Tuesday, 11 January 2022

திருத்தந்தையின் ஜனவரி-பிப்ரவரி திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள்

 


பிப்ரவரி மாதம் 27ம் தேதி, மத்தியதரைக்கடல் பகுதியின் ஆயர்கள், மற்றும் மேயர்களின் சந்திப்பையொட்டி, இத்தாலியின் Florence நகர் செல்கிறார் திருத்தந்தை பிரான்சிஸ்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் கலந்துகொள்ளும் திருவழிபாட்டுக் கொண்டாட்டங்கள் குறித்த விவரங்களை ஜனவரி 10, திங்களன்று வெளியிட்டது திருப்பீடம்.

ஜனவரி மாதம் 23ம் தேதி சிறப்பிக்கப்படும் இறைவார்த்தை ஞாயிறையொட்டி, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில், இத்தாலிய நேரம் காலை 9.30 மணிக்கு, அதாவது, இந்திய நேரம் பிற்பகல் 2 மணிக்கு திருப்பலி நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி மாதம் இடம்பெறும் கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வாரத்தின் இறுதி நாளான ஜனவரி 25ம் தேதி, அதாவது, புனித பவுலின் மனமாற்றத் திருவிழாவன்று, புனித பவுல் பெருங்கோவிலில் உள்ளூர் நேரம் மாலை 5.30 மணிக்கு திருவழிபாட்டை நிறைவேற்றுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இயேசுவை கோவிலில் காணிக்கையாக ஒப்புக்கொடுக்கப்பட்ட நாளும், அர்ப்பண வாழ்வின் 26வது உலக தினமுமாகிய பிப்ரவரி 2ம் தேதி மாலை 5.30 மணிக்கு, வத்திக்கான் புனித பேதுரு பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றும் திருத்தந்தை, அம்மாதம் 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமையன்று, மத்தியதரைக்கடல் பகுதியின் ஆயர்கள், மற்றும் மேயர்களின் சந்திப்பையொட்டி இத்தாலியின் Florence நகர் சென்று, காலை 10.30 மணிக்கு அந்நகரின் திருச்சிலுவை பெருங்கோவிலில் திருப்பலி நிறைவேற்றுவார்.


No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...