Tuesday, 8 January 2019

புலம்பெயர்ந்தோர் சார்பில் திருத்தந்தையின் விண்ணப்பம்

புலம்பெயர்ந்தோர் சார்பில் திருத்தந்தையின் விண்ணப்பம் கப்பலில் புலம்பெயர்ந்தோர்

கடலிலிருந்து காப்பாற்றப்பட்ட மக்கள், கரையேற அனுமதிக்காத ஐரோப்பிய நாடுகள் குறித்து திருத்தந்தை கவலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான் செய்திகள்
மத்திய தரைக்கடலில் மடிய இருந்த 49 புலம்பெயர்ந்தோரை காப்பாற்றி வைத்திருக்கும் இரு கப்பல்கள், ஏதாவது ஒரு ஐரோப்பிய நாட்டில் கரை ஒதுங்க அனுமதிக்கப்பட  வேண்டும் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
Sea Watch, Sea Eye என்ற இரு கப்பல்கள் டிசம்பர் மாதம் 22ம் தேதி முதல், கடலிலிருந்து புலம் பெயர்ந்தோரை காப்பாற்றி வைத்திருக்கும் நிலையில், அம்மக்களை எந்த நாடும் ஏற்காதது குறித்து, இஞ்ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் தன் ஆழ்ந்த கவலையை வெளியிட்டத் திருத்தந்தை, இம்மக்களுடன் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்த ஐரோப்பிய தலைவர்களை நோக்கி தன் விண்ணப்பத்தை முன்வைப்பதாகக் கூறினார்.
மேலும், இத்திங்களன்று, அதாவது, ஜனவரி 7ம் தேதி கிறிஸ்து பிறப்புப் பெருவிழாவைச் சிறப்பித்த கீழை வழிபாட்டுமுறை கத்தோலிக்க, மற்றும் ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபைகளுக்கு, மூவேளை செப உரையின் இறுதியில், தன் வாழ்த்துக்களையும் வெளியிட்டார், திருத்தந்தை பிரான்சிஸ்.

No comments:

Post a Comment