குறைகூறுவதை விடுத்து இறைவேண்டலுக்கு முக்கியத்துவம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
யூபிலி ஆண்டுக்கு தயாரிக்கும் விதமாக 2024ஆம் ஆண்டை ஏற்கனவே இறைவேண்டலின் ஆண்டாக அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் ஒருவருக்காக செபிக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
தன் டுவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 2, வெள்ளியன்று இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை, நாம் அதிகமாக செபித்து குறைவாக குறைகூறத் துவங்கினால் என்ன நடக்கும் என்ற கேள்வியையும் அதில் முன்வைத்துள்ளார்.
நாம் பிறரைக் குறித்து குறைகூறுவதை விடுத்து அதிக நேரத்தை இறைவேண்டலில் செலவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்பதுடன், ஒருவர் மற்றவருக்காக செபிக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம் என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை.
2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை 5,500க்கும் மேற்பட்ட ஆங்கிலக் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தை இதுவரை ஏறக்குறைய 1 கோடியே 85 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment