Friday, 15 November 2024

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

 

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை



வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூலகத்தையும் விரிவுபடுத்துவதற்கான ஆணையை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்டுள்ள வேளை, திருஅவையின் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதற்கும், அவற்றை உலகப் பண்பாட்டுச் சமூகத்துக்கு அணுகுவதற்குமான அர்ப்பணிப்பை இது மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

வத்திக்கான் ஆவணக் காப்பகங்கள் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்துவதற்குத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார் என்றும், இது சொத்துக்களின் மேலாண்மை மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் நிறுவனங்களின் கலாச்சாரப் பணியை ஆதரிக்க கூடுதல் இடத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாண்டு அக்டோபர் 29, அன்று கையெழுத்திட்ட ஆவணத்தில், திருஅவையின் ஆளுகைக்கு மையமான பதிவுகளைப் பாதுகாப்பதற்கும், கலாச்சார வளர்ச்சி மற்றும் அறிவைப் பரப்புவதற்கும் வத்திக்கானின் நீண்டகால உறுதிப்பாட்டை திருத்தந்தை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

திருஅவையின் பங்கு மற்றும் பரிணாமத்தை விவரிக்கும் மதிப்புமிக்க ஆவணங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு வத்திக்கான் ஆவணக் காப்பகம் மற்றும் நூலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்று இவ்வாணையில் குறிப்பிட்டுள்ளார் திருத்தந்தை.

இந்தப் பாதுகாப்பு முயற்சி, உரோமைப் பேராலயத்தின் பழங்கால ஏட்டுப்பேழைக்கு  முந்தையது என்று இவ்வாணையில் கூறியுள்ள திருத்தந்தை, இப்போது காப்பகம் மற்றும் நூலகத்திற்கு இந்தத் தகவலை அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான கூடுதல் நடவடிக்கைகளை எடுக்கவும் அழைப்பு விடுத்துள்ளார்.

ஆணையின் ஒரு பகுதியாக, புனித யோவான் இலாத்தரன் பேராலயத்தின் எல்லைக்கு அப்பாற்பட்ட பகுதியில் அமைந்துள்ள உரோமை பாப்பிறை அருள்பணியாளர் உயர் பயிற்சியகக் கட்டிடத்தின் சில பகுதிகளை மறு ஒதுக்கீடு செய்வதன் வழியாக காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவ்வாணையில் அதிகாரம் வழங்கியுள்ளார்.


No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...