Thursday, 5 October 2023

ஆயர் மாமன்றத்தின் பங்கேற்பாளர்களாக 5 அருள்சகோதரிகள்

 

ஆயர் மாமன்றத்தின் பங்கேற்பாளர்களாக 5 அருள்சகோதரிகள்



600,000 க்கும் மேற்பட்ட பெண் அருள்சகோதரிகளையும் 2,000 உறுப்பினர் சபைகளையும் கொண்ட பன்னாட்டு பெண் துறவற தலைவர்களுக்கான ஒன்றியத்திலிருந்து (UISG) 5 அருள்சகோதரிகள் முதல் முறை பங்கேற்க உள்ளனர்.

திமினா செலின் ராஜேந்திரன் - வத்திக்கான்

அக்டோபர் மாதம் 4ஆம் தேதி தொடங்கவுள்ள 16ஆவது உலக ஆயர்கள் மாமன்றமத்தில் துறவற தலைவர்களுக்கான ஒன்றியத்திலிருந்து (UISG)  5 அருள்சகோதரிகள் முதல் முறையாகப் பங்கேற்க உள்ளனர்.

600,000 க்கும் மேற்பட்ட பெண் அருள்சகோதரிகளையும் 2,000 உறுப்பினர் சபைகளையும் கொண்ட பன்னாட்டு பெண் துறவற தலைவர்களுக்கான ஒன்றியத்திலிருந்து (UISG) 5 அருள்சகோதரிகள் முதல் முறை பங்கேற்க உள்ளதாக அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

பங்கேற்கும் சகோதரிகள்

UISG தலைவரான விண்ணேற்பு அன்னை சபையை (OLA) சார்ந்த அருள்சகோதரி மேரி பரோன், நிர்வாக செயலரான லொரேத்தோ சபை (IBVM) அருள்சகோதரி பாட்ரிசியா முர்ரே, மேலும் இரக்கத்தின் சபை (RSM) அருள்சகோதரி  எலிசபெத் மேரி டேவிஸ், நாசரேத் திருக்குடும்ப சபை (Op.S.D.N.) அருள்சகோதரியான எலிசெ இசரிமனா, மற்றும்,கார்மேல் சபை (A.C.) அருள்சகோதரி மரியா நிர்மலினி ஆகியோர் பங்கேற்பாளர்களாகக் கலந்து கொள்ள உள்ளனர்.

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பங்கேற்கவும், அர்ப்பணிக்கவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் அழைப்புக்கு மகிழ்ச்சியுடன் பதிலளித்துள்ளதாகவும், துறவறம், குழும வாழ்க்கை, பகுத்தறிவு ஆகியவற்றின் அனுபவத்துடன், இந்த மாமன்றம் திருஅவையில் மாற்றத்தை அடைய உதவும் என்று உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளார் தலைவர் மேரி பரோன்.

ஆயர் மாமன்றத்தில் பங்கேற்பதன் வழியாக பல மக்களைத் தொடும் திருஅவை வாழ்க்கையின் முக்கியமான பகுதியை நம்பிக்கையுடன் அடையாளப்படுத்த முடியும் என்று உணர்வதாக தெரிவித்துள்ளார் அருள்சகோதரி மேரி பரோன்.


No comments:

Post a Comment

வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை

  வத்திக்கான் ஆவணக்காப்பகம் மற்றும் நூலகத்தை விரிவுபடுத்தினார் திருத்தந்தை வத்திக்கான் அப்போஸ்தலிக்க ஆவணக் காப்பகத்தையும், அப்போஸ்தலிக்க நூல...