலயத்தை, புனித யோசேப்புக்கு அர்ப்பணித்துள்ளார் என்றும், ஆயர் Marie Fabien அவர்கள் கூறினார்.

இப்பேராலயம், கல்குவாரிகளில் வேலைசெய்யும், 200 ஏழை ஆண்கள், மற்றும், பெண்கலால் கட்டப்பட்டது என்றும், அந்த மறைமாவட்டத்தில், பல்வேறு கிராமங்களில் ஐம்பதுக்கும் மேற்பட்ட அன்பியங்கள் உள்ளன என்றும், அண்மையில், 200 பேர் திருமுழுக்கு பெற்றனர் என்றும், ஆயர் கூறினார்.

மடகாஸ்கர் புதிய பேராலயம்
மடகாஸ்கர் புதிய பேராலயம்

மடகாஸ்கர், ஆப்ரிக்கக் கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இத்தீவு, உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும்

கர்தினால்கள், ஆயர்கள், வத்திக்கான் நீதிமன்றத்தில் விசாரணை

 நீதித்துறை அலுவலகங்கள்


புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், நாடுகள் அல்லது அரசுகளின் தலைவர்கள் விசாரிக்கப்படுவதற்குமுன், அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும் என்பதை ஒத்ததாக உள்ளன.

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் சுயவிருப்பத்தினால் வெளியிடும் “motu proprio” என்ற, ஒரு புதிய திருத்தூது மடல் வழியாக, வத்திக்கான் நகர நாட்டில் நீதித்துறை அமைப்பில் சில மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளார்.

ஏப்ரல் 30, இவ்வெள்ளியன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட புதிய திருத்தூது மடலில், வத்திக்கான் நீதிபதிகளால், குற்றவாளிகள் என கூறப்பட்ட கர்தினால்களும், ஆயர்களும், ஒரு கர்தினாலின் தலைமையில் வத்திக்கானின் உச்ச நீதிமன்றத்தால், இதுவரை விசாரிக்கப்பட்டுவந்த விதிமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டுள்ள கர்தினால்கள் மற்றும், ஆயர்கள், இனிமேல் வத்திக்கான் நாட்டின் நீதிமன்றத்தால் விசாரிக்கப்படுவர் என்றும், விசாரணைகள் தொடங்கப்படுவதற்குமுன், திருத்தந்தையிடம் முன் அனுமதி பெற்றிருக்கவேண்டும் என்றும், இந்த புதிய திருத்தூது மடலில் கூறப்பட்டுள்ளது.

வத்திக்கான் நாட்டின் நீதித்துறை அமைப்பில் மாற்றம் கொண்டுவருவது பற்றி,  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2020ம் ஆண்டு மார்ச் மாதத்தில், தன் சுயவிருப்பத்தினால் வெளியிட்ட “motu proprio” திருத்தூது மடலில் குறிப்பிட்டிருந்தார்.

புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகள், நாடுகள் அல்லது அரசுகளின் தலைவர்கள் விசாரிக்கப்படுவதற்குமுன், அதற்கு பாராளுமன்றத்தின் ஒப்புதல் பெற்றிருக்கவேண்டும் என்பதை ஒத்ததாக உள்ளன.

மே 6 - 34 புதிய ‘சுவிஸ் கார்ட்ஸ்’ பணியேற்பு நிகழ்வு

 ‘சுவிஸ் கார்ட்ஸ்’ பணியேற்பு நிகழ்வில் உறுதிமொழி வழங்குதல்


1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை 7ம் கிளமெண்ட் அவர்களைக் காப்பாற்றுவதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தனர்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

திருத்தந்தையரின் மெய்க்காப்பாளர்களாகப் பணியாற்றும் ‘சுவிஸ் கார்ட்ஸ்’ என்ற அமைப்பில், மே 06, வருகிற வியாழனன்று, 34 பேர் புதிதாக இணையும் நிகழ்வு, கோவிட்-19 விதிமுறைகளுக்கு உட்பட்டு இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

சுவிஸ் கார்ட்ஸ் அமைப்பில், வீரர்கள் புதிதாக இணையும் நிகழ்வு, இரண்டாவது முறையாக இவ்வாண்டில், பொதுமக்களின் பங்கேற்பின்றி இடம்பெறுகிறது என்றும், ஆயினும், இவ்வாண்டின் இந்நிகழ்வு, சுவிஸ் கார்ட்ஸ் (www.guardiasvizzera.ch) இணயதளத்தில், நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும் என்றும், அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பினருக்கு, வருகிற வியாழனன்று, உரோம் நேரம் காலை 7.30 மணிக்கு, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், புனித பேதுரு பெருங்கோவிலில்  திருப்பலி நிறைவேற்றுவார், பின்னர் மாலை 5 மணிக்கு புதியவர்கள் பணியேற்பு நிகழ்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சுவிஸ் கார்ட்ஸ்

1527ம் ஆண்டில் உரோம் நகர் சூறையாடப்பட்டபோது, திருத்தந்தை 7ம் கிளமெண்ட் அவர்கள், பாப்பிறை மாளிகையைவிட்டுத் தப்பித்துச் செல்வதற்காகப் போராடிய 189 சுவிட்சர்லாந்து படைவீரர்களில் 147 பேர் உயிரிழந்தனர். இந்தப் படைவீரர்கள் உயிரிழந்த மே 6ம் நாளன்று, ஒவ்வோர் ஆண்டும், வத்திக்கானில், புதிய சுவிஸ் காவல் வீரர்கள் உறுதிமொழி எடுத்து, பணியில் சேருவது வழக்கம். இவ்வாண்டு இந்நிகழ்வு, மே 6, வருகிற வியாழனன்று நடைபெறும்.

புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில் புதிய மன்றாட்டுகள்

 புனித யோசேப்பு


திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட ஒரு தந்தையின் இதயத்தோடு (Patris corde) என்ற திருத்தூது மடலின் ஒளியில் புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில் புதிய மன்றாட்டுகள்

மேரி தெரேசா: வத்திக்கான் செய்திகள்

மே 01, இச்சனிக்கிழமையன்று சிறப்பிக்கப்பட்ட, தொழிலாளரான புனித யோசேப்பு திருநாளன்று, புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில், ஏழு புதிய மன்றாட்டுகளை இணைத்துள்ளது, திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் பேராயம்.

புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில், சில புதிய மன்றாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளது குறித்து, உலகின் அனைத்து ஆயர் பேரவைகளின் தலைவர்களுக்கு மடல் ஒன்றை அனுப்பியுள்ள, இப்பேராயம், 1909ம் ஆண்டில், திருப்பீடத்தால் அங்கீகரிக்கப்பட்ட புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில், புனித யோசேப்பு  பற்றிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் சில சிந்தனைகளும், தற்போது மன்றாட்டுகளாக இணைக்கப்பட்டுள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

புனித யோசேப்பு உலகளாவியத் திருஅவையின் பாதுகாவலராக அறிவிக்கப்பட்டதன் 150ம் ஆண்டை முன்னிட்டு, அந்த மாபெரும் புனிதரின் மீது நமது அன்பை அதிகரிக்கவும், அவரது பரிந்துரையை மன்றாடவும், அவரது புண்ணியப் பண்புகளையும், இறைப்பற்று பேரார்வத்தையும் நாம் பின்பற்றவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒரு தந்தையின் இதயத்தோடு (Patris corde) என்ற திருத்தூது மடல் வழியாக நம்மை ஊக்கப்படுத்தியுள்ளார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் ஒப்புதலுடன் இந்த புதிய மன்றாட்டுகள் இணைக்கப்பட்டுள்ளன என்று, அம்மடலில் கூறப்பட்டுள்ளது. திருவழிபாடு மற்றும், அருளடையாளங்கள் பேராயத்தின் செயலர் பேராயர் X Arthur ROCHE, அப்பேராயத்தின் நேரடிப்பொதுச்செயலர், அருள்பணி Corrado MAGGIONI, S.M.M ஆகிய இருவரும் கையெழுத்திட்டு, அம்மடலை, உலகின் ஆயர் பேரவைகளின் தலைவர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

புதிய சில மன்றாட்டுகள்

Patris corde திருத்தூது மடலின் ஒளியில் இடம்பெற்றுள்ள புதிய சில மன்றாட்டுகள்:

மீட்பரின் பாதுகாவலர்; கிறிஸ்துவின் பணியாளர்; நோயுற்றோரின் திருப்பணியாளர்;

துயரங்களில் துணையாளர்; புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர்; இன்னலுற்றோரின் பாதுகாவலர்; வறியோரின் பாதுகாவலர்.  

புனித யோசேப்பு மன்றாட்டு மாலையில் புதிதாக இணைக்கப்பட்டுள்ள இந்த மன்றாட்டுகளை, ஆயர் பேரவைகள் அந்தந்தப் பகுதிகளின் மொழிகளில் மொழி பெயர்க்கலாம், அதற்கு திருப்பீடத்தின் அனுமதி தேவையில்லை, தங்களின் நாடுகளில் புனித யோசேப்பிடம் பரிந்துரைக்கப்படும் மன்றாட்டுகளையும், ஆயர் பேரவைகள், விவேகத்தோடு தீர்மானித்து அதில் இணைக்கலாம் என்றும், அப்பேராயத்தின் மடலில் கூறப்பட்டுள்ளது.

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...