Saturday, 8 January 2022

மூன்று ஞானிகளின் பாதையில் கிறிஸ்தவ வாழ்வு

 

துணிந்து இறைவனை தேடிச் செல்வது, தாழ்மையுடன் அவரை ஏற்பது, புதிய பாதைகளைக் கைக்கொள்ள அஞ்சாதிருப்பது என்பவை, மூன்று ஞானிகள் தரும் பாடம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஜனவரி 6ம் தேதி வத்திக்கானில் சிறப்பிக்கப்பட்ட, திருக்காட்சிப் பெருவிழாவையொட்டி, ஆறு டுவிட்டர் செய்திகளை வெளியிட்டுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உலகின் இறுதி எல்லைவரைக்கும் தூய ஆவியின் வல்லமையின் துணையுடன், சாட்சியாகவும், இறைவாக்குரைப்பவராகவும், மறைபரப்புப் பணியாளராகவும் செயல்பட, திருமுழுக்கின்வழி நாம் பெற்ற அருளைச் செயல்படுத்துகிறோமா என தன் முதல் டுவிட்டரில் அழைப்புவிடுத்திருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் ஏனைய 5 டுவிட்டர் செய்திகளில், விண்மீனைக் கண்டு இறைவனைத் தேடிச் சென்ற மூன்று ஞானிகளின் பயணம் நமக்குச் சொல்லித் தரும் பாடம் குறித்து விவரித்துள்ளார்.

விசுவாசத்துடன் துணிந்து இறைவனை தேடிச் செல்வது, இறைவனைக் குறித்த கேள்விகளை நமக்குள்ளேயே கேட்பது, நம் வழியில் அச்சுறுத்தல்களுக்கு அஞ்சாமல் முன்னோக்கிச் செல்வது, இறைவனைக் கண்டதும் தாழ்மையுடன் அவரை ஏற்பது, புதிய பாதைகளைக் கைக்கொள்ள அஞ்சாமல் இருப்பது என தன் டுவிட்டர் செய்திகளில் கூறியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

மேலும், இஸ்பெயின் நாட்டு கர்தினால் Francisco Alvarez Martinez அவர்களின் மரணம் குறித்து தன் ஆழ்ந்த அனுதாபங்களை வெளியிட்டு, அந்நாட்டு தலத்திருஅவைக்கு இரங்கல் செய்தி ஒன்றை அனுப்பியுள்ள திருத்தந்தை, இறைவனுக்கும் திருஅவைக்கும் அயராது உழைத்த நல்மேய்ப்பன் என அவரை பாராட்டியுள்ளதுடன், தன் செப உறுதியையும் வழங்கியுள்ளார்.

ஜனவரி மாதம் 5ம் தேதி, புதன்கிழமையன்று இடம்பெற்ற, 96 வயதான கர்தினால் Francisco Alvarez Martinez அவர்களின் மரணத்துடன், திருஅவையில் கர்தினால்களின் எண்ணிக்கை 214 ஆகவும், அதில் திருத்தந்தையை தேர்ந்தெடுக்கும் தகுதியுடைய, 80 வயதிற்குட்பட்ட கர்தினால்களின் எண்ணிக்கை 120 ஆகவும் உள்ளது.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...