திருத்தந்தையின் யூபிலி 2025க்கான நூல் வெளியீடு
பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமையால் வெளியேறும் மக்கள் குறித்து திருத்தந்தை மிகுந்த கவலை
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
நவம்பர் 19, செவ்வாய்க்கிழமையன்று, "நம்பிக்கை ஒருபோதும் ஏமாற்றாது. மேலும் சிறந்த உலகை நோக்கி திருப்பயணிகள்" என்ற தலைப்பில் யூபிலி 2025க்கான நூல் ஒன்றை வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
முதலில் இத்தாலி, இஸ்பெயின் மற்றும் தென் அமெரிக்காவில் வெளியிடப்படும் இந்நூல் விரைவில் ஏனைய பகுதிகளிலும், ஏனைய மொழிகளிலும் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூபிலிக்கான புத்தகம் என வெளியிடப்படும் இதில் காசாவின் இனப்படுகொலை, பாலஸ்தீனாவின் பசிக்கொடுமைகளுக்கு காரணமான போர், மனித மண்பு மதிக்கப்படல் என பல இன்றைய நிலைகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
காசாவில் இடம்பெறும் மனிதாபிமான நெருக்கடிகளைக் குறித்து முழு விசாரணைகள் இடம்பெறவேண்டும் என அழைப்புவிடுக்கும் திருத்தந்தையின் நூல், மத்திய கிழக்கு அகதிகளை வரவேற்கும் நாடுகளுக்கு, குறிப்பாக ஜோர்டன், இலபனோன் போன்றவைகளுக்கு அவரின் நன்றியையும் வெளியிடுகிறது.
பாலஸ்தீனிய பகுதிக்கு உணவு உதவிகளை எடுத்துச் செல்ல முடியாத நிலையில் அங்கிருந்து பசிக்கொடுமையால் வெளியேறும் மக்கள் குறித்து திருத்தந்தை அவர்கள் மிகுந்த கவலை கொண்டுள்ளதாகவும் மேலும் அந்நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருத்தந்தையின் இந்நூல் குறித்த வல்லுனர்களின் கருத்துப்படி, காசாவில் இடம்பெறுவது இனப்படுகொலைகள் என்ற வரம்புக்குள் வருவதாக திருத்தந்தை எண்ணுவதாகவும், இக்கொலைகள் குறித்து ஆழமான விசாரணைகள் இடம்பெற்று இவைகள் இனப்படுகொலைகளா என்பது குறித்து தீர்மானிக்க வேண்டும் என விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment