Friday, 29 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 26 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 26 July 2011: "1. ஐ.நா. இளையோர் கருத்தரங்கு குறித்து பேராயர் சுள்ளிக்காட் 2. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்கான டெல்லி போராட்டம் , நீதி கிட்டும் வரை ஓயாது ..."

Catholic News - hottest and latest - 26 July 2011

1. ஐ.நா. இளையோர் கருத்தரங்கு குறித்து பேராயர் சுள்ளிக்காட்

2. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்கான டெல்லி போராட்டம், நீதி கிட்டும் வரை ஓயாது

3. மலாவி நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க அரசுக்கு ஆயர் விண்ணப்பம்

4. சொமாலிய அகதிகளிடையே இயேசு சபையினரின் பணி

5. தென்கொரியாவின் இனப்பெருக்க ஆற்றல் அழிப்புத் தண்டனை குறித்து ஆயர்கள் கேள்வி

6. வட இலங்கை மக்கள் தொடர்ந்து பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர் : யாழ் துணை வேந்தர்

----------------------------------------------------------------------------------------------------------------

1. ஐ.நா. இளையோர் கருத்தரங்கு குறித்து பேராயர் சுள்ளிக்காட்

ஜூலை 26, 2011.  வருங்காலத்திற்கான நம்பிக்கையாக இருக்கும் இளையோரை நாடுகளிடையே, கலாச்சாரங்களிடையே மற்றும் மதங்களிடையேயான பேச்சுவார்த்தைகளைக் கட்டியெழுப்பும் கருவிகளாக ஐநாவும் கத்தோலிக்கத் திருச்சபையும் நோக்குவதாக உரைத்தார் பேராயர் ஃபிரான்சிஸ் சுல்லிக்காட்.
இத்திங்களும் செவ்வாயும் ஐ.நா. நிறுவனத்தில் இடம்பெற்ற இளையோர் மாநாடு குறித்துப் பேட்டியளித்த ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப்பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு வாழ்வு முறையை இளைஞர்களில் உருவாக்க ஐ.நா. நிறுவனம் கைக்கொள்ளவேண்டிய பொறுப்புணர்வுகளை வலியுறுத்தினார்.
வருங்காலத்தைக் கட்டியெழுப்பும் பணியில் இளையோருக்கு எடுத்துக்காட்டுகளாகச் செயல்படவேண்டிய இன்றையத் தலைமுறையினரின் கடமையையும் சுட்டிக்காட்டினார் பேராயர்.
வாழ்வதற்கான உரிமை குறித்த விவகாரங்கள், எயிட்ஸ் நோய்த் தொடர்பான ஒழுக்கரீதிக் கேள்விகள், குழந்தைகள் மீதான பெற்றோர்களின் உரிமைகள் போன்றவைகளில் ஐநாவின் நிலைப்பாடு முரண்பாடுடையதாக இருப்பதாகக் கவலையை வெளியிட்ட ஐ.நா.விற்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சுள்ளிக்காட், இது கத்தோலிக்கத் திருச்சபைக்கு ஒரு சவாலாக இருப்பதாகவும் உரைத்தார்.
வாழ்விற்கு ஆதரவானப் போராட்டத்திற்கு இளைஞர்களைத் தயாரிக்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய அவர், சிசுக்களைக் கருவிலேயே கொல்வதால் அல்ல, மாறாக, சிறார்கள் மற்றும் இளைஞர்கள் மீது செய்யப்படும் முதலீடுகளாலேயே வறுமையை விரட்டமுடியும் என மேலும் கூறினார்.

2. தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்கான டெல்லி போராட்டம், நீதி கிட்டும் வரை ஓயாது

ஜூலை 26, 2011.  தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்கான டெல்லி போராட்டம் வன்முறையற்றது மட்டுமல்ல, நீதி கிட்டும் வரை ஓயாதது என்றார் டெல்லி பேராயர் வின்சென்ட் கொன்சசாவோ.
தலித் கிறிஸ்தவர்களின் உரிமைக்காக டெல்லியின் ஜந்தர் மந்தரில் உண்ணாநோன்புப் போராட்டத்தை மேற்கொண்டு வரும் மக்களுக்கு உரை நிகழ்த்திய பேராயர், தலித் கிறிஸ்தவர்கள் தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கு தற்போதைய மத்திய அரசு பெரும் தடைக்கல்லாக இருக்கிறது என்றார்.
புத்தம், சீக்கியம் மற்றும் இந்து மதங்களைச் சார்ந்த தலித் இன மக்களுக்கு வழங்கப்படும் அரசுச் சலுகைகள், கிறிஸ்தவ மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சார்ந்த அதே இன மக்களுக்கு மறுக்கப்படுவதை கண்டித்தும், உரிமைகளை வேண்டியும் இத்திங்களன்று டெல்லியில் துவக்கப்பட்ட உண்ணாநோன்பு போராட்டம், இவ்வியாழன் பாராளுமன்றம் நோக்கிய பெரும் ஊர்வலத்துடன் நிறைவுக்கு வரும்.

3. மலாவி நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகளைத் துவக்க அரசுக்கு ஆயர் விண்ணப்பம்

ஜூலை 26, 2011.  மலாவி நாட்டில் செவிமடுப்பதற்கும் பேச்சுவார்த்தைக்குமான தேவை இருப்பதாகவும், அதனை முயற்சி எடுத்துத் துவக்க வேண்டியது அரசின் கடமையாகிறது எனவும் வலியுறுத்தினார் அந்நாட்டு பேராயர் Gervazio Tarcisius Ziyaye.
அனைத்து விதமான வன்முறைகளும் நிறுத்தப்பட்டு, மக்களின் தேவைகளுக்கு செவிமடுக்கப்படவேண்டும் என்ற பேராயர், கடைகளும் வீடுகளும் வன்முறையாளர்களால் சூறையாடப்பட்டதை தான் நேரில் காண நேர்ந்ததாகவும் கூறினார்.
பொருளாதார நெருக்கடிகளால் எழுந்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான வழி 'பேச்சுவார்த்தைகளை' கைக்கொள்வதே என்ற பேராயர், மக்களின் குரலுக்குச் செமடுக்க அரசு முன்வரவேண்டும் என்றார்.
அரசுக்கும் தலத்திருச்சபைக்கும் இடையே எவ்விதப் பதட்ட நிலைகளும் இல்லை என்ற பேராயர் Ziyaye, அரசுத்தலைவரைச் சந்திக்க மலாவி ஆயர் பேரவை முன்வைத்துள்ள விண்ணப்பம் இன்னும் பதிலுக்காகக் காத்திருக்கின்றது என மேலும் கூறினார்.

4. சொமாலிய அகதிகளிடையே இயேசு சபையினரின் பணி

ஜூலை 26, 2011.  வறுமை காரணமாக கென்யா மற்றும் எத்தியோப்பியாவில் நுழையும் சொமாலிய அகதிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், அவர்களுக்கு உதவுவதற்கான நிதியுதவிகள் தேவைப்படுவதாக விண்ணப்பித்துள்ளது இயேசு சபையினரின் அகதிகளுக்கான JRS அமைப்பு.
பல ஆண்டுகளான மோதல்களாலும் வறட்சியாலும் 20இலட்சம் மக்கள் வரை தங்கள் சொந்த இடத்தை விட்டு வெளியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற கிழக்கு ஆப்ரிக்க JRS அமைப்பின் இயக்குனர் குரு Frido Pflueger, இம்மாதம் 20ந்தேதி வரை 1 இலட்சத்து 20 ஆயிரம் சொமாலியர்கள் கென்யாவிலும் எத்தியோப்பியாவிலும் அடைக்கலம் தேடியுள்ளதாகவும் தெரிவித்தார்.
தட்பவெப்ப நிலை மாற்றத்தால் ஏற்பட்டுள்ள தானிய உற்பத்திக்குறைவு, மத்திய அரசின் நிர்வாகக் குறைபாடு, புரட்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு மனிதாபிமான உதவிகளை எடுத்துச் செல்ல முடியாமை போன்றவைகளால் மக்களின் துன்பங்கள் அதிகரித்துள்ளதாக இயேசு சபை குரு மேலும் கூறினார்.
JRS என்ற இயேசு சபையினரின் அமைப்பு, ஐம்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் ஐந்து இலட்சம் அகதிகள் மற்றும் குடிபெயர்ந்தோரிடையே கல்வி, நலஆதரவு, மற்றும் சமூகப்பணிகளை ஆற்றி வருகின்றது.

5. தென்கொரியாவின் இனப்பெருக்க ஆற்றல் அழிப்புத் தண்டனை குறித்து ஆயர்கள் கேள்வி

ஜூலை 26, 2011.  சிறார்களைப் பாலினக் குற்றங்களுக்கு உட்படுத்துவோரை வேதியல் முறையில் இனப்பெருக்க ஆற்றல் அழிப்புத் தண்டனைக்கு உட்படுத்தும் தென்கொரிய அரசின் புதிய சட்டம் குறித்து குறை கூறியுள்ளது தலத்திருச்சபை.
15 வயதிற்குட்பட்டச் சிறார்களிடம் பாலின முறையில் தவறாக நடந்து கொள்வோர் ஆண்மை இழக்க வைக்கப்படுவார்கள் என்ற அரசின் புதிய சட்டம் குறித்து கருத்து தெரிவித்த தென் கொரிய ஆயர் பேரவையின் அதிகாரி குரு பால் லீ சங் யாங், சிறார்களுக்கு எதிரான பாலினக் குற்றங்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை, ஆனால், இத்தகைய செயற்கைத் தண்டனைகளுக்குப் பதிலாக மாற்றுத் தண்டனைகளைக் கொணர்வது நல்லது என்றார்.
இத்தகைய தண்டனைகள் மூலமாக பாலினக் வகைக் குற்றங்களை முற்றிலுமாக ஒழித்துவிட முடியுமா என்பது குறித்தும் அரசு சிந்திக்க வேண்டும் எனவும் அழைப்பு விடுத்துள்ளது கொரிய தலத்திருச்சபை.
தென்கொரிய அரசின் கூற்றுப்படி, கடந்த நான்கு ஆண்டுகளில் 15 வயதிற்குட்பட்ட சிறார்கள் மீதான பாலின வகை அத்துமீறல்கள் அந்நாட்டில் 52.7 விழுக்காடு அதிகரித்துள்ளன.

6. வட இலங்கை மக்கள் தொடர்ந்து பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர் : யாழ் துணை வேந்தர்

ஜூலை 26, 2011.  முப்பதாண்டுகளாக போரினால் பாதிக்கப்பட்ட வட இலங்கை மக்கள் தொடர்ந்து பீதியுடன் வாழ்ந்து வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
நீண்ட காலப் போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது அவர்களின் மனநிலை கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமென லங்காதீப பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் சுட்டிக்காட்டியுள்ளார் அவர்.
வடக்கின் பல பகுதிகளில் பௌதீக ரீதியான அபிவிருத்தி ஏற்பட்டுள்ள போதிலும் மக்கள் மத்தியில் இன்னமும் அச்சம் நீடித்து வருவதாகத் தெரிவித்த அவர், வட பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பத்தையும் முன்வைத்தார்.
வடக்கு மக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சனைகள் இன்னமும் எஞ்சியிருப்பதாகவும், மக்களின் பிரச்சனைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தினார் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர்.
வேலையற்ற இளைஞர்கள் தொடர்பில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை மேலும் வலியுறுத்தியுள்ளார்.
 

Monday, 25 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 25 July 2011

robert john kennedy: Catholic News - hottest and latest - 25 July 2011: "1. கர்தினால் நோயே காலமானார். திருத்தந்தையின் அனுதாபச் செய்தி 2. திருத்தந்தையின் மூவேளை செப உரை 3. நார்வே நாட்டிற்கான திருத்தந்தையின் அனுத..."

Catholic News - hottest and latest - 25 July 2011

1. கர்தினால் நோயே காலமானார். திருத்தந்தையின் அனுதாபச் செய்தி

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

3. நார்வே நாட்டிற்கான திருத்தந்தையின் அனுதாபச் செய்தி

4. இலங்கையின் வடக்கில் குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு

5. பருவநிலை மாற்றத்தால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சுவிஸ் நிபுணர் எச்சரிக்கை

6. அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சு தோல்வி

7. மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

----------------------------------------------------------------------------------------------------------------

1. கர்தினால் நோயே காலமானார். திருத்தந்தையின் அனுதாபச் செய்தி

ஜூலை 25, 2011. வத்திக்கான் பேராலயத்தின் முன்னாள் முதுபெரும் தந்தையாக பதவி வகித்த கர்தினால் விர்ஜில்யோ நோயே இஞ்ஞாயிறன்று இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு இரங்கற்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.
கர்தினால் நோயேயின் மரணத்தையொட்டி அவரின் சகோதரி மரியா நோயேயுக்குத் திருத்தந்தை அனுப்பியுள்ள இரங்கற்தந்தியில், கர்தினாலின் குடும்பத்தினரின் துன்பத்தில் தானும் பங்குகொள்வதாகவும், அவருக்கானச் செபங்களுக்கு உறுதிகூறுவதாகவும் தெரிவித்துள்ளார். கர்தினால் நோயே திருச்சபைக்கு ஆற்றியுள்ள ஒப்பற்ற பணியும் அத்தந்திச்செய்தியில் குறிப்பிடப்பட்டுப் பாராட்டப்பட்டுள்ளது.
1922ம் ஆண்டு மார்ச் 30ம் தேதி இத்தாலியின் பவியா மறைமாவட்டத்தில் பிறந்த கர்தினால் நோயே 1944ல் குருவாகவும், 1982ல் பேராயராகவும் திருநிலைப்படுத்தப்பட்டார். திருப்பீடத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ள இவர், 1991ம் ஆண்டு கர்தினாலாக உயர்த்தப்பட்டார்.
கர்தினால் விர்ஜில்யோ நோயேயின் இறப்புடன் திருச்சபையில் கர்தினால்களின் எண்ணிக்கை 195 ஆகக் குறைந்துள்ளது. இதில் 114 பேரே திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய 80 வயதிற்குட்பட்டவர்கள்.

2. திருத்தந்தையின் மூவேளை செப உரை

ஜூலை 25, 2011.  நன்மை எது என்பதைக் கண்டுகொண்டு அதனை நாடிச் செல்லும் ஓர் இதயத்தின் வளர்ச்சியிலேயே வாழ்வின் உண்மையான தரம் அடங்கியுள்ளது என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
'உம் மக்களுக்கு நீதி வழங்கவும் நன்மை தீமை பகுத்தறியவும் தேவையான ஞானம் நிறைந்த உள்ளத்தை அடியேனுக்குத் தந்தருளும்' என சாலமன் மன்னன் இறைவனை நோக்கி வேண்டிய வார்த்தைகளுடன் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையை காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்திலிருந்து வழங்கிய திருத்தந்தை, இளவயதில் ஆட்சிக்கு வந்த சாலமன் மன்னன் தன் கனவில் தோன்றிய இறைவனிடம் வேண்டியது குறித்து எடுத்துரைத்தார்.
நீண்ட ஆயுளையோ, பெரும்செல்வத்தையோ, எதிரிகளின் அழிவையோ இறைவனிடம் வேண்டாத சாலமன், நன்மை தீமை பகுத்தறியும் ஞானம் நிறைந்த உள்ளத்தை தந்தருளுமாறு வேண்டியது, உண்மையின் குரலைக் கண்டுகொண்டு செயல்படும் மனச்சான்றின் தேவையைக் குறிப்பிடுவதாக உள்ளது என்றார் பாபிறை.
அரசு நிர்வாகப் பணியில் உள்ளோருக்கு, மேலும் பல பொறுப்புணர்வுகள் உள்ளன என்ற திருத்தந்தை, அவர்களுக்கு இறைவனின் தேவையும் அதிகம் அதிகமாக உள்ளது என்றார்.
நம் வாழ்வின் உண்மை தரமானது, சரியான முறையில் வடிவமைக்கப்பட்ட மனச்சான்றைச் சார்ந்துள்ளது எனத் தன் ஞாயிறு மூவேளை செப உரையின்போது மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

3. நார்வே நாட்டிற்கான திருத்தந்தையின் அனுதாபச் செய்தி

ஜூலை 25, 2011.  நார்வேயின் ஓஸ்லோ நகரின் குண்டு வெடிப்பு மற்றும் அண்மைத் தீவின் இளைஞர் முகாமில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு ஆகியவை குறித்து தன் ஆழ்ந்த கவலையையும் அனுதாபங்களையும் வெளியிட்டு அந்நாட்டிற்கு இரங்கற்தந்தி ஒன்றை அனுப்பியுள்ளார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
இந்த வன்முறைகளால் இடம்பெற்றுள்ள உயிரிழப்புகள் குறித்து தான் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக நார்வே மன்னர் 5ம் ஹெர்ரால்டுக்கு அனுப்பியுள்ள அத்தந்திச்செய்தியில் உரைத்துள்ள திருத்தந்தை, பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கானத் தன் செபத்திற்கும் உறுதி கூறியுள்ளார்.
இந்தத் துன்பகரமான நேரத்தில் ஒரே குடும்பமாய் ஆன்மீக ஒன்றிப்பைக் காணும் நார்வே நாடு, பகைமை மற்றும் மோதல்களின் வழியை ஒதுக்கித்தள்ளும் என நம்பிக்கைக் கொண்டுள்ளதாகவும் அதில் கூறியுள்ளார் பாப்பிறை.

4. இலங்கையின் வடக்கில் குழந்தைகள் கைவிடப்படும் சம்பவங்கள் அதிகரிப்பு

ஜூலை 25, 2011. வட இலங்கையில் குழந்தைகள் கைவிடப்படல் மற்றும் கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக சண்டே டைம்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது. குறிப்பாக வன்னியிலேயே இவ்வாறான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வவுனியா மற்றும் செட்டிக்குளம் பகுதிகளில் நான்கு குழந்தைகள் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாகவும், இரண்டு குழந்தைகள் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாகவும் சண்டே டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
கைவிடப்பட்ட நான்கு குழந்தைகளும் துணியால் சுற்றப்பட்டு மத்திய‌ வவுனியா பேருந்து நிலையத்தில் கிடத்தப்பட்டிருந்தன.
போருக்குப் பின்னர் ஏற்பட்டுள்ள வறுமை, குடும்பத் தலைவர்கள் இல்லாமை போன்றவையே இதற்கான காரணங்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

5. பருவநிலை மாற்றத்தால் உலகப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: சுவிஸ் நிபுணர் எச்சரிக்கை

ஜூலை 25, 2011. பருவ நிலை மாற்றத்தால் உலகப் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என சுவிஸ் நாட்டின் ஆய்வு நிபுணர் குர்ட் ஸ்பில்மான் எச்சரித்துள்ளார்.
கடந்த வார துவக்கத்தில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் பாதிப்புக் குறித்து விவாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தனது கருத்துக்களை வெளியிட்ட சூரிச் பாதுகாப்பு ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் குர்ட் ஸ்பில்மான்,  பருநிலை மாற்ற நிகழ்வால் நாடுகளுக்கு இடையே உடனடி மோதலை ஏற்படுத்தாதிருப்பினும் இந்த நிலை நீடிக்கும் போது பிரச்சனைகள் வெடிக்கும் என எச்சரித்தார். பருவநிலை மாற்ற நிகழ்வால் தற்போது ஆப்ரிக்கா, தென்கிழக்கு ஆசியா மற்றும் அமெரிக்கா ஆகியவற்றின் சில பகுதிகளில் மோதல்கள், பதட்டம், நெருக்கடி ஏற்பட்டுள்ளன என அவர் சுட்டிக்காட்டினார்.

6. அனைத்துலக மனித உரிமைகள் அமைப்புக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பேச்சு தோல்வி

ஜூலை 25, 2011. ஐக்கிய நாடுகள் நிறுவனத்துக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி பாலித கோஹனவுடன் கடந்த வாரம் நியூயார்க்கில் இடம்பெற்ற சந்திப்பின் போது பாலித கோஹன தலைமையிலான குழுவினர், இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெறவில்லை என்று முழுமையாக மறுப்பு வெளியிட்டுள்ளதாக Amnesty International எனும் அனைத்துலக மனித உரிமைகள் கழகம் அதிருப்தியை வெளியிட்டுள்ளது.
அனைத்துலக மனித உரிமைகள் கழகம் வித்தியாசமான அணுகுமுறையுடன் நடத்திய‌ உறுதியான கலந்துரையாடலுக்கு இலங்கைக் குழுவினர் இணங்காத நிலையில் இந்த‌ சந்திப்பு வெற்றி பெறவில்லை என்று அனைத்துலக மனித உரிமைகள் கழகத்தின் இலங்கைக்கானச் சிறப்பு நிபுணர் ஜிம் மெக்டொனாலட் தெரிவித்துள்ளார்.
அனைத்துலக மனித உரிமைகள் கழகத் தலைவர் ஜோஸ் லூயிஸ் டய்சுக்கும் பாலித கோஹனவுக்கும் இடையில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பின் போது, இலங்கையில் போர்க்குற்றம் தொடர்பான சேனல் 4 காணொளித் தொடர்பிலேயே கலந்துரையாடல் அமைந்திருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தை குறித்து கருத்துரைத்த பாலித கோஹன, இலங்கையின் நீண்ட வரலாற்றை கொண்ட நீதித்துறை கலாச்சாரத்தை இந்தப் பிரச்சனைக்காக மாற்றிக்கொள்ள முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பாலித கோஹனவுடனான சந்திப்பின்போது அனைத்துலக மனித உரிமைகள் கழகம், இலங்கைக்குப் பயணம் செய்வதற்கான கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் அதனை பாலித கோஹன பலமுறை நிராகரித்ததாக மெக்டோனோல்ட் தெரிவித்துள்ளார்.

7. மருத்துவக் கழிவுகளால் நோய் பரவும் அபாயம்

ஜூலை 25, 2011.   இந்தியாவில்  "எய்ட்ஸ்'  போன்ற ஆட்கொல்லி நோய்களைப் பரப்பும் அபாயம் கொண்ட மருத்துவக் கழிவுகளை அகற்றுவதில், பல மருத்துவமனைகள் மெத்தனமாக உள்ளதால், தொற்றுநோய்கள் பரவும் அபாயம் உள்ளது என நல ஆர்வலர்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
பயன்படுத்தப்பட்ட மருத்துவ உபகரணங்கள் மற்றும் அறுவை சிகிச்சையில் வெளியாகும் மருத்துவக் கழிவுகளை முறையாக அகற்ற, 1998ம் ஆண்டில் விதிமுறைகளை உருவாக்கி, இந்திய மத்திய அரசு, தனிச் சட்டம் இயற்றி, இந்த நடைமுறைகள் அனைத்தும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் கண்காணிப்பில் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும் பல மருத்துவமனைகள் இந்த விதிகளைப் பின்பற்றுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 2,252 பெரிய மருத்துவமனைகளும், 317 அரசு மருத்துவமனைகளும், சிறிய மருத்துவமனைகளும் ஆயிரக்கணக்கில் உள்ளன.
'சென்னையில் மருத்துவக் கழிவு அப்புறப்படுத்தும் திட்டத்தின் கீழ், 258 மருத்துவமனைகள்தான் பதிவு செய்துள்ளன. ஆனால், 5,000க்கும் மேற்பட்ட சிறிய மருத்துவமனைகள் இதில் பதிவு செய்யவில்லை' என மாநகராட்சி நிர்வாகம் தெரிவிக்கிறது.

robert john kennedy: First Super Bus Received in Dubai - Speed 250/kmh

robert john kennedy: First Super Bus Received in Dubai - Speed 250/kmh: "First Super Bus Received in Dubai for TRAVeling from Dubai to Abu Dhabi: Speed 250 /kmh Electric Superbus tours Abu Dhabi and Du..."

First Super Bus Received in Dubai - Speed 250/kmh

First Super Bus Received in Dubai for
TRAVeling from Dubai to Abu Dhabi:
Speed 250/kmh 
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Fun & Info @ Keralites.net
Electric Superbus tours Abu Dhabi and Dubai
cid:image010.jpg@01CC25DC.C9946440
The Dutch-built Superbus was shown to the media at Masdar City in Abu Dhabi a few days ago.
Fully electric and designed to be capable of 250 kph while carrying 23 passengers, it is being pitched as the next-generation solution to the Dubai-Abu Dhabi commute.
cid:image011.jpg@01CC25DC.C9946440
From what we saw the Superbus is far from ready for prime time.
All we got to see was the Super bus doing 250 kph on deserted roads, as we rode alongside in a minivan, because no one was allowed to ride it yet due to insurance limitations.
Still under testing, the best speed the prototype has managed so far is 140 kph, and the practicality of the design also has much to be desired.
Aside from the thin carbon-fibre doors that seem to have no sound insulation, look at the cramped space through which passengers would have to stumble in and out at stops.
Even by the Dutch outfits own admission, the Superbus is still four years away from being road-ready, let alone in service.
The original idea is sound, however.
Apparently there is a second highway planned between Dubai and Abu Dhabi to reduce congestion.
This highway could integrate a special high-speed lane to accommodate the 250 kph Superbus, which would cut down the commute to 30 minutes for businessmen willing to pay, while also dropping them off at designated bus stops around the cities.
It is also potentially environmentally-friendly, as the Superbus was charged in Masdar City using energy from their own solar-panel farm.
Indeed, Masdar City was the real surprise of the day.
Designed to be a green city within Abu Dhabi , all the street lamps there were solar-powered, while we were ferried around partly in Mitsubishi I-MiEV electric cars.
The city, as well the environmental institute within it, are still under construction.
cid:image012.jpg@01CC25DC.C9946440

Thanks to Titus Mohan

Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice

  Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...