Tuesday 30 April 2013

ROBERT JOHN KENNEDY: மே தினம்... May dayமே மாதம் முதல் நாள் என்றதும் ந...

ROBERT JOHN KENNEDY: மே தினம்... May day
மே மாதம் முதல் நாள் என்றதும் ந...
: மே தினம்... May day மே மாதம் முதல் நாள் என்றதும் நினைவில் தோன்றுவது மே தினம் என்று வழங்கப்படும் அகில உலகத் தொழிலாளர் நாள். 18ம் நூற்...
மே தினம்... May day

மே மாதம் முதல் நாள் என்றதும் நினைவில் தோன்றுவது மே தினம் என்று வழங்கப்படும் அகில உலகத் தொழிலாளர் நாள்.
18ம் நூற்றாண்டின் இறுதியில் தொழில் புரட்சி தோன்றியது; பல இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால், மனிதர்கள் செய்யும் தொழில் குறையும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. ஆனால், தொழிலதிபர்களின் பேராசையால் மனிதர்களும் இயந்திரங்களாய் மாற வேண்டிய கட்டாயம் உருவானது. இயந்திரங்களைத் தொடர்ந்து பயன்படுத்தவும், அவற்றைப் பராமரிக்கவும் தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் 15 அல்லது 16 மணி நேரம் உழைக்க வேண்டியதாயிற்று.
ஒவ்வொரு தொழிலாளியும் நாளொன்றுக்கு 8 மணி நேரம் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, பல நாடுகளில் போராட்டங்கள் எழுந்தன. அவற்றில் கிடைத்த வெற்றி, தோல்வி, உயிர் தியாகம் ஆகிய அனைத்தையும் கொண்டாட மே தினம் உருவானது.
Mayday என்ற வார்த்தை ஆபத்து நேரத்தில் அடுத்தவர் உதவியைத் தேடும் ஓர் அடையாளமாகப் பயன்படுத்தப்படுகிறது. பொதுவாக, கடல் பயணத்தின்போது, ஒரு கப்பலுக்கு ஆபத்து உருவானால், அருகிலுள்ள மற்ற கப்பல்களுக்கு 'Mayday…Mayday' என்ற செய்தி அனுப்பப்படும். இந்த வார்த்தை, பிரெஞ்ச் மொழியில் பயன்படுத்தப்படும் 'M'aider' என்ற சொல்லிலிருந்து உருவானது. 'M'aider' என்றால் 'help me' அதாவது, 'எனக்கு உதவி செய்யுங்கள்' என்று பொருள்.

ஆதாரம் : Wikipedia

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 30/04/13

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 30/04/13: 1. திருத்தந்தை பிரான்சிஸ் , இஸ்ரேல் அரசுத்தலைவர் Peres சந்திப்பு 2. திருத்தந்தை பிரான்சிஸ் இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்...

Catholic News in Tamil - 30/04/13

1. திருத்தந்தை பிரான்சிஸ், இஸ்ரேல் அரசுத்தலைவர் Peres சந்திப்பு

2. திருத்தந்தை பிரான்சிஸ் இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி

4. திருத்தந்தை : உலகாயுதப்போக்குள்ள திருஅவை நற்செய்தியை அறிவிக்க முடியாது

5. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆயர்கள் விடுதலை செய்யப்படுமாறு கர்தினால் டோலன் வேண்டுகோள்

6. கானடாவில் சூதாட்டத்துக்கு கர்தினால் எச்சரிக்கை

7. சிறார் தொழில்முறைக்கு எதிரானப் போராட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் முக்கிய காரணி, ஐ.நா.

8. உலக அளவில் நாட்டுக்குள்ளே புலம்பெயர்வு அதிகரிப்பு

9. விமர்சகர்கள்மீது இலங்கை அரசு கடுமையாக நடந்து கொள்கிறது : Amnesty Int. 

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை பிரான்சிஸ், இஸ்ரேல் அரசுத்தலைவர் Peres சந்திப்பு

ஏப்.30,2013. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனாவுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் மீண்டும் விரைவில் தொடங்கப்படுமாறும், இவ்விரு தரப்பினரின் நியாயமான ஆசைகள் நிறைவேற்றப்படும் துணிச்சலான தீர்மானங்கள் அனைத்துலக சமுதாயத்தின் ஆதரவுடன் எடுக்கப்படுமாறும் அழைப்பு விடுத்தார்  திருத்தந்தை பிரான்சிஸ்.
இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres அவர்களை இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பிரான்சிஸ், மத்திய கிழக்குப் பகுதியில் அமைதி ஏற்படவும் அழைப்பு விடுத்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய பின்னர், திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே, திருப்பீட நாடுகளுக்கு இடையேயான உறவுகளின் செயலர் பேராயர் தொமினிக் மம்பெர்த்தி ஆகியோரையும் சந்தித்தார் Peres.
மத்திய கிழக்குப் பகுதியில் அமைதிக்கும் உறுதியான தன்மைக்கும் வழிஅமைக்கும் விவகாரங்கள், எருசலேம் புனித நகரின் முக்கியத்துவம், சிரியாவின் நிலைமை, திருப்பீடத்துக்கும் இஸ்ரேலுக்கும் இடையேயுள்ள உறவு, இஸ்ரேலுக்கும் உள்ளூர் கத்தோலிக்கச் சமூகங்களுக்கும் இடையேயுள்ள உறவு போன்ற விவகாரங்கள் இச்சந்திப்புக்களில் இடம்பெற்றன என்று திருப்பீட பத்திரிகை அலுவலகம் கூறியது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

2. திருத்தந்தை பிரான்சிஸ் இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொள்ள அழைப்பு

ஏப்.30,2013. இச்செவ்வாயன்று திருப்பீடத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை முப்பது நிமிடங்கள் தனியே சந்தித்துப் பேசிய இஸ்ரேல் அரசுத்தலைவர் Shimon Peres, திருத்தந்தை இஸ்ரேலுக்குத் திருப்பயணம் மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
திருத்தந்தையைத் தனியே சந்தித்துப் பேசிய பின்னர் நிருபர்கள் முன்னிலையில் திருத்தந்தைக்கு இவ்வழைப்பை முன்வைத்த அரசுத்தலைவர் Peres, எருசலேமில் தான் மட்டுமல்ல, இஸ்ரேல் நாட்டினர் அனைவரும் திருத்தந்தைக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்தார்.
அனைவருக்காகச் செபிக்குமாறும் திருத்தந்தையிடம் கேட்டுக்கொண்ட Peres, இப்புதனன்று அசிசியில் புனித பிரான்சிசின் கல்லறையில் திருத்தந்தைக்காகத் தான் செபிப்பதாகவும் உறுதி கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் செய்தி

ஏப்.30,2013. நாம் வேலை செய்யும்போது கடவுளின் வல்லமையில் நமது நம்பிக்கையை வைப்போம். அவரோடு சேர்ந்து நாம் பெரிய காரியங்களைச் செய்ய முடியும். அவரது சீடர்களாக இருப்பதன் மகிழ்ச்சியை அவர் நமக்குத் தருவார்.
இவ்வாறு இச்செவ்வாயன்று தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.
மேலும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் டுவிட்டர் பக்கத்தைப் பார்ப்பவர்களின் எண்ணிக்கை ஏப்ரல் 29, இத்திங்கள் நண்பகலோடு அறுபது இலட்சத்தை எட்டியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2012ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி @Pontifex என்ற டுவிட்டர் பக்கத்தைத் தொடங்கினார். அவர் தனது பாப்பிறைத் தலைமைப் பணியிலிருந்து விலகியபோது 30 இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் அந்த டுவிட்டர் பக்கத்தைப் பார்த்திருந்தார்கள்.
கடந்த மார்ச் 13ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மீண்டும் @Pontifex என்ற முகவரியில் தனது டுவிட்டர் பக்கத்தைத் திறந்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை : உலகாயுதப்போக்குள்ள திருஅவை நற்செய்தியை அறிவிக்க முடியாது

ஏப்.30,2013. உலகாயுதப்போக்குள்ள திருஅவையால் நற்செய்தியை அறிவிக்க முடியாது, இந்தப் போக்கினின்று திருஅவையைக் காப்பாற்ற வேண்டுமெனில், இடைவிடாத செபத்தின் மூலம் நம் ஆண்டவரிடம் அதனை ஒப்படைப்பதே ஒரேவழி என்று திருத்தந்தை பிரான்சிஸ் கூறினார்.
புனித மார்த்தா இல்லத்தில் இச்செவ்வாய் காலையில் நிகழ்த்திய திருப்பலியின் மறையுரையில் இவ்வாறு கூறிய திருத்தந்தை, நமது பணியால் திருஅவையை நம்மால் காப்பாற்ற முடியும், அதனைக் குணப்படுத்த முடியும் என்றும் கூறினார்.
தீமையின் முகத்தை நோக்கி அதனை வெற்றிகொள்ளும் ஒரேயொருவரான நம் ஆண்டவர் செய்தது போன்று நாமும் செய்ய வேண்டும் என்றுரைத்த திருத்தந்தை பிரான்சிஸ், திருஅவைக்காக, உலகளாவியத் திருஅவைக்காக, உலகெங்கும் நாம் அறிந்திராத நம் சகோதர சகோதரிகளுக்காக நாம் செபிக்கின்றோமா என்ற கேள்வியையும் எழுப்பினார்.
இது நம் ஆண்டவரின் திருஅவை, ஆண்டவரே உமது திருஅவையை கண்ணோக்கும், ஆண்டவரே, இது உமது திருஅவை என்று நமது செபத்தில் நாம் செபிக்க வேண்டுமென்றும், முதியோர், நோயாளிகள், சிறார், இளையோர் என அனைவரையும், உலகளாவியத் திருஅவையையும் ஆண்டவரிடம் ஒப்படைத்துச் செபிக்குமாறும் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.
APSA எனப்படும் திருப்பீடப் பாரம்பரியச் சொத்து நிர்வாகத் துறையினர் இச்செவ்வாய் காலையில் திருத்தந்தையின் திருப்பலியில் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

5. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள ஆயர்கள் விடுதலை செய்யப்படுமாறு கர்தினால் டோலன் வேண்டுகோள்

ஏப்.30,2013. சிரியாவில் கடத்தப்பட்டுள்ள இரு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் விடுதலை செய்யப்படுமாறு உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் திமொத்தி டோலன்.
அமைதியின் இம்மனிதர்கள் கடத்தப்பட்டிருப்பது, சிரியா சமூகத்தின் அமைப்பையே அழிக்கும் கொடூரமான வன்முறையின் அடையாளமாக  இருக்கின்றது என்று கர்தினால் டோலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விரு ஆர்த்தடாக்ஸ் ஆயர்கள் கடத்தப்பட்டிருப்பதும், அவர்களது வாகன ஓட்டுனர் கொல்லப்பட்டிருப்பதும் நன்மனம் கொண்ட மக்களின் இதயங்களை மிகவும் வேதனையடையச் செய்துள்ளன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
இந்த ஏப்ரல் 22ம் தேதியன்று மனிதாபிமானப்பணிகளை முடித்துத் திரும்பும் வழியில் சிரியா ஆர்த்தடாக்ஸ் பேராயர் John Ibrahim, சிரியா கிரேக்க ஆர்த்தடாக்ஸ் பேராயர் Paul Yagizi ஆகிய இருவரும் அலெப்போவுக்கு அருகில் கடத்தப்பட்டுள்ளனர்.

ஆதாரம் : CNA                            

6. கானடாவில் சூதாட்டத்துக்கு கர்தினால் எச்சரிக்கை

ஏப்.30,2013. கானடா சமுதாயம் சூதாட்டத்தைச் சார்ந்திருப்பது வளர்ந்து வருவது குறித்து அண்மை ஆண்டுகளாக அந்நாட்டு ஆயர்கள் தங்கள் கவலையை வெளியிட்டு வருகின்றனர்.
Toronto நகரில் புதிய மற்றும் பெரிய சூதாட்ட அரங்கம் கட்டுவது குறித்து அரசு சிந்தித்துவரும்வேளை, சூதாட்டத்தை எச்சரித்து மேய்ப்புப்பணி அறிக்கை வெளியிட்டுள்ள Toronto உயர்மறைமாவட்ட கர்தினால் Thomas Collins, சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட  சூதாட்டங்கள் குறித்த தனது கவலையைத் தெரிவித்துள்ளார்.
சூதாட்டம் தன்னிலே தீமையானது என்றும், திருஅவையின் மறைக்கல்வி ஏட்டில் சூதாட்டத்தினால் ஏற்படும் பிரச்சனைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டுள்ளார் கர்தினால் Collins.
சூதாட்டத்தினால் அரசுக்குப் பணம் நிறையக் கிடைப்பதால் இதற்கு மக்கள் மட்டுமல்ல, அரசும் அடிமையாகி விடுகின்றது என்றும் Toronto கர்தினாலின் அறிக்கை கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. சிறார் தொழில்முறைக்கு எதிரானப் போராட்டத்தில் சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் முக்கிய காரணி, ஐ.நா.

குஏப்.30,2013. சிறார் தொழிலாளர்களைக் கொத்தடிமைத்தனத்திலிருந்து காப்பாற்றுவதில், சமூகப்பாதுகாப்புத் திட்டங்களை அமல்படுத்துவது முக்கிய பங்காற்ற முடியும் என்று ILO என்ற அனைத்துலக தொழில் நிறுவனம் கூறியது.
மே தினத்தையொட்டி அறிக்கை வெளியிட்டுள்ள ILO நிறுவனம், பணம் மாற்றுத் திட்டங்கள், சமூகநலவாழ்வுப் பாதுகாப்பு, முதியோர் ஓய்வூதியம் போன்ற திட்டங்கள் உலகில் சிறார் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைவதற்கு உதவும் என்று கூறியுள்ளது.
போஸ்ட்வானா, மலாவி, நமிபியா, தென்னாப்ரிக்கா, டான்சானியா, ஜிம்பாபுவே போன்ற ஆப்ரிக்க நாடுகளில் 50 முதல் 60 விழுக்காட்டு அநாதைச் சிறார் தங்களது தாத்தா பாட்டிகளோடு வாழ்கின்றனர், ஆதலால் வயதான காலத்தில் வருமானத்துக்குப் பாதுகாப்பு வழங்குவது இன்றியமையாதது என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.
உலகில் 500 கோடிக்கு மேற்பட்டவர்களுக்கு, அதாவது உலகின் ஏறக்குறைய 75 விழுக்காட்டு மக்களுக்குப் போதுமான சமூகப்பாதுகாப்புத் திட்டங்கள் கிடையாது என்றும் ILO கூறியது.
11 கோடியே 50 இலட்சம் கொத்தடிமைச் சிறார் தொழிலாளர் உட்பட உலகில் சிறார் தொழிலாளர்கள் பெருமளவில் இருப்பதற்கு இந்நிலையே காரணம் என்றும் அனைத்துலக தொழில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆதாரம் : UN

8. உலக அளவில் நாட்டுக்குள்ளே புலம்பெயர்வு அதிகரிப்பு

ஏப்.30,2013. தற்போது உலகிலுள்ள ஏறக்குறைய 3 கோடி  அகதிகளுள் 65 இலட்சம் பேர் 2012ம் ஆண்டில் புதிதாகப் புலம் பெயர்ந்தவர்கள் என்று ஜெனீவாவிலுள்ள IDMC என்ற நாட்டுக்குள்ளே இடம்பெறும் புலம்பெயர்வைக் கண்காணிக்கும் மையம் கூறியது.
கடந்த ஆண்டில் புதிதாகப் புலம் பெயர்ந்தவர்களில் பாதிப்பேர், சிரியாவிலும், காங்கோ சனநாயகக் குடியரசிலும் இடம்பெறும் வன்முறையினால் புலம் பெயர்ந்தவர்கள் என்றும் IDMC மையம் இத்திங்களன்று வெளியிட்ட அறிக்கை கூறியது.
2012ம் ஆண்டில் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்த மக்களை அதிகமாகக் கொண்டிருந்த நாடு கொலம்பியா என்றும், இதற்கு அந்நாட்டில் அரசுக்கும் புரட்சிக்குழுக்களுக்கும் இடையே பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் சண்டையே காரணம் என்றும், கொலம்பியாவில் 49 இலட்சம் முதல் 55 இலட்சம் புலம்பெயர்ந்த மக்கள் இருக்கிறார்கள் என்றும் அவ்வறிக்கை கூறியது.
உலகில் நாட்டுக்குள்ளேயே புலம் பெயர்ந்த மக்களை அதிகமாகக் கொண்டிருக்கும் நாடுகளில் கொலம்பியாவுக்கு அடுத்தபடியாக சிரியாவும், அதற்கு அடுத்த இடத்தில் காங்கோ ஜனநாயகக் குடியரசும் உள்ளன என்று IDMC மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.
சிரியாவில்மட்டுமே கடந்த ஆண்டின் இறுதியில், 24 இலட்சம் பேர் நாட்டுக்குள்ளேயே புலம்பெயர்ந்திருந்தனர் என்று இம்மையம் கூறுகிறது.

ஆதாரம் Guardian

9. விமர்சகர்கள்மீது இலங்கை அரசு கடுமையாக நடந்து கொள்கிறது : Amnesty Int. 

ஏப்.30,2013. விமர்சிப்பவர்கள் மற்றும் அதிருப்தியாளர்கள் துன்புறுத்தப்பட்டுச் சிறையில் அடைக்கப்படுவதாக Amnesty International என்ற அனைத்துலக மனித உரிமை கழகம் இலங்கை அரசை குறைகூறி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் அரசுக்கு எதிராக கருத்துச் சொன்ன காரணத்துக்காக ஊடகவியலாளர்கள், நீதித்துறையினர், மனித உரிமை ஆர்வலர்கள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் போன்றோர் கடுமையாய்த் தாக்கப்பட்டும் சிறையில் அடைக்கப்பட்டும், சிலவேளைகளில் கொல்லப்பட்டும் இருக்கின்றனர் என்று Amnesty Int. தனது அறிக்கையில் கூறியுள்ளது.
இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் மேம்படாதவரையில் காமன்வெல்த் நாடுகளின் உச்சி மாநாடு அந்நாட்டில் நடத்தப்படுவது  தவிர்க்கப்பட வேண்டும் என அக்கழகம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையில் 2006ம் ஆண்டுமுதல் குறைந்தது 15 ஊடகவியலாளர் கொல்லப்பட்டுள்ளனர், மற்றவர்கள் நாட்டைவிட்டு வெளியேறும்படி கட்டாயப்படுத்தப்பட்டனர் என்றும் Amnesty Int.ன் அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையே, இலங்கை அரசு இக்குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆதாரம் : AP

Monday 29 April 2013

ROBERT JOHN KENNEDY: Women burnt alive in this 21st century witch hunt

ROBERT JOHN KENNEDY: Women burnt alive in this 21st century witch hunt: Women burnt alive in this 21st century witch hunt Despite Catholic attempts at intercession, belief in black magic persists in Papua ...

Women burnt alive in this 21st century witch hunt

Women burnt alive in this 21st century witch hunt

Despite Catholic attempts at intercession, belief in black magic persists in Papua New Guinea. Women are blamed, accused of sorcery and literally branded as witches.

 

Papua New Guinea:  “They’re going to cook the sanguma mama!”

The shout went up from a posse of children as they raced past the health clinic in a valley deep in the Papua New Guinean highlands. Inside, Swiss-born nurse and nun Sister Gaudentia Meier — 40-something years and a world away from the ordered alps of her homeland — was getting on with her daily routine, patching the wounds and treating the sicknesses of an otherwise woefully neglected population. It was around lunchtime, she recalls.

Sister Gaudentia knew immediately the spectacle the excited children were rushing to see. They were on their way to a witch-burning. There are many names for dark magic in the 850 tongues of Papua New Guinea, sanguma resonating widely in these mountains. The 74-year-old sister hurriedly rounded up some of her staff, loaded them in a car and followed the crowd, with a strong foreboding of what she would find.

Two days earlier she had tried to rescue Angela (not her real name), an accused witch, when she was first seized by a gang of merciless inquisitors looking for someone to blame for the recent deaths of two young men. They had stripped their quarry naked, blindfolded her, berated her with accusations and slashed her with bush knives (machetes). The “dock” for her trial was a rusty length of corrugated roofing, upon which she was displayed trussed and helpless. Photographs taken by a witness on a mobile phone show that the packed, inert public gallery encircling her included several uniformed police.

In Papua New Guinea, the Pacific nation just a short boat ride from Australia’s far north, 80 per cent of the 7 million-plus population live in rural and remote communities. Many have little access to even basic health and education, surviving on what they eat or earn from their gardens. There are few roads out, but a burgeoning network of digital-phone towers and dirt-cheap handsets now connect them to the world — assuming they can plug into power and scrounge a few kina-worth of credit.

The resources-rich country is in the midst of a mining boom, but the wealth bypasses the vast majority. In their realities, some untouched by outside influence until only a couple of short-lived generations ago, enduring tradition widely resists the notion that natural causes, disease, accident or recklessness might be responsible for a death. Rather, bad magic is the certain culprit.

“When people die, especially men, people start asking ‘Who’s behind it?’, not ‘What’s behind it?’” says Dr Philip Gibbs, a longtime PNG resident, anthropologist, sorcery specialist and Catholic priest.

Last year, a two-year investigation by the country’s Constitutional and Law Reform Commission observed that the view that sorcery or witchcraft must be to blame for sickness or early death is commonly held across PNG.

Many educated, city-dwelling Papua New Guineans also espouse some belief in sorcery. But in the words of the editor of the national daily Post Courier, Alexander Rheeney, city and country-folk alike overwhelmingly “recoil in fear and disgust” at lynch-mobs pursuing payback, and at the kind of extremist cruelty that Sister Gaudentia was about to witness.

Angela’s accusers — young men from another town, high on potent highlands dope and “steam” (home-brewed hooch) — had come back for her. Sister Gaudentia suspected the same mob had tortured a young woman she nursed a few months earlier. She had dragged herself, “how … I don’t know”, says the nun, into the clinic, her genitals burned and fused beyond functional repair by the repeated intrusions of red-hot irons.

The concept of a serial-offending torture squad hunting down witches doesn’t fit the picture anthropologists have assembled of the customs that underwrite sorcery “pay-back” in parts of PNG. Attacks are, as a general rule, the spontaneous act of a grieving family, inspired often by vengeance, and sometimes by fear that evil magic will be exercised again. But experts also concede there are caveats to every rule in PNG. One of the most ethnically diverse landscapes in the world, PNG is endlessly confounding to outsiders, and even as modern explorers strive to pin down aspects of the old world, it changes before them.

Source: The Global Mail

ROBERT JOHN KENNEDY: Asian edition of Pope Francis’ biography released

ROBERT JOHN KENNEDY: Asian edition of Pope Francis’ biography released: Asian edition of Pope Francis’ biography released The low-cost Asian edition of the biography in English provides the keys to underst...

Asian edition of Pope Francis’ biography released

Asian edition of Pope Francis’ biography released

The low-cost Asian edition of the biography in English provides the keys to understanding the man who was a surprise choice for the position of a pope.

 
(Photo Courtesy: daijiworld)
Bangalore:  The first Asian edition of Pope Francis’ biography was released by Cardinal Oswald Gracias in Bangalore.

The biography titled "Francis, Pope of a New World,” published by the leading Bangalore-based publishing house of Asian Trading Corporation (ATC), was released Thursday.

The low-cost Asian edition of the biography in English provides the keys to understanding the man who was a surprise choice, even a revolutionary choice for Pope.

It explains why the cardinal electors of the Catholic Church set aside political and diplomatic calculations to elect a pope to lead the renewal and purification of the worldwide Church.

In addition, there is also a background on Benedict's resignation and the process of electing Pope Francis.

The biography is authored by Vatican insider, Andrea Tornielli, who is acclaimed as the best-sourced, most accurate and one of the most knowledgeable reporters among the unique band of 'Vaticanisti,' who travel with the Pope.

Cardinal Gracias released the biography on the occasion of the Diamond Jubilee celebration of the Holy Ghost Church at the Redemptorists Seminary Grounds in Bangalore.

The Cardinal was among the participants in the Conclave that elected Pope Francis. He is also one of the 8 Cardinals recently chosen to advise the Pope.

Cardinal George Alencherry and Archbishop Bernard Moras of Bangalore released "The Holy Bible (Revised Standard Version - Second Catholic Edition)," a recent revision of an acclaimed Bible translation in English on the occasion.

Source: daijiworld

ROBERT JOHN KENNEDY: மனிதர் வாழ இரண்டு புதிய கோள்கள்

ROBERT JOHN KENNEDY: மனிதர் வாழ இரண்டு புதிய கோள்கள்: மனிதர் வாழ இரண்டு புதிய கோள்கள் இப் பூமியிலிருந்து 1 , 200 ஒளி ஆண்டுகள் அல்லது 7 , 08 , 000 டிரில்லியன் மைல்கள் தூரத்தில் மனிதர் வாழ்...

மனிதர் வாழ இரண்டு புதிய கோள்கள்

மனிதர் வாழ இரண்டு புதிய கோள்கள்

இப்பூமியிலிருந்து 1,200 ஒளி ஆண்டுகள் அல்லது 7,08,000 டிரில்லியன் மைல்கள் தூரத்தில் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற இரண்டு கோள்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்று அமெரிக்க ஐக்கிய நாட்டு நாசா விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பூமியைப் போலவே இருக்கும் இவ்விரண்டு கோள்களுக்கு கெப்லர் 62e, கெப்லர் 62f எனப் பெயரிட்டுள்ளது நாசா மையம். கெப்லர் 62e பூமியைவிட 60 விழுக்காடும், கெப்லர் 62f, பூமியைவிட 40 விழுக்காடும் பெரியன. பூமியைப் போன்று உள்ள இவ்விரு கோள்களிலும் உயிரினங்கள் வாழத் தகுதியுடைய தட்பவெப்பநிலை உள்ளது. அக்கோள்கள் சூரியனைவிடச் சிறியதாகவும், மங்கலாகவும் காணப்படுகின்றன. அவை பூமியில் இருந்து 1,200 ஒளி ஆண்டுகள் தூரத்தில் உள்ளன என நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. விண்வெளியை ஆய்வு செய்வதற்கென 2009ம் ஆண்டு மார்ச் மாதத்தில் நாசா ஆய்வு மையம் அனுப்பியுள்ள கெப்லர் 62 என்ற விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள அதிசக்தி வாய்ந்த டெலஸ்கோப் கருவி இதுவரை அனுப்பியுள்ள புகைப்படங்களால் அறிவியலாளர்கள் 115 கோள்களைக் கண்டறிந்துள்ளனர். சூரிய மண்டலத்துக்கு வெளியே ஏறக்குறைய ஆயிரம் கோள்கள் பற்றியும் அவர்கள் அறியவந்துள்ளனர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விண்மீன்கள், கோளங்கள், இப்பிரபஞ்சம் ஆகியவை குறித்த விண்வெளியியல் ஆய்வுகள் குறைந்தது 5000 ஆண்டு பழமை கொண்டவை.  

ஆதாரம் : San Angelo Standard-Times

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 29/04/13

ROBERT JOHN KENNEDY: Catholic News in Tamil - 29/04/13: 1. திருத்தந்தை - நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல இயேசு 2. திருத்தந்தை :  தூய ஆவி , நம்மையும் , நம் ...

Catholic News in Tamil - 29/04/13

1. திருத்தந்தை - நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல இயேசு

2. திருத்தந்தை :  தூய ஆவி, நம்மையும், நம் வழியாக இவ்வுலகையும் புதுப்பிக்க விரும்புகிறார்

3. பங்களாதேசில் தொழில்கூடம் இடிபாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் செபம்

4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று  நூலின் ஆசிய பதிப்பு வெளியீடு

5. மன்னார் ஆயருடன் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

6. தாயின் கருவறையிலேயே இறந்த குழந்தைகளுக்கு சிறப்புச் செபம்

7. Kazakhstan நாட்டில் ம‌த‌ச்சிறுபான்மை ச‌மூக‌ங்க‌ளுக்கு எதிரான‌ சித்ர‌வ‌தைக‌ள் அதிக‌ரிப்பு

8. 976 குழந்தை திருமணங்கள் நிறுத்தம். இன்னும் விழிப்புணர்வு தேவை

9. புது வகை மலேரியா ஒட்டுண்ணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

------------------------------------------------------------------------------------------------------

1. திருத்தந்தை - நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல இயேசு

ஏப்.29,2013.  ஒப்புரவு அருள்சாதனம் பெறும் இடம், நம் பாவங்கள் தானாகவே சுத்தம் செய்யப்படும் ஓர் உலர் சலவையகம் அல்ல என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இத்திங்கள் காலை புனித மார்த்தா இல்லத்தில் உள்ள சிற்றாலயத்தில், திருப்பீட மேலாளர்கள் பணியில் ஈடுபட்டிருப்பவருக்குத் திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மன்னிப்பதற்குக் காத்திருக்கும் இறைவனை மையப்படுத்தி தன் மறையுரையை வழங்கினார்.
புனித யோவான் எழுதிய முதல் திருமுகத்தில் காணப்படும் "கடவுள் ஒளியாய் இருக்கிறார்; அவரிடம் இருள் என்பதே இல்லை" என்ற வார்த்தைகளை மையமாகக் கொண்டு மறையுரை வழங்கியத் திருத்தந்தை, நம் அனைவரின் வாழ்விலும் இருள் உள்ளது எனினும், நாமும் ஒளியில் வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்று எடுத்துரைத்தார்.
நம்மில் இருக்கும் இருளையும், நாம் ஒளிக்குச் செல்லவேண்டும் என்ற தேவையையும் உணராமல் வாழ்வோர் சந்திக்கும் ஆபத்துகளையும் தன் மறையுரையில் சுட்டிக்காட்டினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஒப்புரவு அருட்சாதனத்தில் நம்மை அடித்துத் துவைக்கக் காத்திருக்கும் துப்புரவுத் தொழிலாளி அல்ல, இயேசு என்பதைக் கூறியத் திருத்தந்தை, இவ்வருட் சாதனத்தின் வழியாக நம்மை எப்போதும் மன்னிக்கக் காத்திருக்கும் இயேசுவை நாம் திரும்பத் திரும்ப அணுகிச் செல்ல தயங்கக்கூடாது என்பதையும் தன் மறையுரையில் வலியுறுத்தினார்.
இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட Twitter செய்தியில், "இன்று நான் பிறருக்கு ஓர் உதவி செய்துள்ளேன் என்று ஒவ்வொரு நாள் முடிவிலும் நாம் ஒவ்வொருவரும் சொல்ல முடிந்தால், எவ்வளவு அற்புதமாக இருக்கும்!" என்று கூறியுள்ளார். ஆங்கிலம், இத்தாலியம், பிரெஞ்ச், ஸ்பானியம், அரேபியம் உட்பட 9 மொழிகளில் @Pontifex எனப்படும் Twitter பக்கத்தில் இச்செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

SeDoc                   Pope: Being ashamed of our sins helps prepare us for God’s forgiveness
SeDoc                   Pope’s Twitter message


2. திருத்தந்தை :  தூய ஆவி, நம்மையும், நம் வழியாக இவ்வுலகையும் புதுப்பிக்க விரும்புகிறார்

ஏப்.29,2013.  உலகம் தரும் புதியவை, வந்து போகும், ஆனால் தூய ஆவி கொணர்வதோ என்றும் நிலைத்திருக்கக்கூடியது என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இந்தியா, இலங்கை, லெபனன், பெலாருஸ், டோங்கா, கோங்கோ, சீனா, பிலீப்பீன்ஸ் என பல நாடுகளிலிருந்து வந்திருந்த 44 இளையோருக்கு, புனித பேதுரு வளாகத்தில் உறுதிப்பூசுதல் என்ற திருவருட்சாதனத்தை வழங்கிய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, தூய ஆவி நம்மை புதுப்பிப்பதுடன் நம் வழியாக இவ்வுலகையும் புதுப்பிக்க விரும்புகிறார் என்றார்.
நம் இதயக் கதவுகளை இறைவனுக்குத் திறந்து, அவரால் நாம் வழிநடத்தப்பட அனுமதிப்போம் என்று கூறியத் திருத்தந்தை, கடவுள் நமக்கு தொடர்ந்து உதவிகளை வழங்கி நம்மை புதுப்படைப்புகளாக மாற்றுவார் என்றார்.
ஒவ்வொரு நாள் மாலையும் நாம் சிறிதுநேரம் அமர்ந்து, இன்று நான் என் நண்பர்களுக்கு, என் பெற்றோருக்கு, ஏதாவது ஒரு முதியவருக்கு, என்ன பிறரன்புச் செயலை ஆற்றினேன் என சிந்திப்பது எத்தனை சிறப்பாக இருக்கும் எனவும் அவ்வாளகத்தில் கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட திருப்பயணிகளிடம் கூறினார் திருத்தந்தை.
நீரோட்டத்தை எதிர்த்து நீந்துவதற்கான பலத்தை இறைவன் நமக்கு வழங்குகிறார், ஆகவே எதைக்குறித்தும் அச்சம் கொள்ளவேண்டாம் எனவும் கூறிய திருத்தந்தை, சிறிய விடயங்களுக்காக கிறிஸ்தவர்கள் தேர்வுச்செய்யப்படவில்லை, ஆகவே பெரிய கொள்கைகளைக் கட்டியெழுப்பி அதற்காகவே வாழக்கற்றுக்கொள்ளுங்கள் எனவும் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

3. பங்களாதேசில் தொழில்கூடம் இடிபாட்டில் பாதிக்கப்பட்டவர்களுக்கு திருத்தந்தையின் செபம்

ஏப்.29,2013. பங்களாதேசில் தொழில்கூடம் ஒன்று இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்ப அங்கத்தினர்களுக்கு தன் அனுதாபத்தை வெளியிடுவதோடு, அவர்களுடன் ஒருமைப்பாட்டை தெரிவிப்பதாகவும் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.
இஞ்ஞாயிறன்று காலை உரோம் நகர் தூய பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய உறுதிப்பூசுதல் திருப்பலிக்குப்பின், அல்லேலூயா வாழ்த்தொலி உரை வழங்கிய திருத்தந்தை, பங்களாதேசில் தொழிற்சாலை கட்டிட விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக சிறப்பான விதத்தில் செபிப்பதாகவும் உறுதிகூறினார்.
தொழிலாளர்களின் பாதுகாப்பும் மாண்பும் எச்சூழலிலும் மதிக்கப்படவேண்டும் எனவும் அழைப்புவிடுத்தார் திருத்தந்தை.
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவுக்கு மேற்கே சாவர் எனுமிடத்தில் ரானா பிளாசா என்ற எட்டுமாடிக் கட்டிடம்  இம்மாதம் 24ம் தேதி இடிந்து விழுந்ததில் குறைந்தபட்சம் 380 பேர் உயிரிழந்துள்ளனர், ஆயிரம்பேர் வரை காணாமல்போயுள்ளனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

4. திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாற்று  நூலின் ஆசிய பதிப்பு வெளியீடு

ஏப்.29,2013.  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நூலின் ஆசிய பதிப்பை பெங்களூருவில் வெளியிட்டார் மும்பை கர்தினால் ஆஸ்வால்டு கிராசியாஸ்.
Asian Trading Corporation பதிப்பகத்தாரால் 'பிரான்சிஸ், புதிய உலகின் திருத்தந்தை' என்ற பெயரில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், அந்திரேயா தொரினெல்லி என்பவரால் எழுதப்பட்டதாகும்.
பெங்களூருவின் இரட்சகர் துறவு சபை பயிற்சி இல்லத்தின் வளாகத்திலுள்ள தூய ஆவி கோவிலின் வைர விழாவின் போது இப்புத்தகம் வெளியிடப்பட்ட வைபவத்தில் இந்தியாவின் திருஅவைத் தலைவர்களுடன் நாட்டின் நான்கு கர்தினால்களும் பெங்களூரு பேராயரும் கலந்து கொண்டனர்.

ஆதாரம் : CBCI

5. மன்னார் ஆயருடன் இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு

ஏப்.29,2013.  மகிந்த ராஜபக்ச அரசால் நாட்டில் தமிழர் பிரச்சனை உட்பட எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வைக் காணமுடியாது என, மன்னாருக்கு இஞ்ஞாயிறன்று சென்று ஆயர் இராயப்பு ஜோசப்பைச் சந்தித்த இலங்கை எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று, அங்கு மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப், மன்னார் மறை மாவட்ட குருகுல முதல்வர் ஆன்டனி விக்டர், காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பின் பிரதிநிதிகள்  ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடியபின், உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அதிபர் மகிந்த ராஜபக்ச அரசின் காலத்தில்தான் அதிகமான தமிழ் மக்கள் காணாமல் போயுள்ளனர், ஆனால், அரசோ காணாமல் போனவர்கள் என்று எவரும் இல்லை எனப் பொய்களைக் கூறி நாட்டையும், உலகையும் ஏமாற்ற முனைகிறது எனக் குற்றஞ்சாட்டினார்.
ஆயருடன் இடம்பெற்ற சந்திப்பில் பலதரப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்ட நிலையில், மன்னார் மற்றும் வவுனியா ஆகிய மாவட்டங்களில் காணாமல்போன சுமார் 472 பேருடைய விவரங்களைக் காணாமல்போன உறவுகளைத் தேடும் குடும்பங்களின் அமைப்பு, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கையளித்தது.

ஆதாரம் : TamilWin

6. தாயின் கருவறையிலேயே இறந்த குழந்தைகளுக்கு சிறப்புச் செபம்

ஏப்.29,2013. தாய்மார்களுக்கும், மண்ணில் பிறக்காமல் தாயின் கருவறையிலேயே இறந்த குழந்தைகளுக்கும் செபிப்பதற்கென தேசிய அளவிலான மாலை செபவழிபாட்டை, இச்சனிக்கிழமை நடத்த உள்ளது அயர்லாந்து திருஅவை.
அயர்லாந்தின் புகழ்பெற்ற Knock ம‌ரிய‌ன்னை திருத்த‌ல‌த்தில் இட‌ம்பெற‌வுள்ள‌ இத்திருவழிபாட்டு செப‌த்திற்கு அந்நாட்டு ஆய‌ர் பேர‌வை ஏற்பாடுச் செய்துள்ள‌து.
பிற்ப‌க‌ல் ஒரு ம‌ணிக்கு செப‌மாலை ஊர்வ‌ல‌த்துட‌ன் துவ‌ங்கும் இவ்வ‌ழிபாடு, மாலை மூன்று ம‌ணிக்குத் துவ‌ங்கும் திருப்ப‌லியுட‌ன் நிறைவுபெறும்.
Armagh பேராயர் கர்தினால் Seán Brady  த‌லைமையில் இட‌ம்பெறும் இத்திருப்ப‌லியில், க‌ருவுற்றிருக்கும் தாய்மார்க‌ளுக்கு சிற‌ப்பு ஆசீர் வ‌ழ‌ங்க‌ப்ப‌டும் என‌வும் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி

7. Kazakhstan நாட்டில் ம‌த‌ச்சிறுபான்மை ச‌மூக‌ங்க‌ளுக்கு எதிரான‌ சித்ர‌வ‌தைக‌ள் அதிக‌ரிப்பு

ஏப்.29,2013.  Kazakhstan நாட்டில் ம‌த‌ச்சிறுபான்மை ச‌மூக‌ங்க‌ளுக்கு எதிரான‌ சித்ர‌வ‌தைக‌ள் அதிக‌ரிப்ப‌தாக‌வும், ம‌த‌ச் சுத‌ந்திர‌ம் என்ப‌து அங்கு இல்லை என‌வும் குறை கூறியுள்ள‌ன‌ர் ம‌னித‌ உரிமை ஆர்வலர்க‌ள்.
ம‌த‌ப் புத்த‌க‌ங்க‌ளைக் கொண்டிருப்ப‌த‌ற்கு க‌ட்டுப்பாடுக‌ள் அதிக‌ரித்துள்ள‌தாக‌வும், ம‌த‌ம் குறித்த‌ விட‌ய‌ங்க‌ளைப் பொதுவில் விவாதிப்ப‌த‌ற்குத் த‌டைக‌ள் இட‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும் தெரிவித்த‌ன‌ர் அவ‌ர்க‌ள்.
ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌ங்க‌ளின் நூல‌க‌ங்க‌ளில் வைக்க‌ப்ப‌ட்டுள்ள‌ புத்த‌க‌ங்க‌ள் குறித்து அர‌சின் ஆய்வுக‌ள் துவ‌க்க‌ப்ப‌ட்டுள்ள‌தாக‌வும், ம‌னித‌ உரிமை ம‌ற்றும் ம‌த‌ ந‌ட‌வ‌டிக்கையாள‌ர்க‌ள் தெரிவித்துள்ள‌ன‌ர்.
இஸ்லாமிய குழுக்கள், பாப்டிஸ்ட் கிறிஸ்தவ சபை மற்றும் Jehovahவின் சாட்சிகள் ஆகிய குழுக்கள் மீது இவ்வாண்டு துவக்கத்திலிருந்தே அரசின் சித்ரவதைகள் அதிக அளவில் இடம்பெற்றுவருகின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதத்தைப் போதிக்க அனுமதிக்கப்படுவதில்லை எனவும், பேச்சு சுதந்திரம் என்பது மதத்தை போதிக்கும் சுதந்திரத்தை உள்ளடக்கவில்லை எனவும், உரிமை நடவடிக்கையாளர்கள் குறைகூறியுள்ளனர்.

ஆதாரம் : Asia News

8. 976 குழந்தை திருமணங்கள் நிறுத்தம். இன்னும் விழிப்புணர்வு தேவை

ஏப்.29,2013.  தமிழகத்தில், கடந்த, ஐந்து ஆண்டுகளில், 976 குழந்தை திருமணங்கள், சமூகநலத் துறையால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள கிராமப்புறங்களில், குழந்தை திருமணங்கள் நடந்து வருகின்றன எனக்கூறும் சமூகநலத் துறை அதிகாரிகள், கடந்த 2008 முதல் 2013 பிப்ரவரி வரை, 976 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளன என்றனர்.
குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கு, தமிழக அரசு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றபோதிலும், பொதுமக்கள் முழுமையான விழிப்புணர்வு பெற்றால் மட்டுமே, குழந்தை திருமணங்களை முற்றிலும் தடுக்கமுடியும்' எனவும் தெரிவித்தனர் சமூகநலத் துறை அதிகாரிகள்.
சமூகநலத் துறையின் கீழ் செயல்படும், மாவட்ட நல அலுவலர்கள், அந்தந்த மாவட்டங்களில், குழந்தை திருமண தடுப்பு அதிகாரிகளாக செயல்படுவதுடன், ஊராட்சித் தலைவரின் தலைமையில், ஊராட்சி அளவிலான கண்காணிப்பு குழுவும், தமிழகத்தில் செயல்பட்டு வருகிறது.

ஆதாரம் : Dinamalar

9. புது வகை மலேரியா ஒட்டுண்ணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன

ஏப்.29,2013.  மலேரியா நோயைத் தரும் ஒட்டுண்ணிக் கிருமிகளில், அந்நோயைக் கட்டுப்படுத்த உதவும் முக்கிய மருந்தான அர்டெமிஸினின் என்ற மருந்துக்குக் கட்டுப்படாத மூன்று பிரிவுகளை தாங்கள் அடையாளம் கண்டுள்ளதாக அறிவியலாளர்கள் கூறியுள்ளனர். இந்த மூன்று பிரிவு ஒட்டுண்ணியுமே கம்போடியாவின் மேற்குப் பகுதியில் ஒரே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டு, தற்போது இவை அண்டையிலுள்ள பகுதிகளுக்கும் பரவி வருவதாகத் தெரிகிறது.
தங்களுடைய இந்தக் கண்டுபிடிப்பு பொதுமருத்துவத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆதாரம் : BBC