Thursday, 25 May 2023

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் : கர்தினால் பரோலின்

 

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வாருங்கள் : கர்தினால் பரோலின்



ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட திருப்பீடம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் : கர்தினால் பியெத்ரோ பரோலின்

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உக்ரைனில் தொடரும் ஆக்கிரமிப்புப் போரை ஐரோப்பா அனுமதிக்கக் கூடாது என்றும், அந்நாட்டில் ஒரு உறுதியான மற்றும் நியாயமான அமைதியை நிலைநாட்ட வேண்டுமென்றும் கேட்டுக்கொண்டார் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின்.

ஐஸ்லாந்தின் ரெய்க்ஜாவிக் நகரில், மே 16, 17 ஆகிய இருநாள்கள் நடைபெற்ற ஐரோப்பிய கவுன்சிலின் 4-வது உச்சி மாநாட்டில் ஐரோப்பா முழுவதிலும் இருந்து மாநில மற்றும் அரசுத் தலைவர்கள் கலந்துகொண்ட வேளை, அதில் பங்கேற்று உரையாற்றியபோது இவ்வாறு தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

தனது உரையின்போது, இம்மாநாட்டில் பங்கேற்ற நாட்டுத் தலைவர்கள் அனைவருக்கும் திருத்தந்தையின் வாழ்த்துக்களையும் செபங்களையும் தெரிவித்தார் கர்தினால் பரோலின்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, உக்ரைனில் நிகழ்ந்து வரும் போர், சமூக அரசியல் மற்றும் பலதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான உணர்வுப்பூர்வமானத் தேடலானது தொலைதூர கடந்த காலத்திலிருந்து ஒரு விரும்பத்தகாத நினைவாக தெரிகிறது என்று சுட்டிக்காட்டினார்  கர்தினால் பரோலின்.

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனைப் பற்றி சிந்திக்காமல், அமைதிக்கான ஆக்கப்பூர்வமான முயற்சிகளை எப்படி சாத்தியப்படுத்துவது என்ற கேள்வியை முதலில் ஐரோப்பிய தலைவர்கள் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார் கர்தினால் பரோலின்.

ஐரோப்பா மற்றும் உலகம் முழுவதும் அமைதியை நிலைநாட்ட திருப்பீடம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று உறுதியுடன் கூறிய கர்தினால் பரோலின் அவர்கள், போருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், உக்ரைனிலும் ஐரோப்பாவின் 'சாம்பல்' பகுதிகள் என்று அழைக்கப்படும் மற்ற எல்லா பகுதிகளிலும் ஒரு உறுதியான மற்றும் நியாயமான அமைதியை நிலைநாட்டுவதற்கான நேரம் இது என்பதையும் எடுத்துரைத்தார் கர்தினால் பரோலின்

மனித உரிமைகள் மற்றும் ஐரோப்பாவில் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்த முற்படும் அனைத்துலக அமைப்பான ஐரோப்பிய கவுன்சிலில் திருப்பீடம் பார்வையாளராகப் பங்குபெறும் உயர்மதிப்பைப் பெற்றுள்ளதால், அதன் பிரதிநிதியாகக் கலந்துகொண்டார் கர்தினால் பரோலின்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...