Friday, 8 April 2016

இங்கிலாந்தில் நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த உத்தரவு….!


இங்கிலாந்தில் நாய் வளர்ப்பில் புதிய சட்டம் அமுலுக்கு வர உள்ளது. அதன்படி நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்த வேண்டும்.
இங்கிலாந்த நாட்டில் ஒவ்வொரு குடும்பத்திலும் செல்ல பிராணிகளாக நாய்களை வளர்க்கிறார்கள்.
செல்லமாக வளர்க்கும் நாய்கள் காணாமல் போனால் குடும்பத்தில் ஒருவர் மாயமானதாக உணரும் அவர்கள் பொலிஸில் புகார் கொடுக்கிறார்கள். இந்த நிலையில் இங்கிலாந்தில் நாய் வளர்ப்பில் புதிய சட்டம் அமுலுக்கு வருகிறது.
அதன்படி நாய்களின் கழுத்துக்கு பின்புறம் தோலின் கீழ்பகுதியில் மைக்ரோ சிப் என்ற நுண் சிப்பு ஒன்றை பொருத்த வேண்டும். அதில் 15 எண்கள் கொண்ட தனி குறியீடு பொறிக்கப்பட்டு சிறிய அளவில் இருக்கும்.
இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் ஆகிய இடங்களில் வளர்க்கப்படும் நாய்களுக்கும், பிறந்து 8 வாரங்களுக்குள் இந்த மைக்ரோ சிப்பை பொருத்த வேண்டும்.
நாய்களின் பொருத்தப்பட்ட மைக்ரோ சிப்பை ஸ்கேன் செய்யும் போது அந்த உரிமையாளர் யார்? என்று அறிய முடியும்.
இதனால் தவறவிடப்படும் காணாமல் போகும் நாய்களை மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைக்க உதவும்.201604071112029879_Dog-microchipping-becomes-compulsory-across-UK_SECVPF

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...