Thursday, 21 December 2023

எளிய உள்ளமுடன் குழந்தை இயேசுவை வரவேற்கத் தயாராகுங்கள்!

 

எளிய உள்ளமுடன் குழந்தை இயேசுவை வரவேற்கத் தயாராகுங்கள்!



தற்போது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தியை 9 மொழிகளில் நான்கு கோடி பேருக்கும் மேலாகப் பின்தொடர்வதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவிக்கிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

திருவருகைக் காலத்தின் இந்த இறுதி நாள்களில், குழந்தை இயேசுவை மகிழ்ச்சியுடனும், இதயத்தில் எளிமையுடனும் வரவேற்கத் தயாராக இருக்குமாறு அழைப்பு விடுத்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

டிசம்பர் 20, இப்புதனன்று, வெளியிட்டுள்ள தனது குறுஞ்செய்தி ஒன்றில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், எளிமையுடன் குழந்தை இயேசுவை வரவேற்கும் அதேவேளையில், இறைவேண்டல், திருச்சடங்குகள் மற்றும் பிறரன்புப் பணிகளில் பங்கேற்பதன் வழியாகவும் குழந்தை இயேசுவை உங்கள் உள்ளங்களில் வரவேற்றிடுங்கள் என்றும் உரைத்துள்ளார்.

தற்போது, ​​திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுட்விட்டர் செய்தியை 9 மொழிகளில் நான்கு கோடி பேருக்கும் மேலாகப் பின்தொடர்வதாகத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவிக்கிறது.

ஒவ்வொரு நாளும், தனது டுவிட்டர் செய்திகள் வழியாக, திருத்தந்தை மக்களுடன் மிகவும் நெருக்கமாக இருக்கின்றார் என்றும், சமூக ஊடகங்களில் கூட, சில வேளைகளில் அவர் ஆன்மிகச் சிந்தனையை வழங்குகிறார், அன்றைய புனிதர்களை நினைவு கூர்கிறார், சில வேளைகளில் தன்னைப் பின்பற்றுபவர்களுடன் பெரிதாக நடக்கும் நிகழ்வுகளைப் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொள்கிறார் என்றும் கூறும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம், இது அனைத்துலகச் சமூகத்திற்கு பொருத்தமானதாக உள்ளது என்றும்,  கடந்த சில ஆண்டுகளாக டுவிட்டரில் திருத்தந்தையின் வார்த்தைகள் மீதான ஆர்வம் மக்களிடம் குறையவே இல்லை என்றும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...