Wednesday, 17 August 2016

ஐ.நா.சபையில் இசைநிகழ்ச்சி நடத்திய 2-வது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான்

ஐ.நா.சபையில் இசைநிகழ்ச்சி நடத்திய 2-வது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான்


இந்திய நாட்டின் 70 வது சுதந்திர தினம் நேற்று நாடு முழுவதும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. அதே நேரம் இந்தியாவின் சுதந்திர தினம் ஐ.நா.சபையிலும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.
சுதந்திரதினத்தை முன்னிட்டு ஐநா.சபையின் தூதர்கள், சர்வதேசத் தலைவர்கள் முன்னிலையில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் இசைக்கச்சேரி அரங்கேறியது.
இந்த நிகழ்ச்சியில் புகழ்பெற்ற பாடகர் ஜாவேத் அலி, டிரம்ஸ் சிவமணி ஆகியோருடன் ஏ.ஆர்.ரகுமானின் இரண்டு சகோதரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த இசைக்கச்சேரியின் மூலம் மறைந்த இசைக்கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமிக்குப் பின் ஐ.நா.சபையில் இசைநிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் என்ற பெருமையை ஏ.ஆர்.ரகுமான் பெற்றார்.
இதற்கு முன் 1966 ம் ஆண்டு பாரத ரத்னா விருதைப் பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி ஐநா சபையில் இசை நிகழ்ச்சி நடத்தினார். இதனால், ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்திய முதல் இந்தியர் என்ற பெருமை எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு கிடைத்தது.
எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நூற்றாண்டு பிறந்தநாளையோட்டி ஐ.நா சபை நேற்று அவருக்கு சிறப்பு தபால்தலை வெளியிட்டு கௌரவப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...