Wednesday 6 December 2023

எது முக்கியமோ அதை நோக்கி திரும்ப அழைப்பு

 

எது முக்கியமோ அதை நோக்கி திரும்ப அழைப்பு



திருத்தந்தை : எது மேலோட்டமானதோ, புனிதத்துவத்தின் பாதையில் எது தடையாக இருக்குமோ, அவைகளை விலக்கி, எது முக்கியமோ அதை நோக்கி நாம் திரும்ப வேண்டும்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

நம் வாழ்வில் எது முக்கியமோ அதை நோக்கி திரும்ப நாம் அழைக்கப்பட்டிருக்கிறோம் என டிசம்பர் 5ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்ட டுவிட்டர் செய்தியில் விண்ணப்பித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கடவுள் மனிதர் நிலைக்கு இறங்கிவந்தபோது, அவர் ஏழ்மையை தேர்ந்துகொண்டார் என தன் டுவிட்டர் செய்தியை துவக்கியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நம் வாழ்வில் எது மேலோட்டமானதோ, புனிதத்துவத்தின் பாதையில் எது தடையாக இருக்குமோ, அவைகளை விலக்கி, எது முக்கியமோ அதை நோக்கித் திரும்பவேண்டும் என நாம் ஒவ்வொருவரும் அழைக்கப்பட்டிருக்கிறோம் என மேலும் உரைத்துள்ளார்.

2012ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை 16ஆம் பெனடிக்ட் அவர்களால் துவக்கப்பட்ட திருத்தந்தையரின் டுவிட்டர் பக்கத்தில் ஏறக்குறைய ஒவ்வொரு நாளும் அரபு உட்பட ஒன்பது மொழிகளில் டுவிட்டர் செய்திகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

டிசம்பர் 5ஆம் தேதி வரை ஆங்கிலத்தில் மட்டும் 5175 டுவிட்டர் குறுஞ்செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. இது வரை 1 கோடியே 86 இலட்சம் பேர் இக்குறுஞ்செய்திகளை பார்வையிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

  G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ் இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்த...