பெங்களூருவில் பசியால் வாடுவோருக்கு உதவும் ரொட்டி மையம்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்
கத்தோலிக்கக் கருணை நடவடிக்கைகளின் பாரம்பரியத் தொடர்ச்சியாக இந்தியாவின் பெங்களூரு நகரில் பசியால் வாடுவோர் மற்றும் வீடற்றோருக்கு ரொட்டி மையம் ஒன்றை நடத்தி வருகிறது பிரான்சிஸ்கன் துறவு சபை.
புனித அந்தோனியார் சேவா நிலையா அல்லது புனித அந்தோனியார் ரொட்டி மையம் என அழைக்கப்படும் இந்த சேவை மையத்தின் வழியாக, அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் கருணைப் பணிகளை உயிர்துடிப்புடன் தொடர்ந்து ஆற்றுவதாக உரைத்தனர் OFM பிரான்சிஸ்கன் துறவுசபையினர்.
பிரான்சிஸ்கன் துறவி, அருள்பணி Trevor D’Souza அவர்களால் 2003ஆம் ஆண்டு ஏழைகளுக்கான சேவை மையமாகத் துவக்கப்பட்ட இந்த பணித்தளம், ஏழைகளின் முகத்தில் இயேசுவைக் காணும் நோக்கத்தில் செயல்பட்டு கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் ஒவ்வொரு நாளும் 750 பேருக்கு உணவு வழங்கி சேவையாற்றியுள்ளது.
வேறு மாநிலங்களில் இருந்து குடியேறி பணியாற்றும் ஏழைத் தொழிலாளிகள், மருத்துவமனைகளில் இருக்கும் நோயாளிகளின் உறவினர்கள் என, உதவித் தேவைப்படும் அனைத்து ஏழைகளுக்கும் சுயவிருப்பப் பணியாளர்கள் வழி தன் செவையைத் தொடர்ந்து வருகிறது புனித அந்தோனியார் ரொட்டி மையம்.
பெங்களூருவில் உள்ள இந்த மையத்தில் பணியாற்றும் சுயவிருப்பப் பணியாளர்கள் எவ்வித ஊதியமும் இன்றி தாங்களே முன்வந்து சேவையாற்றும் அதேவேளையில், தனியார்கள் மற்றும் நிறுவனங்கள் வழங்கும் தாராளக் கொடைகளின் வழி இது இயக்கப்படுகிறது.
No comments:
Post a Comment