Monday, 14 July 2014

இலங்கைக்குள் அனுமதிக்கும்படி மீண்டும் வேண்டுகோள் விடுத்த ஐ.நா விசாரணை அதிகாரி

இலங்கைக்குள் அனுமதிக்கும்படி மீண்டும் வேண்டுகோள் விடுத்த ஐ.நா விசாரணை அதிகாரி

 chiristof heins 652

சட்டத்துக்கு விரோதமான, தன்னிச்சையான மரணதண்டனை விவகாரங்கள் தொடர்பான ஐ.நாவின் விசேட அதிகாரி கிறிஸ்டோவ் ஹெய்ன்ஸ் இலங்கைக்கு வருவதற்கு தம்மை அனுமதிக்கும்படி இலங்கை அரசை மீண்டும் கோரியிருக்கிறார். கடந்த வருடமும் இத்தகைய கோரிக்கை ஒன்றை அவர் இலங்கையிடம் முன் வைத்திருந்தாராயினும் அது பலன் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை உட்பட சில நாடுகளுக்கு நேரில் விஜயம் செய்வதற்கு தமக்கு அனுமதி தருமாறு கோரி தாம் விடுத்துள்ள வேண்டுகோளை சாதகமாகப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்குமாறு அந்த நாடுகளின் அரசுகளைத் தாம் ஊக்கப்படுத்தி வருகின்றார் என்றும் அவர் கூறினார்.
இலங்கையில் அண்மையில் இடம்பெற்ற அளுத்கம வன்முறைச் சம்பவங்களின் சூத்திரதாரிகளை சட்டத்தின் முன் விரைந்து நிறுத்துவதற்கும் அதன் மூலம் நீதியை நிலை நாட்டுவதற்கும் நடவடிக்கை எடுக்குமாறும் வன்முறைக்கு இலக்காகமல் மக்களைப் பாதுகாப்பதற்கு பலமான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் இலங்கை அரசை அவர் வெளிப்படையாக வற்புறுத்திக் கோரியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இத்தகைய சம்பவங்களில் பொறுப்புக் கூறலை நிலை நிறுத்துவதில் காட்டப்படும் உறுதியே, சிறுபான்மையினர் மீதான இத்தகைய தாக்குதல்களைத் தடுக்கவும் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் சரியான உபாயமாகும். என்றும் அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...