Monday, 11 December 2023

வத்திக்கான் வளாகத்தில் 100 கிறிஸ்துபிறப்பு குடில்கள் கண்காட்சி

 

வத்திக்கான் வளாகத்தில் 100 கிறிஸ்துபிறப்பு குடில்கள் கண்காட்சி



டிசம்பர் 8 ஆரம்பமான இக்கண்காட்சியானது 2024ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது

மெரினா ராஜ் – வத்திக்கான்

கிறிஸ்து பிறப்பு காட்சியை வெளிப்படுத்தும் குடில்கள் அடிப்படையான அழகு என்றும், ஆற்றல் மிக்க, சக்திவாய்ந்த காட்சியாக, மனித குலத்திற்கு நம்பிக்கையையும், எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப, நிகழ்காலத்தை நாம் கருத்தில் கொள்ளவும் அழைப்புவிடுக்கின்றன என்றும் கூறினார் பேராயர் ரீனோ ஃபிசிகெல்லா.

டிசம்பர் 8 வெள்ளிக்கிழமை உரோம் உள்ளூர் நேரம் மாலை 4 மணியளவில் வத்திக்கான் தூய பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் 100 குடில்கள் கண்காட்சியை திறந்து வைத்த போது இவ்வாறு கூறினார் புதிய வழிகளில் நற்செய்தி அறிவித்தலை ஊக்குவிக்கும் திருப்பீடத்துறையின் தலைவர், பேராயர் ரீனோ ஃபிசிகெல்லா

வத்திக்கான் வளாகத்தில் இடதுபுறத்தூண்கள் பகுதியில் வைக்கப்பட்டிருக்கும் இக்குடில்கள் உக்ரைன் முதல் தைவான் வரை, அமெரிக்கா முதல் பிலிப்பீன்ஸ் வரை, இரஷ்யா முதல் வெனிசுலா வரை என ஏறக்குறைய 22 நாடுகளின் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் 120 க்கும் மேற்பட்ட குடில்கள் காட்சிக்காக வைக்கப்பட்டுள்ளன.

டிசம்பர் 8 ஆரம்பமான இக்கண்காட்சியானது 2024ஆம் ஆண்டு ஜனவரி 7ஆம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காக நடைபெற உள்ளது. அனுமதிச்சீட்டு ஏதுமின்றி திறக்கப்பட்டுள்ள இலவசகக் கிறிஸ்து பிறப்பு குடில் கண்காட்சியானது ஒவ்வொரு நாளும் காலை 10.00 மணிமுதல் மாலை 7.30 மணிவரைதிருப்பயணிகள் பார்வையிடும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த ஒரு நிகழ்வை தங்களது திறமை, நம்பிக்கை, அறிவாற்றல் கொண்டு வண்ணங்கள் மற்றும் படைபாற்றல் துணையுடன் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள குடில்களாக உருவாக்கிய கலைஞர்களுக்குத் தன் பாராட்டுக்களைத் தெரிவித்தார் பேராயர் ஃபிசிகெல்லா .

கிறிஸ்து பிறப்பு என்பது மக்களை உள்ளடக்கியது, கிறிஸ்து பிறப்பு குடில் உலகளாவிய அமைதியின் சின்னம் என்றும் எடுத்துரைத்த பேராயர் ஃபிசிகெல்லா அவர்கள், ஆற்றல் மிக்க சக்திவாய்ந்த காட்சியாக மனித குலத்திற்கு நம்பிக்கையையும், எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப நிகழ்காலத்தைக் கருத்தில்  கொள்ளவும் இக்குடில்கள் நமக்கு அழைப்புவிடுக்கின்றன என்றும் கூறினார்.

No comments:

Post a Comment