பாகிஸ்தானில் ஒரே ஆண்டில் 326 பேருக்கு தூக்கு:- சர்வதேச மன்னிப்பு சபை அறிக்கையால் பரபரப்பு!
உலகமெங்கும் மரண தண்டனை
நிறைவேற்றுவதற்கு எதிரான குரல் வலுத்து வருகிறது. மரண தண்டனையை முடிவுக்கு
கொண்டு வர வேண்டும் என்று மனித உரிமை அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் பாகிஸ்தானில் 2015-ம் ஆண்டில் மட்டும் 326 பேர் தூக்கில்
போடப்பட்டுள்ளனர் என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தானில் இத்தனை பேர் ஒரே ஆண்டில் தூக்கில் போடப்பட்டிருப்பது இதுவே
முதல்முறை என ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு சபை
அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு உலகமெங்கும் 1,634 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது 2014ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 54 சதவீத உயர்வு ஆகும். இதில் குறிப்பிடத்தக்க இன்னொரு அம்சம், சீனாவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்கள் இந்த புள்ளி விவரத்தில் சேர்க்கப்படவில்லை. சீனாவில் அதை அரசாங்க ரகசியமாக பாதுகாக்கின்றனர். ஈரானில் 2015-ம் ஆண்டு 977 பேருக்கும், சவுதி அரேபியாவில் 158 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.
உலக அளவில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதில் பாகிஸ்தான், ஈரான், சவுதி அரேபியா ஆகிய 3 நாடுகளும் கிட்டத்தட்ட 90 சதவீதம் பங்களிப்பு செய்துள்ளன.
குற்றம் செய்தபோது 18 வயதுக்குள்ளே இருந்தவர்கள்கூட, ஈரானிலும், பாகிஸ்தானிலும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களின் பட்டியலில் உள்ளதாக ஆம்னஸ்டி இன்டர்நேஷனல் கூறுகிறது.

No comments:
Post a Comment