Wednesday, 24 August 2016

செவாலியே அவார்ட் சிவாஜிக்கு பிறகு ..தமிழ் நடிகர் அலெக்ஸ் பெற்றுள்ளார்

செவாலியே அவார்ட் சிவாஜிக்கு பிறகு தமிழில் மறைந்து / மறந்து விட்ட தமிழ் நடிகர் அலெக்ஸ் இதே அவார்ட்டை பெற்றுள்ளார். பிறகு தான் தமிழில் இந்த அவார்ட் வாங்கும் நடிகர் கமல்

யார் அந்த அலெக்ச் .....


திருச்சி துரைசாமிபுரத்தைச்சேர்ந்த அலெக்ஸ், ரயில்வேயில் பணிபுரிந்து கொண்டிருந்தார். பின்னர் சினிமா, மேஜிக் என்று பிரபலம் ஆகிவிட்டார். வள்ளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகர் அலெக்ஸ், மிட்டாமிராசு, கோவில்பட்டி வீரலெட்சுமி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வில்லன், குணசித்தர நடிகர் என்று மாறுபட்ட வேடங்களில் நடித்த அலெக்ஸ் தமிழக அரசின் சிறந்த வில்லன் மற்றும் குணசித்திர நடிகர் விருது பெற்றுள்ளார்.

இந்த அலெக்ஸ் கடந்த ஆண்டு திருச்சியில் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து 24 மணி நேரம் மேஜிக் நிகழ்ச்சியை நடத்தினார். இந்த சாதனை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது.
மேலும் மனதை அறிதல், மனோவசியம் கலையை 12 மணி நேரம் பொதுமக்கள் முன்னிலையில் தொடர்ந்து நடத்தி சாதனை புரிந்ததற்காகவும், குழந்தைகள் தின விழாவில் 6,000 மாணவர்கள் முன்னிலையில் 8 மணிநேரம் மேஜிக் நடத்தியதற்காகவும் அலெக்ஸ் லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றிருந்தார்.

இலங்கை திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் 600 டாக்டர்கள் மற்றும் விஞ்ஞானிகள் முன்னிலையில் மனதை அறிதல் மற்றும் மேஜிக் பற்றி விளக்கினார். புதிதாக அவர் கண்டுபிடித்த மேஜிக்குகளையும் அவர் நிகழ்த்திக் காட்டினார்.

இவற்றைப் பாராட்டி இலங்கை திறந்தவெளிப் பல்கலைக்கழகம் அலெக்ஸுக்கு 2004ம் ஆண்டுக்கான ஆல்பிரட் நோபல் பரிசு வழங்கியது. அமெரிக்க பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது.
நடிப்பு, மேஜிக் மட்டுமல்லாது கரகாட்டம், மயிலாட்டம், சிலம்பம், மல்யுத்தம், நாடகம், நாட்டியநாடகம் என்று பல துறைகளில் சாதனை படைத்துவந்த அலெக்சுக்கு செவாலியே விருதும் வழங்கப்பட்டுள்ளது.
Source: Face Book

1 comment:

  1. We are urgently in need of KlDNEY donors for the sum of $500,000.00 USD, WhatsApp or Email for more details:
    (customercareunitplc@gmail.com)
    WhatsApp +91 779-583-3215

    ReplyDelete

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...