Monday, 29 April 2024

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்

 

G7 உச்சி மாநாட்டில் பங்கேற்கும் திருத்தந்தை பிரான்சிஸ்



இத்தாலியின் தென் பகுதியான புலியாவில் (Puglia) நடைபெறும் G7 உச்சி மாநாட்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்.

ஜெயந்த் ராயன் – வத்திக்கான்

இத்தாலியின் புலியாவில் உள்ள போர்கோ எஞ்ஞாசியாவில் (Borgo Egnazia) ஜூன் 13 முதல் 15 வரை நடைபெறும், G7 நாடுகளின் 'செயற்கை நுண்ணறிவுக்கான' அமர்வில் திருத்தந்தை பங்கேற்பதை திருப்பீடத் தகவல் தொடர்பகம்  உறுதிப்படுத்தியுள்ளது.

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி அவர்கள், G7 உச்சி மாநாட்டுப் பணிகளில் திருத்தந்தை ஒருவர் பங்கேற்பது இதுவே முதல் முறை எனவும், இக்கூட்டத்தில் விருந்தினர்களுக்கான அமர்வில் திருத்தந்தை கலந்துகொள்வார் எனவும் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது..

இத்தாலியின் அழைப்பை ஏற்றுக்கொண்ட திருத்தந்தை அவர்களுக்கு மனதார நன்றி கூறிய பிரதமர், அவருடைய பங்கேற்பு இத்தாலி நாட்டுக்கும்  மற்றும் அனைத்து G7  நாடுகளுக்குமிடையே நன்மதிப்பை  உருவாக்கும் என்றும்,  செயற்கை நுண்ணறிவு குறித்த பிரச்சனைகளில் திருப்பீடம் வழங்கிய பங்களிப்பை இத்தாலி அரசு மேம்படுத்த விரும்புவததாகவும், வாழ்வுக்கானத் திருப்பீடக் கழகம் (Pontifical Academy for Life) வெளியிட்ட ''செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளுக்கான உரோமையின் அழைப்பு 2020'' என்ற அறிக்கை,  செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பிற்கு உறுதியான நெறிமுறைகள் மற்றும்  உறுதியான பயன்பாட்டைக் கொடுக்க வழிவகுக்கிறது என்றும் கூறினார்.

செயற்கை நுண்ணறிவுக்கான ஒழுங்கு, நெறிமுறை மற்றும் கலாச்சார கட்டமைப்பின் வரையறைக்கு திருத்தந்தையின்  பங்கேற்பு ஒரு தீர்க்கமான பங்களிப்பை வழங்கும் என்று அவர் உறுதியாக நம்புவதாகவும், தொழில்நுட்பத்தில் தற்போதைய மற்றும் எதிர்காலத்தில் நமது திறன் பற்றி 1979ஆம் ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால்  அவர்கள் ஐக்கிய நாடுகள் சபையில் தனது புகழ் பெற்ற உரையில் நினைவுகூர்ந்ததை நடைமுறைப்படுத்துவதற்கான அனைத்துலக சமூகத்தின் திறனை மீண்டும் அளவிட முடியும் என்றும் கூறினார் பிரதமர் மெலோனி.

தேசிய மற்றும் அனைத்து நாடுகளின் அரசியல் செயல்பாடு என்பது மனிதர்களிடமிருந்து வருகிறது, மனிதர்களால் செயல்படுத்தப்படுகிறது, மேலும் அது மனிதர்களுக்கானது  என்று மேற்கோள் காட்டிய பிரதமர் அவர்கள், செயற்கை நுண்ணறிவு, இக்காலத்தின் மிகப்பெரிய மானுடவியல் சவாலாக இருக்கும் என்றும்,  சிறந்த வாய்ப்புகளை உருவாக்கக்கூடிய ஒரு தொழில்நுட்பமாகக் கருதப்பட்டாலும் அதனுடன் மகத்தான அபாயங்கள் உள்ளடங்கியிருப்பதையும்,  இது உலகளாவிய சமநிலையை பாதிக்கும் என்றும்  தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி 57வது உலக அமைதி தினத்திற்காக தனது செய்தியை செயற்கை நுண்ணறிவு மற்றும் அமைதிக்காக அர்ப்பணித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இதயத்தின் ஞானத்தை வளர்க்க  செயற்கை நுண்ணறிவு அமைப்புகளை, முழுமையாக மனிதத் தகவல்தொடர்பு பணி சார்ந்ததாக உருவாக்கவேண்டும் என மனிதகுலத்தை அவர் வலியுறுத்தினார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

குறை காணும் மனம் தவிர்ப்போம்

 

குறை காணும் மனம் தவிர்ப்போம்



நம்மைப்பற்றிய அரைகுறையான கண்ணோட்டம், அடுத்தவரைப்பற்றிய அவசரக் கண்ணோட்டம் என்ற இரண்டும் கலந்த பார்வைக் கோளாறு பெரும்பாலோருக்கு உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்

உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல் உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை நீங்கள் கூர்ந்து கவனிப்பதேன்? (மத்தேயு 7:3)

என்ற இயேசுவின் கேள்வியே இன்று நாம் எடுத்திருக்கும் கருத்து.

நம் குறைகளைவிட, அடுத்தவர் குறைகளைப்பற்றி அதிகம் கவலைப்படும் நம்மை நோக்கி, இயேசு கேட்கும் கேள்வி இது. தன்னிடம் குறை வைத்துக்கொண்டு, அடுத்தவரிடம் குறைகாணும் மனிதர்கள் நம்மில் ஏராளம். இன்றைக்குப் பெரும்பாலோருக்கு அடுத்தவருடைய தவறுகள்தான் அவர்களுடைய கண்களுக்குத் தென்படுகின்றன. தங்களுடைய தவறுகள் அவர்களுக்குத் தென்படுவதுமில்லை, அதைக் குறித்து அவர்கள் கவலைப்பட்டுக் கொள்வதுமில்லை. இப்படி அடுத்தவர்களுடைய தவறுகளைப் பெரிதுபடுத்தியும் தங்களிடம் உள்ள தவறுகளைக் கண்டும் காணாமல் இருப்பவர்களைப் பார்த்துத்தான் நற்செய்தியில் இயேசு, "முதலில் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையை எடுத்து எறியுங்கள். அதன்பின் உங்கள் சகோதர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்க உங்களுக்குத் தெளிவாய்க் கண் தெரியும்" என்கிறார்.

இவ்வுலகில் எதற்கெடுத்தாலும் குறைக்காணும் மனிதர்கள் ஏராளம். நாமும் இதற்கு விதிவிலக்கல்ல. மனிதர்களிடம் இருக்கும் இந்த நோய்க்கு மிக முக்கியமான காரணம், தன்னை நேர்மையாளர்கள் போலும் அடுத்தவரைக் குற்றவாளிகள் போலும் பார்க்கின்ற மனநிலைதான். நம்மைப்பற்றிய அரைகுறையான கண்ணோட்டம், அடுத்தவரைப்பற்றிய அவசரக் கண்ணோட்டம் என்ற இரண்டும் கலந்த பார்வைக் கோளாறுதான் இது.

“நீங்கள் உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையைப் பார்க்காமல், உங்கள் சகோதரர் அல்லது சகோதரியின் கண்ணில் இருக்கும் துரும்பைக் கூர்ந்து கவனிப்பதேன்? உங்கள் கண்ணில் இருக்கும் மரக்கட்டையையே நீங்கள் பார்க்காமல் இருந்துகொண்டு உங்கள் சகோதரர் அல்லது சகோதரியிடம், ‘உம் கண்ணில் இருக்கும் துரும்பை எடுக்கட்டுமா?’ என்று எப்படிக் கேட்க முடியும்?” (லூக்கா 6:41-42) என்று இயேசு எழுப்பும் கேள்விகள், அடுத்தவரைப் பற்றி, அவசரமான முடிவெடுக்க நாம் கொண்டுள்ள ஆர்வத்தை தோலுரித்துக் காட்டுகின்றன. இத்தகைய மனநிலை கொண்டோரை, வெளிவேடக்காரர் என்று இயேசு கடிந்துகொள்கிறார்.

பிறரிடம் காணப்படும் சிறு தவறுகளை மிகைப்படுத்திக் காணும் நம் கண்கள், நம் தவறுகளையும் நம்முள் உறைந்து கிடக்கும் குற்றங்களையும் பார்க்கத் தவறி விடுகிறது.

நம் கண்கள் தெளிவாக இருந்தால்தான் நம் பார்வையும் தெளிவாக இருக்கும். கண்ணில் ஒரு சிறிய தூசி விழுந்தால்கூட கண் தானாகவே மூடிக்கொள்ளும்; அப்போது நம் பார்வையும் தெளிவு குன்றிவிடும். நமது பார்வை தெளிவாக இருக்கவேண்டும் என்றால் நம் கண் தெளிவாக இருக்க வேண்டும். அதற்கு ஒரே வழி நம் கண்ணில் இருக்கின்ற மரக்கட்டையை அகற்றுவதுதான். "குறைகள் இருப்பின் எங்களிடம் சொல்லுங்கள்; நிறைகள் இருப்பின் மற்றவர்களிடம் சொல்லுங்கள்" என்பது ஒரு வியாபார பொன்மொழி. ஒருவரிடத்தில் குறைகள் காணப்பட்டால்,  அவர் தனித்திருக்கையில் அவருக்குப் பக்குவமாக எடுத்துரைப்பதே சிறப்பு. மாறாக,  அவர் அந்த இடத்தில் இல்லாத போது, எதிர்மறையாக, உண்மைக்கு மாறாக, இழிவாகத்திரித்து, வேண்டுமெனவே கூறுதல் பெரும் குற்றமாகும். இதனால் உறவு பாதிக்கப்படும். நாம் மற்றவரைப் பற்றி நல்ல செய்திகளைச் சொல்ல விரும்பும்போது, அதைப் பிறர் முன்னிலையில் தைரியமாகச் சொல்லலாம். அதை விடுத்து மறைவாக, பிறரைப் பற்றி நாம் பேசுகிறோமெனில் கண்டிப்பாக அது பிறரைப் பற்றிய அவதூறாகவும், பழிப்புரையாகவும் தான் இருக்க வேண்டும். எந்த ஒரு குறையையும் மற்றவர்களிடம் காணும் முன்பு, நம்மைக் குறித்து ஆய்வுச்செய்து பார்ப்போம். ஏனெனில், மற்றவர்களின் குறைகளைப் பெரிதுப்படுத்தி பழித்துரைப்பது மூன்று நபர்களைப் பாதிக்கிறது என்பர். முதலாவதாக அயலாரை மறைவாகப் பழித்துரைப்பவர் பாதிக்கப்படுகிறார். இரண்டாவதாக அவ்வாறு சொல்லப்படும் பழிப்புரையை தன் செவிகளின் வழியாக உள்வாங்குபவர். இறுதியாக யாரைப் பற்றி பழிப்புரைச் சொல்லப்படுகிறதோ அந்த நபர். இவ்வாறு மூன்று நபர்களுக்குமே தீமையாக அமைகிறது.

ஏன் சிலர் மற்றவர்களின் குறைகளைப் பெரிதுபடுத்துவதிலேயே குறியாய் இருக்கின்றனர் என்பதை யோசித்துப் பார்த்திருக்கின்றோமா? பலருக்குத் தங்களுடைய தவறுகள் வெளிப்பட்டுவிடுமோ என்ற பயம். அதனால்தான் அவர்கள் அடுத்தவரிடம் இருக்கின்ற சிறு சிறு குறைகளை அல்லது அடுத்தவர் செய்கின்ற சிறு சிறு தவறுகளைப் பெரிதுபடுத்துகிறார்கள். இரண்டு மனிதர்களுக்கிடையே பிரச்சினை வெடிக்கின்றபோது இதனை நன்றாகக் காணலாம். ஒருவர் தன்னுடைய தவறு வெளியே வந்துவிடக்கூடாது என்பதற்காக அடுத்தவர் செய்த தவறைப் புட்டுப்புட்டு வைப்பார். இவ்வாறே மாறி மாறி நடக்கும்.

அடுத்திருப்பவரை மறைவாகப் பழித்துரைப்பது இன்று நேற்று பிறந்ததல்ல. மாறாக மனித இனம் உருவான நாளிலிருந்தே இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. தங்கள்மீது ஆயிரம் குறைகள் இருக்கும்போதே, பலர் அடுத்தவர்மீது ஏதாவது குறைகூறிக்கொண்டே இருப்பதை தங்கள் வழக்கமாக வைத்திருக்கினறனர். இயேசுவையே, பெருந்தீனிக்காரன், குடிகாரன், வரிதண்டுபவர்களுக்கும் பாவிகளுக்கும் நண்பன் (லூக் 7:34), பித்து பிடித்தவன்(மாற் 3:22), ஓய்வுநாள் சட்டங்களை மீறுகின்றவன்(மத் 12:1-14), கடவுளைப் பழித்துரைக்கிறவன்(மத் 26:65),  தன்னைப்பற்றியே உயர்வாகப் பேசுகிறவன்;  கடவுளுக்கு தன்னை இணையாக்கிக் கொள்பவன் (யோவான்; 5:18) என்று அவர் எதைச் செய்தாலும் குறைகூறிக்கொண்டே இருந்த மக்களை நற்செய்தியில் பார்க்கிறோம்.

நம்மில் இருக்கின்ற குறைகளை நாம் பெரிதாகக் கருதாமல் பிறருடைய குறைகளைப் பற்றியே அலட்டிக்கொள்வது ஓர் அனுபவ உண்மை. பிறரைத் திருத்துவதற்கு முன் நம்மில் என்ன மாற்றம் தேவைப்படுகிறது என நாம் கேட்டுப் பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். பிறரைத் திருத்துவதற்கு முன்பு தன்னைத் திருத்துவது நல்லது. ஒவ்வொருவரும் தங்களையே தன்னாய்வு செய்து பார்க்க அழைக்கின்றார் இயேசு. வெளிவேடமின்றி தன்னையே இப்படித் தன்னாய்வு செய்யும்போது ஒருவர் தன் மதிப்பீடுகளை மறு ஆய்வு செய்ய முடியும். அப்படிச் செய்யாதபோது அவர் வளர முடியாமல் போய்விடும். பிறரைத் திருத்துவதற்கு முன் நம்மில் என்ன மாற்றம் தேவைப்படுகிறது என நாம் கேட்டுப்பார்ப்பது பயனுள்ளதாக இருக்கும். நம் குற்றங்களைத் திருத்தும்போது நாம் பிறருக்கும் ஒரு புதிய முன்மாதிரியாக மாறுவோம். குற்றம் காணும் போக்கினை நாம் தவிர்க்க வேண்டும். அதே நேரத்தில் நம் சகோதரர் சகோதரிகள் மன மாற்றம் பெற்று நல்மனிதராக மாறிட வேண்டும் என்னும் நோக்கத்தோடு அவர்களைத் திருத்திடவும் நாம் முயல வேண்டும்.

பிறர் தவறு செய்தால் நாம் கண்களை மூடிக்கொண்டு, அத்தவற்றைக் காணாததுபோல் நடக்க வேண்டும் என இயேசு கூறவில்லை, மாறாக, பிறரிடம் குறை காண வேண்டும் என்னும் ஒரே நோக்கத்திற்காக அவர்களுடைய சொல்லையும் செயலையும் பூதக் கண்ணாடி கொண்டு ஆய்கின்ற மன நிலையை இயேசு கண்டிக்கிறார். நம்மில் இருக்கும் குறைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல், அடுத்தவர் மீது அவசர முடிவுகள் எடுக்கும் பார்வைக் கோளாறு என்ற இந்த நோயைக் குறித்து சிந்திப்பது பயனளிக்கும். உடல் சார்ந்த பார்வைத் திறன், உள்ளம் சார்ந்த பார்வைத் திறன் பார்க்கும் திறன் இருந்தும், பார்க்க மறுப்பது போன்ற கருத்துக்களை நம் உள்ளங்களில் ஆழப் பதிப்பதற்கு இயேசு இங்கு முயல்வதைப் பார்க்கிறோம்.

இயேசுவின் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வை இங்கு நாம் நோக்குவோம். விபச்சாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணை இயேசுவின் முன் கொண்டுவருகின்றனர். பெண்ணின் விபச்சாரம் என்ற பாவமானது அனைவருக்கும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஆனால் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்களோ யாருக்கும் வெளிப்படையாகத் தெரியவில்லை. ஆனால் உள்ளங்களை ஆய்ந்தறிகின்ற கடவுளின் மகனாம் இயேசுவுக்கு இந்தப் பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் நன்றாகத் தெரியும். உங்களில் பாவமில்லாதவன் முதல் கல்லை எறியட்டும் என்று சொன்னதன் வழியாக பரிசேயர்களும், மறைநூல் அறிஞர்களும் விபச்சாரத்தில் பிடிபட்டப் பெண்ணைப் போன்ற பாவிகளே என்பதை இயேசு தெளிவாகக் காட்டுகிறார். பரிசேயர், மறைநூல் அறிஞர்களின் பாவங்கள் என்றுப் பார்த்தோமானால், இவர்களின் முதல் குற்றம், பிறரின் குற்றங்களைப் பெரிதுபடுத்தி தங்களின் குற்றங்களை மூடி மறைக்க முயற்சி செய்தது. இரண்டாவதாக, ஓய்வுச் சட்டங்கள், தூய்மை முறைச் சட்டங்கள், ஒழுக்க நெறிச் சட்டங்கள் முதலியவற்றால் மக்களின் வாழ்வில் சுமையை ஏற்றினார்களேயொழிய அவர்களின் வாழ்வுக்கு வளமை கொண்டு வரவில்லை. தங்கள் குற்றங்களை உணராமலும், மக்களை அடக்கி ஒடுக்கியும் வாழ்ந்த இந்த வெளிவேடக்காரர்களை நோக்கித்தான் உங்களில் குற்றமில்லாதவர் முதல் கல்லை எறியட்டும் என்கிறார் இயேசு. எவரும் கல்லை எடுக்க முன்வரவில்லை. விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை ஆண்டவர் இயேசு தீர்ப்பிட்டிருக்கலாம். ஏனென்றால் அவர் பாவமற்றவர். ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை. மாறாக அப்பெண்மணியை, அவளுடைய பாவங்களை மன்னித்து, இனிமேல் பாவம் செய்யாதே என்று சொல்லி அனுப்புகிறார்.

விபச்சாரத்தில் பிடிபட்ட பெண்ணை பரிசேயக் கூட்டமும் இயேசுவும் இருவேறு விதமாக அணுகிறார்கள். அந்தப் பெண் அழிந்துபோக வேண்டும் என்று பரிசேயர்கள் விரும்பியபோது, இயேசு, அப்பெண் வாழவேண்டும் என்று விரும்புகின்றார். ஆம், தீயோர் அழிவுற வேண்டும், கெட்டு மடியவேண்டும் என்பதல்ல, மாறாக அவர்கள் மனம்மாற வேண்டும் என்பதுதான் கடவுளின் மேலான விருப்பமாக இருக்கிறது. தவறுசெய்தவர் தண்டிக்கப்பட வேண்டும் என்ற மனநிலையோடு செயல்பட்டால் இந்த உலகத்தில் யாரும் மிஞ்சமாட்டார்கள் என்பதுதான்  உண்மை.

நாம் ஒருவரைப் பற்றி முழுமையாகத் தெரியாமலேயே தீர்ப்பிடுகிறோம். இன்னும் சில நேரங்களில் நம்முடைய தவறை மறைப்பதற்காக பிறரைத் தீர்ப்பிடுகிறோம், பிறருடைய தவறைப் பெரிதுபடுத்துகிறோம். அதனால் ஆண்டவர் இயேசு கூறுகிறார், “பிறர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்காதீர்கள், அப்போதுதான் நீங்களும் தீர்ப்புக்கு உள்ளாக மாட்டீர்கள்” என்று (மத் 7:1). மனிதர்கள் குறையுள்ளவர்கள். குறையில்லாத மனிதர்கள் இருக்க முடியாது. ஒருவரிடம் குறைகள் இருந்தால் உண்மையாகவே அவரின் வளர்ச்சியில் அக்கறையுள்ளவர், அதை அவர் தனிமையில் இருக்கும் போது அவரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். இதைத்தான் இயேசு, “உங்கள் சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் உங்களுக்கு எதிராகப் பாவம் செய்தால் நீங்களும் அவரும் தனித்திருக்கும்போது அவரது குற்றத்தை எடுத்துக்காட்டுங்கள். அவர் உங்களுக்குச் செவிசாய்த்தால் நல்லது; உங்கள் உறவு தொடரும்" என்று உரைக்கிறார் (மத்தேயு 18:15).

தூய பவுல் கலாத்தியருக்கு எழுதிய திருமுகத்தில் கூறுகின்றார், "சகோதர, சகோதரிகளே, ஒருவர் ஏதேனும் குற்றத்தில் அகப்பட்டுக்கொண்டால், தூய ஆவியைப் பெற்றிருக்கும் நீங்கள் கனிந்த உள்ளத்தோடு அவரைத் திருத்துங்கள்," (கலா 6:1) என்று. பவுலடியாரின் இக்கூற்று நம்முடைய ஆழமான சிந்தனைக்கு அழைப்புவிடுக்கின்றது. கனிந்த இதயத்தோடு ஒருவரைத் திருத்த முயற்சித்தால், அவரிடம் இருக்கின்ற குற்றங்கள் நமக்குப் பெரிதாகத் தெரிவதில்லை. மாறாக, நம்மிடம் உள்ள அக்கறையும் அன்பும்தான் வெளிப்படும். அல்லவைகளை அல்ல, நல்லவைகளைப் பார்க்கும் மனநிலை ஒவ்வொருவருக்கும் வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒருவரிடம் இருக்கும் குறைகளைப் பார்க்காமல், நிறைகளை பார்க்கப் பழகினால் குறைகாணும் நோய் நம்மிடம் இல்லாமலே போய்விடும். 'நல்லவை பெருகினால் அல்லவை தானாய் மறையும்' என்பது மூத்தோர் வாக்கு. இதன்படி, நாம் நம்மிடம் நல்லவற்றைப் பார்க்கும் நல்ல மனப்பான்மையை வளர்த்துக்கொண்டு, குறைகாணும் மனப்பான்மையை விட்டொழித்து, இறைவனுக்கு உகந்த அன்பு வழியில் நடப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்


Sunday, 7 April 2024

Sri Lankan Tamils Protest: நூற்றுக்கணக்கான கால்நடைகளை சிங்கள விவசாயிகள் ...

பாஜகவை பந்தாடும் பெண் நீதிபதி! சந்திரசூட் பரவாயில்லை போல.. யார் இந்த ஜஸ்...

Gaza War: Hamas-ஐ ஒழிப்பதில் Israel திணறுகிறதா? பல Tunnel-களை அழித்துவிட...

Katchatheevu Issue Explained: உண்மையில் இந்த குட்டித் தீவு விவகாரத்தில் ...

சிலுவை சாவை முன்னறிவித்த இந்திய வேதங்கள்|

12 Most Mysterious Archaeological Artifacts Finds Scientists Still Can't...

சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன்பு மனிதர்கள் வாழ்ந்த வாழ்விடம் கண்டுபிடிப்...

Insular India - An Archaeological Timeline

Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica

  Michelangelo's Pietà shines again in Saint Peter's Basilica Replacement of the glass protection of Michelangelo's Pietà in Sai...