Saturday, 4 November 2023

டிசம்பர் மாதத் துவக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் திருத்தந்தை

 

டிசம்பர் மாதத் துவக்கத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் திருத்தந்தை



கால நிலை மாற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கில் பங்குகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்வது, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது திருப்பயணம்.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

 

COP28, அதாவது காலநிலை மாற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கில் பங்கேற்கும் நோக்கத்தில் டிசம்பர் மாதம் முதல் தேதி முதல் 3ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்திற்குச் செல்ல உள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

நவம்பர் மாதம் முதல் தேதி இத்தாலிய தொலைக்காட்சி RAI என்பதற்கு வழங்கிய நேர்முகத்தில் இதனை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்திருக்க, அது குறித்து விளக்கிய திருப்பீடத்தின் தகவல் தொடர்பாளர் மத்தேயோ புரூனி அவர்கள், டிசம்பர் மாதம் 1 முதல் 3 வரை திருத்தந்தையின் திருத்தூதுப் பயணம் இடம்பெறும் என அறிவித்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைவர் Sheikh Mohammed bin Zayed Al Nahyan அவர்களின் அழைப்பின்பேரில் திருத்தந்நையின் திருப்பயணம் துபாய் நகருக்கென இடம்பெறுவதாகவும், இது ஐ.நா.வின் காலநிலை மாற்றம் குறித்த கட்டமைப்பை உருவாக்க உள்ள கருத்தரங்கோடு தொடர்புடையதாக இருக்கும் எனவும் கூறினார் புரூனி.

கால நிலை மாற்றம் குறித்த ஐ.நா. கருத்தரங்கில் பங்குகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் செல்ல உள்ளது, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு அவர் மேற்கொள்ளும் இரண்டாவது திருப்பயணமாகும்.

ஏற்கனவே 2019ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகருக்குப் பயணம் மேற்கொண்டதுடன், அரபு வளைகுடாப் பகுதியில் திருப்பலி நிறைவேற்றிய முதல் திருத்தந்தையுமானார்.

காலநிலை குறித்த ஐ.நா.வின் COP28 கருத்தரங்கு துபாயில் நவம்பர் 30 முதல் டிசம்பர் 12ஆம் தேதி வரை இடம்பெறுகிறது.

 

No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...