Monday 7 September 2015

செய்திகள் - 07.09.15

செய்திகள் - 07.09.15

------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்தவர்களின் சித்ரவதைகளுக்குசக்திவாய்ந்த நாடுகளின் மௌனமும் காரணம்

2. திருத்தந்தை : இளையோரிடையே பிறன்பு பணி ஆர்வத்தைத் தூண்டுங்கள்

3. உள்ளத்தைத் திறக்க மறுப்பது பாவச் செயலாகும் - திருத்தந்தை

4. திருத்தந்தை புலம்பெயர்ந்த குடும்பங்களை ஏற்று வாழ்வளியுங்கள்

5. பங்களாதேஷ்இந்தியாநேபாளம் - கர்தினால் Filoni பயணம்

6. 'அனைத்துலக விசாரணைகோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை
------------------------------------------------------------------------------------------------------

1. கிறிஸ்தவர்களின் சித்ரவதைகளுக்குசக்திவாய்ந்த நாடுகளின் மௌனமும் காரணம்

செப்.07,2015. சக்திவாய்ந்த நாடுகள்தீமை கண்டும் மௌனம் காப்பதால்கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்படுவது இன்னும் தொடர்ந்து கொண்டிருப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் கவலையை வெளியிட்டார்.
தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்ல சிற்றாலயத்தில்இத்திங்கள் காலை திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய திருத்தந்தை, 'சாபத்என்ற ஓய்வு நாளின்போதுஇயேசு நிகழ்த்திய புதுமையால் கோபமுற்ற பரிசேயரும் மறைநூல் அறிஞரும்இயேசுவைக் கொல்லத் திட்டமிட்டது குறித்து விவரிக்கும் இந்நாளைய நற்செய்தி பற்றி தன் கருத்துக்களை வழங்கியபோதுஇன்றும் கிறிஸ்தவர்கள் சித்ரவதைப்படுத்தப்படுகின்றனர்கொல்லப்படுகின்றனர்தங்கள் சொந்த இடங்களைவிட்டு விரட்டப்படுகின்றனர் என்ற கவலையை வெளியிட்டார்.
மலைப் பொழிவின் இறுதியில்இயேசு மக்களை நோக்கி, 'உங்களை செபக்கூடங்களுக்கு இழுத்துச் செல்வார்கள்உங்களைக் கொடுமைப்படுத்துவார்கள்என்று கூறியதெல்லாம்கிறிஸ்தவர்களுக்கு நிகழ்பவையே என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்இத்தகைய நிலைகளைத் தடுக்கும் சக்தியுடைய பெரிய நாடுகள் அமைதி காப்பதாலேயேகொடுமைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன என்று கூறினார்.
லிபியா நாட்டு கடற்கரையில் கொல்லப்பட்ட எகிப்திய கிறிஸ்தவர்கள் குறித்தும்அர்மேனியாவில் கொல்லப்பட்டமற்றும்அங்கிருந்து விரட்டப்பட்ட கிறிஸ்தவர்கள் குறித்தும் தன் மறையுரையில் சிறப்பான விதத்தில் நினைவுகூர்ந்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இத்திங்கள் காலையில், திருத்தந்தை நிறைவேற்றியக் கூட்டுத் திருப்பலியில்அர்மேனியாவின் சிலிசியா முதுபெரும் தந்தை இருபதாம் கிரகோரியோ பியெத்ரோ காப்ரோயான்கீழை வழிபாட்டுப் பேராயத்தின் தலைவர் கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை : இளையோரிடையே பிறன்பு பணி ஆர்வத்தைத் தூண்டுங்கள்

செப்.07,2015. அமைதியையும் நீதியையும் அன்புகூரும் போர்த்துக்கல் மக்களுக்குதலத்திருஅவைதன் செபத்திலும்பிறரன்பிலும் வேரூன்றிய சாட்சிய வாழ்வு மூலம் சேவையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்தார்திருத்தந்தை பிரான்சிஸ்.
ஆண்டிற்கு ஒருமுறை தலத்திருஅவை ஆயர்கள் உரோம் நகர் வரும் 'அத் லிமினா'சந்திப்பையொட்டி வந்திருந்த போர்த்துக்கல் ஆயர்களிடம் இவ்வாறு கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்இளையோரிடையே பிறரன்புப் பணிகளுக்கான ஆர்வத்தை தூண்டவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
ஒவ்வொரு பங்குதளத்திலும்மக்களிடையே மறைப்பணிக் கடமைகளை வலியுறுத்த வேண்டிய தேவையையும் போர்த்துக்கல் ஆயர்களிடம் முன்வைத்த திருத்தந்தைஇளையோர்கிறிஸ்தவ மறையை விட்டு ஒதுங்கியிருத்தல்மற்றும்ஒழுங்கற்ற குடும்ப நிலைகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
இன்றைய இளையோரின் நிலை குறித்தேதன் உரையில் அதிகம் அதிகமாக குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்இளையோரை வழி நடத்திதுணை நிற்க வேண்டிய திருஅவையின் கடமை குறித்தும் வலியுறுத்தினார்.
மேலும்இத்திங்களன்று தன் டுவிட்டர் பக்கத்தில், ' அனைத்துக் குடும்பங்களுக்காகவும்குறிப்பாக வேலைவாய்ப்பற்ற நிலைகளால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்காக அன்னைமரியிடம் வேண்டுவோம்’ என எழுதியுள்ளார்திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்வத்திக்கான் வானொலி

3. உள்ளத்தைத் திறக்க மறுப்பது பாவச் செயலாகும் - திருத்தந்தை

செப்.07,2015. செவி கேளாதவரும்பேச்சுத் திறனற்றவருமான ஒருவரை இயேசு குணப்படுத்திய புதுமை குறித்து இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் பேசியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,இப்புதுமையானதுஇயேசு எவ்விதம் நம்மோடு தொடர்பை உருவாக்குகிறார் என்பதன் அடையாளமாக உள்ளது என்று கூறினார்.
இஞ்ஞாயிறு நற்செய்தியில் கூறப்பட்டுள்ளகேட்கும் திறன் மற்றும் பேச்சுத் திறன் இரண்டும் அற்ற நபர்கடவுளில் விசுவாசமற்ற ஒருவரது பயணத்தின் அடையாளமாக இருப்பதாகவும்இயேசுவின் வார்த்தைகளைக் கேட்டுபுரிந்துகொள்ள முடியாதவராக அவர் இருந்ததைஅவரின் காதுகேளாமை உணர்த்துகிறது என்பதையும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
தன்னிடம் கொண்டுவரப்பட்ட நபரைகூட்டத்திலிருந்து இயேசு தனியே அழைத்துச் சென்றது,இறைவார்த்தைபிற இரைச்சல்கள் ஏதுமின்றிஅமைதியில் செவிமடுக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
இன்றைய உலகில் பிறருக்கு தங்கள் உள்ளங்களைத் திறக்க மறுக்கும் மனிதர்களால்குடும்பங்களால்,தம்பதியர்களால் ஏற்படும் விளைவுகளையும் சுட்டிக்காட்டிஅத்தகைய நிலைகள்பாவச் செயல்களாகும் என்றும்தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்தார் திருத்தந்தை.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை புலம்பெயர்ந்த குடும்பங்களை ஏற்று வாழ்வளியுங்கள்

செப்.07,2015. ஐரோப்பாவில் ஒவ்வொரு பங்குத்தளமும்துறவற இல்லமும்திருத்தலமும்,புலம்பெயர்ந்த ஒரு குடும்பத்தை ஏற்குமாறுஇஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையின் இறுதியில் கேட்டுக்கொண்டார்திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐரோப்பாவிலுள்ள என் சகோதர ஆயர்கள்இந்த எனது அழைப்புக்குச் செவிமடுக்க வேண்டுமெனக் கேட்கிறேன் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்எனது சொந்த மறைமாவட்டமான உரோம் தொடங்கிவத்திக்கானிலுள்ள இரு பங்குகளும் இந்தப் புலம்பெயர்ந்த குடும்பங்களை ஏற்பதற்கு தயாராகி வருகின்றன எனவும் உரைத்தார். அன்பின் இரண்டாவது பெயர் கருணை என்பதை நினைவில் கொண்டுஉண்மையான மேய்ப்பர்களாகஅவரவர் மறைமாவட்டங்களில் இந்தக் குடும்பங்கள் ஏற்கப்பட வழி செய்யுங்கள் என்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்இரக்கத்தின் சிறப்பு ஜூபிலி ஆண்டுக்குத் தயாரிப்பாகஇந்த இரக்கச் செயல்களைச் செய்யுங்கள் எனவும் விண்ணப்பித்தார்.
போர் மற்றும் பசிக்குப் பயந்துகடும் துன்பங்களை எதிர்கொண்டுவாழ்வில் நம்பிக்கையிழந்து வரும் பல்லாயிரக்கணக்கான புலம்பெயர்ந்த மக்களுக்கு உதவுவது நம் கடமை என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
கடந்த வார இறுதியில் அன்னை தெரேசாவின் நினைவு நாள் சிறப்பிக்கப்பட்டதையும் எடுத்துரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்அன்னை தெரேசா அவர்களின் செயல்கள் வழியாக இறைவனின் இரக்கமும்கருணையும் வெளிப்பட்டனமன உறுதியுடன் பாதுகாப்பான இறுதி நிலையை அடைவதை நோக்கிப் பயணம் மேற்கொள்பவர்களுக்கு இந்நம்பிக்கை உதவுகின்றது என்று மேலும் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. பங்களாதேஷ்இந்தியாநேபாளம் - கர்தினால் Filoni பயணம்

செப்.07,2015. இம்மாதம் 9ம் தேதி முதல்19ம் தேதி முடியபங்களாதேஷ்இந்தியா மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில்நற்செய்தி அறிவிப்புப்பணி திருப்பேராயத்தின் தலைவர்கர்தினால் Fernando Filoniஅவர்கள்ஒரு மேய்ப்புப்பணி பயணத்தை மேற்கொள்கிறார்.
இச்செவ்வாய் பிற்பகல் உரோம் நகரிலிருந்து புறப்படும் கர்தினால் Filoni அவர்கள்புதனன்று பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலுள்ள திருப்பீடத் தூதரகத்தைச் சந்திப்பதுடன்அங்கிருந்து Omorpurமறைமாவட்டத்திற்குச் சென்று தங்குவார்.
இவ்வியாழனன்று அங்குள்ள அன்னை தெரேசா பிறரன்பு சகோதரிகள் நடத்தும் நோயுற்றோர் இல்லத்தையும்வேறு பல துறவு சபையினர் நடத்திவரும் சமூகப் பணி மையங்களையும் பார்வையிடுவார்.
ஞாயிறு மாலை வரை பங்களாதேஷில் இருக்கும் கர்தினால் Filoni அவர்கள்அன்று மாலை,கொல்கத்தா சென்றடைந்துதிங்களும்செவ்வாயும் அப்பகுதியின் தலத்திருஅவை அதிகாரிகளையும்,விசுவாசிகளையும் சந்தித்து உரையாடுவார்.
செவ்வாய் பிற்பகல் நேபாள நாட்டிற்குச் செல்லும் கர்தினால் Filoni அவர்கள்19ம் தேதிசனிக்கிழமை பிற்பகல்வரை அந்நாட்டில் திருஅவை அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் பலரையும் சந்தித்து உரையாடுவார்.
பங்களாதேஷ்இந்தியாநேபாளம் ஆகிய மூன்று நாடுகள் பயணத்தை நிறைவு செய்யும் கர்தினால்Filoni அவர்கள்19ம் தேதி பிற்பகல் நேபாளத்திலிருந்து புறப்பட்டு20ம் தேதி உரோம் நகர் வந்தடைவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

6. 'அனைத்துலக விசாரணைகோரி யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை

செப்.07,2015. இலங்கையின் இறுதிப் போரின்போது இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற குற்றங்கள் தொடர்பில்அனைத்துலக விசாரணையொன்று நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தி,யாழ்ப்பாணத்தில் கையெழுத்து வேட்டை தொடர்ந்து இடம்பெற்று வருவதாகஅங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில்யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு பொது அமைப்புக்களின் பிரதிநிதிகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள 'அனைத்துலக விசாரணை வழிமுறைக்கான தமிழர் செயல்பாட்டு அமைப்பின்', இந்தக் கையெழுத்து திரட்டும் நடவடிக்கையில்,தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள்மாநில அவை உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களும்பொது அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும்பொதுமக்களும் இணைந்துள்ளனர்.
செப்டம்பர் 16ம் தேதி வரை இந்தக் கையெழுத்து வேட்டை தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

ஆதாரம் : BBC /வத்திக்கான் வானொலி

No comments:

Post a Comment