Monday, 11 April 2022

ஏழு இறைஊழியர்களின் வீரத்துவப் புண்ணிய வாழ்வு ஏற்பு

 ஏழு இறைஊழியர்களின் வீரத்துவப் புண்ணிய வாழ்வு ஏற்பு



இத்தாலியின் Borettoவில் 1880ம் ஆண்டில் பிறந்த பொதுநிலை விசுவாசியான அருளாளர் Artemide Zatti அவர்கள், அர்ஜென்டீனா நாட்டில் 1951ம் ஆண்டில் புற்றுநோயால் உயிர்துறந்தார்

மேரி தெரேசா: வத்திக்கான்

தாயகத்தைவிட்டு மற்ற நாடுகளில் மறைப்பணியாற்றிய இரு ஆயர்கள் மற்றும், மூன்று பொதுநிலை விசுவாசிகள் உட்பட ஏழு இறைஊழியர்களின் வீரத்துவப் புண்ணிய வாழ்வு குறித்த விவரங்களை, புனிதர் நிலைக்கு உயர்த்தும் வழிமுறைகளை ஒருங்கிணைக்கும் பேராயத்தின் தலைவர் கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடம், ஏப்ரல் 09, இச்சனிக்கிழமையன்று சமர்ப்பித்தார்.

Artemide Zatti

இத்தாலியின் Borettoவில் 1880ம் ஆண்டில் பிறந்த பொதுநிலை விசுவாசியான அருளாளர் Artemide Zatti அவர்கள், அர்ஜென்டீனா நாட்டில் 1951ம் ஆண்டில் புற்றுநோயால் உயிர்துறந்தார். இவருக்கு 17 வயது நடந்தபோது, அவரது குடும்பம் அர்ஜென்டீனா நாட்டிற்குப் புலம்பெயர்ந்தது. சலேசிய சபையில் சேர்ந்த இவரால், உடல்நலம் காரணமாக அச்சபையில் தொடர்ந்து இருக்க இயலவில்லை. பின்னர் இவர், அர்ஜென்டீனாவின் Viedma மருத்துவமனையில், நோயாளர்களுக்கென்று தன் வாழ்வு முழுவதையும் அர்ப்பணித்து பணியாற்றினார். 2002ம் ஆண்டில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் அருளாளராக உயர்த்தப்பட்ட Artemide Zatti அவர்களது பரிந்துரையால், பக்கவாதத்தால் தாக்கப்பட்டிருந்த பிலிப்பீன்ஸ் நாட்டவர் ஒருவர் 2016ம் ஆண்டில் அற்புதமாய் குணமடைந்துள்ளார். Artemide Zatti அவர்கள், புனிதராக அறிவிக்கப்படும் வழிமுறைகள் துவக்கப்படுவதற்கு திருத்தந்தை இசைவு தெரிவித்துள்ளார்.

மறைசாட்சிகள், இறைஊழியர்கள்

மேலும், இத்தாலியின் Boves நகரில், 1943ம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி, Giuseppe Bernardi, Mario Ghibaudo ஆகிய இரு மறைமாவட்ட அருள்பணியாளர்கள் நாத்சி கொள்கையாளர்களால் மறைசாட்சிகளாக கொல்லப்பட்டனர்..

இஸ்பெயின் நாட்டில் 1899ம் ஆண்டில் பிறந்து, பெரு நாட்டின் லீமா நகரில் 1966ம் ஆண்டு இறைபதம் சேர்ந்த, இயேசு கிறிஸ்துவின் பாடுகள் துறவு சபையின் ஆயர் Martino Fulgenzio Elorza Legaristi; இத்தாலியின் ஓசிமோவில் 1889ம் ஆண்டில் பிறந்து, சாம்பியா நாட்டில் ஆயராகப் பணியாற்றி, அந்நாட்டில் 1983ம் ஆண்டில் இறைபதம் சேர்ந்த, பிரான்சிஸ்கன் சபையின் Francesco Costantino Mazzieri ஆகிய இரு மறைப்பணி ஆயர்களின் வீரத்துவப் புண்ணியப் பண்புகளை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.     

இஸ்பெயின், போலந்து, இத்தாலி ஆகிய மூன்று நாடுகளின் Aurora Calvo Hernández-Agero, Rosalia Celak, Maria Aristea Ceccarelli ஆகிய மூன்று பொதுநிலை விசுவாசிகள், இன்னும், இயேசுவின் திருஇதய சிறிய சகோதரிகள் சபையை ஆரம்பித்த பிரான்ஸ் நாட்டு Lucia Noiret, துன்புறும் பிரான்சிஸ்கன் சபை சகோதரிகள் சபையை ஆரம்பித்த போலந்து நாட்டு Casimira Gruszczyńska ஆகியோரின் வீரத்துவப் புண்ணியப் பண்புகளை திருத்தந்தை ஏற்றுக்கொண்டார்.

No comments:

Post a Comment

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...