சன.18,2011. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலத்தில் பல்வேறு இந்துமதத் தீவிரவாதக் குழுக்கள், கிறிஸ்தவர்களை மீண்டும் மதமாற்றம் செய்யும் விழாவுக்குத் தயாரித்து வருவதை முன்னிட்டு அம்மாநிலத்தில் பணியாற்றும் திருச்சபைப் பணியாளர்கள் தங்கள் கவலையை வெளியிட்டுள்ளனர்.
மத்திய பிரதேசத்தில் கிறிஸ்தவர்கள் மத்தியில் கடும் பதட்டநிலைகள் ஏற்பட்டுள்ளதாகவும் தங்கள் வாழ்வையும் திருச்சபை சொத்துக்களையும் பாதுகாப்பதற்கு தங்களால் இயன்ற எல்லாவிதமான நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் அம்மாநிலத்தின் Mandla மாவட்டத்தில் பணியாற்றும் அருட்பணியாளர் ஜார்ஜ் தாமஸ் கூறினார்.
வருகிற பிப்ரவரி 10 முதல் 12 வரை இந்துமதத் தீவிரவாதக் குழுக்கள், தங்கள் சமய விழாவைக் கொண்டாடுவதற்குத் தயாரித்து வருகின்றன. இந்தியா முழுவதிலுமிருந்து சுமார் 25 இலட்சம் பேர் Ma Narmada Samajik Kumbh என்ற அன்னை நர்மதா சமூக விழாவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாண்ட்லா மாவட்டத்தில் நர்மதா நதி பாய்கிறது.
No comments:
Post a Comment