Saturday 23 February 2013

ROBERT JOHN KENNEDY: கறுப்புக் கண்ணாடி

ROBERT JOHN KENNEDY: கறுப்புக் கண்ணாடி: கறுப்புக் கண்ணாடி கொளுத்தும் வெயிலிலிருந்து நம் கண்களைக் காக்க நாம் அணியும் கறுப்புக் கண்ணாடிகள் அல்லது , பல வண்ண குளிர்விக்கும் கண்ணா...

கறுப்புக் கண்ணாடி

கறுப்புக் கண்ணாடி

கொளுத்தும் வெயிலிலிருந்து நம் கண்களைக் காக்க நாம் அணியும் கறுப்புக் கண்ணாடிகள் அல்லது, பல வண்ண குளிர்விக்கும் கண்ணாடிகள், 13ம் நூற்றாண்டில் சீனாவில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டது. அந்நாட்டின் நீதி மன்றங்களில் நீதிபதிகள் கறுப்புக் கண்ணாடி அணிந்து, வழக்குகளை விசாரித்தனர். நீதிபதியின் கண்வழி வெளியாகும் உணர்வுகள் மூலம் அவரது எண்ணங்களை மக்கள் அறிந்துவிடக்கூடாது என்பதற்காக, நீதிபதிகள் கறுப்புக் கண்ணாடிகளை அணிந்தனர்.
பனி சூழ்ந்த பகுதிகளில் வாழும் எஸ்கிமோ மக்கள், பனியின் உக்கிரத்தால் தங்கள் பார்வையை இழக்காமல் இருக்க, நேர்கோட்டில் அமைந்த ஓர் ஓட்டை கொண்ட உலோகத் தகடுகளைக் கண்ணாடி போன்று அணிந்தனர். 1932ம் ஆண்டுமுதல், அமெரிக்க விமானப் படைவீரர்கள் சூரிய ஒளியின் மிகுதியைக் கட்டுப்படுத்த, கறுப்புக் கண்ணாடி அணிந்தனர்.
சூரியனிலிருந்து வெளியாகும் ultraviolet rays எனப்படும் புறநீலக்கதிர்கள் கண்களை அடையாமல் தடுக்கும் சக்திகொண்ட கண்ணாடிகளையே பயன்படுத்தவேண்டும் என்று கண் மருத்துவர்கள் கூறுகின்றனர். பல வண்ணங்களில் குளிர்விக்கும் கண்ணாடிகள் அணிவது, தற்போது இளையோரிடையே நாகரீக அடையாளமெனக் கருதப்படுகிறது.

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 23/02/13

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 23/02/13: 1. திருப்பீட அதிகாரிகளிடம் திருத்தந்தை - செபத்தின் வழி தொடர்ந்து இணைந்திருப்போம் 2. இத்தாலிய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு...

Catholic News in Tamil - 23/02/13


1. திருப்பீட அதிகாரிகளிடம் திருத்தந்தை - செபத்தின் வழி தொடர்ந்து இணைந்திருப்போம்

2. இத்தாலிய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

3. பல்வேறு சவால்கள் திருஅவை முன் உள்ளன என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்

4. மலாவியில் பதட்ட நிலைகள் களையப்பட தலத்திரு அவை அழைப்பு

5. தமிழகத்தில் போலியோ இல்லை : அரசு அறிவிப்பு

6. மருந்து சோதனை: ஓராண்டில் 436 இந்தியர் பலி

7. மகாராஷ்டிராவில் வறட்சி பாதிப்பால் 228 விவசாயிகள் தற்கொலை

------------------------------------------------------------------------------------------------------

1. திருப்பீட அதிகாரிகளிடம் திருத்தந்தை - செபத்தின் வழி தொடர்ந்து இணைந்திருப்போம்

பிப்.23,2013. கலைநயம் மிகுந்த விசுவாசம், செபவாழ்வின் கலைநயத்தையும் வெளிப்படுத்தும் என்ற தலைப்பில், ஆண்டு தியானத்தில் ஒருவாரம் ஈடுபட்டிருந்த தன்னோடு ஆன்மீஅகப் பயிற்சிகளில் பயணம் செய்த அனைவருக்கும் நன்றிகூற விளைவதாக எடுத்துரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
தன் தியானத்தின்போது தன்னோடு இருந்து இந்த ஆன்மீகப்பயணத்தில் பங்குபெற்ற திருப்பீட அதிகாரிகளுக்கும், இந்நாட்களில் செபம் மூலம் தன்னோடு துணை நின்ற விசுவாசிகளுக்கும் நன்றி சொல்வதாக இச்சனிக்கிழமை காலை உரை வழங்கியத் திருத்தந்தை, வார்த்தை என்பது இதயமுடையது அதுவே அன்புமாகும் என்று கூறினார். உண்மை என்பது அழகு நிரம்பியது, உண்மையும் அன்பும் எப்போதும் இணைந்துச் செல்கின்றன என மேலும் கூறினார்.
படைத்தவை அனைத்தையும் நல்லதென இறைவன் கண்டதாக விவிலியத்தில் நாம் வாசிக்கும் அதேவேளை, இன்றைய உலகில் தீமை, துன்பம், ஊழல் என்ற நிலைகளே அதிகம் காணப்படுகிறது என்பதையும் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை.
மனுவுருவான வார்த்தை முள்மகுடம் கொண்டு முடிசூட்டப்பட்டாலும், இந்த இறைமகனின் துன்பத்திலேயே நாம் மீட்பரின் ஆழமான அழகைக் கண்டுகொள்கிறோம் என்ற திருத்தந்தை,  இருளின் அமைதியில் வார்த்தையைத் தெளிவாகக் கேட்கமுடியும் என்றார்.
இந்த ஒருவார தியானத்திற்காக மட்டும் நான் உங்களுக்கு நன்றிகூறவில்லை, மாறாக, கடந்த எட்டு ஆண்டுகள் தலைமைப் பொறுப்பில் நான் பணியாற்றியபோது, உங்களுடைய திறமைகள், அன்பு, பாசம், நம்பிக்கை ஆகியவற்றோடு என்னுடன் பயணம் செய்ததற்காக நன்றி கூற விழைகிறேன்.
வெளிப்பார்வைக்கு நம்மிடையே உள்ள உறவு முடிந்துள்ளதாக தெரிந்தாலும் நம்முடைய ஆழமான ஒன்றிப்பும், நெருக்கமும் செபத்தின் வழி என்றும் நிலைத்திருக்கும் என திருப்பீட அதிகாரிகளிடம் மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.


2. இத்தாலிய அரசுத்தலைவர் திருத்தந்தையுடன் சந்திப்பு

பிப்.23,2013. இச்சனிக்கிழமையன்று தன் ஒருவார தியானத்தை முடித்த திருத்தந்தை, அந்நாளின் முதல் நிகழ்ச்சியாக இத்தாலிய அரசுத்தலைவர் ஜியார்ஜியோ நப்போலித்தானோவை சந்தித்தார்.
வருகிற வியாழனன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் பணி ஓய்வு பெறவுள்ளதை முன்னிட்டு இச்சனிக்கிழமையன்று திருப்பீடத்திற்கு வந்து திருத்தந்தையைச் சந்தித்து அரைமணி நேரத்திற்கு மேல் உரையாடிக்கொண்டிருந்த இத்தாலிய அரசுத்தலைவர், 1840ம் ஆண்டு இத்தாலியில் வெளியிடப்பட்ட பிரபல நாவல் ஒன்றின் பழங்காலப்பிரதி ஒன்றை திருத்தந்தைக்குப் பரிசாக அளித்தார். வத்திக்கான் பேராலய கட்டுமானப்பணிகளின் புகைப்பட பிரதி ஒன்றை, இத்தாலிய அரசுத்தலைவருக்குப் பரிசாக அளித்தார் திருத்தந்தை.
இரு தலைவர்களுக்கும் இடையே இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது, விரைவில் அரசுப்பயணமாக தான் ஜெர்மனிக்கு செல்லவிருப்பது குறித்த விவரங்களை திருத்தந்தையிடம் பகிர்ந்துகொண்டார் இத்தாலிய அரசுத்தலைவர் நப்போலித்தானோ.


3. பல்வேறு சவால்கள் திருஅவை முன் உள்ளன என்கிறார் திருப்பீடப்பேச்சாளர்

பிப்.23,2013. திருத்தந்தை பதவி விலகும் இந்த வாரமும் அதைத்தொடர்ந்து அடுத்த திருத்தந்தை தேர்ந்தெடுக்கப்படும்வரை உள்ள காலமும் மிகவும் சவால் நிறைந்த காலங்களாக இருக்கும் என்று கூறினார் திருப்பீடப்பேச்சாளர் இயேசு சபை குரு ஃபெதரிக்கோ லொம்பார்தி.
எதிர்பார்ப்புகளுடனும் தயாரிப்புகளுடனும் இக்காலத்தில் வாழ்ந்துவரும் திருஅவை, அதன் இயல்புக்கு ஒத்திணங்கிச் செல்லாத  பல நிர்ப்பந்தங்களையும், கருத்துக்களையும் எதிர்நோக்கவேண்டியுள்ளது என்ற திருப்பீடப்பேச்சாளர், திருஅவையையும் அதன் நிர்வாகத்தையும் குழப்ப, சில சமூகத்தொடர்பு சாதனங்கள் வழி, சிலரால் அவதூறான செய்திகள் பரப்ப்ப்பட்டு வருவதையும் குறிப்பிட்டார்.
திருஅவை அதிகாரிகள் குறித்து சிலர் தவறான கருத்துக்களைப் பரப்பிவருவது குறித்த கவலையையும் வெளியிட்டார் அருட்தந்தை லொம்பார்தி.
விசுவாசிகள் திருஅவை மீது கொண்டிருக்கும் நம்பிக்கையையும் அன்பையும் சிலரின் அவதூறான பிரச்சாரங்கள் எவ்வகையிலும் பாதிக்காது என மேலும் கூறிய திருப்பீடப்பேச்சாளர்,  தன் வாழ்நாளின் இறுதி நாட்களை செபத்திற்கென அர்ப்பணிக்க திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கொண்டிருக்கும் விருப்பத்தையும் சுட்டிக்காட்டினார்.


4. மலாவியில் பதட்ட நிலைகள் களையப்பட தலத்திரு அவை அழைப்பு

பிப்.23,2013. பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் மலாவி அரசின் நிலைகளை உணர்ந்துள்ள அதேவேளை, உரிமைகளுக்காகப் போராடும் அரசு அதிகாரிகளுடனும் மக்களுடனும் ஒருமைப்பாட்டைத் தெரிவிக்க திருஅவை விரும்புகிறது எனக் கூறியுள்ளனர் மலாவி ஆயர்கள்.
மலாவி நாட்டின் இன்றைய பதட்ட நிலைகள் குறித்து அறிக்கை ஒன்றை வெளீயிட்டுள்ள அந்நாட்டு ஆயர் பேரவையின் நீதி மற்றும் அமைதி அவை,  தொழிலில் எதிர்நோக்கும் தடைகள், வேலைவாய்ப்பின்மைகள், விலைகள் அதிகரிப்பு போன்ற மக்களின் நியாயமான கேள்விகளுக்கு அரசின் பதில்கள் திருப்தி தருபவைகளாக இல்லை என்ற தன் கவலையை வெளியிட்டுள்ளது.
அரசுப் பணியாளர்களுக்கும் அரசுக்கும் இடையே எழுந்துள்ள முரண்பாடுகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது நாட்டின் வளர்ச்சியும் மக்களின் அன்றாட வாழ்வும், குழந்தைகளின் கல்வியும் எனக்கூறும் மலாவித் திருஅவைத்தலைவர்கள்பொதுநலனை மனதில் கொண்டு இருதரப்பினரும் விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தைக்கு முன்வரவேண்டியதன் தேவையை வலியுறுத்தியுள்ளனர்.


5. தமிழகத்தில் போலியோ இல்லை : அரசு அறிவிப்பு

பிப்.23,2013. தமிழகத்தில் கடந்த 9 ஆண்டுகளில் போலியோ நோயினால் ஒருவரும் பாதிக்கப்படவில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
2ம் கட்ட போலியோ சொட்டு மருந்து பிரச்சாரத்திற்காக, 2 இலட்சம் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், தொடர் பிரச்சாரங்கள் மூலம் 5 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட்டு வருவதாகவும், தமிழக நலத்துறை செயலர் இராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பேருந்து நிலையம், விமான நிலையம், இரயில் நிலையம் ஆகியவற்றில் 1000க்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், மூன்று நாட்கள் இந்த முகாம்கள் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


6. மருந்து சோதனை: ஓராண்டில் 436 இந்தியர் பலி

பிப்.23,2013. மருந்துகளைச் சோதனை செய்யும் ஆய்வில், ஓர் ஆண்டு மட்டும் 436 பேர் பலியாகி உள்ளனர் என்பது தெரியவந்துள்ள நிலையில், மருந்து சோதனைக்கு பயன்படுத்தப்பட்டு மேலும் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மத்திய நலத்துறை அமைச்சர் குலாம்நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.
புற்றுநோய், இதயக் கோளாறு, பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள், மற்றும் மருந்து ஒவ்வாமை அல்லது பல்வேறு நோய்களால் தீவிரமாகப் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவமனை நிர்வாகம் மருந்து சோதனைக்காகப் பயன்படுத்துவது உள்ளிட்டவையால் ஏற்பட்ட மரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் பாராளுமன்றத்தில் அமைச்சர் ஆசாத் தெரிவித்துள்ளார்.
இந்த மருந்து சோதனைக்கு உட்படுத்தப்பட்டு, 2011ம் ஆண்டு 436 பேரும், 2012ல் 668 பேரும் உயிரிழந்துள்ளதாக அமைச்சர் குலாம்நபி ஆசாத் மேலும் தெரிவித்துள்ளார்.


7. மகாராஷ்டிராவில் வறட்சி பாதிப்பால் 228 விவசாயிகள் தற்கொலை

பிப்.23,2013. இந்த ஆண்டு கடும் வறட்சியை தாக்குபிடிக்க முடியாமல், மகாராஷ்டிராவில் விதர்பா பகுதியில், 228 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர்.
மகாராஷ்டிராவில், இந்த ஆண்டு கடும் வறட்சி காரணமாக, விதர்பா மண்டலத்தில், ஆறு மாவட்டங்கள் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளது, இங்கு, கடந்த ஆண்டு ஏப்ரல் முதல், ஜனவரி வரை, 228 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்தவரும், மத்திய விவசாயத்துறை அமைச்சருமான சரத்பவார், கூறினார். மகாராஷ்டிராவில், 2006ம் ஆண்டு விவசாயிகளின் தற்கொலை எண்ணிக்கை, 1,035 ஆக இருந்த நிலையில், விவசாயிகளின் மறுவாழ்விற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் காரணமாக, 2011ம் ஆண்டு, விவசாயிகள் தற்கொலை, 485 ஆக குறைந்துள்ளது என அமைச்சர் சரத்பவார் மேலும் கூறினார்.

ROBERT JOHN KENNEDY: இலங்கை படையினர் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்...

ROBERT JOHN KENNEDY: இலங்கை படையினர் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்...: இலங்கை படையினர் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு! Source: Tamil CNN, February 22nd, 2013 அன்...

இலங்கை படையினர் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!

இலங்கை படையினர் மீது மனித உரிமை கண்காணிப்பகம் குற்றச்சாட்டு!


தமிழ் பெண்கள் மீது இலங்கை படையினர் பாலியல் வல்லுறவு புரிந்து அவர்களுக்கு பாடம் புகட்டியதாக மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.
மனித உரிமை கண்காணிப்பகத்தின் 140 பக்கங்கள் கொண்ட வருடாந்த அறிக்கையில் வெளியிடப்படவுள்ளது.
பாலியல் வன்முறை, கற்பழிப்பு, மற்றும் மூன்றாம் நிலை சித்திரவதை போன்ற கொடூரமான சம்பவங்கள் இலங்கை படைகளால் தமிழ் பெண்கள் மற்றும் ஆண்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
2006 தொடக்கம் 2012வரை இவ்வாறான 75 சம்பவங்கள் பதிவாகியுள்ளதென கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச உயர்தர விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் அரசியல் உந்துதல்களால் இராணுவத்தினரும் பொலிஸாரும் தொடர்ந்து இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பணிப்பாளர் பிராட் எடம்ஸ் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை கண்காணிப்பகத்திற்கு பாதிக்கப்பட்ட 31 வயது தமிழ் பெண் ஒருவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
குறித்த பெண் நான்காம் மாடிக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டு அங்கு தாக்கி சித்திரவதை செய்யப்பட்டு பின்னர் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

ROBERT JOHN KENNEDY: தாஜ் மஹால்

ROBERT JOHN KENNEDY: தாஜ் மஹால்: தாஜ் மஹால் முகலாயப் பேரரசன் "ஷாஜஹான்" தனது மனைவி " மும்தாஜ் மஹல் " நினைவாகக் கட்டிய  அன்பின் சின்னமே ' தாஜ் மஹால் ' . யமுனை நதிக்கரையோரம...

தாஜ் மஹால்

தாஜ் மஹால்

முகலாயப் பேரரசன் "ஷாஜஹான்" தனது மனைவி " மும்தாஜ் மஹல் " நினைவாகக் கட்டிய  அன்பின் சின்னமே 'தாஜ் மஹால்'. யமுனை நதிக்கரையோரம் அமைந்துள்ள தாஜ் மஹால், ஓர் உலக அதிசயமாகவும், காதல் சின்னமாகவும், உலக கலாச்சார சின்னமாகவும் இருந்து வருகின்றது. 1631ம் ஆண்டு மும்தாஜ் தனது 14 வது பிள்ளையை பிரசவிக்கும் வேளையில் மரணத்தை தழுவிக்கொண்டபோது, அந்த இழப்பைத் தாங்க முடியாமல் பலகாலம் துக்கத்தில் ஆழ்ந்திருந்த ஷாஜஹானின் மனதில் இந்த நினைவுச்சின்னம் தோன்றியிருக்க வேண்டும். மும்தாஜ் இறக்கும் முன்பாக தனது இறுதி ஆசையாக ஷாஜஹானிடம் கேட்டுக் கொண்டதுவே இந்த "தாஜ் மஹால்" என சொல்பவர்களும் உள்ளனர்.
உத்தரப் பிரதேச  மாநிலத்தின் ஆக்ரா  நகரில் அமைந்துள்ள தாஜ் மஹால்,  42 ஏக்கர் நிலப் பகுதியில் மிகவும் அரிதான வெள்ளை சலவைக் கற்களால் 1632 முதல் 1653ம் ஆண்டிற்கு இடைப்பட்ட 21 ஆண்டு காலத்தில் கட்டிமுடிக்கப்பட்டது. 22,000 வேலையாட்கள் , ஆயிரத்திற்கும் மேற்பட்ட யானைகள், பல நிபுணர்கள் இரவுபகலாக பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். முக்கியக் கட்டிடப்பணி 1648ம் ஆண்டும், சுற்றியுள்ள தோட்டமும் சிறு கட்டிடங்களின் பணிகளும் 1653ம் ஆண்டும் நிறைவுக்கு வந்தன.
இந்த மாபெரும் கட்டிடத்தின் அடித்தளம் 186 அடி சதுர பரப்பிலும் நிலத்தில் இருந்து 22 அடி உயரத்திலும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதன்மையான கோபுரம் 186 அடியும், நான்கு மூலைகளிலுமுள்ள கோபுரங்கள் 137 அடி உயரமும் உள்ளன.
தாஜ் மஹால் வெளிப்பகுதி முழுமையாக வெள்ளை சலவைக் கற்களாலும் உட்பகுதி 30 வித்தியாசமான நிறங்கள் கொண்ட கற்களின் கலை வேலைப்பாட்டுடனும் அமைக்கப்பட்டுள்ளது.
தாஜ்மஹால் முகப்பில் "குரான்" வரிகள் பொறிக்கப்பட்டுள்ளன. முகப்பில் உள்ள இந்த புனித வரிகள் சாதாரண கண்களுக்கு ஒரே அளவில், அடியில் இருந்து 30 அடி மேலான உயரத்திலும் புலனாகும் வண்ணம் அற்புத கலை நுணுக்கம் கையாளப்பட்டுள்ளது.
1983ம் ஆண்டில் இருந்து ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல், கலாச்சார மையம் (UNESCO) இதனை உலக்க் கலாச்சார சின்னமாக அறிவித்துள்ளது.
இந்த உலக அதிசயத்தினைப் பார்வையிட ஒவ்வோர் ஆண்டும் 30 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வந்து செல்கின்றனர்.



ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 22/02/13

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 22/02/13: 1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பில் செலவிடவிருக்கும் இறுதி நாட்கள் 2. இந்தியாவில் பிப்ரவரி 22 திருத்தந்தைக்க...

Catholic News in Tamil - 22/02/13


1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பில் செலவிடவிருக்கும் இறுதி நாட்கள்

2. இந்தியாவில் பிப்ரவரி 22 திருத்தந்தைக்கென செபிக்கும் நாள்

3. பன்னாட்டுப் பத்திரிக்கையாளர்களுக்கு வத்திக்கானுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பான சுற்றுலா

4. காரித்தாஸ் பணிகளுக்கு இஸ்பானிய ஆயர்கள் பேரவை வழங்கியுள்ள 60 இலட்சம் யூரோக்கள்

5. ஐ.நா. மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் - மன்னாரு ஆயர்

6. Libreville அமைதி ஒப்பந்தம் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் முற்றிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - ஆப்ரிக்க ஆயர்கள்

7. Ulema இஸ்லாமிய அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நல்லுறவை வளர்த்திருப்பது நாட்டுக்கு நல்லது பாகிஸ்தான் அமைச்சர்

8. சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகளே - UNICEFன் தலைவர்

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பில் செலவிடவிருக்கும் இறுதி நாட்கள்

பிப்.22,2013. திருஅவையின் தலைமைப் பொறுப்பில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் செலவிடவிருக்கும் இறுதி நாட்களைக் குறித்த விவரங்களை, திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருள்தந்தை Federico Lombardi செய்தியாளர்களிடம் இவ்வியாழனன்று வெளியிட்டார்.
தற்போது வத்திக்கான் அதிகாரிகளுடன் ஒரு வாரமாக தவக்கால தியானத்தில் ஈடுபட்டுள்ள திருத்தந்தை, இச்சனிக்கிழமையன்று தன்னுடன் தியானம் செய்வோருக்கு உரை ஒன்றை வழங்குவார் என்றும், அதன்பின் அதேநாள் அவர் இத்தாலிய அரசுத் தலைவர் Giorgio Napolitano அவர்களைச் சந்திப்பார் என்றும் அருள்தந்தை Lombardi அறிவித்தார்.
பிப்ரவரி 24, ஞாயிறன்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வழங்கும் இறுதி நண்பகல் மூவேளை செப உரை நிகழும். பிப்ரவரி 27, வருகிற புதனன்று, புனித பேதுரு பசிலிக்காப் பேராலய வளாகத்தில் அவர் வழங்கும் இறுதி புதன் பொது மறைபோதகம் வழக்கமான மறைபோதக முறையிலேயே அமையும்.
திருத்தந்தை வத்திக்கானில் செலவிடும் இறுதி நாளான பிப்ரவரி 28, வியாழனன்று அவர் வத்திக்கானில் தற்போது தங்கியுள்ள கர்தினால்கள் அனைவரையும் தனிப்பட்ட முறையில் சந்திப்பார் என்றும், அவர்களுக்கு உரை எதுவும் வழங்கப்போவதில்லை எனவும் அருள்தந்தை Lombardi தெளிவுபடுத்தினார்.
வியாழன் மாலை 5 மணிக்கு திருத்தந்தை காஸ்தல் கந்தோல்ஃபோவுக்குப் புறப்படுவார். அவரை அங்கு வரவேற்க அந்நகர மேயர் உட்பட பல உயர் அதிகாரிகள் காத்திருப்பர்.
பிப்ரவரி 28ம் தேதி இரவு எட்டு மணிக்கு திருஅவையின் தலைமைப் பீடம் காலியான பிறகு, கர்தினால்கள் கூடி Conclave என்ற சிறப்பு அவை துவங்கும் நாள் குறித்து தீர்மானம் செய்வர் என்றும் திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Lombardi கூட்டத்தின் இறுதியில் தெளிவுபடுத்தினார்.

2. இந்தியாவில் பிப்ரவரி 22 திருத்தந்தைக்கென செபிக்கும் நாள்

பிப்.22,2013. தன் தலைமைப் பொறுப்பைத் துறக்கவிருக்கும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களுக்கும், புதிதாகத் தேர்ந்தேடுக்கப்படவிருக்கும் திருத்தந்தைக்காகவும் பிப்ரவரி 22, இவ்வெள்ளியன்று கொண்டாடப்பட்ட புனித பேதுருவின் தலைமைப்பீடத் திருநாளன்று சிறப்பான முறையில் செபிக்கும்படி இந்திய ஆயர்கள் பேரவையின் தலைவர் கர்தினால் Oswald Gracias வேண்டுகோள் விடுத்துள்ளார்.
திருத்தந்தையின் அறிவிப்பு நம்மை அதிர்ச்சியிலும் வருத்தத்திலும் ஆழ்த்தினாலும், அவரது எட்டு ஆண்டுகாலச் சேவையை இறைவன் ஆசீர்வதிக்குமாறு வேண்டிக்கொள்வது நமது கடமை என்று கர்தினால் Gracias இப்புதனன்று வெளியிட்ட மடலில் குறிப்பிட்டுள்ளார்.
"நான் எந்நாளும் உங்களுடன் இருக்கிறேன்" என்று கூறிய இயேசுவின் வார்த்தைகளில் நம்பிக்கை கொண்டு, இறை ஆவியாரின் தூண்டுதலோடு, கர்தினால்களின் Conclave சிறப்பு அவை அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று செபிக்குமாறு கர்தினால் Gracias அழைப்பு விடுத்துள்ளார்.
பிப்ரவரி 22ம் தேதியோ அல்லது மக்களுக்கு வசதியான ஒரு நாளிலோ அனைவரும் ஒன்று கூடி நற்கருணை ஆண்டவர் முன் செபங்களை எழுப்புமாறு கர்தினால் Gracias அவர்களின் மடல் அழைப்பு விடுக்கிறது.

3. பன்னாட்டுப் பத்திரிக்கையாளர்களுக்கு வத்திக்கானுக்குள் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு சிறப்பான சுற்றுலா

பிப்.22,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்கள் பிப்ரவரி 11ம் தேதி தெரிவித்த முடிவையடுத்து, தொடர்ந்து பத்து நாட்களுக்கும் மேலாக, உலக மக்களுக்கு செய்திகளை வழங்கிவரும் பன்னாட்டுப் பத்திரிக்கையாளர்கள் அடங்கிய ஒரு கூட்டத்திற்கு திருப்பீட பத்திரிகை அலுவலகமும், சமூகத் தொடர்பு அவையும் இணைந்து வத்திக்கானுக்குள் ஒரு சிறப்பான சுற்றுலாவை இப்புதனன்று ஏற்பாடு செய்திருந்தது.
புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் கர்தினால்கள் தங்கவிருக்கும் புனித மார்த்தா இல்லத்தையும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தன் மறைந்த வாழ்வைத் துவங்கவிருக்கும் திருஅவையின் அன்னை மரியா துறவு மடத்தையும் பத்திரிக்கையாளர்கள் பார்வையிட்டனர்.
Conclave கர்தினால்கள் அவை நடைபெறும் Sistine சிற்றாலயத்திற்கு அருகே அமைந்துள்ள புனித மார்த்தா இல்லம், திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் அவர்கள் பதவியில் இருந்தபோது கட்டப்பட்டது. இந்த இல்லத்தைச் சுற்றி மின்காந்த பாதுகாப்பு வளையம் அமைந்துள்ளது. Conclave அவை நடைபெறும் நேரத்தில் கர்தினால்களுக்கும் வெளி உலகிற்கும் எவ்வித தொடர்பும் இல்லாமல் இருக்கும்வண்ணம் இந்தப் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.
புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திற்குப் பின்புறம் உள்ள அமைதியான ஒரு பூங்காவில் அமைந்துள்ள வத்திக்கான் வானொலியின் முக்கிய அலுவலகத்தின் அருகில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தங்கப்போகும் துறவு மடம் அமைந்துள்ளது.

4. காரித்தாஸ் பணிகளுக்கு இஸ்பானிய ஆயர்கள் பேரவை வழங்கியுள்ள 60 இலட்சம் யூரோக்கள்

பிப்.22,2013. கடந்த ஆண்டு காரித்தாஸ் பணிகளுக்கு 60 இலட்சம் யூரோக்கள், அதாவது, 43 கோடியே 20 இலட்சம் ரூபாய், அளித்துள்ளதாக இஸ்பானிய ஆயர்கள் பேரவை அறிவித்துள்ளது.
2007ம் ஆண்டிலிருந்து இஸ்பானிய அரசியல் சட்டத்தில் ஏற்பட்ட ஒரு மாற்றத்தினால், வரிப்பணம் செலுத்துவோர் கோவில்களுக்கென தங்கள் வருமானத்தைச் செலுத்தும் புதிய முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. அவ்வாண்டிலிருந்து கடந்த ஐந்து ஆண்டுகளாக, கோவிலுக்கென தாராளமாக வழங்குவோர் எண்ணிக்கை பத்து இலட்சமாக அதிகரித்துள்ளது என்று ஆயர்கள் பேரவை கூறியுள்ளது.
ஸ்பெயின் நாட்டில் உள்ள 68 மறைமாவட்டங்களில், ஏறத்தாழ 6000 பங்குகள் உள்ளன. இவற்றில் காரித்தாஸ் பணிகளுக்கென 65000க்கும் அதிகமான தன்னார்வத் தொண்டர்கள் உழைக்கின்றனர் என்று கூறப்படுகிறது.
அண்மையப் பொருளாதாரச் சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள பல குடும்பங்களுக்கு உதவிகள வழங்குவதில் காரித்தாஸ் அமைப்பு தீவிரமாக பணிகள் செய்து வருகிறது என்றும் இஸ்பானிய ஆயர்கள் பேரவை கூறியுள்ளது.

5. ஐ.நா. மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் - மன்னாரு ஆயர்

பிப்.22,2013. இலங்கையின் வடகிழக்குப் பகுதியில் இராணுவ ஆக்கிரமிப்பு குறைக்கப்படவேண்டும் என்றும், ஐ.நா. மனித உரிமைகள் அவையின் பரிந்துரைகளை இலங்கை அரசு தீவிரமாகச் செயல்படுத்த வேண்டும் என்றும் மன்னாரு ஆயர் இராயப்பு ஜோசப் தலைமையில் 133 அருள் பணியாளர்கள் ஐ.நா. மனித உரிமைகள் அவைக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
இம்மாதம் 25 முதல் மார்ச் 22 வரை ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் அவையின் 22வது அமர்வின் போது, இலங்கையில் தமிழ் மக்கள் சந்தித்துவரும் பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் விருப்பத்துடன் இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டுப் போரின்போது கைது செய்யப்பட்டு எவ்வித விசாரணையும் இன்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கவும், காணாமற் போனவர்களைப் பற்றிய உண்மைகளைத் தெரிவிக்கவும் இலங்கை அரசை ஐ.நா. அவை வற்புறுத்த வேண்டும் என்று இம்மடலில் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐ.நா. மனித உரிமைகள் அவை கூறிய முடிவுகளை இலங்கை அரசு எவ்வளவு தூரம் கடைபிடித்துள்ளது என்பது பற்றிய நடுநிலையான ஓர் ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் இம்மடலில் கோரப்பட்டுள்ளது.

6. Libreville அமைதி ஒப்பந்தம் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் முற்றிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் - ஆப்ரிக்க ஆயர்கள்

பிப்.22,2013. இவ்வாண்டு சனவரி 11ம் தேதி மத்திய ஆப்ரிக்காவில் நிறைவேற்றப்பட்ட Libreville அமைதி ஒப்பந்தம் மத்திய ஆப்ரிக்க நாடுகளில் முற்றிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று ஆப்ரிக்க ஆயர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
போராடும் இனங்கள் ஆயுதங்களைக் களைந்து, அமைதியைத் தேடவும், இன மோதல்களால் துன்புறும் மக்களின் வேதனைகள் முடிவுக்கு வரவும் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று மத்திய ஆப்ரிக்க ஆயர்கள் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய ஆப்ரிக்காவின் பெரும்பான்மையான பகுதிகள் போராடும் வன்முறை கும்பல்களின் கைவசம் இருப்பதால், அங்கு மருத்துவமனைகள், பள்ளிகள் பெரிதும் சேதமடைந்துள்ளன என்றும், பெண்கள் தினமும் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாகின்றனர் என்றும் ஆயர்கள் கூறியுள்ளனர்.
பெரும் கலவரங்கள் வெடிப்பதற்கு முன், அனைத்துலக நாடுகள் தலையிட்டு பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவேண்டும் என்றும் ஆயர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

7. Ulema இஸ்லாமிய அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நல்லுறவை வளர்த்திருப்பது நாட்டுக்கு நல்லது பாகிஸ்தான் அமைச்சர்

பிப்.22,2013. பாகிஸ்தானில் ஒற்றுமையை வளர்க்க பாடுபடும் Ulema இஸ்லாமிய அமைப்புடன் பாகிஸ்தான் அரசு நல்லுறவை வளர்த்திருப்பது நாட்டுக்கு நன்மை விளைவிக்கும் ஒரு முயற்சி என்று பாகிஸ்தான் அரசில் பணிபுரியும் கிறிஸ்தவத் தலைவர் ஒருவர் கூறினார்.
"வேற்றுமையின் நடுவே இணைந்து வாழ்வது" என்ற தலைப்பில் இப்புதனன்று இஸ்லாமபாதில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தான் நாட்டு நல்லிணக்கத் துறையின் தலைவர் Paul Bhatti இவ்வாறு கூறினார்.
பாகிஸ்தானில் கடந்த பத்தாண்டுகளாக நடைபெற்றுவரும்  பல்வேறு வன்முறைகளின் விளைவாக, தன் சகோதரர் Shahbaz Bhatti  உட்பட, 30,000க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர் என்று கூறிய அமைச்சர் Paul Bhatti, வெறுப்பை வளர்க்கும் மனப்பான்மையை நாட்டிலிருந்து வேரோடு களைவது அனைவரின் கடமை என்று வலியுறுத்தினார்.
Ulema போன்ற இஸ்லாமிய அமைப்புக்கள் வன்முறைக்கு எதிராக எப்போதும் போராடி வருகின்றனர் என்று கூறிய அமைச்சர், நாட்டில் வறுமையும், கல்வியின்மையும் நீங்கினால் பரந்த மனப்பான்மையும் வளரும் என்று எடுத்துரைத்தார்.

8. சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகளே - UNICEFன் தலைவர்

பிப்.22,2013. சிரியாவில் தொடர்ந்துவரும் போரினால் மிக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் குழந்தைகளே என்று இத்தாலியில் இயங்கிவரும் ஐ.நா.வின் கல்வி கலாச்சார அமைப்பான UNICEFன் தலைவர் James Guerrera கூறினார்.
சிரியாவின் போர் முடிவின்றி தொடர்ந்து வருவது ஒரு தலைமுறையையே அழிக்கும் ஆபத்து உள்ளதென்று கூறிய Guerrera, இந்நாட்டின் குழந்தைகளுக்கு உடனடி உதவிகள் செய்யாவிடில் அவர்கள் வாழ்நாள் முழுவதும் மனக் காயங்களைத் தாங்கி வாழ்வார்கள் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
ஏனைய பிறரன்பு அமைப்புக்களுடன் சேர்ந்து UNICEF அமைப்பு ஆயிரக்கணக்கான மக்களுக்கு உதவிகள் செய்து வந்தாலும், அந்நாட்டின் தேவைகளை நிறைவேற்ற இன்னும் மிக அதிகமான நிதியும் பணியாளர்களும் தேவைப்படுகின்றனர் என்று Guerrera எடுத்துரைத்தார்.
தற்போது நிலவிவரும் குளிர்காலத்தில் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது முகாம்களில் தங்கியுள்ள குழந்தைகளே என்பதையும் UNICEF தலைவர் வருத்தத்துடன் அறிவித்தார்.

Friday 22 February 2013

ROBERT JOHN KENNEDY: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

ROBERT JOHN KENNEDY: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்: அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் என்பது , எங்கிருந்து வருகின்றது என்பது எதிரி நாட்டுக்குத் தெரியாமலேயே அந்த ...

ROBERT JOHN KENNEDY: Feast of the Chair of St. Peter the Apostle, on Fe...

ROBERT JOHN KENNEDY: Feast of the Chair of St. Peter the Apostle, on Fe...: Feast of the Chair of St. Peter the Apostle, on February 22 St Peter having triumphed over the devil in the East, pursued him to Rome ...

Feast of the Chair of St. Peter the Apostle, on February 22

Feast of the Chair of St. Peter the Apostle, on February 22

St Peter having triumphed over the devil in the East, pursued him to Rome in the person of Simon Magus. He who had formerly trembled at the voice of a poor maid now feared not the very throne of idolatry and superstition. The capital of the empire of the world, and the centre of impiety, called for the zeal of the prince of the apostles. God had established the Roman empire, and extended its dominion beyond that of any former monarchy, for the more easy propagation of his gospel. Its metropolis was of the greatest importance for this enterprise. St. Peter took that province upon himself; and repairing to Rome, there preached the faith and established his episcopal chair, whose <successors> the bishops of Rome have been accounted in all ages. That St. Peter founded that church by his <preaching> is expressly asserted by Caius, a priest of Rome under Pope Zephyrinus; who relates also that his body was then on the Vatican Hill, and that of his fellow-labourer St. Paul on the Ostian Road. That he and St. Paul planted the faith at Rome, and were both crowned with martyrdom at the same time, is affirmed by Dionysius, Bishop of Corinth, in the second age. St. Irenaeus, who lived in the same age, calls the church at Rome "the greatest and most ancient church, founded by the two glorious apostles, Peter and Paul." Eusebius, in several places, mentions St. Peter's being at Rome, and the several important translations of this apostle in that city. Not to mention Origen, Hegesippus, Arnobius, St. Ambrose, St. Austin, St. Jerome, St. Optatus, Orosius, and others on the same subject. St. Cyprian calls Rome the <chair> of St. Peter (as Theodoret calls it his <throne>), which the general councils and ecclesiastical writers, through every age and on every occasion, repeat. That St. Peter at least preached in Rome, founded that church, and died there by martyrdom under Nero are facts the most incontestable by the testimony of all writers of different countries who lived near that time; persons of unquestionable veracity, and who could not but be informed of the truth in a point so interesting, and of its own nature so public and notorious, as to leave them no possibility of a mistake. This is also attested by monuments of every kind; also by the prerogatives, rights, and privileges which that church enjoyed from those early ages in consequence of this title.

It was an ancient custom, as Cardinal Baronius and Thomassin show by many examples, observed by churches to keep an annual festival of the consecration of their bishops. The feast of the chair of St. Peter is found in ancient Martyrologies, as in one under the name of St. Jerome, at Esternach, copied in the time of St. Willibrord, in 720. Christians justly celebrate the founding of this mother-church, the centre of catholic communion, in thanksgiving to God for his mercies on his church, and to implore his future blessings.

Christ has taught us, in the divine model of prayer which he has delivered to us, that we are bound to recommend to him, before all other things, the exaltation of his own honour and glory, and to beg that the kingdom of his holy grace and love be planted in all hearts. If we love God above all things, and with our whole hearts, or have any true charity for our neighbour, this will be the centre of all our desires, that God be loved and served by all his creatures, and that he be glorified, in the most perfect manner, in our own souls. By placing this at the head of our requests, we shall most strongly engage God to crown all our just and holy desires. As one of his greatest mercies to his church, we most earnestly beseech him to raise up in it zealous pastors, eminently replenished with his Spirit, with which he animated his apostles.

இலங்கையில் நடைபெறும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கி நடைபயணம்!

இலங்கையில் நடைபெறும் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி லண்டனிலிருந்து ஜெனீவா நோக்கி நடைபயணம்!


சிறீலங்கா சிங்கள பெளத்த பேரினவாத ஆட்சியாளர்களால் இன அழிப்புக்குள்ளான தமிழ் மக்களுக்காகன நீதி கோரும் நடைபயணம் நேற்று (20.02.2013) லண்டனில் இருந்து ஜெனீவாவில் அமைந்துள்ள அக்கிய நாடுகள் சபை நோக்கி ஆரம்பமானது.
இலங்கைத் தீவில் 1948 ஆம் ஆண்டு முதல் தமிழினப் படுகொலைகள் திட்டமிட்ட ரீதியில் நடைபெற்று வந்தாலும் 2008ஆம் , 2009 ஆம் ஆண்டுகளில் பாரியளவில் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டு, தமிழர்களின் நிலங்கள், வளங்கள், மற்றும் சொத்துக்கள் என்பன சிறீலங்கா அரசாலும், அரச படைகளாலும் ஆக்கிரமுக்கப்பட்டுள்ள நிலையிலும் சர்வதேசமும், சர்வதேசங்களுக்கு தலைமை தாங்கும் ஐக்கிய நாடுகள் சபையும் ஆக்கபூர்வமான எந்த செயற்பாடும் இன்றி இருப்பதை சுட்டிக்காட்டி, தமிழர்களுக்கான நீதியைக் கோரும் மனித நேய நடைபயணமாக இந்த நடைபயணம் அமைந்துள்ளது.
நேற்று (20.02.2013) புதன்கிழமை பிற்பகல் 2:00 மணிக்கு பிரித்தானிய பிரதமரின் காரியாலயத்திற்கு முன்பாக கூடிய மக்கள் மத்தியில் தனது நடைபயணம் தொடர்பாக தமிழ் இளைஞர் சத்தி அவர்கள் எடுத்துரைத்தார். தனது இந்த திடீர் முடிவும் , குறுகிய கால நடைபயணமும் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தினாலும் இந்த கால கட்டத்தில் இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் அவசியமாவதால் அதனை இவ்வாண்டு யாரும் செய்யாத நிலையிலேயே தான் நடக்க தீர்மானித்ததாகவும் சொன்னார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர் தனது இந்த தனிப்பட்ட செயற்பாட்டிற்கு மக்களினதும், மக்கள் அமைப்புக்களினதும் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தரும் உற்சாகமே தன்னை இந்த குறுகிய கால எல்லைக்குள் ஐ.நா வரை கொண்டு செல்லும் என்றும் தனது உறுதிக்கும், தனது நடைபயணம் வெற்றிகரமாக குறித்த தினத்தில் நிறைவுபெற மாவீரர்களதும், போரில் கொல்லப்பட்ட மக்களது தியாகங்களும் தனக்கு எப்போதும் துணையாக இருக்கும் என்றும் அவர் சொன்னார்.
அத்தோடு தான் 4 கோரிக்கைகளை முன்வைத்து இந்த நடைபயணத்தை மேற்கொள்வதாகவும் அக் கோரிக்கைகளையும் மக்கள் முன் எடுத்து விளக்கி அகவணக்கம் செலுத்தி பின் அங்கு குழுமியிருந்த மக்களிடம் கை கொடுத்து விடைபெற்று தனது நடைபயணத்தை சரியாக பிற்பகல் 2:30 மணிக்கு ஆரம்பித்தார்.
அந்த நான்கு கோரிக்கைகளும்:
1. இலங்கைத் தீவில் பாரியளவில் இனப்படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதியை வழங்கும் நோக்கில் சர்வதேச சுயாதீன விசாரணை ஐ.நா வால் நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
2. 1948 ஆம் ஆண்டு முதல் தொடர்ச்சியாக இனவழிப்பிற்கு உள்ளாக்கப்பட்டு வரும் தமிழர்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வை காண சர்வதேசத்தின் மேற்பார்வையில் உலகெங்கும் வாழும் இலங்கைத் தமிழர்களிடம் வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டும்.
3. கைது, துன்புறுத்தல், கற்பழிப்பு, கொலை என இராணுவ ஆக்கிரமிப்புக்குள் வாழும் தமிழர்களின் உயிருக்கும், வாழ்வாதாரத்திற்கும் ஐக்கிய நாடுகள் சபை ஆவன செய்யவேண்டும்.
4. தமிழர் தாயகத்தில் இருக்கின்ற இராணுவ முகாம்கள் அகற்றப்பட்டு தமிழ் மக்கள் அவரவர் சொந்த இடங்களில் குடியமர்த்த ஐக்கிய நாடுகள் சபை ஆவன செய்யவேண்டும்.walk-london2geneeva2013-01
walk-london2geneeva2013-02
walk-london2geneeva2013-03
walk-london2geneeva2013-04
walk-london2geneeva2013-05
walk-london2geneeva2013-06
walk-london2geneeva2013-07
walk-london2geneeva2013-08
walk-london2geneeva2013-09
walk-london2geneeva2013-10
walk-london2geneeva2013-11
walk-london2geneeva2013-12
walk-london2geneeva2013-13

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்

அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் என்பது, எங்கிருந்து வருகின்றது என்பது எதிரி நாட்டுக்குத் தெரியாமலேயே அந்த எதிரி நாட்டிலுள்ள இலக்குகளைத் தாக்கி நிர்மூலம் செய்யக்கூடிய சக்திமிக்க ஆயுதமாகும். அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா, பிரான்ஸ், பிரிட்டன், சீனா ஆகிய ஐந்து நாடுகளில் இந்தக் கப்பல்கள் இருந்தன. இந்த நாடுகளின் பட்டியலில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. இந்த அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை எந்த நாடும் விற்பது கிடையாது. அந்தந்த நாடுகளே தயாரிக்கின்றன. டீசல் எஞ்சின் மூலம் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள் தொடர்ந்து பல நாள்கள் நீருக்குள் மூழ்கியபடி செல்ல இயலாது. ஏனெனில் அடிக்கடி டீசலை நிரப்ப வேண்டும். அதோடு, நீருக்குள் இருக்கும்போது டீசல் எஞ்சின் இயக்கப்படுவதில்லை. அதோடு டீசல் எஞ்சின்
இயங்குவதற்கு பிராணவாயு தேவை. அதனால் அது நீருக்கு வெளியே வர வேண்டும். அப்படி வெளியே வந்து அதனை இயக்கும்போது அது சப்தத்தை ஏற்படுத்துவதால் எதிரிகளால் அவற்றை எளிதில் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் அணுசக்திப் பொருள் அடங்கிய அணுஉலை ஒன்றைப் பொருத்திவிட்டால் போதும். அதன்பின்னர் 10 அல்லது 30 ஆண்டுகளுக்கு எரிபொருள் பிரச்சனையே இருக்காது. இதனால் இது நீருக்குள் இருந்தபடியே உலகைப் பலமுறை சுற்றி வரலாம். அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல், நீரில் இயங்கும்போது ஒலி எழுப்பாது. இது இயங்குவதற்கு காற்றும் தேவையில்லை. மேலும், அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலில் 12 நீண்டதூர ஏவுகணைகள் இடம்பெறும். ஒவ்வொன்றின் முகப்பிலும் பல அணுகுண்டுகளைப் பொருத்த முடியும். அமெரிக்க ஐக்கிய நாடு, இரஷ்யா போன்ற நாடுகளிடமுள்ள அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்கள், ஐந்தாயிரம் கிலோ மீட்டர்வரை சென்று தாக்கும் திறன் கொண்டவை. 
 

Catholic News in Tamil - 21/02/13

1. Conclave கர்தினால்கள் அவை பற்றிய திருஅவைச் சட்டங்களில் மாற்றம்

2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் செலவிடும் இறுதி நாள் நேரடி ஒளிபரப்பு

3. Conclave கர்தினால்கள் அவையில் ஆசிய கர்தினால்களில் ஒருவர் இடம் பெறப்போவதில்லை

4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய 14 கட்டுரைகள் ஒரு நூலாக விரைவில் வெளியாகும்

5. திருத்தந்தை ஆற்றிய உரைகளைக் கேட்டபின்னர், கடவுள் நம்பிக்கையற்ற தனக்கு கிறிஸ்தவத்தின் மீது ஓர் ஈர்ப்பு உருவானது - Lenin Raghuvanshi

6. திருத்தந்தையின் முடிவு, பதவி மீது பற்றற்ற நிலைபற்றிய நல்லதொரு பாடம் - புத்தமதப் பேராசிரியர்

7. "அகில உலக தினை ஆண்டு" துவக்க விழா

8. கொசுக்கள், வேதியல் பொருட்களுக்கு விரைவில் பழகிக் கொள்வதால் மருந்துகள் பயனற்று போகின்றன

------------------------------------------------------------------------------------------------------

1. Conclave கர்தினால்கள் அவை பற்றிய திருஅவைச் சட்டங்களில் மாற்றம்

பிப்.21,2013. புதியத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கும் Conclave கர்தினால்கள் அவையை எப்போது துவக்கலாம் என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் திருஅவைச் சட்டமாற்றம் ஒன்றை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வெளியிடலாம் என்று திருப்பீடப் பேச்சாளர் அருள்தந்தை Federico Lombardi கூறினார்.
Conclave எப்போது துவங்கும் என்று பத்திரிக்கையாளர்கள் மீண்டும் மீண்டும் எழுப்பி வரும் கேள்விக்கு விடையளிக்கும்வண்ணம் இப்புதனன்று பேசிய அருள்தந்தை Lombardi,  கர்தினால்களின் கூட்டத்தைப் பற்றிய திருஅவைச் சட்டங்களில் திருத்தந்தை ஒரு சில மாற்றங்களைச் செய்வார் என்று எதிர்பார்க்கலாம் என்பதை மட்டும் தெளிவுபடுத்தினார்.
திருத்தந்தை இந்த மாற்றங்களை வெளியிடும்போது, Conclave கூடவேண்டிய நாள், இன்னும் Conclave குறித்த சில கேள்விகள் பற்றிய தெளிவுகள் கிடைக்கும் என்று அருள்தந்தை Lombardi எடுத்துரைத்தார்.


2. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் செலவிடும் இறுதி நாள் நேரடி ஒளிபரப்பு

பிப்.21,2013. பிப்ரவரி 28, வருகிற வியாழன், திருத்தந்தை 16ம் பெனடிக்ட் வத்திக்கானில் செலவிடும் இறுதி நாள் என்பது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள் என்பதால் அன்று திருத்தந்தை மேற்கொள்ளும் அனைத்து நிகழ்வுகளையும் உலக மக்கள் காணும்படி, அவற்றை ஒளிப்பதிவு செய்யும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று வத்திக்கான் தொலைக்காட்சி நிறுவன இயக்குனர் கூறினார்.
பிப்ரவரி 28ம் தேதி மாலை 5 மணி முடிய திருத்தந்தை கலந்துகொள்ளும் அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்ய 26 காமிராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று தொலைக்காட்சி நிறுவன இயக்குனர் பேரருள் தந்தை Edoardo María Viganó கூறினார்.
திருத்தந்தையின் தனிமனித சுதந்திரத்திற்கு எவ்வகையிலும் பாதிப்பை உருவாக்காத வண்ணம் இந்த முக்கிய நிகழ்வு பதிவு செய்யப்படும் என்றும், இதனைக் காண உலக மக்கள் பலரும் ஆவலாக இருப்பதை உணர முடிகிறது என்றும் அருள்தந்தை Viganó எடுத்துரைத்தார்.
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நாளை பிற்காலத்தில் ஆய்வு செய்பவர்களுக்கும், வரலாற்று ஆர்வலர்களுக்கும் பயன்படும் என்ற எண்ணத்தில் இந்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் அருள்தந்தை Viganó விளக்கம் அளித்தார்.
பிப்ரவரி 28ம் தேதி, வியாழனன்று மாலை 5 மணி அளவில் வத்திக்கானில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்படும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், திருத்தந்தையரின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தல் கந்தோல்ஃபோவை அடைந்ததும், அங்கு, அல்பானோ மறைமாவட்டத்தின் ஆயர் Marcello Semeraro வும், அந்நகர மக்களும் திருத்தந்தையை வரவேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


3. Conclave கர்தினால்கள் அவையில் ஆசிய கர்தினால்களில் ஒருவர் இடம் பெறப்போவதில்லை

பிப்.21,2013. திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்கக் கூடவிருக்கும் Conclave கர்தினால்கள் அவையில், 117 கர்தினால்களுக்குப் பதில் 116 பேரே பங்கேற்பர் என்று ஆசிய செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்தோனேசியாவின் ஜகார்த்தா உயர்மறைமாவட்டத்தின் முன்னாள் பேராயரும், ஆசிய கர்தினால்களில் ஒருவருமான கர்தினால் Julius Riyadi Darmaatmadja, உடல்நிலை காரணமாக Conclave அவையில் இடம் பெறப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
78 வயதான கர்தினால் Darmaatmadja, பார்வைத்திறன் மிகவும் குறைந்த நிலையில் இருப்பதால், Conclave அவையில் வழங்கப்படும் முக்கிய ஆவணங்களை வாசிக்க இயலாமல் இருப்பதை, தான் எடுத்த முடிவுக்கு முக்கிய காரணமாகக் கூறியுள்ளார்.
உடல்நிலை காரணமாக ஒருவர் பணியிலிருந்து விலகிக் கொள்வதை தான் நேரடியாக உணர்ந்தவர் என்ற முறையில், திருத்தந்தை அறிவித்த முடிவையும் தன்னால் புரிந்துகொள்ள முடிகிறது என்று கர்தினால் Darmaatmadja எடுத்துரைத்தார்.


4. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் எழுதிய 14 கட்டுரைகள் ஒரு நூலாக விரைவில் வெளியாகும்

பிப்.21,2013. திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருஅவையின் தலைமைப் பொறுப்பை ஏற்பதற்குமுன், 1972ம் ஆண்டு முதல் 2005ம் ஆண்டு வரை மனித இயலை மையமாக்கி, அவர் எழுதிய 14 கட்டுரைகள் ஒரு நூலாக விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Joseph Ratzinger ஒரு குருவாக, பேராயராக, பின்னர் கர்தினாலாக பணியாற்றிய ஆண்டுகளில் அகில உலக கத்தோலிக்க இதழான "Communio"வில் வெளியான அவரது கட்டுரைகள், மற்றும் உரைகளின் தொகுப்பிலிருந்து 14 கட்டுரைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
Hans Urs von Balthasar, Henri de Lubac, Jean-Luc Marion மற்றும் Joseph Ratzinger ஆகிய இறையியல் அறிஞர்கள் இணைந்து "Communio" என்ற இறையியல் இதழை 1972ம் ஆண்டு உருவாக்கினர்.
ஆண்டுக்கு நான்கு முறை வெளியாகும் இவ்விதழில் திருஅவை, மனித இயல், இறையியல் மறுமலர்ச்சி ஆகிய தலைப்புக்களில் கட்டுரைகள் வெளியாகியுள்ளன.


5. திருத்தந்தை ஆற்றிய உரைகளைக் கேட்டபின்னர், கடவுள் நம்பிக்கையற்ற தனக்கு கிறிஸ்தவத்தின் மீது ஓர் ஈர்ப்பு உருவானது - Lenin Raghuvanshi

பிப்.21,2013. ஆன்மீகத் தலைவரான திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் படிப்பினைகளுக்கு செவிமடுப்பது மனித சமுதாயத்தின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியம் என்று மனித நல சிந்தனையாளரான ஓர் இந்தியர் கூறியுள்ளார்.
மனித உரிமைகள் பற்றிய கண்காணிப்புக் கழகம் என்ற அமைப்பை இந்தியாவின் வாரணாசியில் நடத்திவரும் மனித நல சிந்தனையாளர் Lenin Raghuvanshi, ஆசிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
தான் இந்து மதத்தில் பிறந்தவர் என்றாலும், அம்மதத்தில் சாதி முறைகள் பெரிதும் வலியுறுத்தப்பட்டு, தலித் மக்கள் தீண்டத்தகாதவர்கள் என்பதைக் கூறியதால் தான் இந்து மதத்தைவிட்டு விலகியதாகக் கூறிய Raghuvanshi, மதங்கள் மீது தனக்கிருந்த வெறுப்பு திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களின் ஒரு சில உரைகளைக் கேட்ட பிறகு குறைந்தது என்று கூறினார்.
மனித உரிமைகளைப்பற்றி பேசுவதற்கு முன், ஒவ்வொரு மனிதருக்கும் உரிய அடிப்படை மதிப்பை அளிக்கவேண்டும் என்று ஐ.நா. அவையில் திருத்தந்தை பேசியது, தன்னைப் பெரிதும் கவர்ந்ததென்று கூறிய Raghuvanshi, திருத்தந்தை ஆற்றிய பல்வேறு உரைகளைக் கேட்டபின்னர் கடவுள் நம்பிக்கையற்ற தனக்கு கிறிஸ்தவத்தின் மீது ஓர் ஈர்ப்பு உருவானது என்பதையும் எடுத்துரைத்தார்.
அன்பும் பரிவும் நீதியோடு இணைந்து செல்லவேண்டும் என்று திருத்தந்தை தன் உரைகளில் சொல்லிவருவது கிறிஸ்துவின் மீது தனக்குள்ள மதிப்பைக் கூட்டியுள்ளது என்றும் Raghuvanshi கூறினார்.


6. திருத்தந்தையின் முடிவு, பதவி மீது பற்றற்ற நிலைபற்றிய நல்லதொரு பாடம் - புத்தமதப் பேராசிரியர்

பிப்.21,2013. பதவி மீது பற்றற்ற நிலையை உலகிற்கு எடுத்துரைக்கும் வண்ணம் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் தலைமைப் பொறுப்பை விட்டு விலகுவது உலகிற்கு நல்லதொரு பாடம் என்று புத்த மதத்தைச் சார்ந்த பேராசிரியர் ஒருவர் கூறினார்.
தன் வலுவின்மையை உலகிற்கு பறைசாற்றி, ஒரு தலைவர் விலகுவது அனைவருக்குமே வழிகாட்டுதலாய் அமைந்துள்ளது என்று தாய்லாந்தைச் சேர்ந்த புத்தமத அறிஞரும் பேராசிரியருமான Channarong Boonnoon கூறினார்.
தனி மனிதர் மீது செலுத்தப்படும் கவனம், திருஅவை மீது திரும்ப வேண்டுமென்று திருத்தந்தை அறிவித்தது, தனி மனிதரின் எல்லைகளை நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறது என்று பேராசிரியர் Boonnoon சுட்டிக் காட்டினார்.
திருத்தந்தையின் முடிவு தாய்லாந்து கிறிஸ்தவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினாலும், அவரது பணிவும், செப வாழ்வும் மக்களுக்கு ஓர் உந்து சக்தியாக உள்ளது என்று  ராஜ்ஜபுரி (Rajchaburi) மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்தந்தை Wongsawad Kaewsaenee கூறினார்.


7. "அகில உலக தினை ஆண்டு" துவக்க விழா

பிப்.21,2013. உணவற்ற நிலையால் உருவாகும் நோய்கள், பட்டினி, வறுமை ஆகிய குறைகளை நீக்க தினை என்ற தானிய வகை முக்கிய பங்காற்ற முடியும் என்று ஐ.நா.வின் உணவு மற்றும் வேளாண்மை நிறுவனமான FAOவின் தலைமை இயக்குனர் José Graziano da Silva கூறினார்.
"அகில உலக தினை ஆண்டு" என்ற பெயரில் இப்புதனன்று நியூயார்க் நகரில் நடைபெற்ற துவக்க விழாவில், ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன், பொலிவியாவின் அரசுத் தலைவர் Evo Morales, பெரு நாட்டின் அரசுத் தலைவரின் மனைவி Nadine Heredia Alarcón de Humala ஆகியோர் கலந்துகொண்டனர்.
பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த தினை, மக்களின் பசியைப் போக்கும் ஓர் எளிய, அதிக விலையற்ற தானிய வகை என்று FAO இயக்குனர் எடுத்துரைத்தார்.
4000 ஆண்டுகளுக்கு முன்னரே தென் அமெரிக்கப் பழங்குடியினர் மத்தியில் பழக்கத்தில் இருந்த இந்த தானிய வகையினால் மக்கள் மிகுந்த நலமுடன் வாழ்ந்தனர் என்ற வரலாற்று குறிப்புக்களும் இந்த விழாவில் கூறப்பட்டன.
பல்வேறு சுற்றுச்சூழலுக்கும், காலநிலை மாற்றங்களுக்கும் ஈடுகொடுத்து வளரக்கூடிய தானிய வகை தினையென்றும், தற்போது ஆப்ரிக்காவின் கென்யா, மாலி நாடுகளில் இதன் வளர்ச்சி நம்பிக்கை அளிக்கிறது என்றும் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் கூறினார்.
"அகில உலக தினை ஆண்டில்" தினையைப்பற்றிய பொதுஅறிவை வளர்க்கும்வண்ணம் கல்வி மற்றும் கலை வழிகளில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று FAO இயக்குனர் Graziano da Silva அறிவித்தார்.


8. கொசுக்கள், வேதியல் பொருட்களுக்கு விரைவில் பழகிக் கொள்வதால் மருந்துகள் பயனற்று போகின்றன

பிப்.21,2013. கொசுக்களை விரட்ட நாம் தோல்மீது பூசிக்கொள்ளும் பாதுகாப்பு மருந்துகளுக்கு கொசுக்கள் விரைவில் பழகிக் கொள்வதால் இந்த மருந்துகள் பயனற்று போகின்றன என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
மஞ்சள் காய்ச்சல், டெங்கு போன்ற வியாதிகளைப் பரப்பும் Aedes aegypti என்ற கொசுவை விரட்ட பயன்படுத்தப்படும் Deet எனப்படும் பாதுகாப்பு மருந்தைக் குறித்து London School of Hygiene and Tropical Medicine நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வுகளின் அறிக்கை இவ்வியாழனன்று வெளியானது.
கொசுக்களுக்கு எதிராக ஐக்கிய நாட்டு படைவீரர்கள் பயன்படுத்திய Deet எனப்படும் மருந்துக்கு Aedes aegypti வகை கொசுக்கள் விரைவில் பழகிக்கொள்வதால், அவை மனிதரை மீண்டும் தாக்கும் ஆபத்து உள்ளதென்று இந்த ஆய்வில் வெளியானது.
கொசுக்கள் பயன்படுத்தும் Antenna வகை நுண்ணுணர்வுக் கருவிகள் பல்வேறு வேதியல் பொருட்களுக்குப் பழக்கமடைந்துவிடுவதால், தடுப்பு மருந்துகள் பயனின்றி போகின்றன என்று இந்த ஆய்வை மேற்கொண்ட முனைவர் James Logan  கூறினார்.