Thursday 25 May 2023

ஒன்பது புதிய இறையடியார்களின் வீரத்துவ வாழ்வு ஏற்பு

 

ஒன்பது புதிய இறையடியார்களின் வீரத்துவ வாழ்வு ஏற்பு



இத்தாலியைச் சார்ந்த ஐவரும், பிரேசிலில் இருவரும், கேமரூன் மற்றும் இஸ்பெயினில் இருவருமாக மொத்தம் ஒன்பது புதிய இறையாடியார்களின் புண்ணிய வாழ்வானது ஏற்கப்பட்டுள்ளது.

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்தவ நம்பிக்கையின் பொருட்டு கொல்லப்பட்ட இத்தாலி நாட்டின் மறைசாட்சியாளரான அருள்பணியாளர் Giuseppe Beotti  உட்பட ஒன்பது இறையடியார்களின்  புண்ணிய மற்றும் வீரத்துவ வாழ்வு பற்றிய விவரங்களானது மே 20 சனிக்கிழமை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு ஏற்கப்பட்டது.

இத்தாலியைச் சார்ந்த அருள்பணியாளர், அருள்சகோதரி, ஓர் ஆண் பொது நிலையினர் மற்றும் இரண்டு பெண் பொதுநிலையினர் என ஐவரும், பிரேசிலில் அருள்சகோதரி அருள்பணித்துவமாணவர் என இருவரும், கேமரூன் மற்றும் இஸ்பெயினில் ஓர் அருள்பணியாளர் என இருவருமாக மொத்தம் ஒன்பது புதிய இறையாடியார்களின் புண்ணிய வாழ்வானது ஏற்கப்பட்டுள்ளது.

இதற்கான அங்கீகாரத்தை புனிதர் மற்றும் அருளாளர்களாக உயர்த்தப்படும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர், கர்தினால் மார்செல்லோ செமெராரோ (Marcello Semeraro) அவர்கள், மே 20, சனிக்கிழமையன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களைச் சந்தித்து சமர்ப்பித்தார்.

இவர்கள் முறையே இத்தாலியைச் சார்ந்த மறைசாட்சியாகக் கொல்லப்பட்ட அருள்பணியாளர் Giuseppe Beotti, அருள்சகோதரி Edda Roda, ஆண் பொதுநிலையினர் Arnaldo Canepa மற்றும் பெண் பொதுநிலையினர் Maria Cristina Ogier, Lorena D’Alessandro என்னும் ஐவர் ஆவர்.  

பிரேசில் நாட்டு அருள்சகோதரி Tereza Margarida do Coração de Maria, அருள்பணித்துவ மாணவர் Guido Vidal França Schäffer மற்றும் கேமரூன் நாட்டின் அருள்பணியாளர் Simon Mpeke இஸ்பெயின் நாட்டின் அருள்பணியாளர் Pedro de la Virgen del Carmen ஆகியோராவர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...