Saturday, 4 November 2023

புதிய யூபிலி செயலி, பதிவிறக்கம் செய்யப்பட தாயார் நிலையில் உள்ளது

 

புதிய யூபிலி செயலி, பதிவிறக்கம் செய்யப்பட தாயார் நிலையில் உள்ளது



இந்தப் புதிய செயலி, யூபிலி பற்றிய அனைத்து செய்திகளையும் வழங்கும், மேலும் பயனாளிகள் புனித ஆண்டிற்கான திருப்பயணி எனப் பதிவு செய்து இலவச திருப்பயணி அட்டையைப் பெற அனுமதிக்கும் : திருப்பீட நற்செய்தி அறிவிப்புத் துறை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

புனித யூபிலி ஆண்டின் நிகழ்வுகள் பற்றிய செய்திகள் மற்றும் பதிவுசெய்தல்களுக்காக ஆறு மொழிகளில் புதிய செயலி ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது திருப்பீட நற்செய்தி அறிவிப்புத் துறை.

2025-ஆம புனித யூபிலி ஆண்டிற்கான "Iubilaeum25" எனப்படும் அதிகாரப்பூர்வ அலைபேசி பயன்பாடு, பதிவிறக்கம் செய்யப்பட தயார் நிலையில் இருப்பதாகக் கூறியுள்ள திருப்பீட நற்செய்தி அறிவிப்புத் துறை, யூபிலி நிகழ்வுகளுக்குப் பதிவு செய்வதை எளிதாக்கும் செயலி, iOSக்கான App Store-லிருந்தும் Android க்கான Play Store-லிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.

இந்தப் புதிய செயலி, யூபிலி பற்றிய அனைத்து செய்திகளையும் வழங்கும் என்றும், மேலும் பயனாளிகள் புனித ஆண்டிற்கான திருப்பயணி எனப்  பதிவு செய்து இலவச திருப்பயணி அட்டையைப் பெற அனுமதிக்கும் என்றும் மேலும் தெரிவித்துள்ளது நற்செய்தி அறிவிப்புத் துறை.

portal-லில் ஒருமுறை பதிவு செய்துவிட்டால், பின்னர் பயனாளிகள் யூபிலி நிகழ்வுகள் மற்றும் புனித கதவுகளுக்கான திருப்பயணத்திற்கும் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும், மேலும் இது எளிமையான வழியில் திருப்பயணிகள் தாங்கள் விரும்பும் நிகழ்வுகளை பதிவு செய்துகொள்ளவும், அவர்களின் தனிப்பட்ட பகுதியை விரைவாக அணுகவும், புனித கதவிற்குள் நுழைவதற்கான தனித்துவமான QR குறியீட்டைப் பெறவும் அனுமதிக்கிறது என்றும் கூறியுள்ளது அத்துறை.

2025-ஆம் ஆண்டு திருஅவையில் சிறப்பிக்கப்படவிருக்கும் யூபிலி ஆண்டுக்குத் தயாரிக்கும் பொறுப்புக்களை, புதியவழி நற்செய்தி அறிவிப்புப்பணியை ஊக்குவிக்கும் திருப்பீடத் துறையிடம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் ஒப்படைத்துள்ளார் என்பது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...