Friday, 18 March 2016

H1-B விசா மீண்டும் ஏற்கப்படும்: அமெரிக்கா அதிரடி அறிவிப்பு

H1-B விசா மீண்டும் ஏற்கப்படும்: அமெரிக்கா அதிரடி அறிவிப்புenjoy+students+600


வேலை மற்றும் உயர் கல்வி காரணமாக அமெரிக்காவுக்குச் செல்பவர்களுக்கு வழங்கப்படும் H1-B விசா மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவில், சிறப்பான பணி எனப்படும் குறிப்பிட்ட துறையில் ஆழமான அறிவும், அனுபவமும், திறமைகளும் தேவைப்படும் பணிகளை செய்ய உரிய படிப்பும், திறமையும், அனுபவமும் கொண்ட அமெரிக்கர்கள் கிடைக்காத நிலையில், நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து ஊழியர்களை வரவழைத்துக் கொள்ள வகை செய்யும் H1-B விசாவுக்கான சட்டம் 1990ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது.
இடையில் ஏற்பட்ட சில பிரச்னைகளை அடுத்து, மீண்டும் H1-B விசா மீண்டும் ஏற்றுக்கொள்ளப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இந்த நடைமுறை 2016 – 17 -ம் ஆண்டுமுதல் அமலுக்கு வரும். அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முதல் விசாகள் ஏற்றுக் கொள்ளப்படும். முதற்கட்டமாக 20 ஆயிரம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும். இதுவரை வருடத்துக்கு 65 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட்டன. முதல் 5 நாட்களிலே 65 ஆயிரத்துக்கு அதிகமான விண்ணப்பங்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் விண்ணப்பங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளது. இந்த விசா சயின்ஸ், என்ஜினியரிங், கம்பியூட்டர் சயின்ஸ் ஆகிய துறைகளில் இருப்பவர்களுக்கு வழங்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...