An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Thursday, 1 May 2014
ROBERT JOHN KENNEDY: செக்ஸ்க்கு மட்டுமன்றி ஆண்களின் ஆயுளையும் தீர்மானிக...
ROBERT JOHN KENNEDY: செக்ஸ்க்கு மட்டுமன்றி ஆண்களின் ஆயுளையும் தீர்மானிக...: செக்ஸ்க்கு மட்டுமன்றி ஆண்களின் ஆயுளையும் தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள்! பிரிட்டன் ஆய்வாளர்கள் புதிய தகவல் ஆண்களின் ரத்த ...
செக்ஸ்க்கு மட்டுமன்றி ஆண்களின் ஆயுளையும் தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள்! பிரிட்டன் ஆய்வாளர்கள் புதிய தகவல்
செக்ஸ்க்கு மட்டுமன்றி ஆண்களின் ஆயுளையும் தீர்மானிக்கும் Y குரோமோசோம்கள்! பிரிட்டன் ஆய்வாளர்கள் புதிய தகவல்
பெண்களை விட ஆண்களுக்கு ஆயுள் குறைவு என்பது அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது ஆண்களில் ஆயுள் எதனால் குறைகிறது என்பதை பிரிட்டனில் உப்சலா பல்ககைக்கழகத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உயிரினங்கள் அனைத்தும் செல் எனப்படும் நுண்ணிய பகுதியால் ஆக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு செல்லினுள்ளும் 46 குரோமோசம்கள் உள்ளன. இந்த குரோமோசோமிற்குள் மனித வம்ச பரம்பரைச் செய்திகளை உள்ளடக்கிய வளை போன்ற நுண்ணிய துணுக்குகளான நியூக்ளிக் அமிலங்கள் அதாவது டி.என்.ஏ (D.N.A.) உள்ளன.
ரத்த மாதிரி சோதனை உலக அளவிலான ஆராய்ச்சியார்கள் குழு ஒன்று வயது முதிர்ந்த ஆண்கள் 1600 பேரின் ரத்த மாதிரியை எடுத்து சோதனை செய்தனர்.
Y குரோமோசோம் ஆய்வில் பங்கேற்ற அனைவருக்கும் ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களில் ஒய் குரோமோசோம் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. இதனாலேயே ஆணின் ஆயுள் குறைகிறது என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கேரள கிராமப்புறங்களில் வாழும் பெண்கள் தான் மிக அதிகமாக 77.2 வயது வரை வாழ்வதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆண்களின் ‘Y’ குரோமோசோம் பாதிக்கப்பட்டு வருவதன் காரணமாக எதிர்காலத்தில் ஆண்குலமே அழிந்துபோகும் என்று அதிர்ச்சியூட்டுகிறார்கள் விஞ்ஞானிகள்.
ஆண் குரோமோசோம் எனப்படும் ‘Y’ குரோமோசோம்களுக்குள் உள்ளேயே உள்ள அழியும் தன்மையால் ஆண்கள் நிரந்தர அழிவை நோக்கிச் சரிந்து கொண்டிருக்கிறார்கள் என்கிறார் ஆஸ்திரேலியாவின் முன்னணி பெண் விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியை கிரேவ்ஸ்
பெண்களின் X குரோமோசோம் ஜோடியாக உள்ளதால் அதனால் பழுதுகளைச் சரிசெய்துகொள்ள முடிகிறது. ஆனால் ஜோடியில்லாத ஆணின் ‘X ‘ குரோமோசோம் பழுதுகள், குறைகளை சரிசெய்யத் தவித்து கடைசியில் அழிகிறது.
ஆண் குழந்தைக்குக் காரணமான ‘Y’ குரோமோசோம் முற்றிலுமாக அழிந்து போவது என்றாலும் 50 லட்சம் ஆண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
ROBERT JOHN KENNEDY: கைகளை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் போன்ற கொடிய...
ROBERT JOHN KENNEDY: கைகளை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் போன்ற கொடிய...: கைகளை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் போன்ற கொடிய ஷரியாச் சட்டம் நாளை புருனேயில் அமுல் புருனேயில் கடுமையான இஸ்லாமியத் தண...
கைகளை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் போன்ற கொடிய ஷரியாச் சட்டம் நாளை புருனேயில் அமுல்
கைகளை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் போன்ற கொடிய ஷரியாச் சட்டம் நாளை புருனேயில் அமுல்
கைகளை வெட்டுதல், கல்லெறிந்து கொல்லுதல் போன்ற இறுதியான தண்டனை உட்பட கடுமையான தண்டனைகள் நாளை-வியாழக்கிழமை முதல் நடைமுறைக்கு வரும் என்று அவர் அறிவித்துள்ளார்.
புருனேயில் ஷரியா சட்டம் மூன்று கட்டமாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் அதன் சுல்தான் தெரிவித்துள்ளார்.
புதிய தண்டனைச் சட்டத்தின்படி கண்ணியமற்ற வகையில் நடந்து கொள்வது, வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்புத் தொழுகைகளில் கலந்து கொள்ளாதது ஆகிய குற்றங்களுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.
இரண்டாம் கட்டமாக கசையடி, திருட்டுச் செயல்களுக்கான தண்டனையாக கைகளை வெட்டுதல் ஆகியவை நடைமுறைக்கு வரும்.
இதையடுத்து இறுதியாக குதவழி உறவு, திருமணத்துக்கு வெளியே உறவு வைத்துக் கொள்வது போன்ற குற்றங்களுக்கு கல்லெறிந்து கொல்லும் தண்டனைகளை நிறைவேற்ற, சுல்தான் ஒப்புதல் வழங்கியுள்ள புதிய சட்டம் வழி செய்கிறது.
வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையில் கலந்து கொள்ளாவிட்டால் தண்டனை என்று அறிவிப்பு.
ஷரியா சட்டங்கள் அல்லாவால் வகுக்கப்பட்டவை என்றும், அவற்றைக் கொடூரமானது அல்லது நியாயமற்றது என்று கூறுவது சரியல்ல என்றும் உலகின் மிகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரான சுல்தான் ஹாஜி ஹஸனல் போல்கியா கூறியுள்ளார்.
ஆனால் இந்த புதிய சட்ட வழிகளின் மூலமான சில தண்டனைகளை, சித்திரவதைக்கு ஒப்பானவை என்றும் அவை கொடூரமானவை மற்றும் மனிதத் தன்மையற்றவை என்றும் ஐ நா வின் மனித உரிமைகள் அலுவலகம் தெரிவித்துள்ளது.
BBC-
ROBERT JOHN KENNEDY: Saint Joseph the Worker
ROBERT JOHN KENNEDY: Saint Joseph the Worker: Saint Joseph the Worker On May 1, 1955, Pope Pius XII granted a public audience to the Catholic Association of Itali...
Saint Joseph the Worker
Saint Joseph the Worker
On
May 1, 1955, Pope Pius XII granted a public audience to the Catholic
Association of Italian Workers, whose members had gathered in Saint
Peter's Square to celebrate the tenth anniversary of their society. They
were solemnly renewing, in common, their promise of loyalty to the
social doctrine of the Church, and it was on that day that the Pope
instituted the liturgical feast of May 1st, in honor of Saint
Joseph the Worker. He assured his audience and the working people of
the world: You have beside you a shepherd, a defender and a father in
Saint Joseph, the carpenter whom God in His providence chose to be the
virginal father of Jesus and the head of the Holy Family. He is silent
but has excellent hearing, and his intercession is very powerful over
the Heart of the Saviour.
We
can conclude from the role for which Saint Joseph was chosen and named
by Heaven that he was a man of tried virtue and consummate holiness. No
other mortal man would ever hold a higher office. Saint Joseph surpassed
all the Saints of the Old Law in sanctity; in him the virtue of his
ancestors reached its culmination and perfection. Like Abraham, he was a
man of faith and obedience; like Isaac, one of prayer and vision; like
Jacob, he was patient and self-sacrificing; like Joseph of Egypt, his
chastity was inviolable. And like David, of whom he is the direct
descendant, he is a royal intercessor according to the heart of God. Ite ad Joseph — Go to Joseph; to
Joseph of Egypt, the pharaoh told the needy to go for assistance to
receive the grain that would save their lives. To the new Joseph, the just man to
whom the Son of God Himself was subject as to a father, all Christians
can go with confidence, and he will see to their spiritual and temporal
needs with paternal goodness.
செய்திகள் - 01.05.14
செய்திகள் - 01.05.14
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் வியாழன் டுவிட்டர் செய்தி
2. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாகக் கவலை
3. மங்கோலியாவில் கிறிஸ்தவம் வளர்கிறது
4. அமெரிக்காவில் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதில் கத்தோலிக்க அமைப்புகள்
5. சிரியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து UNICEF கண்டனம்
6. பாகிஸ்தானில் சமூகத்தொடர்பாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது
7. நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை – உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கை
------------------------------ ------------------------------ ------------------------------ ------------
1. திருத்தந்தையின் வியாழன் டுவிட்டர் செய்தி
மே 01,2014. 'அரசியல் பொறுப்பில் இருப்போர் இரு விடயங்களை மனதில் கொள்ளவேண்டும் என ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். அவையாவன : மனித மாண்பும், பொது நலனும்' என தன் டுவிட்டர் பக்கத்தில் இவ்வியாழனன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இவ்வியாழன், மே மாதம் முதல் தேதி, உலக தொழிலாளர் தினம் உலகெங்கும் சிறப்பிக்கப்படும் இவ்வேளையில், மனித
மாண்பிற்கும் பொது நலனுக்கும் அரசியல் வலிமையுடையோர் முதலிடம்
கொடுக்கவேண்டும் என திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விண்ணப்பித்துள்ளது
முக்கியத்துவம் நிறைந்த ஒன்றாக உள்ளது.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
2. ஒரிசாவில் கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்வதாகக் கவலை
மே 01,2014. ஒரிசாவில் 2008ம் ஆண்டின் வன்முறைகளால் பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள், இன்னும் அமைதியில் வாழமுடியாமல், அடக்குமுறைகளையும் உரிமை மீறல்களையும் எதிர்நோக்கி வருவதாக அப்பகுதி திருஅவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கிறிஸ்தவர்களுக்கு எதிரான 2008ம் ஆண்டு படுகொலைகளிலிருந்து தப்பித்த ஒரு குடும்பத்தின் வீடு அண்மையில் எரிக்கப்பட்டதாகக் கூறினார், மனித உரிமை நடவடிக்கையாளரான கத்தோலிக்க அருட்பணியாளர் அஜய் குமார் சிங்
Budruka என்ற கிராமத்தில் Praful Digal என்ற கத்தோலிக்கர் அண்மையில் சீரமைத்த வீட்டை, இந்து தீவிரவாதிகள் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக Sudershan Mallick, Pabitra Mallick, Mallick Nageswar என்ற மூவரை காவல் துறை கைது செய்தபோதிலும், தற்போது அவர்களை எவ்வித காரணமும் கூறாமல் விடுவித்துள்ளது.
ஒரிசாவின் கந்தமால் பகுதி படுகொலைகளுக்குப்பின், அப்பகுதியிலிருந்து
கிறிஸ்தவர்களை வெளியேற்றுவதே சில குழுக்களின் நோக்கமாக இருந்து வருவதாக
அப்பகுதியின் புனித பால் இளங்குருமட அதிபர் அருட்பணி Pradosh Kumar Nayak கூறினார்.
ஆதாரம் : Fides
3. மங்கோலியாவில் கிறிஸ்தவம் வளர்கிறது
மே 01,2014.
மங்கோலியாவில் கம்யூனிச அதிகாரிகளின் கடும் கட்டுப்பாடுகளையும் தாண்டி
கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை வளர்ச்சியடைந்து வருவதாக தலத்திருஅவை
மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளது.
பல ஆண்டுகளாக நாத்தீகம் பரப்பப்பட்டுவந்த மங்கோலியாவில் 1992ம் ஆண்டே வெளிநாட்டு மறைபோதகர்கள் நுழைய முடிந்துள்ள நிலையில், கடந்த 20 ஆண்டுகளில் கத்தோலிக்கர்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது.
மங்கோலியாவில் மத சுதந்திரம் சட்டம் மூலம் அனுமதிக்கப்பட்டிருந்தாலும், அரசு அதிகாரிகளின் போக்குகளால் பல கட்டுப்பாடுகளை எதிர்நோக்கவேண்டியிருப்பதாக கிறிஸ்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
அரசின் கட்டுப்பாடுகள் ஒருபுறம் இருக்க, கிறிஸ்தவர்கள் உலகாயுதப்போக்குகளுக்கு அடிமையாகி வருவதும், கிறிஸ்தவம் புறக்கணிக்கப்படுவதற்கு காரணமாகிறது என்றார் மங்கோலியத் திருஅவை அதிகாரி ஒருவர்.
கடந்த வாரம் இயேசுவின் உயிர்ப்புத் திருவிழாவுக்கு முந்தைய நாள் 30 இளையோரும் முதியோரும் இந்நாட்டில் திருமுழுக்குப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆதாரம் : AsiaNews
4. அமெரிக்காவில் சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்டவர்களை காப்பதில் கத்தோலிக்க அமைப்புகள்
மே 01,2014. அமெரிக்க ஐக்கிய நாட்டின் தென்பகுதியில் கடந்த ஞாயிறு, திங்கள்
மற்றும் செவ்வாய் தினங்களில் ஏற்பட்ட சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட
மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கி வருகின்றன கத்தோலிக்கத் துயர்துடைப்பு
நிறுவனங்கள்.
Arkansas, Mississipi ஆகிய இடங்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், Oklahoma, Iowa, Alabama, Tennessee ஆகிய பகுதிகளும் பாதிக்கப்பட்டு 35 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளன.
அமெரிக்க ஐக்கிய நாட்டின் கத்தோலிக்க பிறரன்பு அமைப்புகள் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்ட மறைமாவட்டங்கள் வழி, இழப்புகளை கணக்கிடுவதுடன், அவசர உதவிகளையும் வழங்கி வருகின்றன.
உடனடி நிவாரண உதவிகள் வழங்கப்பட்டாலும், மக்களுக்கு
தங்குமிடங்களை அமைத்துக் கொடுப்பது போன்ற பணிகளில் அதிகக் கவனம் செலுத்தி
வருவதாக கத்தோலிக்க உதவி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஆதாரம் : CNS
5. சிரியாவில் குழந்தைகள் மீதான தாக்குதல் குறித்து UNICEF கண்டனம்
மே 01,2014.
சிரியாவில் அண்மையில் குழந்தைகள்மீது சில தீவிரவாதக் குழுக்களால்
நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது
UNICEF நிறுவனம்.
Al-Shaghour எனுமிடத்தில் கடந்த செவ்வாயன்று தொழில் கல்விக்கூடத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் 14 மாணவர்கள் இறந்துள்ளதையும் 80க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதையும் குறித்து கவலையை வெளியிட்ட UNICEF எனும் ஐ.நா.வின் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பு, அகதிகள் குடியிருப்பில் நடத்தப்பட்ட தாக்குதலில் மூன்று குழந்தைகள் இறந்துள்ளது குறித்தும் வருத்தம் தெரிவித்துள்ளது.
வாகனம் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு, நெரிசல் மிகுந்த Homs நகர் சாலையில் வெடித்ததில் 100பேர் உயிரிழந்ததில் பலர் பெண்கள் மற்றும் குழந்தைகள் எனவும் தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது UNICEF அமைப்பு.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
6. பாகிஸ்தானில் சமூகத்தொடர்பாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது
மே 01,2014. பாகிஸ்தான் நாட்டில் சமூகத்தொடர்பாளர்கள் அரசு புலனாய்வு பிரிவினராலும், அரசியல் கட்சிகளாலும், ஆயுதம் தாங்கிய குழுக்களாலும் தொடர்ந்து அச்சுறுத்தப்பட்டு வருவதாக Amnesty International எனும் மனித உரிமைகள் கழகம் குற்றஞ்சாட்டியுள்ளது.
2008ம் ஆண்டிலிருந்து அந்நாட்டில் சமூகத்தொடர்பாளர்கள், அதாவது பத்திரிகையாளர்கள் 34 பேர் கொல்லப்பட்டுள்ளதாக உரைக்கும் Amnesty International, எண்ணற்றோர் அச்சுறுத்தப்பட்டும் கடத்தப்பட்டும் வந்துள்ளதாகத் தெரிவிக்கிறது.
மனித
உரிமை தொடர்புடைய விவகாரங்களில் பத்திரிகையாளர்கள் மௌனம் காக்கவேண்டும்
என்பதையே அரசின் பல்வேறு தரப்புகளும் விரும்புகின்றன என்றார் அம்மனித
உரிமைகள் அமைப்பின் அதிகாரி David Griffiths.
பத்திரிகையாளர்களுக்கு எதிராகப் பல்வேறு வன்முறைகள் இடம்பெற்ற போதிலும், பாகிஸ்தான் அரசு போதிய நடவடிடக்கை எடுக்கத் தயங்கியே வருகிறது எனவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
ஆதாரம் : Amn. Int
7. நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழக்கும் நிலை – உலக நலவாழ்வு நிறுவனம் எச்சரிக்கை
மே 01,2014. நோயை உண்டாக்கும் கிருமிகள், உருமாறி, மிகவும் சக்தி வாய்ந்த நோய் எதிர்ப்பு மருந்துகளிடமிருந்துகூட தப்பித்துக்கொள்ளும் நிலையை எட்டியிருப்பதாகவும், இது இப்போது உலக அளவில் ஒரு பெரும் அச்சுறுத்தலைத் தோற்றுவிப்பதாகவும், உலக நலவாழ்வு நிறுவனம் தன் அறிக்கையில் கூறுகிறது.
இத்தகைய நோய் எதிர்ப்பு மருந்துகளை தேவைக்கதிகமாக பரிந்துரைப்பதும், நோயாளிகள் இத்தகைய மருந்துகளை உட்கொள்ளப் பரிந்துரைக்கப்பட்ட காலம் முழுவதும் உட்கொள்ளாமல் இடையில் நிறுத்துவது போன்ற தவறுகளும் இதற்குக் காரணம் என்று அது உரைக்கிறது.
இதனால் இந்த நோய் எதிர்ப்பு மருந்துகள் செயலிழப்பது என்பது, எதிர்பார்த்ததைவிட மிகவும் வேகமாக நடந்துகொண்டிருக்கிறது என்று அந்த அறிக்கை கூறியது.
புதிய நோய் எதிர்ப்பு மருந்துகள் விரைவாக உருவாக்கப்படவேண்டும் என்று கூறும் உலக நலவாழ்வு நிறுவனம், இவைகள் எப்படிப் பயன்படுத்தப்படுகின்றன என்பதைப் பார்க்க, மேலும் சிறந்த கண்காணிப்பு முறைகள் அவசியம் என்றும் கூறுகிறது.
Subscribe to:
Posts (Atom)
Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice
Cardinal Koovakad: Nonviolence is courageous commitment to justice Speaking at an Ahimsa Day celebration at the British Parliament, Cardin...
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
India still in shackles On Independence Day, is there anything to celebrate? ...
-
UN committee vice-chair accused of anti-Church bias Critic cites 'a frontal attack on the Church' in UN-Holy See meeting. ...