Friday 9 August 2024

கேரளா நிலச்சரிவு மீட்புக்காக ஒன்றுபட்டுள்ள மதம் மற்றும் சமூகக் குழுக்கள்!

 கேரளா நிலச்சரிவு மீட்புக்காக ஒன்றுபட்டுள்ள மதம் மற்றும் சமூகக் குழுக்கள்!



ஜூலை 30, செவ்வாயன்று, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தற்போது 2,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கிளரேஷியன் சபையின் அருள்பணியாளர் ஜார்ஜ் கண்ணந்தானம் தலைமையிலான வயநாடு நிவாரணக் குழு உடனடித் தற்காலிகக் குடும்ப தங்குமிடங்களை வழங்குவதையும் இறுதியில் நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுப் பணியாற்றுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன

மேலும் இக்குழுவினர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரண முகாம்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அவசரத் தேவைகளைக் கண்டறிய விரைவான ஆய்வறிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இக்குழுவினரின் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கிய நகரமான கல்பெட்டாவில் உள்ள புனித  வின்சென்ட் தெ பால் ஃபோரேன் கோவிலில், நிலைமையை ஆய்வு செய்ய, அப்பங்குதளத்தின் பங்குத்தந்தை அருள்பணியாளர் மேத்யூ பெரியபுரம் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட குழு கூடியதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மானந்தவாடி சீரோ மலபார் மறைமாவட்டம், பெங்களூரு இலத்தீன் மறைமாவட்டம், கோழிக்கோடு மறைமாவட்டம் உள்ளிட்ட பல்வேறு  துறவு சபைகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.

இக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.மேகஸ்ரீயிடம் தங்களின் முன்மொழியப்பட்ட திட்டங்களை விளக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான வசதிகளுடன் கூடிய சிறப்புநிலை கொண்ட நகரத்தை உருவாக்குவதற்கான அரசின் முயற்சிக்கு முழு ஆதரவையும் வழங்க உறுதியளித்தனர் எனவும் சுட்டிக்காட்டுகிறது அச்செய்தி.

ஜூலை 30, செவ்வாயன்று, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தற்போது 2,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்


No comments:

Post a Comment