An ethnic Tamil. A Roman Catholic Priest of the Diocese of Kuzhithurai, Tamil Nadu, India. Promotes creative and alternative ministries; laity participation and progressive thinking in the Church. Believes in ecumenism, inter-faith and inter-religious dialogue. Rooted in Catholic orthodoxy and orthopraxis. Concerned in Eco-spirituality, Minimalism, and lives by the Benevolence of God.
Wednesday 28 August 2024
Friday 9 August 2024
Pope to Knights of Columbus: Pray for Christ’s peace to triumph
Pope to Knights of Columbus: Pray for Christ’s peace to triumph
By Devin Watkins
As the Knights of Columbus met in Quebec City, Canada, on August 6-8, Pope Francis sent his prayers and support for their mission.
The papal message was sent to Patrick Kelly, the Supreme Knight, and was signed by Cardinal Secretary of State Pietro Parolin.
The Pope reflected on the theme of the 142nd Supreme Convention, “On Mission”, and highlighted that every Christian is a missionary in the measure we have encountered the love of God in Christ.
“The foundation of the Knights of Columbus, guided by the prophetic vision of Blessed Michael McGivney,” said the Pope, “was inspired by the urgent need to bear witness to that love, above all in service to the poor and in apostolic zeal for the building up of the Church in unity, fraternity and fidelity to the saving truth of the Gospel.”
Forming men of faith and family
He praised the Knights’ efforts to form men of “faith and family,” saying their commitment to the family as the fundamental cell of society has helped many people grow in maturity.
The Pope expressed special appreciation for the Knights’ “Cor” initiative, which seeks to form Catholic men "to live their faith and serve their family, parish, community, and country” by focusing on “prayer, formation, and fraternity.”
“All missionary outreach has its heart and beating pulse in the presence of our Lord in the Holy Sacrifice of the Mass, offered for the peace and salvation of all the world,” he said.
The Knights of Columbus helped promote the Eucharistic Pilgrimage that converged on the city of Indianapolis in July 2024, and the Pope said the initiative bore “impressive witness” to the Church’s faith in Christ’s redemptive sacrifice on the cross.
He recalled the wars and social unrest rocking many parts of the world, and called for prayers for justice, peace, and reconciliation.
May the Knights and their families, he said, “persevere in offering their prayers and Masses for the triumph of Christ’s peace in the hearts of all people and the building of the civilization of love.”
Supporting Church’s mission and suffering Christians
Pope Francis also recalled the Knights’ charitable activities and efforts to support marriage, the dignity of every human life, and the Church’s mission in developing nations.
He mentioned their charitable outreach in Ukraine and the Christian communities of the Middle East, as well as their care for Christians enduring persecution for their faith in Christ.
Turning to the upcoming 2025 Jubilee, the Pope thanked the Knights for sponsoring the ongoing renovation of the baldachin in St. Peter’s Basilica.
He expressed his hopes that as pilgrims “contemplate the great Bernini baldacchino that soars above the Tomb of Saint Peter, even now being restored to its original splendor through the generosity of the Knights of Columbus, they will be strengthened in faith and in unity with the Successor of Peter.”
In conclusion, Pope Francis entrusted the Knights of Columbus to the maternal protection of the Blessed Virgin Mary, and invited them to fulfill their bapstimal mission “to be a leaven of peace and holiness in our human family.”
From Swiss Guard to priest: ‘Service with humility’
From Swiss Guard to priest: ‘Service with humility’
By Romano Pelosi and Francesco Bartolini
Born and raised in a religious family in Fribourg, Switzerland, Didier Grandjean’s motivation for serving the Church came naturally. Having completed the Swiss Army’s recruitment school, he served in the Pontifical Swiss Guards from 2011 to 2019.
At the age of 21, he started his journey as an official recruit, and during his service he “often had contact with pilgrims” and was impressed by their deep faith.
It turned out to be a catalyst for his very own “enlightenment,” he told Vatican News, so much so that he would take time to pray and reflect during his posts.
His service proved to be essential for his spiritual maturity, a fundamental characteristic needed to officially transition along the path of priestly vocation. It was a path to which he felt he belonged.
Support entering the seminary
Despite his family’s religious devotions, their initial surprise of this change of path was to be expected.
Nevertheless, the consequent positive response and support from his loved ones further spurred on his determination and confidence towards his religious destiny. “Go; this is your path” was the message from Grandjean’s father before his passing.
Link between Vatican City and Swiss Guard Corps
Grandjean experienced a pivotal moment during the 2013 conclave, witnessing the grandeur and symbolism of the Church, as well as the dedication of Pope Francis.
The values he understood in this moment resembled those of tradition and innovation, security and honorary service, values that lie at the core of both the Vatican City State and the Pontifical Swiss Guard Corps as institutions.
Among the value of service that bridges both the essence of being a Swiss Guard and a priest is that of discipline and camaraderie.
Grandjean is aware that committing oneself with unwavering devotion to others or a cause requires perseverance, saying “prayer is like a battle.”
Both in the Swiss Guard and as a seminarian, Grandjean draws inspiration from the title Servus servorum Dei, Servants of the Servants of God. He interprets this ancient papal title with a desire to commit himself selflessly with great humility, without necessarily expecting anything in return.
Crisis of commitment
The Fribourg seminarian noted the social aspect of being a Servus servorum Dei, recognising the feeling of loneliness in being unable to marry. However, he said he has sought to find this familial feeling of love in his service to fellow believers.
Grandjean expressed preoccupation for the ever-growing “society of comfort”, in which secularisation is more present than ever and the importance of sacrifice and long-term commitment is fading, not only in priesthood but also in marriage.
Thus, he urged people to have courage to follow a path of faith and find joy in doing so, as “Christ will always be at your side.”
A message of hope
Regardless of the decreasing number of priestly or religious vocations, people still seek the advice of experienced priests and their presence gives them joy and direction.
Grandjean concluded with a message that encompasses the sentiment he felt all those years ago in the Guard Corps.
The Church and her ministers, he said, must always be there for people, because “what you may give up from your previous life is returned to you hundredfold.”
Archbishop of Canterbury calls for peace amidst UK riots
Archbishop of Canterbury calls for peace amidst UK riots
By Francesco Bartolini
In the wake of recent events in Britain, which has also seen some of its worst levels of antisemitism in the first half of any year, UK faith leaders continue to condemn violent anti-Muslim riots across the country.
They have united against the hatred and brutality, saying that every British citizen “has a right to be respected and a responsibility to respect others”.
The Archbishop of Canterbury, Justin Welby, said he joins them in prayer, spreading hope for peace to all the communities affected, for those left injured, the police seeking to restore public order, and for places of worship and people of faith and goodwill.
“Violent protest turns people away from the cause,” Archbishop Welby affirmed in an interview with BBC Radio 4, emphasizing that “peaceful protests will have ten thousand times more impact” than criminally violent riots regardless of the cause.
The message follows concerns for safety in several UK regions that continue to rise as more people riot and take to the streets of London, Birmingham, Yorkshire and Merseyside, all seeing mass violence and of arrests.
“It doesn’t feel like home,” according to a young student of Yemeni heritage, who was born and raised in Liverpool, as he represents the sentiment of many British citizens of Muslim descent.
Archbishop Welby, along with other Presidents of Churches Together England (CTE), also expressed gratitude for CTE in the Merseyside Region in particular, following their quick response to the Southport attacks early last week.
The official agency of the Catholic Bishops' Conference of England and Wales for domestic social action (CSAN) recently expressed their solidarity, saying the Church seeks to bring hope and agency to the marginalised communities which have fallen victim to the violent outbreaks.
Thank you for reading our article. You can keep up-to-date by subscribing to our daily newsletter.
கடவுளின் பெயரால் வன்முறை வேண்டாம்! : திருத்தந்தை பிரான்சிஸ்
கடவுளின் பெயரால் வன்முறை வேண்டாம்! : திருத்தந்தை பிரான்சிஸ்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கான உங்கள் உன்னத முயற்சியில் தொடரவும், பல்வேறு மதங்களுக்கிடையில் உள்ள தவறான புரிதல்களைக் களைந்து, நம்பிக்கையான உரையாடல் மற்றும் அமைதிக்கான பாதைகளை உருவாக்க முயற்சி செய்யவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன் என்று கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 7, இப்புதனன்று, இத்தாலியில் உள்ள ஆப்கான் குழுமம் ஒன்றை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, மத நல்லிணக்கத்தை மேம்படுத்துவது என்பது சில வேளைகளில் பின்னடைவை சந்திக்கிறது; ஆனால், நீங்கள் உண்மையிலேயே சமூகத்திற்கு நல்லது செய்ய விரும்பினால், அமைதியை வளர்க்க விரும்பினால், இதன் சாத்தியமான பாதையை விடாமுயற்சியுடன் தொடர வேண்டும் என்றும் அவர்களைக் கேட்டுக்கொண்டார்.
முன்னதாக தனது உரையின் தொடக்கத்தில், கடந்த பத்தாண்டுகளில் ஆப்கானிஸ்தான் ஒரு சிக்கலான மற்றும் துயரமான வரலாற்றைக் கொண்டுள்ளது என்றும், இது தொடர்ச்சியான போர்கள் மற்றும் இரத்தக் கறை படிந்த மோதல்களால் வெளிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் எடுத்துக்காட்டினார் திருத்தந்தை.
ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தானிய சமூகத்தின் மற்றொரு முக்கியமான பண்பும் உண்மையில் நினைவில் கொள்ளப்பட வேண்டும், அதாவது, அவர்கள் பல மக்களால் ஆனவர்கள், ஒவ்வொருவரும் தங்கள் கலாச்சாரம், மரபுகள் மற்றும் தனித்துவமான வாழ்க்கை முறையைப் பற்றி பெருமிதம் கொள்கிறார்கள் என்றும் தெரிவித்தார் திருத்தந்தை.
ஆனால் அதேவேளையில், இந்தத் தெளிவான பன்முகத்தன்மை, ஒவ்வொரு குழுவின் சிறப்பியல்புகள் மற்றும் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான ஓர் அடிப்படை பொதுப் பிரிவை ஊக்குவிப்பதற்கான வாய்ப்பாக இருப்பதற்குப் பதிலாக, சில வேளைகளில் பாகுபாடு மற்றும் விலக்கலுக்கு ஒரு காரணமாகப் பயன்படுத்தப்படுகிறது என்றும் தனது கவலையை வெளிப்படுத்தினார் அவர்.
மேலும் மதக் காரணி, அதன் இயல்பிலேயே, முரண்பாடுகளின் கடுமையை மென்மையாக்க உதவுவதோடு, அனைவருக்கும் சமமான நிலையில், பாகுபாடு இல்லாத முழு குடியுரிமை உரிமைகள் வழங்கப்படுவதற்கான ஒர் இடத்தை உருவாக்க வேண்டும் என்றும் வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.
இன்னும் பல வேளைகளில், மதம் கையாளப்பட்டு, கருவியாக மாற்றப்பட்டு, எதிர் நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, இதுபோன்ற சந்தர்ப்பங்களில், மதம் மோதலுக்கும் வெறுப்புக்கும் காரணமாகிறது என்றும் இது வன்முறைச் செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் குறிப்பிட்டார்.
கெய்ரோவின் அல்-அசார் (Al-Azhar) மசூதியின் பெரிய தலைவரான அகமது முகமது அல்-தாயிப் (Ahmad Muhammad al-Tayyib) அவர்களுடன் 2019-ஆம் ஆண்டு, பிப்ரவரி 4-ஆம் தேதியன்று, அபுதாபியில் கையெழுத்திட்ட உலக அமைதி மற்றும் ஒருங்கிணைந்து வாழ்வதற்கான மனித சகோதரத்துவம் குறித்த ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ‘மதங்கள் ஒருபோதும் போர், வெறுப்பு மனப்பான்மை, விரோதம் மற்றும் தீவிரவாதத்தை தூண்டக்கூடாது, வன்முறையையோ அல்லது இரத்தம் சிந்துவதையோ தூண்டக்கூடாது’ என்பதை விளக்கிய திருத்தந்தை, இந்த சோகமான உண்மைகள் மத போதனைகளில் இருந்து விலகியதன் விளைவுதான் என்றும் கூறினார்.
ஆகவே, வெறுப்பு, வன்முறை, தீவிரவாதம் மற்றும் குருட்டு வெறியைத் தூண்டுவதற்கு மதங்களைப் பயன்படுத்துவதை நிறுத்துமாறும், கொலை, நாடுகடத்தல், பயங்கரவாதம் மற்றும் அடக்குமுறையை நியாயப்படுத்த கடவுளின் பெயரைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் நாங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம் என்றும் விண்ணப்பித்தார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.
இயேசுவுக்கு செவிமடுப்பதில்தான் வாழ்வின் இரகசியம் அடங்கியுள்ளது
இயேசுவுக்கு செவிமடுப்பதில்தான் வாழ்வின் இரகசியம் அடங்கியுள்ளது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
முடிவற்ற வாழ்வை உள்ளடக்கிய வார்த்தைகளைக் கொண்டிருக்கும் இயேசுவுக்குச் செவிமடுப்பதில்தான் வாழ்வின் இரகசியம் அடங்கியுள்ளது என தன் டுவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 6ஆம் தேதி சிறப்பிக்கப்படும் இயேசுவின் உருமாற்றம் திருவிழாவை முன்னிட்டு தன் டுவிட்டர் செய்தியை வெளியிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், “என் அன்பார்ந்த மைந்தர் இவரே, இவருக்குச் செவிசாயுங்கள்” (மத் 17,5) என இறைத்தந்தை வழங்கிய வார்த்தைகளை குறிப்பிட்டு, இயேசுவுக்கு செவிமடுப்பதில்தான் வாழ்வின் இரகசியம் அடங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இயேசுவுக்கு செவிமடுத்தல் என்பது, நற்செய்தி நூலை கையில் எடுத்து அதனை வாசித்து அங்கு இயேசு நம் இதயங்களுக்கு என்னச் சொல்ல வருகிறார் என்பதற்கு செவிமடுப்பதாகும், ஏனெனில் அவரே முடிவற்ற வாழ்வைத்தரும் வார்த்தைகளைக் கொண்டுள்ளார் என மேலும் தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம்.
இறையருளும் நமக்கு எதிர்பாராத வேளையில் வழங்கப்படுகிறது
இறையருளும் நமக்கு எதிர்பாராத வேளையில் வழங்கப்படுகிறது
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
உரோம் நகரின் புனித மேரி மேஜர் பெருங்கோவில் அர்ப்பணிக்கப்பட்டதன் நினைவுத் திருவிழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி திங்கள் மாலையில் அப்பெருங்கோவிலில் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்களை நிறைவேற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரால் சிதறுண்டிருக்கும் இவ்வுலகில் அமைதி நிலவ உருக்கமாக செபித்தார்.
358ஆம் ஆண்டு ஆகஸ்ட் 4ஆம் தேதிக்கும் 5க்கும் இடப்பட்ட இரவில் அப்போதைய திருத்தந்தை லிபேரியஸ் அவர்களுக்கும், பிறிதொரு தம்பதிக்கும் அன்னை மரியா கனவில் தோன்றி, உச்சகட்ட அந்த கோடை காலத்தில் பனி விழும் இடத்தில் தனக்கான ஒரு கோவில் கட்டுமாறு கேட்டுகொண்டதற்கு இணங்க ஆகஸ்ட் 5ஆம் தேதி பனி விழுந்த இடத்தில் இந்த கோவில் கட்டப்பட்டதன் நினைவு இத்திங்களன்று சிறப்பிக்கப்பட்டது.
பனி விழுந்ததை நினவுகூரும் விதமாக பெருங்கோவிலின் உள்முகப்பிலிருந்து வெள்ளைப் பூவிதழ்கள் கொட்டப்பட, இங்கு திருவழிபாட்டைத் துவக்கி மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், கோடை காலத்தில் விழுந்த பனி எவ்வாறு எதிர்பாராத ஒரு நிகழ்வோ அதுபோல் இறைவனின் அருளும் நமக்கு எதிர்பாராத வேளையில் வழங்கப்படுகிறது என்றார்.
இப்பெருங்கோவிலில் வைக்கப்பட்டிருக்கும் “Salus Populi Romani” என்ற புகழ்வாய்ந்த திருஉருவத்தைப் பற்றியும் தன் மறையுறையில் குறிப்பிட்ட திருத்தந்தை, இயேசுவை கையில் தாங்கியிருக்கும் அன்னை மரியாவின் இத்திருஉருவம், நமக்கு இறையருளைப் பெற்றுத்தருவதாக உள்ளது, ஏனெனில் நாம் இறையருளைப்பெற அன்னை மரியா இடையீட்டாளராக உள்ளார் எனவும் எடுத்துரைத்தார்.
வரும் ஜூபிலி ஆண்டில் உரோம் நகரில் இடம்பெறவிருக்கும் கொண்டாட்டங்களைப் பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை, உலக அமைதிக்காக அன்னை மரியாவின் பரிந்துரையை நாடுவோம் எனவும் கேட்டுக்கொண்டார்.
நல்ல புத்தகம் வாழ்க்கைக்குப் பயிற்சி அளிக்கிறது – திருத்தந்தை
நல்ல புத்தகம் வாழ்க்கைக்குப் பயிற்சி அளிக்கிறது – திருத்தந்தை
மெரினா ராஜ் – வத்திக்கான்
ஒரு நல்ல புத்தகம் மனதை திறக்கிறது, இதயத்தை தூண்டுகிறது, வாழ்க்கைக்கு பயிற்சி அளிக்கிறது என்றும், இலக்கியம் பணியாளர்களின் மனதையும் இதயத்தை பயிற்றுவிக்கின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆகஸ்ட் 4 ஞாயிற்றுக்கிழமை புகுநிலை அருள்பணித்துவ மாணவர்கள், மேய்ப்புப்பணியாளர்கள், மற்றும் அனைத்து கிறிஸ்தவர்களும் வாசிப்பு பழக்கத்தில் ஆர்வத்தை அதிகரித்துக் கொள்ள வலியுறுத்தி அனுப்பிய கடிதத்தில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
படிக்கும் பழக்கம் நல்ல பலனைத் தரும் என்று வலியுறுத்தியுள்ள திருத்தந்தை அவர்கள், படிப்பதால் கற்பனைத்திறன் பெருகும், படைப்பாற்றல் அதிகரிக்கும், ஒருமுகப்படுத்தும் திறன் வளப்படும், மன அழுத்தம் மற்றும் பதட்டம் குறையும் என்றும், புத்தகத்தில் உள்ள கதாபாத்திரங்கள் நம் வாழ்வில் ஏற்படும் சிக்கலான சூழல்களை எதிர்கொள்ள ஆற்றல் அளிக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பணியாளர்களின் இதயத்தையும் மனதையும் இலக்கியம் பயிற்றுவிப்பதால் ஒருவர் சுதந்திரமான பகுத்தறிவு, பணிவான பயிற்சி போன்றவற்றில் வளர்கின்றார் என்றும், வாசிப்பு பழக்கம் மனித மொழிகளின் பன்மைத்தன்மைக்கு பலனளிக்கின்றது, மனித உணர்திறனை விரிவுபடுத்துவதோடு ஒரு சிறந்த ஆன்மிக வெளிப்படைத்தன்மைக்கு வழிவகுக்கின்றது என்றும் கூறியுள்ளார் திருத்தந்தை.
சலிப்பைக் கொடுக்கும் விடுமுறைகள், அதிக வெப்பம், கல்வித்தேர்வுகள், போன்றவற்றினால் சோர்வு, கோபம், ஏமாற்றம், தோல்வி போன்றவை ஏற்படும்போது ஆன்மாவின் அமைதியை நம்மால் காணமுடியாது என்று சுட்டிக்காட்டியுள்ள திருத்தந்தை அவர்கள், அத்தகைய நேரங்களில் புத்தக வாசிபானது நமது உள்ளக்கதவுகளைத் திறந்து பரந்துபட்ட நிலையில் நாம் சிந்திக்க நமக்கு உதவும் என்றும் எடுத்துரைத்துள்ளார்.
புத்தக வாசிப்பினால் ஒருவன் எழுத்தாளனிடமிருந்து பெறும் செழுமையினால் தன்னை வளப்படுத்திக் கொள்கின்றான் என்றும், வாசிக்கும் பழக்கம் உடையவர்கள் சுறுசுறுப்பானவர்களாக விளங்குகின்றார்கள் என்றும் எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை.
இலக்கியங்களை அடிக்கடிப் படிப்பதால் எதிர்கால அருள்பணியாளர்கள் மற்றும் மேய்ப்புப்பணியில் ஈடுபடுபவர்கள் ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் முழு மனிதநேயம் கொண்டவர்களாக மாறுகின்றார்கள் என்றும், அவர்களிடத்தில் கிறிஸ்துவின் தெய்வீகம் முழுமையாக ஊற்றப்படுகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.
குறைகூறுவதை விடுத்து இறைவேண்டலுக்கு முக்கியத்துவம்
குறைகூறுவதை விடுத்து இறைவேண்டலுக்கு முக்கியத்துவம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
யூபிலி ஆண்டுக்கு தயாரிக்கும் விதமாக 2024ஆம் ஆண்டை ஏற்கனவே இறைவேண்டலின் ஆண்டாக அறிவித்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் ஒருவருக்காக செபிக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம் என அழைப்பு விடுத்துள்ளார்.
தன் டுவிட்டர் பக்கத்தில் ஆகஸ்ட் 2, வெள்ளியன்று இவ்வழைப்பை விடுத்த திருத்தந்தை, நாம் அதிகமாக செபித்து குறைவாக குறைகூறத் துவங்கினால் என்ன நடக்கும் என்ற கேள்வியையும் அதில் முன்வைத்துள்ளார்.
நாம் பிறரைக் குறித்து குறைகூறுவதை விடுத்து அதிக நேரத்தை இறைவேண்டலில் செலவிட்டால் என்ன நடக்கும் என்பது குறித்து சிறிது சிந்தித்துப் பார்ப்பதுடன், ஒருவர் மற்றவருக்காக செபிக்கும் அருளை இறைவனிடம் வேண்டுவோம் என தன் டுவிட்டர் குறுஞ்செய்தியில் எழுதியுள்ளார் திருத்தந்தை.
2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முன்னாள் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் இதுவரை 5,500க்கும் மேற்பட்ட ஆங்கிலக் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தை இதுவரை ஏறக்குறைய 1 கோடியே 85 இலட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர்.
உடல், ஆன்ம நலத்தை வழங்கும் வேளாங்கண்ணி திருத்தலம்
உடல், ஆன்ம நலத்தை வழங்கும் வேளாங்கண்ணி திருத்தலம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
தமிழகத்தின் வேளாங்கண்ணியில் செப்டம்பர் 8ஆம் தேதி சிறப்பிக்கப்படவிருக்கும் ஆரோக்கிய அன்னை திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர் ஆயர் சகாயராஜ் தம்புராஜ் அவர்களுக்கு செய்தி ஒன்றை அனுப்பியுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.
வேளாங்கண்ணியின் ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 16ஆம் நூற்றாண்டு முதல் சிறப்பிக்கப்படும் இந்த பக்தி கொண்டாட்டங்கள், அன்னை மரியா ஏழை மற்றும் நோயுற்ற சிறாரை நேரடியாக சந்தித்ததை பறைசாற்றி நிற்கின்றன எனக்கூறும் இந்த செய்தி, இயேசு நமக்கு அன்னையாகத் தந்த மரியாவின் நெருக்கமும் கனிவும் இந்த சந்திப்புகளில் வெளிப்பட்டதை நாம் அறிகிறோம் எனவும் தெரிவிக்கிறது.
லூர்து நகரில் தன்னை வெளிப்படுத்திய அன்னை மரியா வேளாங்கண்ணியிலும் ஆரோக்கிய அன்னையாக வெளிப்படுத்தியதை கௌரவிக்கும் விதமாக, 2002ஆம் ஆண்டு உலக நோயாளர் தினத்தை வேளாங்கண்ணியில் சிறப்பிக்க புனித திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்கள் தீர்மானித்ததையும் இந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறை.
உடல் நலத்தை மட்டுமல்ல, ஆன்ம நலத்தையும் மரியன்னை திருத்தலங்களில் பெறுகிறோம், ஏனெனில் அன்னை மரியாவின் திரு உருவம் குறித்து தியானிக்கும்போது, நம் கவலைகளை அகற்றி நமக்கு அமைதியைத் தரும் இயேசுவின் அன்பை கண்டுகொள்கிறோம் எனவும் அச்செய்தி மேலும் கூறுகிறது.
அன்னை மரியாவின் கையிலிருந்த குழந்தைக்கு ஏழை சிறுவன் தன் கையில் வைத்திருந்த பசும்பாலை வழங்கியது, நாமும் ஏழைகள் மீது அக்கறையுடன் செயல்படவேண்டும் என்பதை குறித்து நிற்கிறது என உரைக்கும் இச்செய்தி, கடல் புயலிலிருந்து காப்பாற்றப்பட்ட போர்த்துக்கீசிய மாலுமிகள் வேளாங்கண்ணியில் ஒரு கோவிலைக் கட்டியதும், வேளாங்கண்ணி திருத்தலக்கோவில் 2004 சுனாமியிலும் சேதமடையாமல் இருந்ததையும் சுட்டிக்காட்டுகிறது.
விசுவாசத்துடன் வேளாங்கண்ணி திருத்தலத்திற்கு வரும் திருப்பயணிகள் பெறும் ஆன்மீகக் கொடைகள் குறித்தும், கிறிஸ்தவர்கள் அல்லாத வேறு மதத் திருப்பயணிகளும் பயன்பெற்றுவருகிறார்கள் என்பதையும் குறிப்பிடும் இச்செய்தி, தூய ஆவியாரின் அருள் இங்கு செயல்படுவதைக் காணமுடிகிறது எனவும், கத்தோலிக்க திருஅவையின் அருளடையாளங்களை பெறமுடியாதவர்களுக்கு இயேசுவின் தாயாம் அன்னை மரியாவின் ஆறுதல் மறுக்கப்படுவதில்லை என்பதற்கு சான்றாக இவ்விடம் உள்ளது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விசுவாசத்தின் திருத்தலமாகிய வேளாங்கண்ணியின் அழகை திருத்தந்தையோடு இணைந்து தானும் நினைவுகூர்வதாகவும், திருத்தந்தை இத்திருத்தலம் குறித்து கொண்டிருக்கும் மதிப்புடன் கூடிய பாராட்டை தன் வழியாக தெரிவிக்க கேட்டுக்கொண்டதாகவும், அவரின் தந்தைக்குரிய ஆசீரை அனைத்து திருப்பயணிகளுக்கும் வழங்குவதாகவும் அச்செய்தியில் மேலும் கூறியுள்ளார் விசுவாசக்கோட்பாடுகளுக்கான திருப்பீடத்துறையின் தலைவர், கர்தினால் Víctor Manuel Fernandez.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
கேரளா நிலச்சரிவு மீட்புக்காக ஒன்றுபட்டுள்ள மதம் மற்றும் சமூகக் குழுக்கள்!
கேரளா நிலச்சரிவு மீட்புக்காக ஒன்றுபட்டுள்ள மதம் மற்றும் சமூகக் குழுக்கள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கிளரேஷியன் சபையின் அருள்பணியாளர் ஜார்ஜ் கண்ணந்தானம் தலைமையிலான வயநாடு நிவாரணக் குழு உடனடித் தற்காலிகக் குடும்ப தங்குமிடங்களை வழங்குவதையும் இறுதியில் நிரந்தர வீடுகளைக் கட்டிக்கொடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுப் பணியாற்றுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன
மேலும் இக்குழுவினர் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகள், நிவாரண முகாம்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களின் அவசரத் தேவைகளைக் கண்டறிய விரைவான ஆய்வறிக்கையை மேற்கொண்டுள்ளனர் என்றும் தெரிவிக்கிறது அச்செய்திக் குறிப்பு.
இக்குழுவினரின் ஆய்வறிக்கையைத் தொடர்ந்து, மாவட்டத்தின் முக்கிய நகரமான கல்பெட்டாவில் உள்ள புனித வின்சென்ட் தெ பால் ஃபோரேன் கோவிலில், நிலைமையை ஆய்வு செய்ய, அப்பங்குதளத்தின் பங்குத்தந்தை அருள்பணியாளர் மேத்யூ பெரியபுரம் தலைமையில் ஒருங்கிணைக்கப்பட்ட குழு கூடியதாகவும் அச்செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
மானந்தவாடி சீரோ மலபார் மறைமாவட்டம், பெங்களூரு இலத்தீன் மறைமாவட்டம், கோழிக்கோடு மறைமாவட்டம் உள்ளிட்ட பல்வேறு துறவு சபைகளைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும் உரைக்கிறது அச்செய்திக் குறிப்பு.
இக்குழுவினர் மாவட்ட ஆட்சியர் டி.ஆர்.மேகஸ்ரீயிடம் தங்களின் முன்மொழியப்பட்ட திட்டங்களை விளக்கி, பாதிக்கப்பட்டவர்களுக்கு விரிவான வசதிகளுடன் கூடிய சிறப்புநிலை கொண்ட நகரத்தை உருவாக்குவதற்கான அரசின் முயற்சிக்கு முழு ஆதரவையும் வழங்க உறுதியளித்தனர் எனவும் சுட்டிக்காட்டுகிறது அச்செய்தி.
ஜூலை 30, செவ்வாயன்று, வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் பலர் காயமடைந்தனர். தற்போது 2,000-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
மணிப்பூர் மக்களுக்குப் பணத்தைவிட அமைதிதான் தேவைப்படுகிறது!
மணிப்பூர் மக்களுக்குப் பணத்தைவிட அமைதிதான் தேவைப்படுகிறது!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள் கட்டுவதற்குப் பணத்தை வழங்குவதற்குப் பதிலாக அமைதியை மீட்டெடுக்குமாறு அழைப்புவிடுத்துள்ளனர் அதன் பூர்வகுடி கிறிஸ்தவர்களின் தலைவர்கள் என உரைக்கிறது யூகான் செய்தி நிறுவனம்.
ஆகஸ்ட் 5, இத்திங்களன்று, மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள் கட்ட ரூ. 1,00,000 விநியோகம் செய்வதற்கான முடிவைப் பற்றி அம்மாநிலத்தின் முதல்வர் என். பிரேன் சிங், சட்டசபையில் தெரிவித்த வேளை, இத்தகையதொரு அழைப்பை விடுத்துள்ளனர் பூர்வகுடி கிறிஸ்தவர்களின் தலைவர்கள் என மேலும் கூறுகிறது அச்செய்திக் குறிப்பு.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே 3-ஆம் தேதி தொடங்கிய இந்த வன்முறையில், 18,370-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களில் 14,800-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்றும் மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் மாநில சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
ஆகஸ்ட் 6, இச்செவ்வாயன்று இதுகுறித்து யூகான் செய்தி நிறுவனத்திடம் பேசிய பாதுகாப்பு காரணங்களுக்காகப் பெயர் குறிப்பிட விரும்பாத தலத்திருஅவை தலைவர் ஒருவர், மணிப்பூரில் அமைதி மீட்டெடுக்கப்படாவிட்டால், அத்தகைய அறிவிப்பு எதுவும் பயனளிக்காது என்று எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்தக் கலவரத்தால் இடம்பெயர்ந்து சென்றுள்ள மக்கள் அனைவரும், மீண்டும் தங்கள் கிராமங்களுக்குத் திரும்பி மனித மாண்புடன் வாழ்வதற்குத் தங்களுக்கு ஒரு வீடு வேண்டும் என கோரிக்கை வைப்பதாகவும், ஆகவே, அவர்கள் இல்லங்களுக்குத் திரும்புவதற்கான சூழலை அரசு உருவாக்க வேண்டும் என்றும் அச்செய்தி நிறுவனத்திடம் மேலும் தெரிவித்துள்ளார் அவர்.
வீடுகள் கட்டித்தருவதற்கான பணத்தை முதல்வர் சட்டசபையில் அறிவித்தார், ஆனாலும், மாநிலத்தில் அமைதி நிலவாவிட்டால் இத்தகையதொரு அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை என்று பூர்வகுடி கிறிஸ்தவத் தலைவர் ஒருவரும் அச்செய்தி நிறுவனத்திடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
மணிப்பூரில் உள்ள பெரும்பான்மையான மெய்தி இந்து சமூகத்திற்குப் பூர்வகுடி அந்தஸ்து வழங்குவதில் ஏற்பட்ட 15 மாத கால மோதலில் 226-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 60,000-க்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்து சென்றனர். அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள் என்பது மிகவும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
-
Kerala priest’s kidney donation inspires 15 priests to follow suit 15 priests, including a bishop and a nun, have donated their ki...
-
Sri Lankan president praises Asian bishops for service to poor The meeting occurred during the Federation of Asian Bishops’ Confer...