Tuesday, 18 January 2011

Catholic News - hottest and latest

இந்திய அரசின் சிறப்புத் தபால் தலை மூலம் கௌரவிக்கப்பட்டுள்ளது குஜராத்தின் இயேசு சபை இதழ்.

சன 17, 2011.  குஜராத்தின் இயேசு சபை இதழ் 'தூத்' வெளியிடப்பட்டதன் 100ம் ஆண்டையொட்டி, சிறப்பு தபால் தலை ஒன்றை வெளியிட்டுள்ளது இந்திய அரசு.
அகமதாபாத்தின் புனித சேவியர் பள்ளியில் நடந்த விழாவில் இத்தபால் தலையை வெளியிட்டார் குஜராத்தின் தபால் துறை தலைமை அதிகாரி ஹுமேரா அஹ்மெத்.
1911ம் ஆண்டில் மும்பையில் துவக்கப்பட்டு, இன்று குஜராத்திலிருந்து வெளியிடப்படும் 'தூத்' இதழ், காந்திய எண்ணங்கள், குழந்தைகளுக்கு வழங்கப்படும் முறையற்ற தண்டனைகள், இன்றைய இந்தியாவில் பெண்களின் பங்கு போன்றவை உட்பட பல்வேறு சமூகத் தலைப்புகளை விவாதித்து வருகின்றது.

No comments:

Post a Comment